பதிவுலகில் இரண்டு நாட்கள் முன்பு ஒரு சண்டையை காண நேர்ந்தது, நான் விரும்பி படிக்கும் "உலக சினிமா ரசிகன்" அவர்களுக்கும் ஹாலிவுட் பாலா அவர்களுக்குமான சண்டை அது. அந்த சண்டை ஏன் நடந்தது, யார் முதலில் ஆர்ம்பித்தது, யார் தவறு செய்தார் என்ற பஞ்சாயத்துக்கு நான் போக விரும்பவில்லை.அது என் வேலையும் இல்லை. ஆனால் மிகவும் உக்ரமான பர்சனல் சண்டை அதுவும் பொதுவில் போட பட்ட சண்டை அது என்று புரிந்தது.
பாலா என்னிடம் ராஜேஷ் அவர்களின் பதிவில் "உலக சினிமா ரசிகன்" சில தரமற்ற கமெண்ட் போட்டு உள்ளதாக சொன்னார், ராஜேஷ் தளத்தில் சென்று பார்த்தேன், அதில் "உலக சினிமா ரசிகன்" "காரிகன்" மற்றும் "கார்டின் மாசி" என்கிற முன்று பேர் இடையில் மிகவும் கீழ்த்தரமாக கமெண்ட் வார் நடந்து கொண்டு இருந்தது. "காரிகன்" என்கிற பதிவரை நான் பாஸ்கரன் அவர்களின் வலைபூவில் பார்த்து உள்ளேன். ஹேராம் பதிவில் பாஸ்கரன் உடன் கருத்து போர் புரிந்து உள்ளார். ராஜேஷ் பதிவில் நடந்த கருத்து மோதல்களை பார்த்து எனக்கு மிகவும் ஆச்சிரியமாக இருந்தது, இந்த அளவு கீழ் தரமாக பொதுவில் பேசுகிறார்களே என்று. இன்னும் பெரிய ஆச்சிரியம் பாஸ்கரன் இப்படி பேசுகிறாரே என்று. "காரிகன்" அவர்களின் கமெண்ட் தரத்தை நான் பார்த்து உள்ளேன். அவரும் இந்த அளவுக்கு பேச மாட்டார் என்றே எனக்கு தோன்றியது.
மேல்லோட்டமாக பார்த்தால் "உலக சினிமா ரசிகன்" பாஸ்கரன் அவர்கள் தான் அணைத்து கமெண்டை இட்டது போன்று தோன்றும், எனக்கும் அதே தான் தோன்றியது. அணைத்து தரமற்ற கமெண்ட்களும் பாஸ்கரன் அவர்களின் எழுத்து நடையில் இருந்தது, அந்த ப்ரொபைலை கிளிக் செய்து பார்த்தேன், பாஸ்கரன் வைத்து இருக்கும் "சார்லி சாப்ளின்" படம் மற்றும் அவரது "About me" கூட அப்படியே இருந்தது. காரிகன் ப்ரொபைலை கிளிக் செய்தல் "Profile Not Available" என்று வந்தது. சரி இருவரும் பொதுவில் அடித்து கொள்கிறார்கள் என்றே நினைத்து இருந்தேன். ராஜேஷ் அவர்களே பாஸ்கரன் தான் அப்படி பின்னுட்டம் இட்டு விட்டார் என்று நினைத்து விட்டார். அப்படி நம்பக தன்மை வாய்ந்த கமெண்ட்கள் அவை. பிறகு அவரே யாரோ விளையாடி உள்ளார் என்று சொல்லி அணைத்து கமெண்ட்களையும் அழித்து விட்டார். அவர்களது தரமற்ற பேச்சுகளை கீழே குடுத்து உள்ளேன்.
நேற்று BABYஆனந்தன் தளம் சென்ற போது அவரது follower லிஸ்ட்டில் "உலக சினிமா ரசிகன்" என்கிற பெயர் முதலில் இருந்தது, எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. BABY பதிவில் பல வருடங்கள் முன்னாலே பாஸ்கரன் சேர்ந்து விட்டாரே, இது என்ன புதுசா சேர்ந்து இருக்காரே என்று அந்த ப்ரொபைலை ஓபன் செய்து பார்த்தல் தான் தெரிகிறது, அது "உலக சினிமா ரசிகன்" என்கிற பெயரில் உருவாக்க பட்ட போலி ப்ரொபைல் என்று. இது தாத்தா காலத்து டெக்னிக் என்றாலும், இந்த போலி ப்ரொபைல் உருவாக்க அந்த சைக்கோ நன்றாகவே உழைத்து உள்ளான் என்று தெரிந்தது. "உலக சினிமா ரசிகன்" பாஸ்கரன் எந்த எந்த சைட் follow செய்து உள்ளாரோ, அதே சைட்டை இந்த "போலி உலக சினிமா ரசிகனும் follow செய்து உள்ளான், அதே சார்லி சாப்ளின் படம், அதே "About me". அந்த போலி ப்ரொபைலை நேற்றே ஸ்க்ரீன் ஷாட் எடுத்து விட்டேன். இப்பொழுது அந்த ப்ரொபைலலை கிளிக் செய்தல் "Profile Not Available" என்று வருகிறது.
