Sunday, November 03, 2013

ஆல் இன் ஆல் அழகுராஜா (2013) - ஜென் தத்துவம் !!

ஹிந்தியில் "மிதுன் சக்கரவர்த்தி" என்ற ஒரு நடிகர் இருக்கிறார். அவரிடம் ஒரு சாதனை இருக்கிறது. இந்தியாவிலே அதிக ப்ளாப் படங்கள் குடுத்தது அவர் தான். A மற்றும் B சென்டரில் தான் அவர் படங்கள் ப்ளாப் ஆகும், ஆனால் C சென்டரில் சக்கை போடு போடும். கார்த்தி "அழகுராஜா" போன்ற படங்களில் நடித்து கொண்டே போனால் மிதுன் சாதனையை அசால்டாக முறியடித்து விடுவார். ஒரே வித்தியாசம் கார்த்தி படங்கள் அணைத்து சென்டரிலும் அட்டர் ப்ளாப் ஆகும், மிதுன் படங்கள் C சென்டரில் ப்ளாக்பஸ்டர் கொண்டாடும். "அலெக்ஸ்பாண்டியன்" என்கிற உலக சினிமாவை படம் பார்த்த பிறகு இனி மேல் கார்த்தி படங்களை பார்க்கவே கூடாது என்று உறுதியாய் இருந்தேன். ஆனால் ராஜேஷ் - சந்தானம் கூட்டணி மேல் இருக்கும் அசாத்திய நம்பிக்கை காரணமாக ஜென் தத்துவத்தை உரக்க சொல்லும்  "அழகுராஜா" என்கிற காவியத்தை பார்க்க சென்றோம். பார்த்து நொந்து நூடுல்சாய் திரும்பி வந்தோம்.


நான் சமிபத்தில் இது போன்ற மரண மொக்கை படத்தை பார்த்ததே இல்லை. இனி மேலும் பார்ப்பேனா என்பதும் சந்தேகமே. அழகுராஜா (கார்த்தி) AAA என்கிற லோக்கல் சேனல் ஓனர் மற்றும் MD, இவரிடம் வேலை பார்க்கும் ஆபிசர் கல்யாணம் (சந்தானம்). AAA சேனலை நம்பர் 1 சேனலாக மாத்தாமல் திருமணம் செய்து கொள்ள போவது இல்லை என்கிற லட்சியம் வேறு. பாய் பிரியாணி சாப்பிட ஒரு கல்யானதிருக்கு செல்லும் கார்த்தி அங்கு தேவி பிரியாவை (காஜல் அகர்வால்) பார்த்ததும் காதல் வயப்படுகிறார். ரெகுலர் ராஜேஷ் படங்களில் வரும் நாயகன் போல் லூசு தனமாய் ஏதோ ஏதோ செய்து காஜலின் மனதில் இடம் பிடிக்கிறார். 

காஜலின் குடும்ப பின்னணி தெரிந்தவுடன் அழகுராஜாவின் அப்பா பிரபு திருமணத்துக்கு தடை போடுகிறார். அதற்க்கு மகா திரபையான பிளாஷ்பேக் வேறு. இறுதியில் அழகுராஜாவும் தேவி பிரியாவும் இணைந்தார்களா இல்லையா என்கிற சஸ்பென்ஸ் முடிச்சை, யாரும் படம் பார்த்து அவிழ்க்கும் முயற்சியில் இறங்க வேண்டாம். நீங்கள் யாரும் கஷ்டப்பட்டு படம் பார்க்கவேண்டாம் என்று அந்த  சஸ்பென்ஸசை நானே சொல்லி விடுகிறேன். இறுதியில் அழகுராஜாவும் தேவி பிரியாவும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். டிவியில் கூட பார்க்க லாய்க்கு அற்ற திரைக்காவியம் இது. 


கார்த்தியை நினைத்து பரிதாப பட தான் முடியும். பருத்திவீரன் படத்துடன் நடிகர் "கார்த்தி" இறந்தே விட்டார் என்று நினைக்கிறன். படத்தில் வரும் காட்சியமைப்புகள் மொக்கை தான். அந்த மொக்கை காட்சியமைப்பை மரண மொக்கையாய் மாற்றுவதில் கார்த்தியின் பங்கு மிக பெரியது. கடந்த முன்று படங்களிலும் தனது "ஈ" வாயை மாற்றாமல் நம்மை படுத்தி எடுக்கிறார். 

