Sunday, July 01, 2012

ஸ்பைடர் மேன்....விம்பிள்டன்....மம்மி


ஸ்பைடர் மேன் படங்கள் ஏற்கனவே முன்று பாகங்களாக வெளி வந்த பொழுதிலும், அது எல்லாம் செல்லாது...செல்லாது, ரொம்ப சுமாரா இருக்கு, எல்லாத்தையும் அழி, முதல இருந்தது ஸ்பைடர் மேன் சீரீஸ் எடுப்போம்ன்னு கிளம்புனாங்க சோனி கம்பெனி. இந்த முறை ஸ்பைடர் மேன் சீரீஸ் டைரக்ட் செய்ய அவங்க செலக்ட் செய்த ஆளு "மார்க் வெப்" (Mark Webb). இவரு இதுக்கு முன்னாடி பெருசா எந்த  பெரிய பட்ஜெட் படங்களும் எடுத்தது கிடையாது. (500) Days of Summer  அப்படிங்கிற ரொமானஸ் படத்தை மட்டும் தான் சொல்லிக்கிற மாதிரி எடுத்து இருந்தார். அவர் மேல நம்பிக்கை வைச்சு சோனி நிறுவனம் அவருக்கு இந்த வாய்ப்பை குடுத்தாங்க. குடுத்த வாய்ப்பை ரொம்பவே நல்லா பயன்படுத்தி இருக்காரு வெப். படு மொக்கையான, தூங்கி வழிஞ்ச பேட்மேன் சீரீசை நோலன் ரீபூட் (Reboot) பண்ணுனாறு, அதுல ஒரு அர்த்தம் இருந்திச்சு. ஆனா  ஸ்பைடர் மேன் சீரீஸ் முத முனு  பாகத்ததிலும் நல்லா சம்பாரிச்ச அப்புறமும் நாங்க ஸ்பைடர் மேன் சீரீஸ்யை ரீபூட் பண்ணுவோம்ன்னு சோனி சொன்னது என்னால் ஏத்துக்க முடியல. சரி விடுங்க, அவங்க படத்தை எடுத்துட்டாங்க, நம்ம கடமை படத்தை பார்கிறது, கடமையை மட்டும் சரியா செய்வோம்..
படத்தோட தீம் பழைய "ஸ்பைடர் மேன்" படத்தோட தீம் தான். ஹீரோ, ஹீரோயின் எல்லாருமே புதுசு. ஹீரோ பீட்டர் பார்க்கர் சிறுவனா இருக்கும் போது அவரோட அப்பா, அம்மா அவரை விட்டுட்டு போயிறாங்க. எங்க போனாங்கன்னு அடுத்த பாகத்தில் சொல்லுவாங்கன்னு நினைக்கிறன். ஏன் போனாங்கன்னு இந்த பாகத்தில் சொல்லுறாங்க. ஹீரோ பீட்டர் தன்னோட அத்தை, மாமா கூட வளருகிறார். பெரியவன் ஆனதும் தன்னோட அப்பா, அம்மா ஏன் தன்னை விட்டுட்டு போனாங்கன்னு தேடி போகும் போது அவர் அப்பா கண்டு பிடிச்ச பார்முலா ஒன்னு இவருக்கு தெரியவருது. அதோட நூல் பிடிச்சு போறப்ப ஆஸ்கார்ப் (Oscorp) என்கிற ஆராச்சி நிறுவனத்தில் தன்னோட அப்பா வேலை செஞ்சாருன்னு தெரியவருது. ஆஸ்கார்ப் (Oscorp) நிறுவனம் பழைய ஸ்பைடர் மேன் -பார்ட்-1 ல வரும் அதே நிறுவனம் தான்.
அங்க பீட்டர் கர்ட் கான்னர்ஸ் (Curt Connors) என்கிற தன் அப்பாவோட பழைய நண்பர் மற்றும் தற்போதிய விஞ்ஞானியை சந்திக்கிறார். அவருக்கு ஒரு கை இல்லை. அவர் ஒரு ஆராய்ச்சி செய்கிறார். அதாவது பல்லிக்கெல்லாம் வால் அறுந்தால் மீண்டும் தானாகவே வளரும் அல்லவா அது போல மனிதர்களுக்கு ஏதாவது உறுப்பு சிதைந்து விட்டால் அதை மீண்டும் வளர வைக்கும் ஆராச்சி தான் அது. அந்த ஆராச்சி கூடத்தில் இருக்கும் அறிய வகை சிலந்தி ஒன்று பீட்டரை கடித்து விடுகிறது. சாதா ஹீரோ இப்பொழுது சூப்பர் ஹீரோ ஆகி விடுகிறார். சிலந்தி மாதிரி செவுத்துல ஓட்டுறது, வேகமா ஓடுறது போன்ற பாதி சக்தி தான் அந்த