Sunday, November 17, 2013

FAR CRY 3 - உயிர் வாழ போராட்டம் (18+)

இந்தியாவில் இருந்த வரைக்கும் Xbox360 தான் என்னுடைய உற்ற தோழனாக இருந்து வந்தந்து. அமெரிக்கா வந்துவுடன் அந்த இடத்தை PS3 எடுத்து கொண்டது. வந்த சிறிது நாட்களிலே PS3 ஸ்லிம் 120GB வாங்கி விட்டேன். இந்தியாவில் கஷ்டமாக கிடைக்க கூடிய கேம்ஸ் இங்கு சுலபமாக கிடைத்தது இன்னும் வசதியாக போய் விட்டது. மாதம் ஒரு கேம் என்று, இதுவரை கிட்டத்தட்ட 7 கேம் விளையாடி முடித்து விட்டேன். இரண்டு பேட்மேன் கேம்களும் அதில் அடக்கம். நான் இது வரை விளையாடியதில் என்னை மிகவும் கவர்ந்த "FAR CRY-3" என்கிற FPS கேம் பற்றிய பதிவு தான் இது. அதித வன்முறை,  சைக்கோ வில்லன்கள், கிராபிகல் செக்ஸ், கொடூர கொலைகள், மற்றும் நாம் வாழ எந்த அளவுக்கும் போகலாம் என்கிற தீம்மை கொண்ட 18+ அமெரிக்கன் கேம். வீடியோ கேம் பிடிக்காதவர்கள் அப்படியே அப்பிட் ஆகி விடுவது நலம்.


கேம் ப்ளாட்: 

ஒரு கேம் வெற்றியடைய முதல் தேவை நல்ல ஸ்டோரி லைன். அது FAR CRY 3 யில் நிச்சியம் இருக்கிறது. கேமின் நாயகன் "ஜேசன் பிராடி" (Jason Brody). 20 வயதே நிரம்பிய அக்மார்க அமெரிக்க வாலிபன். விடுமுறையை கழிக்க தன் அண்ணன், நண்பர்கள், மற்றும் காதலியுடன் பாங்காக் நகரம் வருகிறான். வந்த இடத்தில ஸ்கை டைவிங் செல்கிறான். அதில் விபத்து ஏற்பட்டு ரூக் ஐலேன்ட் என்கிற பகுதியில் தரை இறங்குகிறான். 

ரூக் தீவுகளை தன் கட்டுபாட்டில் வைத்து இருப்பவன் வாஸ் மாண்டினீக்ரோ (Vaas Montenegro). மொத்த நண்பர்களும் வாஸ் மற்றும் அவனது பைரேட்ஸிடம் மாட்டி சிறை படுகிறார்கள். பைரேட்ஸ் சிறையில் இருந்து தப்பிக்கும் வேளையில் ஜேசனின் அண்ணன் "கிரான்ட்" வாஸிடம் மாட்டி தன் உயிரை விடுகிறான். ஜேசன் மட்டும் தப்பித்து ரூக் தீவுகளில் மறைந்து வாழும் "ரக்கியாட்" (Rakyat) பழங்குடியின மக்களை சந்திக்கிறான். ரக்கியாட் மக்களின் பயற்சியில் தேர்ந்த வீரனாக மாறும் ஜேசன், தன் அண்ணனை கொன்ற வாஸ்சை பழி வாங்கி, தன் மீதி நண்பர்களை காப்பற்றி, ரூக் ஐலேன்ட்டை பைரேட்ஸிடம் இருந்து மீட்பது வரை தான் பாதி ப்ளாட்.

கேமின் முதல் பாதி முழுக்க வாஸ் மாண்டினீக்ரோவின் சைக்கோ கொலைகார படையை எதிர்த்து போராட வேண்டும். இரண்டாம் பாதியில் வாஸின் பாஸ் "ஹோய்ட் வோல்கர்" (Hoyt Volker) என்கிற ஸ்லேவ் வியாபாரியை எதிர்த்து போராட வேண்டும். வாஸ் ரூக் தீவின் வடக்கு பகுதியை தன் கட்டுபாட்டில் வைத்து இருந்தால், ஹோய்ட் தெற்கு பகுதியில் கோலோச்சி இருப்பான். இவனது போதை மருந்து சாம்ராஜியத்தை வீழ்த்தி ரூக் தீவிருக்கு முழு சுதந்திரம் பெற்று தருவது தான் மீதி ப்ளாட்.