கார்த்தி காஜலிடம், "நீ நன்றாக பாடுவதாய் உன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் வேலையாட்கள் மட்டும் தான் இது வரை சொல்லி இருக்கிறார்கள், வீதில் இறங்கி பாடினால் கல்லை கொண்டு எறிவார்கள்" என்கிற ஜென் தத்துவத்தை  உதிர்ப்பார். ஆனால் அந்த ஜென் தத்துவம் அவருக்கு தான் மிக சரியாய் பொருந்தி இருக்கிறது. இதே போன்று படங்களில் நடித்து மக்களை வதைத்து கொண்டு இருந்தால் கல்லால் தான் அடி வாங்க வேண்டியது வரும்.


காஜல் அக்மார்க் லூசு பெண். வழக்கம் போல் வருகிறார், ஆடுகிறார் அவ்வளவு தான். தமிழ் சினிமாவில் என்று தான் "கதா"நாயகிகளை பார்க்க முடியுமோ தெரியவில்லை. பிரபு, சரண்யாவை குறை கூற முடியாது, தங்களுக்கு வழங்க பட்ட ரோல்லை சரியாய் செய்து இருக்கிறார்கள். கார்த்தியிடம் இருந்து நல்ல படம் வந்தால் தான் ஆச்சிரியம். ஆனால் சந்தானத்திடம் இருந்து மொக்கை படம் வந்தால் பெரிய ஆச்சிரியம். அது இந்த படத்தில் நடந்து இருக்கிறது. 

படத்தின் மிக பெரிய லெட் டவுன் சந்தானம் தான். கடைசியாக சந்தானம் காமெடி எடுபடாமல் போன ரெண்டு படமும் கார்த்தியின் திரைக்காவியங்கள் தான். இதற்கு முன்னால் அலெக்ஸ்பாண்டியன். ப்ளீஸ், சந்தானம் இனி மேல் கார்த்தி படங்களில் தயவு செய்து நடிக்காதீர்கள். 

இயக்குனர் ராஜேஷ்க்கு வேக் அப் கால். படத்தை எடுத்துடன் ஒரு முறை போட்டு பார்த்து இருக்கலாம். பார்த்து இருந்தால் கண்டிப்பாய் ரீலீஸ் செய்து இருக்க மாட்டார். முன்று படங்களில் சம்பாதித்து பேரை ஒரே படத்தில் கோட்டை விட்டு விட்டார். இசை மாற்றும் பாடல்கள் ஓகே ரகம். "உன்னை பார்த்த நேரம்" பாடல் மட்டும் எனக்கு பிடித்து இருந்தது. படம் நமக்கு கற்று தரும் ஜென் தத்துவம் பொறுமை. ஆர்ட் ஆப் லிவிங் போய் வராதா பொறுமையும், சகிப்புத்தன்மையும் இந்த படத்தை முழுசாய் பார்த்ததின் முலம் எனக்கு கிட்டியது. நன்றி ராஜேஷ் M.

ஆல் இன் ஆல் அழகுராஜா  - ஜென் தத்துவம்
My Rating: 3.5/10.


24 comments:

  1. //அந்த ஜென் தத்துவம் அவருக்கு தான் மிக சரியாய் பொருந்தி இருக்கிறது. இதே போன்று படங்களில் நடித்து மக்களை வதைத்து கொண்டு இருந்தால் கல்லால் தான் அடி வாங்க வேண்டியது வரும்//

    100% சரி. கொஞ்சம் கூட முயற்சி செய்யாமல் கேமராவை பார்த்து தான் ஜோக்கென நம்புவதை எல்லாம் உளறிவிட்டு சென்றால் இளித்தவாய் மக்கள் பார்த்துவிடுவார்கள் என நினைத்து அவர்தான் இளித்த வாய் ஆகிப்போனார். இப்படி ஒரு சொத்தையான காமடி படம் இதற்கு முன்பும் இனியும் வர வாய்ப்பே இல்லை என நம்பலாம். கார்த்தி மட்டுமே தற்போதைய ரெக்கார்டை முறியடிக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சிவா.
      சகுனி, அலெக்ஸ்பாண்டியன், அழகுராஜான்னு கார்த்தியோட ரெகார்ட்டை அவர் படங்கள் மட்டும் தான் முறியடிக்கிறது..

