Sunday, January 01, 2012

2012 –(2009)- உலகம் அழிய வேண்டுமா..???

பதிவுக்கு போறதுக்கு முண்ணாடி எல்லோருக்கும் ஒன்னு சொல்லியே ஆகனும், அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். 2011 முடிஞ்சு 2012 ஆரம்பிச்சாச்சு...சில பேருக்கு “ஜஸ்ட அனதர் டே” (Just another Day), அப்பிடின்கிற மனப்பான்மை இருக்கும். பல பேருக்கு “போனது எல்லாம் போகட்டும், இனி மேல புதுசா ஒரு இன்னிங்க்ஸ் தொடங்குவோம்” அப்பிடின்கிற மனப்பான்மை இருக்கும். எண்ணங்கள் எப்படியோ, எல்லோருக்கும் இந்த ஆண்டு வெற்றிகரமாய் அமைய என்னுடைய வாழ்த்துக்கள். அப்புறம் வர போற 2012 ஹாலிவுட்காரன்க்கு ரொம்ப ஸ்பெஷலான மற்றும் பிடிச்ச ஆண்டு. ஏன்னா இந்த நம்பரை வச்சு ஏற்கனவே அவனுக நல்லா காசு பார்துட்டானுக.2009 ஆண்டு Roland Emmerich எடுத்த திரைகாவியம் தான் 2012. இங்க எப்படி பேரரசும், விஜய டி.ஆர் -ம் தமிழில் யார் என்ன மாதிரி உலக சினிமா எடுத்தாலும், தங்களோட ஸ்டைலில் கொஞ்சம் கூட காம்பிரமிஸ் பண்ணிக்காம அவங்களுக்கு பிடிச்ச !!! ஸ்டைல்ல படம் எடுத்து தள்ளுறாங்கலோ, அதே போல ஒரு ஹாலிவுட் டைரக்டர் தான் Roland Emmerich. இவரு எடுக்குற படம் எல்லாம் “அழிவு, பேரழிவு, ரொம்ப ரொம்ப பேரழிவு “அப்படிங்கிற முனு பிரிவுல போட்டுறலாம். இந்த படத்தை நான் மூனாவது பிரிவுல “ரொம்ப ரொம்ப பேரழிவு” சேர்கிறேன்.
Roland Emmerich: இவரோட படங்கள் முக்காவாசி உலகுத்துக்கு ஆபத்து, அமெரிக்காவுக்கு ஆபத்து, அப்படிங்கிற கொடுரமான சிந்தனையை கொண்டு இருக்கும்.வெள்ளைக்காரனக்கு (அமெரிக்கன்) எப்போவுமே ஒரு பயம் இருக்கும், எங்க தான் வாழ்ந்துகிட்டு இருக்குற சுகமான !!! வாழ்கைக்கு ஏதாவது பங்கம் வந்திருமோ அப்படிங்கிற பயம் தான் அது. அதனாலயே தனக்கு ஆபத்துன்னு தெரிஞ்ச “பின்லேடன்”-ஐ 10 வருஷம் விடாம தேடி கொன்னான். இப்படி பட்ட உயிர் பயம் உள்ளவங்களை இன்னும் நிறைய பயமுறுத்த Roland அழிவு படமா எடுத்து தள்ளினார். அவரோட சில படங்கள் தவிர எல்லாமே மொக்கை படங்கள் தான். இதுல பெரிய காமெடி அவரோட எல்லா படத்தோட கிளைமாக்ஸ். நோ லாஜிக், நோ மேஜிக். ரொம்ப மொக்கையா இருக்கும். அவரு எடுத்த முக்கியமான !! உலக சினிமாக்கள் : 
Independence Day - (1996) , Godzilla -(1998) , The Day After Tomorrow – (2004) ,1000 BC - (2008) ,2012 - (2009)
எரிமலை-சேஸிங்
இந்த படத்துல (2012) அவரு எடுத்த கான்செப்ட் வழக்கம் போல உலக அழிவு தான், அதுவும் கரெக்டா 2012 ஆம் ஆண்டு உலகம் அழிய போறதா 2009 ஆம் வருஷம் இந்த படத்தை எடுத்தார். கான்செப்ட் என்னனா “மாயன் நாகரிகம்” கணக்கு படி அவங்க காலண்டர் கி.மு. 3113ல் தொடங்கி, கி.பி. 2012-ல் முடியுது. அதுவும் கரெக்டா 2012 டிசம்பர்-21 ஆம் தேதி முடியுது. சரி அவங்க காலண்டர் முடிஞ்சா புது காலண்டர் வாங்கி குடுக்க வேண்டியதுதானே, அத விட்டுட்டு “மாயன் காலண்டர்” முடிஞ்சா உலகமே அழிய போகுது அப்பிடின்னு கொலைவெறி பதியை கிளப்பி விட்டாங்க சில அறிவு ஜீவிகள். அதையே Roland கெட்டியா பிடிச்சுகிட்டு எடுத்த படம் தான் 2012. 

