Thursday, November 01, 2012

Skyfall- 2012- Bond is Back. திரைவிமர்சனம்

Skyfall இந்த வருசத்துல நான் ரொம்பவே எதிர்பார்த்த படம். ஜேம்ஸ்பாண்ட் படம் வேற. இன்னைக்கு தான் ரிலீஸ் ஆச்சு. படம் என்னோட எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சதா என்றால், நிச்சியம் பூர்த்தி செஞ்சது என்று சொல்வேன். இது வரை வெளிவந்த உள்ள 23 பாண்ட் படங்களை தரவரிசை படுத்தினால் Skyfall படத்திருக்கு முதல் 5 இடங்களில் நிச்சியம் ஒரு இடம் உண்டு. ஆக்ஷ்ன், செண்டிமெண்ட், நம்பிக்கை துரோகம், மெல்லிய நகைச்சுவை என்று பல பரிமாணங்களில் படம் பயணம் செய்கிறது. முன்னாடியே சொன்ன மாதிரி இந்த படம் போன ஜேம்ஸ்பாண்ட் படமான Quantum of Solace தொடர்ச்சியாக இல்லாமல், புது கதைகளத்தை கொண்டு உள்ளது. படம் இஸ்தான்புல் நகரில் ஆரம்பித்து, லண்டன் சென்று, பிறகு ஷாங்காய், மறுபடியும் லண்டன் பயணம் செய்து கடைசியில் ஸ்காட்லாந்து நாட்டில் Skyfall என்ற வீட்டில் முடிவடைகிறது.


இங்கிலாந்து நாட்டின் உளவு அமைப்பான MI6 (Military Intelligence, Section 6) மீதும் அதன் தலைவர் மிஸ் M மீதும் முன்னால் MI6 ஏஜென்ட் ஒருவன் தொடுக்கும் தாக்குதலை மிஸ் M பாண்டின் உதவியுடன் எப்படி முறியடிக்கிறார் என்பது தான் படத்தின் ஒன் லைனர். இந்த படம் வழக்கமான எல்லா பாண்ட் பார்முலாவையும் கொண்டுள்ளது. படத்தின் ஆரம்பம் அட்டகாசமாய் இருக்கும். முதல் சேசிங் காட்சி இது வரை எந்த பாண்ட் படங்களிலும் வந்திராத காட்சி. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வில்லன் ஒருவன் MI6 ரகசிய ஏஜென்ட்களின் பெயர் விவரங்களை அடங்கிய சிப் ஒன்றை திருடி கொண்டு ஓடுவான். பாண்ட் அவனை துரத்தி செல்வது போன்ற காட்சி. டின்டின் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு பைக்/ஜீப் சேசிங் காட்சி வருமே. அது போன்ற, இல்லை இல்லை அதை விட அட்டகாசமான காட்சி இது. அதில் ஸ்பீல்பெர்க் அனிமேஷன் கொண்டு அந்த காட்சியை எடுத்து  இருந்தார். ஆனால் இதில் சாம் மெண்டஸ் நிஜ மனிதர்களை கொண்டு மிக சிறப்பாய் எடுத்து உள்ளார். நான் இது வரை  பார்த்த சிறந்த சேசிங் காட்சிகளில் இதுவும் ஒன்று, சில இடங்களில் எனது ஹார்ட் பிட் தாறுமாறாக ஏறி விட்டது. முதல் 15 நிமிடங்கள் மிஸ் செய்யாமல் பாருங்கள்.


MI6 ரகசிய ஏஜென்ட்களின் பெயர் விவரங்களை அடங்கிய சிப் வில்லன் ஜேவியர் பார்டெம் (Javier Bardem) கைகளுக்கு போகிறது. அதை கொண்டு ஜேவியர் சில ரகசிய ஏஜென்ட்களை கொலை செய்கிறான். லண்டனில் இருக்கும் MI6  தலைமை அலுவலகத்தில் M இல்லாத நேரம் பார்த்து குண்டு வெடிப்பை ஏற்படுத்துகிறான். ஜேவியர் லட்சியம் உளவு துறை தலைவர் M மை கொல்ல வேண்டும் என்பது தான். அதுவும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கொல்வது இல்லை, M மை லண்டனில் வைத்து அனைவரும் அறியும் படி கொலை செய்ய வேண்டும். ஜேவியர் ஏன் M மை கொலை செய்ய துடிக்கிறான் ? M முன்னால் MI6 ரகசிய ஏஜென்ட் ஜேவியர்க்கு செய்த துரோகம் என்ன ? போன்ற கேள்விக்கான விடைகளை Skyfall படம் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.