கேம் ப்ளே:

கேம் ப்ளாட் ஏதோ ஹாலிவுட் படம் போல் தெரிகிறதா. Apocalypse Now படம் கூட FAR CRY 3 போன்றே திரைக்கதை அமைப்பை கொண்டுயிருக்கும். ஒன்ரை மணி நேர படத்திருக்கு திரைக்கதை எந்த அளவு முக்கியமோ, அதே போல் வீடியோ கேமிற்கு கேம் ப்ளே ரொம்பவே முக்கியம். ஒரு கேம் முடிக்க சராசரியாய் 10~15 மணி நேரம் வரை ஆகும். 15 மணி நேரம் சுவாரிசியம் குறையாமல் பார்த்து கொண்டால் தான் அதை கிரேட் கேம் என்று சொல்லுவோம். அப்படி பார்த்தால் FAR CRY 3 கிரேட் கேம் லிஸ்டில் தராளமாய் இடம் பிடித்து விடும். அட்டகாசமான கேம் ப்ளே அனுபவத்தை நமக்கு வழங்குகிறது FAR CRY 3. முதலில் இது ஓபன் வேர்ல்ட் கேம். ஓபன் வேர்ல்ட் என்றால், மிஷன் முடித்தவுடன் நாம் எங்கு வேண்டுமென்றாலும் உலாவலாம். ரூக் தீவுகளை சுற்றி வரலாம். நமக்கு பிடித்தமானதை செய்யலாம். நமக்கு தோணும் போது மெயின் மிஷன்களை விளையாடலாம்.

Apocalypse Now நாயகன் தன்னை வேட்டையாட வருபவர்களிடம் இருந்து தப்பித்து ஓடி கொண்டேயிருப்பான். ஒரு கட்டத்தில் பொருத்தது போதும் என்று திருப்பி தாக்க ஆரம்பிப்பான். இந்த கேமிலும் நாயகன் ஜேசன் பிராடி வாஸின் படைகளிடம் இருந்து தப்பித்து ஓடி கொண்டே இருக்க வேண்டும். அதே நேரம் தன் திறமைகளை வளர்த்து கொண்டே திருப்பி தாக்க வேண்டும். 


வாஸின் கட்டுப்பாடில் இருக்கும் "அவுட் போஸ்ட்களை" விடுவிக்க வேண்டும். அடர்ந்த காட்டில் இருக்கும் கொடிய மிருகங்களை வேட்டையாடி அதன் முலம் வரும் புள்ளிகளை கொண்டு ஜேசனின் துப்பாக்கி சுடும் திறன்கள், பதுங்கி தாக்குதல், வேகமாய் ஓடுதல், பாஸ்ட் ஹீலிங் போன்ற திறன்களை வளர்த்து கொல்லலாம். அது போக தீவில் இருக்கும் ரேடியோ டவர்களை அக்டிவேட் செய்து ரூக் தீவின் புதைந்திருக்கும் மர்மங்களை வெளி கொண்டுவரலாம்.

இந்த கேம் நிச்சியம் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும் தான். வார்த்தைக்கு வார்த்தை ஃபக் வந்து விடும். அது போக முன்று உடலுறவு காட்சி வேறு உண்டு. அதனாலே அமெரிக்காவில் மிக பெரிய ஹிட் அடித்தது. Call of Juarez,  Assassin's Creed போன்ற புகழ் பெற்ற கேம்மை உருவாகிய  Ubisoft நிறுவனம் தான் FAR CRY 3 யின் டெவலப்பர்கள். Ubisoft நிறுவனத்தினரிடம் இருந்து வரும் கேம்களின் கிராபிக்ஸ் தாறுமாறாய் இருக்கும். இதிலும் கிராபிக்ஸ் மிகவும் தந்துருபமாய் இருக்கும். 2012 ஆண்டிற்க்கான சிறந்த அக்ஷன் கேம்கிற்கான விருதினை பெற்றது. இது வரை மொத்தம் 5 மில்லியன் காப்பி விற்பனை ஆகி உள்ளது. FPS அக்ஷன் பிரியர்கள் தவற விட கூடாத கேம் FAR CRY 3.