ஏற்கனவே இதே மாதிரி “1999” ஆம் ஆண்டு முடிஞ்சு 2000 வருஷம் ஆரம்பத்தில் உலகம் அழிய போறதா நாஸ்ட்ரடாமஸ் கணிச்சசாருன்னு ஒரு புரளி வந்திச்சு. நாஸ்ட்ரடாமஸ் பெரிய அப்பாடக்கர், அவரு கனிச்சா கரெக்டா இருக்கும், அப்பிடின்னு பெரிய பில்ட் அப் எல்லாம் குடுத்தாங்க. ஆனா 1999 முடிஞ்சு 13 வருஷம் ஆச்சு. அதுக்கு ஏத்த மாதிரி “Y2K” பிரச்சனை வேற சொன்னாங்க. ஆரம்பம் (உலகம்) அப்படின்னு ஒன்னு இருந்தா கண்டிப்பா முடிவுன்னு ஒன்னு இருக்கும். ஆனா ஆரம்பமே (உலகம்) எப்படி உருவானது அப்படின்னு நமக்கு சரியா தெரியாதப்ப முடிவை பத்தி யோசிக்கிறது முட்டாள்தனமானது. சரி உலக அழிவ விடுங்க, ரொம்ப சீரியஸ்ஸ போயிட்டோம். நம்ப அடுத்து க்வென்டின் 2014 –ல எடுக்க போற “Kill Bill –Vol-3” படத்துல யாரு யார பழி வாங்குவாங்க அப்படின்னு கவலை படுவோம். இல்லாட்டி நோலன் “The Dark Knight Rises”- க்கு அப்புறம் என்ன படம் எடுப்பாருன்னு யோசிப்போம். ஐயோ.. எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ போயிட்டேன்......இப்போ 2012 படத்தை பத்தி பார்போம்.. 
கதை 2009ல் துவங்குகிறது. பூகம்பம் மற்றும் சுனாமி மூலம் பூமிக்கு அழிவு நெருங்குவதை விஞ்ஞானிகள் அமெரிக்க அரசுக்கு அறிக்கையாகத் தருகிறார்கள். பூமியைக் காக்க உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளில் இறங்குகின்றன. பலனில்லை. 2012ல் உலகின் அழிவு துவங்குகிறது. இப்படி உலக அழியிர கதையில ஒரே ஒரு அமெரிக்க குடும்பம் மட்டும் தப்பிக்க நடத்தும் போராட்டம் தான் படமே. அந்த குடும்பம் அக்மார்க் அமெரிக்க குடும்பத்துக்கு உண்டான எல்லா தகுதிகளும் நிறைந்த ஒரு பல்கலைக்கழகம். எப்படினா அந்த குடும்ப தலைவி வேற ஒருத்தன் கூட வாழ்ந்து கொண்டிருப்பாள். அந்த குடும்பத்துல்ல ரெண்டு குழந்தைகள், ஒரு பையன், பொண்ணு. அந்த பையனுக்கும் அவனோட அப்பாவான ஹீரோவுக்கும் நல்ல ரீலேசன்ஷிப் இருக்காது. கடைசியில அந்த குடும்பம் உலக அழிவுல எப்படி தப்பிச்சு அப்பிடிங்கிரத Roland தன்னோட பணியில பதில் சொல்லி இருப்பார்.
படத்தோட கதை படு மொக்கையா இருந்தாலும், கிராபிக்ஸ் கலக்கலா இருக்கும். சுனாமி, பூகம்பம், எரிமலை எல்லாத்தையும் ஸ்க்ரீன்ல ஒரே நேரத்துல பார்க்க விஷுவல் ட்ரீட்.