      Delete
  2. பிரியாணி படத்த வெளியிட்டு அப்புறம் இந்த படத்த வெளியிடுங்க பிரியாணி ஆரிபோனா நல்லா இருக்காது என்று கூறி உள்ளார் வெங்கட் பிரபு அதை காதிலே வாங்காமல் ராஜேஷை நம்பி வெளியிட்டனர் இதுவே இப்படி அப்போ அடுத்து வரும் பிரியாணி எப்படியோ நிச்சயம் இதே போல வெங்கட் பிரபுவை நம்பி போவோம்.... கார்த்தி மற்றும் ஸ்டுடியோ கிரீன் இன்னும் மரண அடி வாங்குவாங்கனு தான் தோனுது தல.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல.
      பிரியாணி ட்ரைலர் கூட அவ்வளவு நல்லா இல்ல
      மொக்கை பிரேம்ஜி வேற இருக்கார். பார்போம் பிரியாணி எப்படி இருக்குதுன்னு..

      Delete
  3. //கார்த்தியிடம் இருந்து நல்ல படம் வந்தால் தான் ஆச்சிரியம். ஆனால் சந்தானத்திடம் இருந்து மொக்கை படம் வந்தால் பெரிய ஆச்சிரியம். அது இந்த படத்தில் நடந்து இருக்கிறது.
    படத்தின் மிக பெரிய லெட் டவுன் சந்தானம் தான்.//

    சரியாச் சொன்னீங்க தல, எனக்கு "கண்ணா லட்டு தின்ன ஆசையா"லயே போரடிச்சுருச்சு.. தன்னோட ஸ்டைலை மாத்திக்கலனா இனிமே இவர் பாடு அம்போ தான்..!! இந்தப்படம் தோல்வில இருந்தாவது அவங்க பாடம் கத்துக்கட்டும்.. காமெடின்ற பேர்ல கொலையாக் கொல்லுறாய்ங்க..!!

    ReplyDelete
    Replies
    1. இல்ல தல, இந்த படம் தவிர்த்து இந்த வருஷம் வந்த நிறைய படங்களை சந்தானம் தான் காப்பாத்தி இருக்கார்.. இதுல ரொம்பவே சறுக்கிடார் சந்தானம்..

      Delete
  4. எனக்கு சூர்யாவை விட கார்த்தி பிடிக்கும்.பருத்தி வீரன்,ஆயிரத்தில் ஒருவன் ,பையா,சிறுத்தை என அசத்தினார்.ஆனால் இப்போது சொதப்பி வருகிறார்.பிரியாணியை விட அடுத்து நடிக்கும் அட்டகத்தி ரஞ்சித் படம் ஒருவேளை கை கொடுக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு பிரியாணி மீதும் பெரிய எதிர்பார்ப்பு இல்ல விஜய்.
      அட்டகத்தி ரஞ்சித் படமாவது அவரை காப்பாத்தட்டும்..

      Delete
  5. பாண்டிய நாடு அருமையாய் இருப்பதாய் கேள்விபட்டேன்.பார்க்கவில்லையா?அங்கே ரிலீஸ் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. பாண்டியநாடு தியேட்டர் ரீலீஸ் இல்ல விஜய். அழகுராஜாவும் ஆரம்பம் மட்டும் தான் ரீலீஸ் ஆச்சு.
      நெட்ல் தான் பாண்டியநாடு பார்க்கணும்..

      Delete
  6. கார்த்திக்கின் நிலைமை இனி சந்தேகம் தான்...

    ReplyDelete
    Replies
    1. நெம்ப சந்தேகம் தான் தனபாலன்..

      Delete
  7. இருந்தாலும் உங்கள் மன உறுதியை பாராட்டாமல் இருக்க முடியவில்லை

    ReplyDelete
    Replies
    1. என்ன பண்ணுறது ஜி, பொறுமையை வளர்க இது மாதிரி படங்களை பார்க்க வேண்டியாதா இருக்கு.. :):)

      Delete
  8. பரவாயில்லையே ராஜ்... மூணுமணிநேரம் சகித்து படம் பார்த்து இருக்கீங்க... எனக்கென்னவோ சந்தானம் , விவேக் மாதிரி ஆகிவிடுவார் போலத்தான் தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க Manimaran. இன்னும் ரெண்டு வருஷம் வரைக்கும் சந்தானம் கால்ஷீட் புல். அதுவரைக்கும் நம்ம சகிச்சு தான் ஆகணும்..

