Saturday, December 10, 2011

க்ளாசிக்கல் கொலைகாரன்- No Country For Old Men(2007)

இந்த பதிவு முலமாக நான் உங்களுக்கு அறிமுகப்படுத்த போகும் படம் No Country for Old Men. படம் வெளி வந்த ஆண்டு 2007. இது சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையை சேர்ந்த படம். ஏதாவது படம் பார்க்கலாம்ன்னு தேடுனப்போ No Country for Old Men என்னோட கண்ணுல பட்டுச்சு. 2008 ஆம் ஆண்டு 4 பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வாங்கி குவிச்ச படம் இது. அதுவும் சிறந்த படம், சிறந்த துணை நடிகர், சிறந்த டைரக்டர் மற்றும் சிறந்த தழுவல் திரைக்கதை ஆகிய பிரிவுகளில் விருது வாங்கி இருந்தது. அதுவும் இல்லாம இது No Country for Old Men என்ற த்ரில்லர் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்ட விஷயத்தை அறிய முடிந்தது. நாவலை நான் படிக்க வில்லை, அதனால் நான் படத்தை பற்றிய என்னுடைய அனுபவத்தை மட்டும் பகிர்கிறேன்.
அப்படி என்ன தான் படத்துல இருக்குன்னு பார்த்தா, படம் பார்த்த என்னை ரொம்பவே மற்றும் ரொம்ப நேரம் யோசிக்க வச்சிருச்சு. என்ன யோசனையினா “ங்கொயால என்ன படம் டா இது” அப்படிங்கிற மாதிரி. என்ன மாதிரி சராசரி சினிமா ரசிகனுக்கு இந்த படம் ஒரு ரொம்ப வித்தியாசமான அனுபவம். ஏனா ஹாலிவுட்டின் நிறைய பார்முலாவை இந்த படம் ஒடச்சு இருக்கும். சாதாரனமா ஒரு படத்துல, ஹீரோ இருப்பார், வில்லன் இருப்பார், ஹீரோயின் இருப்பாங்க. ஆனா இதுல்ல அந்த மாதிரி நம்ப யாரையும் பாகு படுத்தி பார்க்க முடியாது. மொத்தம் முன்று முக்கியமான கதாபாத்திரங்கள், அதுல நமக்கு யார புடிச்சுருக்கோ, அவங்களையே நம்ப ஹீரோவா வச்சுக்கலாம். பிடிக்காதவங்களை வில்லனா வச்சுக்கலாம். நம்ப இஷ்டம். அந்த மூன்னு கதாபாத்திரங்கள் யாரு யாரு..?? அப்புறம் படத்தோட கதை என்னன்னு இப்போ பார்போம்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மகாணத்தில் நடைபெறும் சில சம்பவங்களின் தொகுப்பே இந்த திரைப்படம். மரண தண்டனை விதிக்க பட்ட ஒரு கொலையாளி போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பிப்பதில் இருந்து படம் ஆரம்பிக்கும். அந்த கொலையாளி தான் நம்ப Javier Bardem. இவரு கேரக்டர் நம்பர் 1, பேரு ஆண்டன் சிகுரு (Anton Chiguru). இவருக்கு தான் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது குடுக்க பட்டது. மனுஷன் சும்மா மிரட்டி இருப்பாரு. இந்த ஆளு அதிகமா பேச மாட்டாரு, ஆனா இவரு வர எல்லா காட்சிகளிலும் பார்க்குற நமக்கு ஒரு மாதிரியான திகல் அனுபவத்தை குடுக்கும். பயம் கலந்த மிரட்சியோடு தான் நாம் இவர பார்போம். ஏன்னா இவரு ஒரு சைக்கோ கொலைகாரன்.

