Sunday, June 16, 2013

Man of steel (2013)- நீங்க இன்னும் நல்லா வளரனும் தம்பி !

ஹாலிவுடில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்று எப்பொழுதும் தனி மவுசு உண்டு. வார்னர் பிரதர்ஸ் அல்லது 20 செஞ்சுரி பாக்ஸ் நிறுவனத்திருக்கு வருவாய் குறைவது போல் இருந்தால், எடுடா சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்சை என்று பழைய காமிக்ஸ் கதையை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றார் போல் ரீ மாடல் பண்ணி கொள்ளை லாபம் பார்த்து விடுவார்கள். காமிக்ஸ் உலகை பொறுத்த வரை இரண்டு பெரிய நிறுவங்கள் உண்டு. மார்வெல் காமிக்ஸ் மற்றும் டி.சி. காமிக்ஸ். இவர்களுக்கு என்று தனி தனி சூப்பர் ஹீரோக்கள், தனி தனி ரசிகர்கள் பட்டாளம் வேறு இருப்பார்கள். நம்ம ஊரில் ரஜினி-கமல், அஜித்-விஜய், ரசிகர்களிடையே மற்றும் ர.ர-உ.பி கழக கண்மணிகள் இடையே நடைபெறும் பேஸ்புக் சண்டையை விட படு பயங்கரமாய் இவர்கள் மோதி கொள்வார்கள். மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரங்களில் முக்கியமானவர்கள் கேப்டன் அமெரிக்கா, X-மென், ஹல்க், ஸ்பைடர் மேன், பிளேட், அயர்ன் மேன், வால்வரின், மற்றும் தோர். மார்வெல் கதாபாத்திரங்களில் நான்கு சூப்பர் ஹீரோஸ் இனைந்து சாகசம் செய்தால் அதை "அவெஞ்சர்ஸ்" என்று கூறுவார்கள். மார்வெல் ரசிகர்களில் பெரும்பாலோனர் 18 வயசுக்கு கீழ் உள்ள டீன் ஏஜ் குழந்தைகள் தான் என்று ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. மார்வெல் கதாபாத்திரங்கள் செய்யும் சாகசங்கள் அணைத்து குழந்தைகளை கவரும் விதமாகவே இருக்கும். இவர்களின் காப்புரிமையை வைத்து இருப்பது 20 செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம். சரியாய் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை எதாவது ஒரு மார்வெல் காமிக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து படம் எடுத்து குறைந்தது $500 மில்லியன் சம்பாரித்து விடுவார்கள். உலகிலே அதிக வசூல் (கிட்ட தட்ட $2b) செய்த படமாக இன்றும் இருப்பது "தி அவெஞ்சர்ஸ்" என்பதே இவர்களின் பேன் பேஸ்க்கு தக்க சான்று.


டி.சி. காமிக்ஸ் ஹீரோக்களில் முக்கியமானவர்கள் பேட் மேன், சூப்பர் மேன் , கிரீன் லான்டர்ன் (Green Lantern) மற்றும் வாட்ச்மேன் கதாபத்திரங்களை கூறலாம். இவர்களில் எனக்கு பிடித்த ஹீரோ பேட் மேன். அதற்க்கு முக்கிய காரணம் கிறிஸ்டோபர் நோலன் என்பதில் சந்தேகமேயில்லை. சூப்பர் ஹீரோ படங்களுக்கு என்று புதிய வரைமுறையை எழுதியவர் அவர். சூப்பர் ஹீரோ படங்கள் என்றால் வெறும் கிராபிக்ஸ் அக்ஷன் (மார்வெல் படங்கள்) மட்டுமே என்று இருந்து வந்த நிலையில், பேட் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்கள் படங்களில் அருமையான திரைக்கதை, உனர்வுபூர்வமான நடிப்பு, கண்கலங்க வைக்கும் காட்சிகளையும் அட்டகாசமான ரியல் அக்ஷன் காட்சிகளை சேர்த்து ஒரு புதிய இலக்கணத்தை ஏற்படுத்தினார் நோலன். நோலனின் பேட் மேன் சீரீஸ் முன்பு வரை வார்னர் பிரதர்ஸ் டி.சி. காமிக்ஸின் பல கதைகளை திரைப்படமாக எடுத்து கையை சுட்டு கொண்டு இருந்தது. வார்னர் பிரதர்ஸ் நோலனின் பேட் மேன் சீரீஸ் முலம் பல படங்களில் விட்டதை அந்த முன்று படங்கள் முலம் மீட்டு விட்டார்கள். 