My Rating: 9.0/10


24 comments:

  1. அப்பாடி. கேம் பற்றி யாராவது பதிவு போடமாட்டாங்களான்னு ரோம்ப நாள் நினைச்சுட்டு இருந்தேன். நான் சென்னைல இருக்கேன். வடபழனில
    Doshi gordan complex ல pc. Ps3. Ps2. Xbox360 னு எல்லா கேமும் கிடைக்கும். ஒரு கேம் PC க்கு 1dvd 50rs (battlefield 4) 4 dvd so 200 ருபாய் . ரோம்ப சீப் தான். நான் எல்லா famous ஆன கேமும் விடாம வாங்கி விளையாடிடுவேன்.
    நான் pc ல விளையாடுரேன் . Forcry 3 நான் எப்பயோ முடிச்சுட்டேன் . 2 நாள் முன்னாடி தான் Battlefield 4 வாங்கினேன். இன்னிக்கி காலைல முடிச்சுட்டேன்.
    தேடினா கண்டிப்பா நம்ப ஊர்லையும்கேம்ஸ்கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க Harish..
      நீங்களும் நம்ம ஆளு தான்..நான் ஹைதராபாதில் இருந்தேன். அங்க கேம்ஸ் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். இப்ப யுஸ் வந்து ஒன்பது மாசம் ஆச்சு.
      நான் எப்பவும் Console (Xbox360 & PS3) தான் விளையாடி இருக்கேன்.நல்ல கேமர் PC Console
      லை விட விலை அதிகம். 200 ரூபாய்க்கு Battlefield 4 ரொம்பவே சீப் தான். ரெண்டே நாளுல கேமமை முடிச்ச நீங்க உண்மையிலே பெரிய கேம் பிரியர் தான். நான் இன்னும் Battlefield 4 வாங்கல. GTA5 and Arkham origins வாங்கி இருக்கேன். கண்டிப்பா நான் விளையாடிய கேம்ஸ் பத்தி அடிக்கடி எழுதுறேன்.

      Delete
  2. போன மாசம் தான் PS3 500 GB வாங்கினோம். இங்க Indian Network PS Plusல Last month download FAR CRY3. இது செமையான Game. இணைய பக்கம் வாராத குறைக்க இந்த கேம் தான் காரணம்...


    இன்னும் Game Play பழகல எனக்கு JoyStick la. அதனால லேட் ஆகுது. நீங்க வேலையாடுன எல்லா கேம் பத்தியும் எழுதுங்க :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜி, சித்திரமும் கை பழக்கம் தான்.. பழக பழக JoyStick க்கும் உங்களுக்கு பரிச்சியம் ஆகிரும். கண்டிப்பா நான் விளையாடிய அணைத்து கேம்ஸ் பத்தியும் எழுதுறேன் தல.

      Delete
  3. கேம்ஸ் வாங்கி கட்டுப்படி ஆகா மாட்டிக்குது :(. சீக்கிரமா நல்ல Game PC வாங்கிட்டு பைரேட்டட் ல களமிரங்கனும்.

    ReplyDelete
    Replies
    1. நான் விளையாடி முடிச்ச PS3 கேம்ஸ் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். என்னோட நண்பர்கள் அடிக்கடி இந்தியா வருவாங்க. அவங்க கிட்ட குடுத்து அனுப்புறேன். தனி சேட்ல உங்க கூட பேசுறேன்.. :):)

      Delete
  4. THIS IS NOT MY CUP OF TEA.SO APPEET.

    ReplyDelete
    Replies
    1. கேம்ஸ் பழகுங்க விஜய். :):):)

      Delete
  5. அப்படியே,பிளையர் ,சி.டி எவ்வளவு ரேட் வரும்னு சொல்லவே இல்லை.
    இது பத்தி தெரிச்சவங்க சொல்லுங்கப்பா எவ்வளவு வரும்னு?