சிலந்தி கடி முலமா வருது. கையில இருந்தது போற சிலந்தி வலையை ஹீரோ "Web Shooter" என்ற கருவி முலம் உருவாக்கி கொள்கிறான். இப்ப முழு ஸ்பைடர் மேன் ரெடி. ஹீரோ ரெடி..... வில்லன், ஹீரோயின் எல்லாம் ரெடி ஆக வேண்டாமா..??? இதுக்கு நடுவுல நமக்கு ஹீரோயின் பத்தின அறிமுகம் வேற குடுக்கிறாங்க. ஹீரோயின் பழைய மேரி ஜேன் கிடையாது. காமிக்ஸ் கதையில வர க்வென் ஸ்டேஸி (Gwen Stacy) தான் ஹீரோயின். இவங்க ஸ்பைடர் மேன் கூட ஒரே காலேஜ்ல படிக்ககிறாங்க. 
பீட்டர்ரோட மாமா முதல் பாகத்துல வர மாதிரியே ஒரு கொள்ளைகாரனால் கொலை செய்ய படுகிறார். அந்த கொலை பீட்டர் கண்ணு முன்னாலே நடக்கிறது. அதை பீட்டர் தடுக்க தவறி விடுகிறான். ஸோ, பீட்டர்க்கு சமுக விரோதிகளை எதிர்த்து போராட காரணமும் ரெடி. இப்படியா சமுக விரோதிகளை எதிர்த்து போராடி வரும் பீட்டரை நியூயார்க் நகர போலீஸ் கேப்டன் ஜார்ஜ் ஸ்டேசி (George Stacy) தீவரமா தேடி வரார். இவரோட பொண்ணு தான் ஹீரோயின் க்வென் ஸ்டேஸி (Gwen Stacy). ஒரு ரொமாண்டிக் மாலை பொழுதில் பீட்டர் மட்டும் ஹீரோயின் ஸ்டேஸி இடையே காதல் பற்றி கொள்ள, பீட்டர் நான் தான் "ஸ்பைடர் மேன்" என்று போட்டு உடைத்து விடுகிறார். அந்த காட்சி மிகவும் அற்புதமாய் படமாக்க பட்டு இருக்கும். மெகா சீரியல் மாதிரி இழுக்காமல் டக் என்று பீட்டர் "ஸ்பைடர் மேன்" ரகசியத்தை போட்டு உடைத்து பெரிய ஆறுதல்...
இப்ப வில்லன் எபிசோடு. கர்ட் கான்னர்ஸின் (Curt Connors) பல்லி ஆராச்சியில் வெற்றி கிட்டாமல் இருக்கிறது. பீட்டர் அவரை சந்தித்து தன் அப்பாவின் பார்முலாவை கான்னர்ஸ்யிடம் தருகிறான். அந்த பார்முலாவை எலிகளிடம் பரிசோதிக்கும் கான்னர்ஸ் எலிகளிடம் நல்ல முன்னேற்றத்தை காண்கிறார். பிறகு சந்தர்ப்ப வசத்தால் அந்த மருந்தை தன் மீதே செலுத்தி விடுகிறார். சிறிது நேரத்தில் அவரின் இழந்த கை மீண்டும் வளர்கிறது.... ஆனால் அதன் சைடு எபக்ட் ஆக கான்னர்ஸ் பாதி பல்லி, பாதி டைனோசர் மாதிரி மாறி விடுகிறார். மீண்டும் தன் பழைய நிலைக்கு போக மனம் இல்லாமல் அழிவு பாதையை தேர்வு செய்து விடுகிறார். தனது மருந்தை நியூயார்க் நகர மக்கள் அனைவரின் மீதும் செலுத்த முற்பட்டு பெரிய ப்ளான் போடுகிறார். அதை பீட்டரால் மட்டுமே தடுக்க முடியும் என்பதை பவர் ஸ்டார் ரசிகன் கூட சொல்லி விடுவான். ஆனால் கான்னர்ஸின் அந்த முயற்சியை ஹீரோ பீட்டர் தடுக்கும் விதம் மிக பிரமாதமாய் படமாக்க பட்டு இருக்கும். அதை அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.
ஸ்பைடர் மேன் ஆக நடித்த "ஆண்ட்ரூ கார்பீல்ட்" மிக சரியான தேர்வு என்று நான் சொல்வேன். ஏதோ நம் பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கிறார். ரொம்ப நல்லா நடித்து இருந்தார். எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது....

