இந்த பதிவு முலமாக நான் உங்களுக்கு அறிமுக படுத்த போகும் படம் For a Few Dollars More. படம்
வெளிவந்த ஆண்டு 1965. இந்த படம் வெஸ்டர்ன் (Western) படங்களின் வகையை சார்ந்து. சரி வெஸ்டர்ன் (Western) படம்னா என்னங்க...?? நம்ப
ஊர்ல எப்படி படங்களை மசாலா படம், கிளாசிக்கல்
!!! படம்,காமெடி படம்ன்னு பல வகையில் பிரிக்கிறோம், அதே போல ஹாலிவுட்ல வெஸ்டர்ன் வகைன்னு சில படங்கள் இருக்கும். எப்படி மசாலா படம்னா அஞ்சு பாட்டு, அஞ்சு
பைட், பன்ச் டயலாக் அப்படின்னு ஒரு பார்முல்லா இருக்குமோ, அதே போல வெஸ்டர்ன் வகை படங்களுக்கு ஒரு பார்முல்லா இருக்கும். முக்காவாசி படங்கள் ஒரே மாதிரி தான் இருக்கும். நம்ப ஊர்லையும்
வெஸ்டர்ன் டைப் படங்கள் நிறைய வந்து இருக்கு, அந்த
காலத்துல நம்ப ஜெய்சங்கர் இந்த மாதிரி படங்கள் நிறைய பண்ணி இருக்கார். இப்போ “இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்” கூட வெஸ்டர்ன் டைப்ல வந்த படம் தான்.
ஹாலிவுட்
வெஸ்டர்ன் படங்களில் பார்த்தேங்கனா, ஹீரோ
வில்லன், காமெடியன் முதல்கொண்டு எல்லோரும் துப்பாக்கி வச்சு இருப்பாங்க, ஹீரோ முக்காவாசி பண்டி ஹண்டர் (Bounty Hunter) கதாபாத்திரத்தில் தான் வருவார். வில்லன் கண்டிப்பா பண்டியா (Bounty) தான் இருப்பார். அப்புறம் கண்டிப்பா ஒரு டுயல் (Duel) சண்டை இருக்கும். நம்ப ஊருக்கு இந்த பண்டி ஹண்டர் (Bounty Hunter), அப்புறம் டுயல் (Duel) சண்டை
எல்லாம் ரொம்ப புதுசா இருக்கும்.
பண்டி (Bounty):
நம்ப பாஷையில் சொல்ல வேணும்னா “தலைக்கு விலை குறிக்கிறது”. பின்
லேடன் மாதிரி பெரிய தலைக்கு $25 மில்லியன்
பரிசு பணம் குறிக்கப்பட்டது. போன நூற்றாண்டுல அமெரிக்காவில் நிறைய சட்ட
விரோதிகளுக்கு பண்டி நிர்ணயத்து இருந்தாங்க. அந்த சமுக விரோதிகளை வேட்டையாடி
உயிரோடு அல்லது பிணமாக பிடிபவர்களுக்கு, பரிசு
பணம் அரசாங்கம் குடுக்கும். இந்த மாதிரி வேலைய யாரு செய்வாரு, கண்டிப்பா நம்ப ஹீரோ தான். வில்லன் தான் பண்டி (Bounty).சரி இப்போ ஹீரோ, வில்லன்
ரெடி. வெஸ்டர்ன் படங்களில் கண்டிப்பாக குதிரைகள், மர வீடு மற்றும் குதிரை சண்டை
இருக்கும். அப்புறம் முக்கியமா துப்பாக்கி சண்டை , சும்மா சுட்டுகிட்டே இருப்பாங்க.
![]() |
டுயல் (Duel) சண்டை |
துப்பாக்கி சண்டைனா ரெண்டு வகை, ஒன்னு மறைஞ்சு சுடுறது, இன்னொன்னு டுயல் (Duel) சண்டை. டுயல் (Duel) சண்டையில ரெண்டே பேர் தான் இருப்பாங்க, துப்பாக்கியை ரெடியா வச்சிருக்கணும், பேக் கிரௌன்ட்ல முசிக் ஓடும், முசிக் முடிஞ்ச அடுத்த செகண்ட் துப்பாக்கியை எடுத்து சுடணும், யாரு வேகமா இருக்காங்களோ அவங்க அடுத்தவனை முதல்ல சுடுவாங்க, யாரு உயிரோட இருக்காங்களோ அவங்க தான் வின்னர். இந்த மாதிரி சண்டை பார்க்க நல்ல சுவாரசியமா இருக்கும். இதே மாதிரி சண்டை “இரும்பு கோட்டை” படத்துல கூட இருக்கும். மேல சொன்ன எல்லா அம்சமமும் இருந்தா அது ஹாலிவுட் வெஸ்டர்ன் படம். அந்த மாதிரி ஒரு படம் தான் For a Few Dollars More.