டேனியல் க்ரெய்க், மறுபடியும் தான் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்துக்கு மிகவும் பொருத்தமானவர் என்பதை நிரூபித்து உள்ளார். இவரது முந்திய இரண்டு பாண்ட் படங்களை விட இதில் மிகவும் சிறப்பாக நடித்து உள்ளார். முகத்தை எப்பொழுதும் இறுக்கமாக வைத்து இல்லாமல், நிறைய இடங்களில் மாறுபட்ட முகபாவனைகளை அழகாக வெளி படுத்தி உள்ளார். பழைய பாண்ட் படங்களை போல் இல்லாமல் இதில் நிறைய புன்னகைக்க வைக்கும் நகைச்சுவை டயலாக்ஸ் வருகிறது. க்ரெய்க் தனக்கு காமெடியும் வரும் என்று நிருபித்து உள்ளார். ஆக்சன் காட்சிகளில் வழக்கம் போல் பட்டைய கிளப்பி உள்ளார். நோலன் படம் போல், இதிலும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உபயோக படுத்தாமல் ரியல் டைம் ஆக்சன் கட்சிகளாக படம் ஆக்கி உள்ளனர். எப்பொழுதும் கிராபிக்ஸ் காட்சிகள் விட ரியல் ஆக்சன் காட்சிகள் தான் ரசிகர்களை கவரும். இப்படமும் நிச்சியம் ரசிகர்கள் கவரும்.

ஜேவியர் பார்டெம், இவரது கதாபாத்திரத்தின் பெயர் சில்வா, இவர் முன்னால் MI6 ஏஜென்ட். படத்தில் இவரது அறிமுகம் சரியாய் ஒரு மணி நேரம் கழித்து வரும். இன்னும் சரியாய் சொல்ல வேண்டும் என்றால் இண்டர்வெல் (இந்தியாவில் மட்டும்) முடிந்த உடன் தான் இவரின் அறிமுக காட்சி வரும், மொத்தமே 30 நிமிடங்கள் தான் வருவார், அதில் 20 நிமிடங்கள் சண்டை காட்சிகள். இவரது பெர்பார்மான்ஸ் காட்சிகள் என்று சொன்னால் மொத்தமே ரெண்டு காட்சிகள் தான். இவரும் பாண்டும் சந்திக்கும் காட்சி ஒன்று, மற்றொன்று இவரும் M மும் சந்திக்கும் காட்சி. மனிதர் இந்த இரண்டு காட்சிகளில் அசத்தி இருப்பர். அதுவும் இவர் பாண்ட் உடன் நடத்தும் உரையாடல்கள் அதகளம். டைரக்டர் இவரது கதாபாத்திரத்தை உருவாக்கும் போது டார்க் நைட் ஜோக்கர் கதாபாத்திரத்தை மனதில் வைத்து உருவாக்கி இருப்பர் போல். ஜோக்கர் அளவுக்கு புத்திசாலியாக இவரை காட்டி இருப்பார்கள். இவர் பாண்டிடம் மாட்டி பிறகு தப்பிக்கும் காட்சிகள் TDK போலவே இருந்தன.


M ஆக நடித்து இருப்பவர் ஜூடி டென்ச். M16 உளவு துறை தலைவர் M ஆக GoldenEye படத்தில் ஆரம்பித்த இவரது பயணம் இந்த படத்தில் முடிவடைகிறது. படத்தின் மெயின் கதை இவரை சுற்றியே பின்ன பட்டு இருக்கும். தனது பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்து உள்ளார். பாண்டிடம் இவர்கண்டிப்பு காட்டும் காட்சிகள் யதார்த்தமாய் இருக்கும். மறுபடியும் பணியில் சேர பாண்ட் சில டெஸ்ட் மேற்கொள்ள வேண்டியது வரும், அந்த எபிசோடில் M மற்றும் பாண்ட் இடையே நடைபெறும் உரையாடல்கள் செமையாக இருக்கும். Q கதாபாத்திரத்தை பென் விஷ்ஷா என்ற இளைஞர் ஏற்று நடித்து உள்ளார். அணைத்து படங்களிலும் Q  தான் ஜேம்ஸ்பாண்ட்க்கு நவீன ஆயுதங்களை வழங்குவர். படத்தின் முக்கியமான தருணங்களில்தான் க்யூ தலைகாட்டுவார். பல ஜேம்ஸ் பாண்ட் படங்களில் க்யூ தலைகாட்டுவதே இல்லை என்று கூட சொல்லலாம்.