நோலனின் பேட் மேன் சீரீஸ் முன்பு வரை வந்த பேட் மேன் படங்கள் எல்லாம் படு திராபையான படங்கள். எல்லாம் அதள பாதாள தோல்வியை தழுவிய படங்கள். சரியாக சொன்னால் டி.சி. காமிக்ஸ் கதாபாத்திரங்களை நடித்து வார்னர் பிரதர்ஸ் எடுத்து வெளி வந்த அனைத்து படங்களும் தோல்வி படங்கள் தான். போட்ட மூதல் கூட திரும்பி வராத படங்கள் அவைகள். அந்த லிஸ்டில் சூப்பர் மேன் படங்களும் அடங்கும். Man of steel படத்திற்கு முன்பு வரை எந்த சூப்பர் மேன் படமும் உருப்படியாக வந்தது இல்லை. இதற்கு முன்பு வரை வந்த எந்த சூப்பர் மேன் படங்களின் சாயலும் இந்த படத்தில் இருக்காது என்று விளம்பரம் செய்ய பட்டது. அது போக Man of steel படக்குழுவில் கிறிஸ்டோபர் நோலன் வேறு இடம் பிடித்து இருந்தார், டைரக்டராக இல்லாமல் இந்த முறை தயாரிப்பாளராக களம் இறங்கி இருந்தார். படத்தை டைரக்ட் செய்தது 300 பருத்தி வீரர்கள், WatchMen போன்ற வெற்றி படங்களை இயக்கிய ஸாக் ஸிண்டர்(Zack Snyder). இவருக்கு இது இரண்டாவது சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட். கதை உருவாக்கத்தில் நோலனின் பங்கும் இருந்தது.


 படத்தில் சூப்பர் மேனாக நடித்து இருப்பது ஹென்றி கெவில் (Henry Cavill). இவர் பலர் அறிந்திராத யூ.கே டிவி நாடக நடிகர். டிவி சீரியல்களில் மட்டுமே நடித்து வந்தவருக்கு Man of steel தான் பெரிய பிரேக். இவர்கள் கூட்டனியில் பெரிய எதிர்பார்ப்புடன் வந்த Man of steel டி.சி. காமிக்ஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால், ஓர் அளவுக்கு பூர்த்தி செய்ததே என்று சொல்வேன். அது என்ன அளவு என்றால், வசூல் ரீதியாக படம் பெரிய வெற்றி படம், ஆனால் தொய்வான திரைக்கதை, ஓவர் கிராபிக்ஸ் அக்ஷன் காட்சிகள் என்று படம் என்னை அவ்வளவாய் கவரவில்லை.

அணைத்து சூப்பர் ஹீரோக்களுக்கும் புல் டைம் ஆக உலகை காக்கும் வேலை தான் செய்வார்கள், தீய சக்திகளிடம் இருந்து உலகத்தை காத்த நேரம் போக காதலிகளை லவ்வுவார்கள். நாம் பார்க்க போகும் Man of steel படத்தின் ஹீரோ சூப்பர் மேனும் உலகத்தை காக்கும் அதை வேலையை தான் செய்கிறார், அந்த வேலையை இன்னும் கொஞ்சம் சுவாரிசியமாக செய்து இருக்கலாம். மாற்ற சூப்பர் ஹீரோக்களிடம் இருந்து ரொம்பவே வித்தியாசமானவர் "சூப்பர் மேன்". உண்மையில் இவர் மனித குலத்தை சேர்ந்தவர் கிடையாது. பூமியைவிட பலநூறு மடங்கு டெக்னாலஜியில் முன்னேறிய கிரிப்டான் கிரகம் சேர்ந்த மனிதர் தான் நம்ம ஹீரோ. கிரிப்டான் கிரகத்தில் இருக்கும் வளங்கள் எல்லாம் அழிந்த பிறகு அந்த கிரகம் அழிவை நோக்கி பயணிக்கிறது. அந்த கிரகத்தில் இயற்கையான முறையில் பிறந்த குழந்தையான் கேல்-எல்லை (சூப்பர் மேன்) விண்கலம் முலம் ஏற்றி பூமிக்கு அனுப்புகிறார் அந்த குழந்தையின் தந்தை ஜோர்-எல் (Russell Crowe).அதைத் தடுப்பதற்காக ஏற்படும் சண்டையில் ஜெனரல் ஸோடு (Michael Shannon) ஜோர்-எல்லை கொன்றுவிடுகிறான் அந்த கொலை குற்றதிருக்கு தண்டனையாக ஸோடு  மற்றும் அவனது படை வீரர்கள் கிரகம் விட்டு கிரகம் கடத்துகிறது கிரிப்டான் அரசாங்கம். அதன் பிறகு கிரிப்டான் கிரகமே அழிந்து போகிறது.