ஆண்டன் 14 வயசு பொண்ண கொலை பண்ணிட்டாரு, என்பது தான் அவரு மீது சுமத்த பட்டுள்ள குற்றச்சாட்டு. “ஏன்யா கொன்னேணு” ?? ஷெரிப் (Sherif) கேட்டா, “எனக்கு யாரையாவது கொலை பண்ணனும்ன்னு ரொம்ப நாளா ஆசை, அதனால தான் கொன்னனே” அப்படின்னு வித்தியாசமான பதில்லை குடுப்பார். இதுலயே நமக்கு ஆண்டன் (Anton) ஒரு மரம் கழண்ட கேஸுன்னு தெரிஞ்சுடும். கொலை குற்றத்திற்காக, ஷெரிப் (Sherif) அவருக்கு மரண தண்டனை குடுத்து இருப்பார். இங்க ஷெரிப் பேரு எட டாம் (Edd Tom). இவரும் நான் முன்னாடியே சொன்ன 3 முக்கிய கதாபாத்திரங்களில் ஒருத்தர். கேரக்டர் நம்பர் 2. ஆண்டன்யை ஜெயிலுக்குள் போடறதுக்கு முண்ணாடி அங்க இருக்குற ஒரே ஒரு போலீஸ்காரரை ரொம்ப ரொம்ப கொடூரமான முறையில் கொலை செஞ்சுட்டு அங்கிருந்து தப்பிச்சுடுவார்.
அடுத்து டெக்சாஸ் பாலைவனத்துல ஒரு வேட்டைக்காரன் (நம்ப டாக்கூடர் விஜய் இல்லேங்க, இவரு Hunter), சில விலங்குகளை வேட்டையாடிகிட்டு இருக்காரு. அவரு பேரு மோஸ் (Moss). அவரு தான் கேரக்டர் நம்பர் 3.இவரு தான் சுட்ட மானை எடுக்க போன எடத்துல ஒரு அசம்பாவித்தை பார்க்க வேண்டியதா போகுது. அங்க கொஞ்சம் நேரத்துக்கு முன்னாடி ரெண்டு போதை மருந்து கடத்தல் கும்பல்கிடையே பெரிய துப்பாக்கி சண்டை நடந்து முடிந்து இருக்கும். கடத்தல் கும்பலில் எல்லோரும் செத்து போய் இருப்பாங்க. ஒருத்தருக்கு மட்டும் உயிர் ஒட்டி கிட்டு இருக்கும். அந்த ஆள் தண்ணிக்கு தவித்து பாவமாய் மோஸ்யை (Moss) பார்பார். மோஸ் அதை எல்லாம் கண்டுக்காம அந்த எடத்தை தேடுவார். அங்க ஒரு டிராக்கில் போதை பொருட்களும், வேறு ஒரு பெட்டியில் 2 மில்லியன் டாலர் பணம் இருக்கும். அதை எடுத்து கொண்டு தன் வீட்டுக்கு போய் விடுவார்.    
அந்த எடத்துக்கு வரும் ஒரு போதை மருந்து கும்பல், தங்கள் பணம் திருட பட்டு இருப்பதை பார்த்து, பணத்தை மீட்கும் பொறுப்பை நம்ப சைக்கோ கொலைகாரன் ஆண்டன் சிகுரு (Anton Chiguru) கிட்ட தராங்க. பொறுப்பை வாங்குன அடுத்த நிமிஷமே ஆண்டன் அந்த ரெண்டு பேரை கொன்னுடுவார். சும்மா டைம் பாஸுக்கு கொலை செஞ்சவர் நம்ப ஆண்டன், இப்போ அவருக்கு நல்ல வேலைவேற கிடைச்சிருக்கு, விடுவாரா என்ன ? அந்த 2 மில்லியன் டாலர் பண பெட்டியில ஒரு டிரன்சிமிட்டர் (Transmitter) பொறுத்த பட்டு இருக்கும். ஆண்டன் தன் கிட்ட இருக்குற ரிசிவரை (Receiver) வச்சு பண பெட்டிய தேடுவாறு. இங்க இருந்து படம் வேகம் எடுக்கும். மோஸ் (Moss) பண பெட்டிய தூக்கிட்டு ஊர் ஊரா ஒடுவாரு. சைக்கோ ஆண்டன் (Anton) மோஸ் (Moss) போற எடத்துக்கு எல்லாம் வருவாரு. இவங்க ரெண்டு பேர தேடி நம்ப ஷெரிப் எட டாம் (Edd Tom) வேற அலைவார். இப்படியாக போகும் படம்.
பண பெட்டிய கடைசியில் யார் கைப்பற்றினார்கள் ?? ஷெரிப் எட டாம் (Edd Tom) ஆண்டனை (Anton) பிடிச்சாரா ?? மோஸ் (Moss) என்ன ஆனாரு ?? இது போல பல கேள்விக்கான விடையை டைரக்டர் சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் கலந்து சொல்லி இருப்பார். இந்த படம் த்ரில்லர் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
  • சைக்கோ ஆண்டன் சிகுரு (Anton Chiguru) ஒரு வித்தியாசமான துப்பாக்கி உபயோக படுத்துவார். ஏர் கன் (Air Gun) மாதிரி ஒரு வஸ்து. அந்த கன்யை அவரு தூக்கிட்டு வர காட்சியை பார்த்தாலே நமக்கு பீதி ஆகும். ஆண்டன் அத வச்சுக்கிட்டு படம் பூரா யாரையாவது கொன்னுகிட்டே இருப்பாரு. 
  • படத்தோட கிளைமாக்ஸ் தாங்க, படத்தை தூக்கி நிறுத்தும். கண்டிப்பா அதுக்கே ஆஸ்கார் குடுக்கலாம். நிறைய பேருக்கு கிளைமாக்ஸ் புரியாது. என்னக்கும் புரியல. அப்புறம் திரும்ப திரும்ப பார்த்து தான் எனக்கு கிளைமாக்ஸ் புரிந்தது.
  • ஷெரிப் எட டாம் (Edd Tom) ரொம்ப நல்லா நடிச்சு இருப்பார். ஊரில் நடக்கும் குற்றங்களை தடுக்க முடியாமல் அவர் கஷ்ட படும் காட்சிகள் மிகவும் அழகாக இருக்கும்.
  • ஆண்டன் சிகுரு (Anton Chiguru) மற்றும் மோஸ் (Moss) இடையே நடக்கும் துப்பாக்கி சண்டை மிகவும் நேர்த்தியாக இருக்கும். அந்த கட்சிகளை நீங்கள் முச்சு விட மறந்து பார்ப்பீர்கள்.
வித்தியாசமான ஹாலிவுட் படங்களை பார்க்க விரும்பும் நீங்கள் கண்டிப்பாக தவற விட கூடாத படம் தான் No Country for Old Men.