ஸ்பைடர் மேன்: A New Begining...

---------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த வருஷம் விம்பிள்டன் தொடரில் ரஃபேல் நடால் யாரும் எதிர்பாராத விதமாக ரெண்டாவது சுற்றில்  100-வது இடத்தில் உள்ள செக். குடியரசின் லூகாஸ் ரோசோல்யிடம் 7-6, 4-6, 4-6, 6-2, 4-6 என்ற செட் கணக்கில் போராடி தோற்று போனார். இது நான் மட்டுமல்ல யாருமே எதிர் பார்க்காத தோல்வி. ஸ்பெயின் புட் பால் டீம் விளையடுறதை பாலோ செஞ்சிட்டு சரியா ப்ராக்டிஸ் செய்யாது தான் அவரோட தோல்விக்கு காரணம் என்று நடால் எதிர்ப்பு கும்பல் விஷம்ம பிரசாரம் செய்யுறாங்க. நான் அந்த மேட்ச் கடைசி செட் பார்த்தேன், லூகாஸ் போட்ட ஏஸ்சை (ACE) யாராலையும் தொட்டு இருக்க முடியாது. ஏதோ அன்னைக்கு ரொம்பவே மோசமான நாள் ஆக போச்சு நடால்க்கு. அடுத்த US ஓபன்ல நடாலின் விஸ்வருபத்தை ரொம்பவே எதிர்பார்கிறேன்.....
நடாலின் விம்பிள்டன் தோல்விக்காவது ஸ்பெயின் கண்டிப்பாய் யூரோ ஜெய்க்க வேண்டும்.. இத்தாலி ஜெயித்தால் என் சோகம் இன்னும் அதிகம் ஆகும்.......பார்போம்!!!!!!!!
Nadal Rosol Match
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு பிரபல எழுத்தாளர் அவரு.
அவரோட பழைய குடை ஒண்ணு வேண்டாம்னு
குப்பையில் வீசி எறிஞ்சிட்டாரு.

அடுத்த நாளே, அரோட வீட்டு வாசலில
வந்து நின்னாரு பக்கத்து வீட்டுக்காரரு-
அவர் வீசி எறிஞ்ச குடையோட:
‘சார் …உங்க குடையை யாரோ எடுத்து
குப்பைத் தொட்டியிலே போட்டிருக்காங்க! இதோ உங்க குடை!
கொடுத்துட்டுப் போயிட்டாரு......

கடுப்பான எழுத்தாளர், அதக் கொண்டு போயி
ஒரு பாழுங் கிணத்துல போட்டுட்டாரு.

அடுத்த நாளே அவரோட வீட்டு வாசலில் வந்து நின்னாரு
தூர் வாருற ஆசாமி ஒருத்தரு, கையில அதே குடையோட:
‘சார்…இதோ உங்க குடை
யாரோ கிணத்துல வீசி எறிஞ்சிட்டாங்க!’
கொடுத்துட்டுப் போயிட்டாரு, ரொம்பதான் கடுப்பாகிப்
போனாரு எழுத்தாளர். ராத்திரி முழுக்க யோசிச்சாரு:
‘எப்படி இதை ஒழித்துக் கட்டுவது?’

யோசனை ஒண்ணு உதயமாச்சு! அடுத்த நாள் -
அதை ஒருத்தரிடம் ஓசி கொடுத்து விட்டாரு.

அப்புறமென்ன! அது திரும்பி வரவேயில்லை.