    ReplyDelete
    Replies
    1. வாங்க Arif . நான் Console (Xbox360, PS3) மட்டும் தான் யூஸ் பண்ணி இருக்கேன். இந்திய மதிப்பில் 12,000 ~ 15,000 வரைக்கும் வரும். Xbox360 வாங்கி அதை கிராக் பண்ணிட்டா நீங்க எந்த கேமும் விளையாடலாம். Cracked Xbox360 சிடி 100 ரூபாய் வரும். ஒரிஜினல் CD 1000~2000 வரைக்கும் வரும்.
      PC கேமர் என்றால் இருபதிலே பெஸ்ட் கிராபிக்ஸ் கார்டு வாங்கி போட வேண்டும். அதுவும் கிட்டத்தட்ட Console விலையை போன்றே தான் ஆகும்.

      Delete
  6. PS3. PS2. XBOX360 ல விளையாடுறதை விட pc ல விளையாடுறது தான் பெட்டர். மத்ததுக்கெல்லாம் நாம் கேமுக்காக நிறைய செலவு பண்ணனும். PC ல செலவு கம்மி.
    உதாரனமாக நான் (battlefield 4) game 200 ரூபாய்க்கு வாங்கினேன்.
    1 dvd 50 ரூபாய். இந்த கேம் 16gb. So 4 dvd ல வரும். 200 ருபாய். பார்த்தா இந்த கேம் 26gb வருது. அவங்க zip file ல compress பன்னி தரதுனால 4 dvd ல வருது. கேம. Install ஆன அப்பறம் பார்த்தா நிறைய gb காட்டும். நாம் வாங்குற கேம் எவ்வளவு GB வருதோ அதை பொருத்து 1 dvd க்கு 50 ரூபாய் ஆகும். இது ரொம்ப ரொம்ப சீப். Original கேம்ஸ் எல்லாம் 4000 or 5000 ஆகும். நமக்கு எல்லாம் கட்டுபடி ஆகாது. Justdial ல game store னு search பன்னுங்க. கண்டிப்பா அந்த அந்த ஊருல எனக்கு கிடைச்ச கடை மாதிரி கிடைக்க சான்ஸ் இருக்கு.
    முக்கியமாக pc கேம் விளையாட சில additional softwares கண்டிப்பா தேவை. உங்க graphics card 1gb இருந்தா செமையாக இருக்கும். Graphics update இருக்கான்னு அப்பப்ப check பன்னி download பண்ணிக்கனும். RAM 4gb இருக்கனும். இப்ப வர கேம்ஸ் எல்லாம் 20gb மேல தான் வருது. அதனால இதெல்லாம் கண்டிப்பாக தேவை. சில additional softwares தேவைன்னு சொன்னைன் அவைகள்- (steam. Origins . Directx 11. Netframework 4.5. அப்பறம் game open ஆக நிறைய dll files தேவை. கூகுள் வெப்சைட் ல (latest dll files fixer crack) னு search பண்ணி அந்த software download பண்ணிக்கனும். நம்ப pc எந்தெந்த dll files இல்லையோ தானாகவே அது fix பண்ணிடும்.
    அப்படி ஆகலைனா கேம் open ஆக நமக்கு எந்த dll files error காட்டுதோ அதை மட்டும் dll files fixer ல search பண்ணி install பண்ணனும். சென்னை ல இருக்குறவங்களுக்கு நான் வாங்குற கடை நம்பர் தறேன் Name: vikas-9884161112.
    இவரோட brother அண்ணா நகர்ல கேம் shop வச்சிருக்கார். அந்த area ல இருக்குறவங்க அவங்க brother number வாங்கிகோங்க. இன்னொரு விஷயம் கண்டிப்பா ரிச்சி street. Tnagar தெருவோர கடைல கேம் வாங்காதிங்க. அங்க ஒரு கேம் கூட சரியா வராது. திருப்பி கேட்கவும் முடியாது. அங்க ஒரு கேம் 25 ரூபாய்ககு தறாங்க. ஆனால் ஒரு ப்ரயோஜனமும் கிடையாது. நான் வாங்குற கடைல கேம் சரியாக install ஆகலைனா அவர் pc ல check பன்னிட்டு problem இருந்தா சரி பன்னி தருவாரு. இந்த responce ரிச்சி street ல கண்டிப்பாக கிடைக்காது.

