Sunday, August 12, 2012

Trust (2010): ஆன்லைன் சாட்டிங் வக்கிர மிருகங்கள்.

Trust (2010) அமெரிக்காவில்  இளம் டீன் ஏஜ் பெண்கள் எப்படி ஆன்லைன் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க படுகிறார்கள் என்பதை கொஞ்சம் கூட எதார்த்தத்தை மீறாமல் சொல்லும் படம். ஆன்லைன் சாட்டிங் நம்மில் அனைவரும் செய்து இருப்போம். முகம் தெரியாத நிறைய நபர்களை நாம் சந்திக்க ஒரு வாய்ப்பாய் அமைக்கிறது ஆன்லைன் சாட்டிங். முகம் தெரியாமல்/முகத்தை மூடி செய்ய படும் வாய்ஸ் சாட்டிங்கில் ஆண் பெண் போலவும், பெண் ஆண் போலவும், வயதான ஆள் தான் டீன் ஏஜ் பையன் போலவும் நம்முடன் சாட் செய்ய நிறையவே வாய்ப்பு  இருக்கிறது.


தவறான சாட் முலம் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க படுவதை, பெண்கள் ஏமாற்ற படுவதை நியூஸ் பேப்பரில் படித்து இருப்போம். நமக்கு அது வெறும் செய்தி தான், ஆனால் அந்த பெண் எந்த மாதிரியான மன உளைச்சலுக்கு ஆளாக்க படுகிறாள், அவளது குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன என்ன என்பதை, கண்டிப்பாய் முன்றாவது நபர்கள் ஆகிய நாம் உணர முடியாது. ஆன்லைன் சாட்டின் விளைவாக ஒரு அமெரிக்க  டீன் ஏஜ் பெண் எப்படி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்க பட்டு உடைந்து போகிறாள், எப்படி பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகிறாள், அந்த மன உளைச்சலில் இருந்தது எப்படி மீள்கிறாள் என்பதை அற்புதமாய் சொல்லும் படம் தான் Trust.
படத்தின் முக்கிய கதாபாத்திரமான அனே (Annie) 14 வயதை நெருங்கும் அமெரிக்க டீன் ஏஜ் பெண். முதல் காட்சியில் அனே நெட்டில் சிலருடன் தனது ஸ்கூல் வாலிபால் செலக்ஷன் பற்றி ஆன்லைன் குரூப் சாட் செய்வது போன்று படம் ஆரம்பிக்கும், அந்த சாட்டில் தன்னுடன் தவறாக பேசும் நபரை அனே உடனே பிளாக் செய்து விடுவாள். இதில் இருந்தது தவறாக பேசுபவர்களை கண்டு பிடிக்கும் அளவுக்கு வளர்ந்த பெண் அனே என்பது நமக்கு புரியும். அந்த குரூப் சாட்டில் சார்லி என்பவன் மட்டும் மிகவும் நல்லவன் போல் அனேவிற்கு வாலிபால் விளையாட்டு பற்றி டிப்ஸ் தருவான். அனேவும் ஸ்கூல் வாலிபால் டீமில் விளையாட செலக்ட் ஆகி விடுவாள். மறுநாள் சாட்டில் சார்லி அவளது செலக்ஷன் பற்றி கேட்க, அனேவிற்கு சார்லி மீது நல்ல அபிப்பிராயம் வருகிறது. இருவரும் சாட்டில் பேச ஆரம்பிக்கிறர்கள். சார்லி தனக்கு 15 வயது தான் ஆகிறது, தானும் ஸ்கூல் வாலிபால் பிளேயர் என்று சொல்லுவான். இப்படியாக சார்லி மற்றும் அனேவின் நட்பு சிறு புள்ளியில் ஆரம்பித்து வளர்கிறது.