"இரவல் என்றும் ஒரு வழிப்பாதைதான்"!!!!!!!!!!!!!!!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------
ராஜா ராஜா தான்..மம்மி மம்மி தான்:
இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாய் உங்கனால் சிரிக்காமல் இருக்க முடியாது...


---------------------------------------------------------------------------------------------------------------------------



27 comments:

  1. "இரவல் என்றும் ஒரு வழிப்பாதைதான்"!!!!!!!!!!!!!!!!!
    படித்துக்கொண்டே வந்தேன்,என்னவோ செய்யபோரருனு ,கடைசியில் இரவல் .

    ReplyDelete
    Replies
    1. நண்பரே..இரவல் கதை நான் எங்கோ படித்த கதை தான்...எனது கதை அல்ல அது..

      Delete
  2. ஸ்பைடர் மேன் பாக்க வேண்டாமுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தே....உங்க விமர்சனம் படிச்சப்போ பாக்காலாமுன்னு தோனுது..

    ReplyDelete
    Replies
    1. படத்தை ஒரு தடவை தியேட்டரில் பார்க்கலாம்.....கண்டிப்பா பாருங்க பாஸ்..

      Delete
  3. வில்லன் "பல்லி" தான் கொஞ்சம் மொக்கை. மற்றபடி படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. முக்கியமாக 3D!

    ReplyDelete
    Replies
    1. பாஸ்,
      நான் சாதா தியேட்டரில் தான் பார்த்தேன்..3D யில் பார்த்தால் எனக்கு தலைவலிக்கும்....இங்கு IMAX 3D யில் ரிலீஸ் செய்து இருக்கிறார்கள்.....

      Delete
  4. நான் இன்னும் பார்க்கவில்லை மச்சி ஏற்கனவே கார்ட்டூன் வந்ததை தானே திரும்ப எடுக்குறாங்க டிஸ்னி அதை பாத்தாச்சு படம்மும் பாக்கணும் நல்ல பிரிண்ட் ஆன்லைன் கிடைக்கும் போது பாக்க வேண்டியது தான்...Curt Connors அவர் ரொம்ப நல்லவர் பல்லியில் இருந்து நல்லபடியாய் மாறியபின் spidermanக்கு நிறைய உதவி செய்வார் ஆனா பல்லியாவே இருப்பார் படத்தில் எப்படி...கார்டூன் FANTASTIC FOUR,CAPTAIN AMERICA,IRON MAN,X-MEN எல்லாம் வருவாங்க இனி வரும் பாகம் எப்படின்னு பாப்போம்

    ReplyDelete
    Replies
    1. Curt Connors கடைசியில் நல்ல படியாக மனிதனாக மாறி விடுவார்...அடுத்த பாகத்திற்கு அவரை save செய்து இருக்கிறார்கள்...
      நல்ல பிரிண்ட் வர கொறஞ்சது 2 மாசம் ஆகும் மச்சி... இன்னும் AVENGERS-ரே நல்ல பிரிண்ட் வரல... சான்ஸ் கிடைச்சா தியேட்டர்ல பாரு தல...

      Delete
  5. இரவல் கொடுப்பது சூப்பர் அது தானே உண்மை.....இன்னும் நீங்க பல படங்களுக்கு விமர்சனம் எழுத வேண்டும் நடுவிலே காணமல் போய்டாதிங்க.....

    ReplyDelete
  6. ஒரு மொக்கை படத்துக்கு இவ்வளவு நீளமா எழுதனுமா...?

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு பாராவில முடிச்சிடணும் என்று தான் நினைச்சேன் பிரபா...எழுத எழுத பெருசா போச்சு.
      ஆமா நீங்க சொன்ன மாதிரி பதிவு பெருசு தான்...படம் ரொம்ப மொக்கை மாதிரி எனக்கு தோனல...!!

      Delete
  7. படம் பாக்கனும்னு நினைக்க தோணுது

    கடைசி வீடியோ செம கலக்கல்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி சார்....
      அந்த வீடியோவை பார்த்து நான் ரொம்பவே சிரிச்சேன்..அதான் ஷேர் பண்ணுனேன்..