விண்கலத்தில் பூமிக்கு வந்த கேல்-எல்லை ஒரு விவசாய குடும்பம் கண்டு எடுத்து கிளார்க் கென்ட்ட என்று பெயர்யிட்டு வளர்கிறார்கள். வளர வளர கிளார்கிருக்கு தனக்கு இருக்கும் அறிய சக்திகள் பற்றி தெரிய வருகிறது. ஆனால் தன்னிடம் இருக்கும் சக்திகள் பற்றி வெளியில் சொன்னால் எங்கே தன்னை மக்கள் ஒதுக்கி விடுவார்களோ என்று அஞ்சி யாருக்கும் சொல்லாமல் வாழ்கிறான். தன் தந்தையிடம் மட்டும் சொல்கிறான். அவனது தந்தை "கிளார்க் பூமியை சேர்ந்தவன் கிடையாது" என்கிற உண்மையை சொல்லி, கிளார்க் பூமிக்கு அனுப்பட்ட நோக்கத்தை தேடி கண்டுபிடிக்க சொல்கிறார். கிளார்க் நாடோடி போல் தன் பிறப்பின் ரகசியத்தை தேடி உலகை சுற்றி வருகிறான். அந்த தேடலில் அவனுக்கு தான் யார், தன்னுடைய உண்மையான தந்தை பற்றி தெரியவருகிறது. கிளார்க்கின் சிறு வயது சம்பவங்கள், மற்றும் அவன் நாடோடியாய் அலையும் சம்பவங்கள் எல்லாமே நான்-லினியர் பாணியில் சொல் பட்டு இருக்கும். ஆனால் குழப்பம் இல்லாமல் நமக்கு புரியும். கிளார்க்கிருக்கும் அவனது வளர்ப்பு தந்தைக்கும் நடக்கும் உரையாடல்கள் மட்டுமே சுவாரிசியமாக இருந்தது. மற்றவை அனைத்தும் ஜஸ்ட் அனதர் மூவி போல் தான் இருந்தன. 

கிளார்க் தனது பிறப்பின் ரகசியம் அறிந்த பிறகு சரியாய் ஜெனரல் ஸோடும் அவனது படை வீரர்களும் கிரிப்டான் கிரகத்தில் இருந்து தப்பிதது பூமிக்கு வந்த கிளார்க்கை தேடி வருகிறார்கள். வந்தவர்களுக்கு பூமி மிகவும் பிடித்து விடவே இங்கயே தங்கி விடலாம் என்று எண்ணி பூமியை அழிக்க எண்ணி அதற்க்கான அழிவு வேலையை செய்கிறார்கள். தன் கிரிப்டான் இன மக்களை அழித்து   பூமியை காப்பாற்றும் பொறுப்பு சூப்பர் மேன்க்கு வருகிறது. அதை எப்படி செய்து முடிக்கிறார் என்று கொட்டாவி வரும் அளவு கிராபிக்ஸ் சண்டை காட்சிகள் முலம் சொல்லி இருக்கிறார். அடுத்து பாகத்தில் சீரியஸ் கதையை எதிர்பார்கலாம். இந்த படம் சுமார் ரகமே.

Man of steel (2013)- நீங்க இன்னும் நல்லா வளரனும் தம்பி !

My Rating: 6.6/10......


6 comments:

  1. வழக்கம் போல தானா...? அப்போ ஃபோர் தான்... விமர்சனத்திற்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தனபாலன் சார்.

      Delete
  2. தல வெகுநாட்களுக்குப் பின் உங்களிடம் வந்திருக்கும் வெகு நிறைவான, பல விசயங்களை உள்ளடக்கிய பதிவு.... ஹாலிவுட்டுக்கும் எனக்கும் ரொம்ப தூரம், அதிலும் காமிக்ஸ்...பிக்சன் என்றால் காத தூரம் ஓடுபவன்.. அப்படிப்பட்ட என்போன்றவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக எல்லா தளங்களையும் அலசிவிட்டு பின் சினிமா விமர்சனத்திற்குள் நுழைந்த விதம் ஒரு தேர்ந்த எழுத்தாளனின் நடை...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தல.. இப்ப தான் கொஞ்சம் நேரம் கிடைக்குது இது மாதிரி எழுத. :):)

      Delete
  3. தல,

    எனகுத் தெரிஞ்சு படம் பாத்த எல்லாருமே நெகட்டிவா தான் சொல்லிருக்கிங்க. அவ்ளோ கேவலமாவா இருக்கு தல..? கதை & திரைக்கதை - நோலன் & கோயர். பேட்மேன் ட்ரைலாஜி எழுதுன அதே ஆளுங்க.. அப்புறம் எப்டி இப்டி ஆச்சு..?

    எனிவே, தியேட்டருக்கு போலாம்னு இருந்தேன்.. இனி டிவிடி வர்ற வரை வெய்ட் பண்ண வேண்டியது தான்.

    எனக்குப் பிடிச்ச சூப்பர் ஹீரோ பேட்மேன் & அயர்ன்மேன் தான். ஏன்னா இவங்களாம் சாதாரண மனிதர்கள். தங்களோட அறிவால சூப்பர் ஹீரோஸ் ஆனவங்க. அதனால படத்தோட நம்மாள நல்லா ஒன்ற முடியும். ஃபேன்டசிக்கு பதில் சயின்ஸ்பிக்சன் இருக்கும். அதனாலதான் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. படம் தியேட்டர்ல பார்க்கிற அளவு வொர்த் இல்ல தல. நல்ல பிரிண்ட் வந்தா பாருங்க, அதுவும் நேரம் இருந்தா.

      Delete