இதற்கிடையே அனேவின் தந்தை வில் (Will) அவளது 14 ஆவது பிறந்த நாள் அன்று Apple Mac புக் ஒன்றை பரிசாக தருவார். Mac புக் முலம் அனே சார்லியுடனான தனது சாட்டிங்கை தொடர்கிறாள். அப்பொழுது சார்லி தான் 15 வயது பையன் இல்லை, தனக்கு 20 வயது ஆகிறது என்று சொல்லுவான். அனேவும் அதை பெரிய விஷயமாக எடுத்து கொள்ள மாட்டாள். சிறிது நாட்களில் இருவரும் டீப் சாட்டிங்கில் இறங்கி விடுவார்கள். பிறகு சார்லி தனக்கு 20 வயது இல்லை, தான் 25 வயது வாலிபன் என்று ஒரு புகைபடத்தை அனுப்புவான். அனே அப்பொழுதும் அவனை மன்னித்து விடுவாள்.
இருவரது சாட்டிங் எந்த தடையும் இன்றி வளர்கிறது. ஒரு நாள் சார்லி நாம் இருவரும் சந்தித்தால் என்ன என்று சொல்லி, அந்த சந்திப்புக்கு அனேவிடம் சம்மதம் வாங்கி விடுவான். அந்த ஊரில் இருக்கும் ஒரு மாலில் இருவரும் சந்திப்பது என்று முடிவு செய்கிறார்கள். அந்த மால்க்கு சென்று சார்லியை பார்த்த பிறகு தான் அனேவிற்கு தெரிய வரும், சார்லி 25 வயது வாலிபன் கிடையாது, 35 வயதை கடந்த நடுத்தர ஆள் என்பது. மால்லில் இருந்தது வெளியேற அனே செய்யும் முயற்சி, சார்லியின் நயவஞ்சக பேச்சால் தடுத்து நிறுத்த படுகிறது. மால்லில் இருந்தது அனேவை சார்லி ஒரு ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்று அவளை பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறான்.

அந்த சம்பவத்தினால் மனம் சோர்வடையும் அனே, அதை பற்றி தனது உயிர் தோழியான பிரிட்டானியிடம் சொல்கிறாள். ஆனால் பிரிட்டானி அந்த சம்பவத்தை அவர்கள் படிக்கும் ஸ்கூல் நிர்வாகத்திடம் சொல்லி விடுவாள். அங்கிருந்து லோக்கல் போலீஸ், பிறகு FBI வரை விஷயம் சென்று விடும். அனே ஒரு வயதான நபரால் ஏமாற்றி கற்பழிக்கப்பட்டு இருக்கிறாள் என்பதை கேள்விப்பட்டு வில் (Will) உடைந்து விடுவார். FBI விசாரணையில் சார்லி இது போல் பல பெண்களை ஏமாற்றி இருப்பது தெரிய வரும். அதுவும் எந்த ஒரு தடயமும் விடாமல் தவறை சரியாக செய்பவன் சார்லி என்பது தெரியவரும். IP அட்ரெஸ், கிரெடிட் கார்டு, போட்டோ என்று ஒரு தடயம் கூட கிடைக்காது.
சாதாரண ஆக்சன் படமாக இருந்தால், பாதிக்க பட்ட பெண்ணின் அப்பா கதாபாத்திரம் தன் பெண்ணை மோசம் செய்தவனை துரத்தி துரத்தி கொலை செய்வது போல் இருந்தது இருக்கும். அது நடைமுறை சாத்தியம் இல்லாத செயல். அப்படி செய்து இருந்தால் பத்தோடு பதினொன்று என்று இந்த படம் ஆகி இருக்கும்.

ஆனால் Trust படத்தில் அந்த மாதிரி எதுவும் செய்யாமல், பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாக்க பட்ட பெண் எதிர் கொள்ளும் பிரச்சனைகள், அவர்களது குடும்பம் சந்திக்கும் சிக்கல்கள் பற்றி காட்டி இருப்பார் இயக்குனர் டேவிட் சுவிம்மர் (David Schwimmer). தன் அன்பு மகள் யாரோ ஒருவனால் ஏமாற்ற பட்டு விட்டாளே என்று  அனேவின் தந்தை கதாபாத்திரமான வில் கதறும் காட்சிகள் நம்மை நிறைய இடங்களில் உலுக்கி எடுத்து விடும். படம் நகர நகர நாமும் அவர்களது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் ஆகி விடுவோம். அந்த குடும்பத்துக்கு எப்படியாது ஆறுதல் சொல்ல வேண்டும் என்று நம்மை ஏங்க வைத்து விடுவார் இயக்குனர். படத்தின் இறுதி காட்சியில் வில் மற்றும் அனே இடையே நடைபெறும் உரையாடல்கள் உலக தரமானவை. யாரையும் பழி வாங்காமல், யாருக்கும் அப்படி இரு, இப்படி இரு என்று அட்வைஸ் செய்யாமல் என்ன நடந்தாலும் Life has to Go On என்ற தத்துவத்துடன் படம் முடியும்.
படம் முடிந்து கிரெடிட்ஸ் போடும் போது சார்லி என்பவன் யார் என்று காட்டப்படும். அந்த காட்சியை பற்றி ரொம்ப நேரம் நினைத்து கொண்டு இருந்தேன். எனக்கு தோன்றியது சார்லி என்பவன் சமுகத்தில் முலையில் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து வாழும் மிருகம் கிடையாது, அவன் சமுகத்தின் உயர்ந்த இடத்தில் கூட இருக்கலாம், எங்கும் இருக்காமல் எதிலும் இருக்காமல், யாராகவும் இருக்காமல்...