கடைசியாக பாண்ட் கேர்ள்ஸ் நோமி ஹாரிஸ், மற்றும் Berenice Marlohe, இவர்களுக்கு படத்தில் பெரிய ரோல் இல்லை. சில இடங்களில் திரைக்கதையில்  தொய்வு ஏற்படுகிறது, MI6 ரகசிய ஏஜென்ட்களின் லிஸ்ட்டை தீடிர் என்று அனைவரும் மறந்து விடுகிறார்கள். இது போன்ற சில குறைகள் இருக்க தான் செய்தன, ஆனால் ஜேவியர் க்ரெய்க் மற்றும் ஆக்சன் காட்சிகள் இந்த குறைகளை மறக்க அடித்து விடுகின்றன. படத்திருக்கு ஒளிப்பதிவு ரோஜர் டீகின்ஸ், கிளைமாக்ஸ் காட்சியில் இவரது உழைப்பு நன்றாக தெரியும். மனிதர் அசத்தி இருப்பார். கிளாசிகல் டைரக்டர் சாம் மெண்டஸ் பாண்ட் ரசிகர்களை ஏமாற்றாமல் நல்லதொரு பாண்ட் ஆக்சன் படத்தை வழங்கி உள்ளார். 

Skyfall: Bond is Back....

My Rating: 8.0 .........


31 comments:

  1. படம் அப்ப பட்டைய கிளப்புது கண்டிப்பா பாக்குறேன்

    ReplyDelete
    Replies
    1. பாருங்க தல..நிச்சியம் உங்களுக்கு பிடிக்கும்..

      Delete
  2. M பயணம் இப்படத்தோட முடியுதா?? க்ளைமாக்ஸ்ல புட்டுக்கிட்டாங்களா? சோ சாட்! Good review bro! அந்த டிண்டின் சேஸிங்கை விட சூப்பாரா இருக்கா! அப்ப கண்டிப்பா பார்க்கணும்! :)

    ReplyDelete
  3. ஐயோ spoliers சொல்லிட்டேன்.....இருங்க தல மாத்திறேன்....ப்ளாக் படிக்கிறவங்க அப்புறம் டென்ஷன் ஆகிருவாங்க...

    ReplyDelete
  4. என்னதான் திட்டினாலும், ஒரே கதையை பார்த்து பார்த்து போரடிச்சாலும் புது ஜேம்ஸ் பாண்ட் படம்னா வாயப் பிளந்துக்கொண்டு பார்க்கத் தான் போகிறேன். எப்ப பார்ப்பேன் என்பதில் தான் பிரச்சினையே?

    ReplyDelete
    Replies
    1. தல, முடிஞ்ச வரைக்கும் தியேட்டர்ல் பாருங்க..உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும்...உங்க ஊர்ல எப்ப ரிலீஸ் தல..??

      Delete
    2. எங்க ஊர்ல இல்ல, நாட்டுலயே இன்னும் ரிலீஸ் பண்றத பற்றி பேச்சக் காணோம். அநேகமா இருக்காதுன்னு நம்புறேன். தலையெழுத்து பாஸ்:(

      Delete
  5. நல்ல விமர்சனம்.
    கண்டிப்பாக பாக்கணும் தலைவரே.
    சில முக்கிய வேலையினால் இந்த வாரம் முடியாது.
    அடுத்த வாரம் பாத்தறேன்.

    ReplyDelete
    Replies
    1. பாருங்க நண்பரே...பார்த்து விட்டு உங்கள் கருத்தை சொல்லுங்கள்..

      Delete
  6. அப்பாடா நமக்கு ஒரு உலக சினிமா கிடைச்சிருச்சு... நமக்கு tdkrக்கு போட்டது போல சப்டைட்டில் போட்டா நல்லாயிருக்கும். அப்பறம் தல ஜேம்ஸ்பாண்ட் படத்துக்கு spoilers சொன்னாலும் பிரச்சனையில்லை...

    ReplyDelete
    Replies
    1. தல..உலக சினிமா அளவுக்கு எல்லாம் எதிர்பார்காதீங்க..வித்தியாசமான பாண்ட் மூவி..

      Delete
  7. அப்பறம் தல take the shot கிளிப் அட்டகாசம்...