எப்படி நம்ப ஊரு கிராமத்து கதைக்கு கிராமராஜன்னோ, சாரி, ராமராஜன்னோ, அதே மாதிரி இந்த வெஸ்டர்ன் டைப் படங்கனா, அது கிளென்ட் ஈஸ்ட் வூட்(Client East Wood) தான். சும்மா பின்னி எடுப்பாரு மனுஷன். அவரோட வரலாறு நமக்கு தேவையில்லாதது, அவரு பண்டி ஹண்டர்ரா நடிச்ச இந்த படத்தை பத்தி மட்டும் பார்போம்.
இந்த படம் டபுள் ஹீரோ சப்ஜெக்ட். ஒரு ஹீரோ ஈஸ்ட் வூட் (East Wood) , இன்னொரு ஹீரோ லீ வான் கிளிப் (Lee Van Cleef). ரெண்டு பேரும் பெரிய பண்டி ஹண்டர்ஸ். முத 20 நிமிஷம் ரெண்டு பேர பத்தின அறிமுகத்தோட படம் ஆரம்பிக்கும். ரெண்டு பேரும் வெவ்வேறு ஊருல பண்டியை கொன்னு பரிசு பணத்த வாங்குவாங்க. அதுல லீ கிளிப் டுயல் (Duel) சண்டை போடுறதுல பெரிய அப்பாடக்கர். சும்மா அசால்டா துப்பாக்கியை பிரயோக படுத்துவார். இன்னொரு ஹீரோ ஈஸ்ட் வூட், அவரும் நல்லா துப்பாக்கி சண்டை எல்லாம் போடுவார், ஆனால் லீ கிளிப் அளவுக்கு பெரிய வித்தைகாரன் இல்லை. இப்போ வில்லன் வேணுமே, ரெண்டு பெரிய ஹீரோவுக்கு இணையா வில்லன் இல்லாட்டி கதை நல்லா இருக்காதே, வில்லனும் பெரிய ஆளு தான். பேரு எல் இன்டியோ (El Indio) வில்லன் ஜெயிலுல இருந்து தப்பிக்கிற மாதிரி அவரோட அறிமுகம் இருக்கும். அவரு ரொம்ப கொடுரமான ஆளு அப்படிங்கிறதை கட்டற மாதிரி ரெண்டு காட்சி இருக்கும். அவர ஜெயில்ல போட உதவி செஞ்ச ஒரு ஆளை வில்லன் மற்றும் அவரு கேங் கொலை செய்வாங்க.
ஜெயில்ல இருந்து தப்பிச்சதனால வில்லன் தான் ஊருலயே பெரிய பண்டி, கிட்ட தட்ட $10,000, அது போக வில்லன் பெரிய கேங் வேற வச்சு இருப்பாரு. மொத்தம் 14 பேரு. எல்லா மேலயும் பண்டி இருக்கும். மொத்தமா வில்லன் கும்பலுக்கு $25,000 பண்டி பணம். இப்போ ரெண்டு ஹீரோக்கும் வில்லனை பிடிக்க நல்லா காரணம் கிடைச்சாச்சு. இப்போ வில்லன் எல் பசியோ (EL PASO) அப்படிங்கற ஊர்ல இருக்குற கொள்ளை அடிக்கவே முடியாதுன்னு சொல்ல படுற ஒரு பேங்க்கை கொள்ளை அடிக்க திட்டம் போடுறான். அது ஹீரோ ரெண்டு பேருக்கும் தெரிஞ்சுடுது, ரெண்டு பேரும் அந்த ஊர்க்கு வராங்க. வந்து வில்லன் போட்ட திட்டத்தை முறியடிச்சாங்ககளா ?? வில்லன் பேங்க்கை கொள்ளை அடிச்சானா ?? பெரிய பண்டி தொகைய யாரு வாங்கினா ?? இது போல பல கேள்விகளுக்கு விடைய டைரக்டர் ரொம்ப சுவாரிசியமாக பதில் சொல்லி இருப்பார்.
படத்தோட டைரக்டர் Sergio Leone. டாலர்ஸ் ட்ரையாலஜி (Dollars Trilogy) அப்படிங்கற பேருல மொத்தம் முனு படம் எடுத்தார். A Fistful of Dollars , For a Few Dollars More & The Good Bad and Ugly, முனு படமே அட்டகாசமான வெஸ்டர்ன் படங்கள்.
வெஸ்டர்ன் டைப் படங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்றல் கண்டிப்பாக இந்த முனு படத்தையும் பாருங்கள்.
படத்துல மொத்தம் 3 டுயல் (Duel) சண்டை, பார்க்கும் நமக்கு யாரு ஜெயிப்பாங்கன்னு நல்லா தெரியும். ஆனாலும் சண்டைய பார்க்கும் போது ஒரு விதமான பரபரப்பு ஏற்படும். அது தான் டைரக்டர் Sergio டச்.
படத்துல ஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்கும், நிறைய காட்சிகள் நம்ப யுகிச்சகதுக்கு மாறாக இருக்கும். அதனால சுவாரிசியதுக்கு பஞ்சமே இருக்காது.
My Rating: 8.1/10......