    ReplyDelete
    Replies
    1. You can try in Moosa games in ritchie street . Anga vangi enaku entha gameum vela seiyama irundhadu ela

      Delete
    2. வருகைக்கு மிக்க நன்றி ஹரிஷ்..நீங்க இங்கு பகிர்ந்த தகவல்கள் நிச்சியம் அனைவருக்கும் உபயோகமாய் இருக்கும்.

      Delete
  7. Nice post raj.my gameplay experiences are only with PC which started during college.my recent buys where max Payne 3 ( one ofy favorite) and arkham asylum.which is also gud.I think I had DVDs of far cry which I installed but have not tried.my other favorites are Lara croft And GTA series.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கிருஷ்ணா..காமிக்ஸ் பிரியரான உங்களுக்கும் கண்டிப்பாய் வீடியோ கேம்ஸ் மீதும் ஈர்ப்பு இருப்பதில் பெரிய ஆச்சிரியம் இல்லை. நான் Max Payne 3 and Arkham City போன வாரம் தான் முடித்தேன். Arkham City முயற்சி செய்து பாருங்கள். அட்டகாசமான கதை. பேட்மேன் வில்லன்கள் அனைவரும் அதில் வருவார்கள். arkham asylum விட சிறப்பாய் இருந்தது...

      Delete
  8. இந்த வாரம் நிறைய கேம்ஸ் ரிலீஸ் ஆகியிருக்கு. Call of duty ghosts . Assassins creed 4. FIfa 14. Next week need for speed rivals release. So game பிரியர்களுக்கு நல்ல ஜாலி தான்.

    ReplyDelete
    Replies
    1. Call of duty ghosts and Assassins creed 4 இப்பொழுது தான் ரீலீஸ் ஆகி உள்ளது. விலை ரொம்ப ஜாஸ்தி ($60) , கொஞ்சம் குறைந்தவுடன் வாங்க வேண்டும்.

      Delete
  9. I got asassin creed 4 verithanama velayaditu irukan . Please put a story regarding assasin creed game

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாய் நண்பா....இப்பொழுது தான் AC3 விளையாடி வருகிறேன். முடித்தவுடன் மொத்த சீரீஸ் பற்றியும் எழுதுகிறேன்..

      Delete
  10. இன்னும் ps வாங்கலை ஜி சீக்கிரம் வாங்கணும்... Nice Review...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சின்னா..நீங்களும் உங்க ப்ளாக்கை துசி தட்டுங்க. ரொம்ப நாள் ஆச்சு..

      Delete
  11. வாவ்.. திஸ் இஸ் மை ஃபக்கிங் பேவரிட் கேம் பாஸ் :).... முதல் 2 பாகமும் கீபோர்ட் தேய தேய வெளையாடியிருக்கிறேன். 3 க்கு கம்பியூட்டர் கன்ஃபிகரேஷன் சரிவரல்ல.. சீக்கிரமே அப்கிரேட் பண்ணிட்டு ஆரம்பிக்கனும்

    ReplyDelete
    Replies
    1. வாங்க மதுரன்... பதிவோட தலைப்பு கூட " ஃபக்கிங் ஆவ்சாம்ன்னு வைக்கலாமன்னு நினைச்சேன் பாஸ்..அந்த அளவு எனக்கு பிடிச்ச கேம். அது போக இந்த வார்த்தையை ஆயிரம் தடவைக்கு மேல உபயோக படுத்தி இருப்பாங்க. சீக்கிரமே ஆரம்பிங்க..ஆரம்பிச்சா ஒரே முச்சில் முடிச்சிருவீங்க...செம கேம்...

      Delete
  12. அப்படியே அசாசின் கிரிட் பற்றியும் போஸ்ட் போடுங்களேன்... புண்ணியமா போகும்.

    ReplyDelete