My Rating: 8.4/10......


8 comments:

  1. கலக்கல் விமர்சனம் ராஜ்.
    படத்தில் சில காட்சிகள் எனக்கு புரியல, அதுக்கு அப்புறம் இன்னைக்கு வரைக்கும் அத நான் கண்டுக்கல. இப்போ தான் எனக்கு ஞாபகம் வருது.
    அந்த Air Gun மாடுகளை கொல்வதற்காக உபயோகப்படுத்தப்படுபவை.

    ReplyDelete
  2. நன்றி அருண்,
    இந்த படத்தில் நல்லவன் தான் ஜெய்க வேண்டும், கெட்டவன் தோற்க வேண்டும் போன்ற பல விதிமுறைகள் உடைக்க பட்டு இருக்கும். அதுவும் இல்லாமல் அடிப்படை நாவலில் இருந்து எந்த மாற்றமும் செய்ய படாமல் அப்பிடியே படமாக்க பட்டு இருக்கும்..
    அதற்காக தான் ஆஸ்கார் என்று நினைக்குறேன்.....

    ReplyDelete
  3. நல்ல விமர்சனம் சகோ..
    கோயின் பிரதர்ஸ் இயக்கிய படங்களில் இன்றுவரை பார்க்காது பெரியளவில் மிஸ் பண்ணிக்கொண்டிருக்கும் படமிது.சிறந்த படம் என்பதை கேள்விபட்டுள்ளேன்..அனைவருக்கும் புரியும் விதத்தில் எளிதான முறையில் அழாகாக எழுதி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. இந்த படத்தைதான் ரொம்ப நாளாவே தேடிகிட்டு இருக்கேன். சிக்கினா பார்த்துட வேண்டியதுதான்

    ReplyDelete
  5. பார்த்துடலாம்

    ReplyDelete
  6. படத்தோட க்ளைமாக்ஸ் என்னனு எனக்கு இது வரைக்கும் புரியலீங்க. நிறய தடவ பாத்துட்டேன். ப்ளீஸ்..!! உங்களுக்கு புரிஞ்சத எனக்கும் சொல்லுங்க பாஸ்...!!

    ReplyDelete
  7. கிளைமக்ஸ்ல புரிஞ்சத சொல்லுங்க எனக்கு ஒன்னும்புரியல����

    ReplyDelete
  8. கிளைமக்ஸ்ல புரிஞ்சத சொல்லுங்க எனக்கு ஒன்னும்புரியல����

    ReplyDelete