      Delete
  8. // அதை பீட்டரால் மட்டுமே தடுக்க முடியும் என்பதை பவர் ஸ்டார் ரசிகன் கூட சொல்லி விடுவான்.//

    ஹா ஹா ஹா தமிழ் சினிமா சினிமா விமர்சனம் மாதிரியே இருந்தது. பாப்ர்பென என்று தெரியவில்லை காரணம் science fiction படங்கள் பிடிப்பதில்லை. பேய் திகில் படங்கள் மட்டுமே பிடிக்கும் என்பதால்

    //இரவல் என்றும் ஒரு வழிப்பாதைதான்//

    அதுவும் சரி தான் நண்பா.

    ReplyDelete
    Replies
    1. மச்சி...
      இந்த மாதிரி சூப்பர் ஹீரோ Sci.Fi படங்கள் தியேட்டரில் பார்க்க ரொம்ப நல்லா இருக்கும்...
      ரொம்ப நல்ல தியேட்டரா இருந்தா மட்டும் போய் பாருங்க...

      Delete
  9. ஆரம்பக்கட்ட விமர்சனங்கள் செம மொக்கையாக வந்ததால மார்க் வெப் சொதப்பிட்டாருன்னு நெனச்சேன். நீங்களும் கருந்தேளும் படம் சூப்பர்னு சொல்றீங்க. ஸ்ரீலங்கால இன்னும் அவெஞ்சர்ஸ் ஓடி முடியல. இது எப்ப வருமோ? என்னாலும் பார்க்க முடியல. இந்த வார இறுதியில் அவெஞ்சர்ஸுக்கு ப்ளான் பண்ணியிருக்கேன். அதுக்குள்ள தியேட்டர்ல இருந்து தூக்கிருவானுங்களோ தெரியல.

    “ஆண்ட்ரூ கார்பீல்ட்” பீட்டர் பார்க்கர் பாத்திரத்திற்கு மிகவும் சரியான தேர்வு. ஸ்மார்ட் பர்சனாலிட்டி.

    கடைசி வீடியோவும் சூப்பர் ...

    ReplyDelete
    Replies
    1. பாஸ்,
      படம் ரொம்ப சூப்பர் எல்லாம் கிடையாது...ஒரு வாட்டி தாராளமா பார்க்கலாம்.. பேட்மேன் அளவுக்கு எதிர் பார்க்க முடியாது ... வாய்ப்பு கிடைச்சா ஒரு வாட்டி பாருங்க...

      Delete
  10. ஸ்பைடர்மேன் இன்னும் பார்க்கலை.. ஆனா எனக்கு ட்ரெயிலரில் அந்த கிராஃபிக்ஸ் ரொம்ப cheesyயா வீடியோகேம் மாதிரி இருந்ததாக தோன்றியது.. உங்க கருத்தை வாசிச்சதுக்கப்புறம்படம் பார்த்துரலாம்னு தோணுது!

    ஸ்பெயின் ஜெயிச்சிருச்சு! சந்தோஷம் தான் :)

    * கடைசி வீடியோ செம கலாட்டா!! கதையும் சூப்பர்..

    ReplyDelete
    Replies
    1. ரொம்பவே சந்தோஷம் JZ...மேட்ச் பார்த்தேன்..ஸ்பெயின் பழைய பிரேசில் டீம் மாதிரி ஆடுனாங்க....திருப்தியான மேட்ச்...
      ஸ்பைடர் மேன் பாருங்க..உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்...

      Delete
  11. நாடல் முழு மட்சுமே சொதப்பலா ஆடினார்... எப்படினாலும் ஜோகவிச்ட்ட/பெடெக்ஸ்ட்ட கோட்டைய விட்டிருப்பார்...கொஞ்ச நாளாகவே நடிகை/பாடகி ஒருவருடன் சுத்துவதை பார்க்க முடிகிறது...இனி அவருக்கு அடுத்த பிரெஞ்சு ஒபென்ல தான் கொஞ்சம் சான்ஸ்...அதுவும் உடல் ஒத்துழைத்தால் தான்...

    ஸ்பெயின் அட்டகாசமா ஆடுனாங்க...டேவிட் வியாவும் இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும்...ஆனாலும் இந்த நாலஞ்சு வருஷ ஸ்பெயின் தான் ஆல்டைம் கிரேட்டஸ்ட் டீம்னு நினைக்கிறேன்...