      Delete
  9. //மொக்கை காட்சியமைப்பை மரண மொக்கையாய் மாற்றுவதில் கார்த்தியின் பங்கு மிக பெரியது. கடந்த முன்று படங்களிலும் தனது "ஈ" வாயை மாற்றாமல் நம்மை படுத்தி எடுக்கிறார்//

    அதுமட்டுமில்லை, கதாநாயகியை "என்னங்க, ஏங்க" என்று அழைப்பதை ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து தொடர்கிறார்....

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்கூல் பையன். கார்த்தி அவரோட ஸ்டைலை மாத்தியே ஆக வேண்டும் . இல்லாட்டி யாருக்குமே அவரை பிடிக்காமல் போய் விடும்..

      Delete
  10. மிகுந்த பொறுப்புணர்வுடன் ஜென் என்ற அழகுராஜா தத்துவத்தை எடுத்துரைத்ததிற்கு மிக்க நன்றி.
    சந்தானம் இது வரை தனக்கென ஒரு பாடி லாங்வேச்சை உருவாக்கியது இல்லை.கவுண்ட மணியின் சி.டியை பார்த்தே பேசி வருகிறார்.
    கூடிய சீக்கிரம் மக்கள் இவரை மாத்தி விடுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க Arif .A. உண்மை தான் சந்தானத்திருக்கு வடிவேல் மாதிரி தனி ஸ்டைல் இல்லவே இல்ல. ஆனா தலைவர் கவுண்டமணி காமெடியை இப்ப பார்த்தாலும் போர் அடிக்காது, பிரெஷ்ஷா இருக்கும், அதனாலே கவுண்டர் ஸ்டைல் பாலோ பண்ணுறார்.

      Delete
  11. நல்ல வேளை. மீ எஸ்கேப்!!

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை தப்பிச்சுட்டிங்க ஆவி.. :):)

      Delete
  12. நல்ல வேளை, ஆண்டவன் ஏனைக் காப்பாற்றி விட்டான்.

    ஆள் இன் ஆள் அழகுராஜா என்று பெயரைப் பார்த்ததும் கண்ணா லட்டு தின்ன ஆசையா போல நல்ல கொமடி படமா இருக்கும் என்று நினைத்துக் கொண்டு, நண்பனிடம் இருந்து வாங்கி ( திருட்டு CD க்குக் கூட காசு கொடுக்கவில்லை என்று சொல்ல வாறன்) ஹார்ட்டில் போட்டு வைத்திருக்கின்றேன். இப்போ நிச்சயமாக Delete பண்ணியே விடுவேன்.

    தற்செயலாகத்தான் உங்களின் வலைத்தளத்தை பார்க்க வேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. இப்போ Fav Bar ல போட்டுட்டேன், இனிமேல் அடிக்கடி வருவேன். (அப்பிடீன்னா நீங்களும் அடிக்கடி எழுத வேண்டும் என்று சொல்லாமல் சொல்லுகின்றேன். மாசத்துக்கு மூணு போஸ்ட்டு போட்டால் போதாது.)

    எங்கேயோ சொல்ல வேண்டியது, இங்கே சொல்றேன், நீங்கள் சமர் படத்துக்கு கொடுத்த விமர்சனத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சுத்த பைத்தியகாரத்தனமான படம். இரண்டு பேரு பொழுதுபோக்கா இப்படியெல்லாம் பந்தயம் கட்றாங்க என்று சொல்ல வாறது சகிக்கல்ல. அது எப்பிடி உங்க அலசலில் தப்பியது?

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக நன்றி Yaseen Kamal...நீங்கள் சொல்லுவது போல் இதை திருட்டு சிடியில் கூட பார்க்க முடியாது. இந்த வருடத்தின் நம்பர் 1 சொதப்பல்..
      அடிக்கடி வாங்க நண்பா, நானும் நிறைய பதிவு போட முயற்சி செய்கிறேன். எனக்கு சினிமா, வீடியோ கேம்ஸ் தவிர பிற விசியங்கள் எழுதி பழக்கம் இல்லை.. :(:(
      சமர், வித்தியாசமான முயற்சி. இரண்டு வில்லன்களும் ஏன் அப்படி செய்கிறார்கள் என்பதருக்கு போதிய காட்சிகள் வைத்து விளக்கி இருப்பதாகவே நான் கருதினேன்.. நிறைய பணம், நிறைய சைக்கோ தனம் இருக்கும் இருவரும் இது போல் செய்வார்கள், செய்ய சான்ஸ் இருக்கிறது என்று எடுத்து கொள்ளலாம். :):)

      Delete