அமெரிக்கன் ப்ரெசிடெண்ட் மக்களுக்காக !!! தன் உயிரை தியாகம் செய்யும் காட்சி நல்லா இருக்கும்.

டிஸ்கி:
நீங்க படத்தை பார்திருந்தா ஓகே. பாக்காட்டி சின்ன அட்வைஸ். ரொம்ப கடுப்பா இருந்தா இந்த படத்தை பார்க்காதீங்க, இன்னும் ரொம்ப கடுப்பு ஆகிருவேங்க. சும்மா ரிலாக்ஸ்ஸா இருக்கும் போது பாருங்க.. நல்ல BR Rip ப்ரின்ட்ல பாருங்க...
இந்த படத்துக்கு அப்புறம் Roland இனிமேல் அழிவு படமே எடுக்க மாட்டேன் அப்படின்னு சத்தியம் பண்ணி இருக்கிறார்.


My Rating: 6.9/10......


6 comments:

  1. நானும் தியேட்டரில் படம் வெளியான புதிதில் பார்த்தேன். படம் மொக்கையாக இருந்தாலும் கிராபிக்ஸ் நன்றாகவே இருந்தது.

    என் ரெகமன்டேஷன் - BRRIP ஐ முடிந்தால் ஒரு HDTVஇல் பாருங்கள்.

    ReplyDelete
  2. அட நல்லாருக்கே..நானும் இந்த படத்தை போனா போகட்டுமுன்னு இரண்டு முறை பார்த்தேன்..
    வீட்டுல திரையரங்கதுக்கு போவோமானு படம் ரிலீஸ் ஆன போது எல்லாரும் கேட்க..
    ஆள விடுங்க சாமினு ஒதுங்கிட்டேன்..எனக்கு உலகம் அழியிதுனாலே கொஞ்சம் அலர்ஜி.அதுவும் இல்லாம மொத்தமா கவுக்குறாங்கனு தெரிந்தோன ஒதுங்கிட்டேன்..அப்புறம் டிவிடி இலதான் பார்த்தேன்..

    2012 - க்கு தகுந்த மாதிரி சரியான படமாதான் பதிவா போட்டிருக்கீங்க.நன்றி..
    இந்த படத்தோட டைரக்டர் இருக்காரே இவரு எடுத்ததிலேயே கொஞ்சம் அதிகமா பார்த்தது The Day After Tomorrow - தான்.பிடிச்சதும் அதுதான்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. விமர்சனம் நன்று.

    உங்களுக்கும் என்னுடைய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. @ ஹாலிவுட்ரசிகன்..

    கண்டிப்பாக BRRIP வித் HDTV நல்ல காம்பினேஷன்...

    @ Kumaran

    கருத்துக்கு நன்றி kumaran....எனக்கு Roland படைப்பில் பிடித்தது "Independence Day"....

    @arunambur0

    நன்றி Arun, உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. // “அழிவு, பேரழிவு, ரொம்ப ரொம்ப பேரழிவு “ // அழகாப் பிரிச்சு இருக்கீங்க.

    1000 BC 10000 BC இல்லை னு நினைக்கிறன்

    //எப்படி உருவானது அப்படின்னு நமக்கு சரியா தெரியாதப்ப முடிவை பத்தி யோசிக்கிறது முட்டாள்தனமானது// சரியாச் சொன்னீங்க

    ReplyDelete
  6. வருகைக்கு மிக்க நன்றி சீனு...
    தவறை திருத்தி கொள்கிறேன்....நன்றி

    ReplyDelete