    விளையாட்டை நினைச்சு தமிழ்ல எழுதுறதிற்கு நன்றி நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்...
      நடாலை எல்லோரும் "Come back King" என்று சொல்லுவாங்க...கண்டிப்பா மீண்டு வந்து US ஓபன் (பேராசை தான்) அடிப்பாரு பாருங்க...
      ஸ்பெயின் ஆட்டம் இன்னும் கண்ணு குள்ளே இருக்கு......இத்தாலியை துப்பாகியால சுட்டு, கத்தியில குத்தி, தூக்குல போட்டு கொன்னுட்டாங்க....!!
      முத முறையா வந்ததுக்கு மிக்க நன்றி... அடிக்கடி சந்திப்போம்..

      Delete
  12. படம் பார்க்க அவ்வளவு ஆர்வமில்லை என்று சொன்ன நீங்களே நல்லாயிருக்குனு சொல்லிடீங்க...எனக்கு reboot தான் பல விஷயங்களில் பிடித்துள்ளது.

    /* காமிக்ஸ் கதையில வர க்வென் ஸ்டேஸி (Gwen Stacy) தான் ஹீரோயின். இவங்க ஸ்பைடர் மேன் கூட ஒரே காலேஜ்ல படிக்ககிறாங்க. */

    தலைவா காலேஜ் இல்ல ஸ்கூல்....அடுத்த பார்ட்ல தான் காலேஜ் போக போறார் பீட்டர் பார்க்கர்..

    /*மெகா சீரியல் மாதிரி இழுக்காமல் டக் என்று பீட்டர் "ஸ்பைடர் மேன்" ரகசியத்தை போட்டு உடைத்தது பெரிய ஆறுதல்...*/
    இப்படி பட்டென்று போட்டு உடைத்ததுக்கு ஏன் என்று தெரியமா தலைவரே...

    ReplyDelete
    Replies
    1. தல,
      படம் போர் அடிக்காம போச்சு...நான் ரொம்ப எதிர்பார்ப்பு வைக்காம போனதால கூட இருக்கலாம்..
      //காலேஜ் இல்ல ஸ்கூல்//
      மாத்திடுறேன் தல...
      //இப்படி பட்டென்று போட்டு உடைத்ததுக்கு ஏன் என்று தெரியமா தலைவரே.//
      சரியாய் தெரியல தல...என்னோட கஸ்..
      அடுத்த பாகத்துல மேரி ஜேன் தான் வர போறாங்க...இவங்க கிட்ட சொல்லுரதாலா ஒன்னும் ஆகாது...அதுவும் இல்லாம இந்த பொண்ணு செத்து போயிரும்ன்னு வேற படிச்சேன்...

      Delete
  13. இந்த வார இறுதியில் நேரம் கிடைக்கும் போது கட்டாயம் பார்த்து விடுகிறேன்.

    இந்தப் படத்தின் விமர்சனமும் நன்றாக இருந்தது நண்பரே.

    ReplyDelete
  14. என்னுடைய நண்பன் சில விமர்சனங்களை படித்து படம் நன்ற இல்லை என்று சொன்னான்...அதனால் தான் இன்னும் பார்கவில்லை. நீங்க படம் நல்ல இருக்கு என்று சொல்வதினால் நான் பார்க்க போகிறேன்.
    விமர்சனம் சூப்பர்.
    பொதுவான விஷயங்களும் பற்றி நன்றாக எழுதறிங்க ராஜ், தொடருங்கள்......

    ReplyDelete
  15. நண்பா font பிரச்சனை. பிரச்னையை சரி செய்து புதிய பதிவு எழுதி உள்ளேன். அதை படியுங்கள் . தடங்கலுக்கு மன்னிக்கவும்.
    font பிரச்னை இல்லாத புதிய பதிவிற்கு இந்த லிங்க் -ல் உள்ள பதிவை படியுங்கள்.
    http://dohatalkies.blogspot.com/2012/07/12-angry-men.html
    தங்களின் அன்பான கருத்தை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  16. குடை கதை அருமை. இந்த மாதிரி படங்கள்ல அவ்வளவா இன்டரெஸ்ட் இல்லாததால் விமர்சனம் முழுசா படிக்கல

    ReplyDelete