போன வருடம் இணையத்தில் ஒரு பிரச்சனை வெடித்தது, சாரு நிவேதிதா என்கிற எழுத்தாளர்/பிளாக்கர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசி விட்டார் என்ற சர்ச்சை வெடித்தது. அது உண்மையா என்று கூட எனக்கு தெரியாது. அனைவரும் சாரு நிவேதிதாவை அவர் சாட்டில் பேசியதை விட மிகவும் ஆபாசமாக பேசினார்கள். அந்த பெண்ணின் மனநிலையில் இருந்தது யோசித்து பார்த்தவர்கள் மிகவும் சில பேரே. எனக்கு இந்த படம் பார்த்த உடன் அந்த பெண்ணின் (அது பெண்ணே கிடையாது என்றும் சில பேர் சொன்னார்கள்) மன நிலையை யோசித்து பார்த்தேன், ஒரு கனம் என் உடம்பு நடுங்கி விட்டது. அது தான் Trust டின் தாக்கம்.

வாய்ப்பு கிடைத்தால் இந்த படத்தை கண்டிப்பாய் பாருங்கள். முழு படத்தையும் youtube யில் காண இங்கு கிளிக் செய்யவும்.

Trust: What Ever happens Life has to Go On.

My Rating: 8.3/10......


29 comments:

  1. ரொம்ப அழுத்தமான படம் போல் படுகிறது.. தவறாமல் பார்த்துவிடுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பா பாருங்க தல..

      Delete
  2. நானும் கடந்த சில மாதங்கள் முன்பு தான் இந்த படத்தை பார்த்தேன்.. ரொம்பவே பாதித்தது.. அப்பாவின் நடிப்பு சூப்பர்.. இதே அளவு தாக்கம் வழக்கு எண் பார்க்கும் போதும் வந்தது..

    ReplyDelete
    Replies
    1. "வழக்கு என்" நான் பார்த்ததிலே மிக சிறந்த படம் என்பேன், அதன் தாக்கம் ரெண்டு நாட்கள் இருந்தது. வழக்கு என் நம்ம ஊரின் அவலங்களை பதிவு செய்த கதை, Trust அமெரிக்க கலாச்சாரதின் ஓட்டைகளை சொல்லும் படம்.
      Trust படத்தின் கிளைமாக்ஸ் எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது, வழக்கு என் படத்தில் இந்த மாதிரி ஒரு அப்பா கதாபாத்திரம் இல்லாமல் போய் விட்டது :(

      Delete
  3. வெளிநாட்டினர் எவ்வளவு அற்புத கதையுள்ள படமெல்லாம் எடுக்கிறார்கள் ! அவசியம் பார்க்கணும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. என்ன தல இப்படி சொல்லிட்டீங்க... நம்ம ஊர்ல வீட்டுக்கு வீடு இந்த மாதிரி கதை இருக்கு. ஆனா அதை படமா எடுத்து வெளியிட தான் சுதந்திரம் இல்ல... கலாச்சாரம் கெட்டுடுமாம்!

      Delete
    2. தமிழில் "ஈசன்", "வழக்கு என்" போன்ற படங்களும் இதே தீம் கொண்டவை தான். ஆனால் இந்த ரெண்டு படங்களில் முடிவு மட்டும் வேறு மாதிரி இருக்கும்...

      Delete
  4. இந்தப் படம் எப்பவோ ஜாக்கி தளத்தில் படித்த ஞாபகம். ஆனால் இன்னும் பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை. நல்ல கதை போலத் தெரிகிறது. முடிந்தால் டவுன்லோட் செய்து பார்க்கிறேன்.(டெம்ப்ளேட் கமெண்ட் :) )

    ReplyDelete
    Replies
    1. இதுல என்ன பாஸ் இருக்கு. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாய் பாருங்கள் :)

      Delete
  5. பகிர்வுக்கு நன்றி நண்பரே.
    கண்டிப்பாக காண முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.. வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாய் பாருங்கள்..