    ReplyDelete
    Replies
    1. தல, அவங்களே official ஆ சில கிளிப்ஸ் ரிலீஸ் பண்ணி இருக்காங்க..

      Delete
  8. நேத்தே படத்தை பாத்துட்டேன் ராஜ். ஆனால் விமர்சனம் எழுதுவதற்கு என்னவோ போல் இருந்தது. அதனால் விட்டு விட்டேன். ஆனால் ஆங்கிலப்பட விமர்சனம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த விமர்சனம் ஒரு உதாரணம். அருமை. வாழ்த்துக்கள் ராஜ்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க செந்தில், நீங்களும் உங்க ஸ்டைல் எழுதி இருக்கலாம்.இப்ப கூட ஒன்னும் ஆகல..நீங்களும் இந்த படத்தை பத்தி உங்க பார்வையில எழுதுங்க...அப்புறம் உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி...

      Delete
  9. அந்த முதல் சேசிங் காட்சி படுபிரமாதம். கண்களை விட்டு அகலவேயில்லை. ஆக்சன் காட்சிகள் எடுக்கிறேன் என்று இங்கு நமது காதில் பூச்சுற்றும் அரைவேக்காட்டுகள் இதை பார்த்தாவது கற்றுக் கொள்ளட்டும்.

    ReplyDelete
    Replies
    1. செம காட்சி தல அது...தாறுமாறு..சீன்...கிட்ட தட்ட முனு மாசம் எடுத்தாங்கலாம் அந்த ஒரு சீன்னை..

      Delete
  10. பார்க்க தூண்டுகிறது...

    ReplyDelete
  11. பார்க்கத் தூண்டும் விமர்சனம்... எப்படியும் எங்கள் ஊரில் இரண்டு வாரத்தில் வந்து விடும்...

    நன்றி...
    tm4

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி தனபாலன் சார்...திண்டுக்கல் அவ்வளவு லேட்வா ரிலீஸ் பண்ணுறாங்க.. ???
      சிக்கிரமே பாருங்க...

      Delete
  12. " M16 ".... it should be MI6, please correct it. It is an unusual Bond film, but interesting to watch!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி நண்பரே...தவறை திருத்தி விட்டேன்...
      வித்தியாசமான பாண்ட் படம் தான் இது... :):)

      Delete
  13. சூப்பரா எழுதியிருக்கீங்க ராஜ்.. படமும் படு சூப்பர்தான்னு புரியுது!! இங்க 9ந்தேதிதான் ரிலீஸ். பார்த்துருவோம்!

    ReplyDelete
    Replies
    1. பாருங்க JZ....நார்மல் பாண்ட் படம் கிடையாது இது....அப்புறம் நீங்க ரொம்ப நாளா ஆளே காணம்..??

      Delete
  14. இன்னும் படம் பார்க்கலை ராஜ்....பார்க்கவேண்டும் என ட்ரைலர் பார்த்த போதே பார்க்க வேண்டிய ஆர்வம் வந்துச்சு...எனக்கு இவரை தான் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் மிகவும் பிடித்தவர்

    ReplyDelete
  15. நமக்கு இது தான உலக சினிமா

    ReplyDelete
  16. தல படம் பார்த்துட்டேன்.. ந ரொம்ப ஸ்டன்ட் எதிர்பார்த்து போனேன்... உங்க நடைல விமர்சனம் அருமை ... ஆரூர் மூணா சொன்ன மாதிரி நானும் விமர்சனம் எழுதலாம்னு நினைச்சேன் ... பட் படம் என்னோட எதிர்பார்ப்ப நிவர்த்தி செய்யல

    ReplyDelete
  17. நிச்சயமா டின்டின் சேசிங் விட விட அருமையான சேசிங் தல

    ReplyDelete
  18. ஹாய் ராஜ், எப்படி இருக்கிறீர்கள்? ரொம்ப நாள் கழித்து உங்க வலைதளத்திற்கு வந்திருக்கிறேன். உங்க Gmail ID & Facebook ID அனுப்புங்க. நான் என் Friends Lists ல செர்த்துக்குறேன். என் Gmail ID: nhnarasimma.prasad@gmail.com

    ReplyDelete
  19. ரொம்ப சூப்பரா விமர்சனம் இருக்குங்க நண்பா..ரொம்ப லேட்டா கொடுக்கிற கமெண்டு..மன்னிச்சிருங்க..

    ReplyDelete