      Delete
  6. வெகு நாட்களுக்கு முன்னரே கேள்விப் பட்டு, டவுண்லோட் செய்தும் வைத்திருந்தேன். ஆனால் பார்க்கத் தான் மனம் வரவில்லை. நம் நாட்டில் நம் கண்முன்னே "I'm living Living my Life" என்று சொல்லிக்கொண்டு கண்மண் தெரியாமல் ஏதாவது செய்துவிட்டு சீரழியும் பெண்களைப் பார்த்து வெறுப்பாகியிருந்ததால், இதில் எதற்கு அமெரிக்க சோகம் என்று பார்க்காமலிருந்தேன்.

    நீங்க இவ்ளோ சொல்றீங்க, பாக்காம இருந்தா நல்லாயிருக்காது. இந்த வாரம் பாத்துடுறேன் :-)

    ReplyDelete
  7. அழுத்தமான பதிவு , படமும் அப்படியே இருந்து எனக்கு பிடித்துபோக வேண்டுமென்று எல்லாம் வல்லவனை பிரர்த்திக்கிறேன். எனக்கு தெரிந்து சாரு மேட்டர் உண்மை. எதிர் முனை ஆணோ பெண்ணோ தெரியாது. ஆனால் சாரு , தட்டுத்தடுமாறி சமாளித்ததில் இருந்து அவர் சாட் பண்ணியது உறுதியாகிறது.

    ஆனாலும் அந்த சாட் உரையாடல்களை பார்க்கையில் , அந்த பெண்ணும் (??) சில இடங்களில் சாருவுக்கு இடம் கொடுத்திருப்பது தெரிய வரும்.

    ReplyDelete
    Replies
    1. தல, உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும். படம் சில இடங்களில் கொஞ்சம் ஸ்லோவாக போகும். அவ்வளவு தான். அந்த சாட் பிரச்சனை வெடிச்ச அப்ப நானும் அதை ரொம்பவே தீவரமா follow செஞ்சேன். அவர் பண்ணியது சரியா, தப்பான்னு நான் சொல்ல வரல :), அது பொண்ணே இல்லைன்னு சில பேர் சொன்னாங்க, அதுவும் உண்மையாக இருக்கலாம். ஒரு வேலை அந்த பெண் உண்மையில் இருந்து இருந்தால், அந்த பெண்ணின் நிலையில் இருந்து யோசிக்க வைக்கும் இந்த படம்.
      எல்லோருக்கும் தெரிந்த கேஸ் சொன்னால் புரிய ஈஸியாக இருக்கும் என்று சாரு கேஸ் சொன்னேன். தவறாக இருந்தால் நீக்கி விடுகிறேன் :)

      Delete
    2. தவறு என்று யாரு சொன்னா... அவசியம் இது போன்ற உதாரணங்கள் காட்டப்படவேண்டும், ஒன்று நமது விடயம் இலகுவில் விளங்கிக்கொள்ளப்படுவதற்கு, இன்னொன்று சமகால வக்கிர மிருகங்களை அடையாளம் கண்டு கொள்வதற்கு! நீங்க ஜமாய்ங்க.....

      Delete
  8. ரொம்பவே Intense ஆன படம் போல இருக்கு.., இன்னும் பாக்கல் பாக்கணும் :)

    hard candy ன்னு ஒரு படம் இருக்கு அதும் சாட்ல தான் ஆரம்பிக்கும் அப்புடியே உல்டாவா இருக்கும் :)


    சாரு ப்ளாக்கரா அடப்பாவிகளா ????

    ReplyDelete
    Replies
    1. மன்னிச்சு தல..
      அவர் சாரு சைட்ல பதிவுகள்(Articles) வேற எழுதுறார்ல, அது தான் அப்படி சொன்னேன். முழு நேர எழுத்தாளர், பகுதி நேர பிளாக்கர்.
      சரி விடுங்க தல, பிளாக்கர் வார்த்தையை தூக்கி விட்டேன். :)
      அப்புறம் தல "Hard Candy" செம டெரர் படம், கொஞ்சம் இல்ல ரொம்பவே கொடுரமா இருந்தது. இது சாப்ட் படம், அந்த பொண்ணுக்கு நீங்கள் பரிதாப படுவீர்கள்.

      Delete
    2. அட என்னங்க நீங்க மன்னிப்பெல்லாம் கேட்டு சங்கடப்படவைக்குறிங்க .., பீ கூல் :)

      Delete
  9. அருமையான படம் எனத் தோன்றுகின்றது.. உடனேயே பார்த்தாக வேண்டும்.. இத்தகைய படங்கள் தமிழிலும் வர வேண்டும்.. இணைய அரட்டையில் பல பெண்கள் குறிப்பாக இளம் பெண்கள் சிக்கி சின்னாப்பின்னம் ஆகின்றார்கள் ... !!! பெரும்பாலும் இணையத்தின் ஊடாக பெண்களை கெடுக்கும் ஆண்கள் பல சமயங்களில் நல்ல நிலையில், கௌரவமாக இருக்கும் ஆண்களாக கூட இருக்கின்றார்கள் ... !!! என்பது தான் யதார்த்த உண்மை ..

    படத்தின் பெயர் Trust - என்பதே அருமையாக உள்ளது .. !!!

    இப்படம் அமெரிக்காவில் மட்டும் நடைப்பெறுவதை பிரதிபலிக்கவில்லை. உலகம் எங்கும் இப்பிரச்சனை இருக்கின்றது... !!! இந்தியாவில் இது பெருகி வருகின்றது .. !!!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் இக்பால், இந்த கதை அமெரிக்காவுக்கு மட்டும் இல்லை, உலககுதுக்கே பொருந்தும்.
      1) இளம் பெண்கள் பாதை மாறி போவதை தடுப்பதற்கு அவர்கள் பெற்றோர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும். தங்கள் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.
      2) முக்கியமாக sexual predators திருந்த வேண்டும். அவர்களது முகத்திரையை இந்த படம் கிழிகிறது.
      இந்த படம் இவ் இரண்டையும் மிகவும் அழுத்தமாக பதிவு செய்கிறது.
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..

      Delete
  10. ஆழமான விமர்சனம்.. படம் பார்க்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
  11. அருமையான விமர்சனம்... கண்டிப்பாக படம் பார்க்க தூண்டுகிறது..
    வாழ்த்துக்கள் ராஜ்...

    ReplyDelete
  12. அழகான தெளிவாக புரியும் படியான விமர்சனம் தல....நா எப்போ உலக சினிமா(?) பக்க ஆரம்பிக்கப் போறேன்னு தெரியல தல

    ReplyDelete
  13. நல்ல விமர்சனம்...

    முடிவாக சொன்னீர்களே :

    /// அந்த பெண்ணின் மனநிலையில் இருந்தது யோசித்து பார்த்தவர்கள் மிகவும் சில பேரே. ///

    நடைமுறை வாழ்வில் யாரும் இதை செய்வது அரிது...
    செய்தால் பிரச்சனைகள் குறைவு...

    லிங்க் கொடுத்தமைக்கு நன்றி நண்பா...

    தொடருங்கள்...வாழ்த்துக்கள்... நன்றி… (த.ம. 4)

    ReplyDelete
  14. உங்கள் தளத்தை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் இருக்கும் போது வந்து பார்க்கவும், முகவரி கீழே இணைத்துள்ளேன்.

    http://blogintamil.blogspot.com/2012/08/blog-post_16.html

    ReplyDelete
  15. வணக்கம் சொந்தமே!இன்றும் இப்போதும் நடந்து கொண்டிருக்கும் ஒருவிடயம் பற்றிய படம் .விமர்சனமே புரியவைக்கிறது இப்படம் எப்படி அமையப்போகிறது என்று.வாழ்த்துக்களும் நன்றிகளும் இப்பகிர்விற்காய்.சந்திப்போம் சொந்தமே!



    ஒரு தேநீரும் அவன் நினைவுகளும்.!!!!! !

    ReplyDelete
  16. டவுன்லோட் போட்டு விட்டேன் நண்பரே,
    கண்டிப்பாக பார்க்கிறேன்.
    மிக அருமையான விமர்சனம்
    http://dohatalkies.blogspot.com/2012/08/a-beautiful-mind.html

    ReplyDelete
  17. i like clive owen... and I think this movie seems good. thanks. can u give the download link of this movie pls?

    ReplyDelete
  18. கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்த திரைப்படம். விமர்சனம் நன்று.

    ReplyDelete