போலி உலக சினிமா ரசிகன்:
http://www.blogger.com/profile/03515772280139422535
இந்த படத்தில் "MY BLOGS" என்கிற ஆப்ஷன் இல்லை, அது கூட பரவாயில்லை, ஆனால் "On Blogger Since" என்பதில் "August 2012" என்று காட்டுகிறது. அதாவது இந்த பிளாக்கர் ஐடி ஆரம்பித்தது இந்த மாதம் தான். பாஸ்கரன் மீது தனி மனித தாக்குதல் நடத்த வேண்டும், அவரது பெயரில் இருந்தது அவரே எழுதியது போன்று கீழ்த்தரமாக கமெண்ட் போட்டு அவரை கோப படுத்தி அவர் வாயில் இருந்தது வசைவு வாங்க வேண்டும் என்று அந்த சைக்கோ திட்டம் போட்டு உள்ளான், அதில் ஓர் அளவு வெற்றியும் பெற்று உள்ளான். ராஜேஷ் கூட பாஸ்கரனை தவறாக எண்ண வைத்து விட்டான்.
ஒரிஜினல் உலக சினிமா ரசிகன்:
http://www.blogger.com/profile/01436031496772627920
ஒரிஜினல் ப்ரொபைலலில் மட்டுமே "MY BLOGS" என்று காட்டும், ஒரிஜினல் பிளாக்கர் ஐடியில் "On Blogger Since" என்பதில் "July 2010" என்று சரியாக காட்டுகிறது, பாஸ்கரன் ப்ளாக் எழுத ஆரம்பித்தது July-2010 தான்.
ராஜேஷ் பதிவில் கீழ்த்தரமாக கமெண்ட் சண்டை போட்ட இன்னொரு நபரின் ப்ரொபைல் பெயர் "காரிகன்", இதுவும் ஒரிஜினல் கிடையாது. உலக சினிமா ரசிகனின் ஹேராம் பதிவில் சண்டை போட்ட "காரிகன்" அவர்களின் ஒரிஜினல் ஐடி "http://www.blogger.com/profile/09686777906279690116", அவரது ஒரு கமெண்டை இந்த பதிவில் பார்க்கலாம். மிகவும் ஞாயமாக தன் கருத்தை சொல்லுபவர் இவர்.
//கமல் பலவிதமான தோற்றத்தில் வந்து ஒரு கோமாளி கூத்து அடித்த தசாவதாரத்திற்கு முன்னோடியாக/// இப்படியாக போகும் முதல் கமெண்ட்.
இபொழுது மேலே உள்ள காரிகன் அவர்களின் ப்ரொபைல் கிளிக் செய்தல் அதில் அவரது profile பார்க்கலாம், அவரது "My Blogs" "Blogs I Follow" தெரியும்
எனக்கு "ஒரிஜினல் காரிகன்" யார் என்று தெரியாது.
![]() |
Original காரிகன் |
ஆனால் ராஜேஷ் அவர்களின் பதிவில் போலி உலக சினிமா ரசிகனை வம்பு சண்டை இழுத்த போலி "காரிகனின்" ஐடி "http://www.blogger.com/profile/13471892063903378299" இதை கிளிக் செய்தல் "Profile Not Available" என்று வருகிறது. இந்த ஐடி உருவாகியவனும் என்னை பொறுத்த வரை சைக்கோ தான்.
இரண்டு போலி ஐடி "காரிகன்" மற்றும் "உலக சினிமா ரசிகன்" உருவாகி அவர்கள் உள்ளே அடித்து கொண்டு, இரண்டு பேர் சண்டை இடுவதை போல் காட்ட வக்கிர மனம் படைத்த சைக்கோவால் மட்டுமே முடியும். இந்த இரண்டு போலி ஐடி களை யார் என்று தேடி வருகிறேன். எனக்கு என்ன வியப்பு என்றால் இப்படியும் கூட செய்வார்களா என்பது தான், அதுவும் தேர்ந்த கிரிமினல் போல் வேலை செய்து உள்ளார்களே என்று. இந்த இரண்டு சைக்கோகள் மேல் என்னால் பரிதாபம் மட்டுமே பட முடியும், அவர்களை சேர்ந்தவர்களை நினைத்தால் இன்னும் கஷ்டமாக இருக்கிறது. இந்த பதிவை நான் எழுதிய காரணம் நான் "உலக சினிமா ரசிகர்" பாஸ்கரனை தவறாக எண்ணி விட்டேன், அதே போல் வேறு சில நண்பர்கள் அவரை தவறாக எண்ணி இருக்க கூடும், அது போல் நடக்க கூடாது என்ற எண்ணத்தில் தான் இந்த பதிவை எழுதினேன்.ராஜேஷ் பதிவில் சண்டை இட்டது பாஸ்கரன் கிடையாது.
கடைசியாக இந்த பதிவின் தலைப்பில் குறிப்பிட்டது போல் ராஜேஷ் பதிவில் நான் கண்ட இரண்டு சைக்கோகளிடம் இருந்தது விலகி இருப்பதே நல்லது. முகமுடி அணிந்து கொண்டு கொரில்லா போர் புரிபவர்களை ஒன்றுமே செய்ய முடியாது என்பது என் எண்ணம்.
சைக்கோ-1: <போலி உலக சினிமா ரசிகன்> ராஜேஷ் பதிவில் இட்ட கமெண்ட்ஸ்இங்கே இவன் பிளாக்கர் ஐடி http://www.blogger.com/profile/03515772280139422535 இதில் ஒரிஜினல் பாஸ்கரன் அவர்களின் கமெண்ட் வேறு உள்ளது.
சைக்கோ-2: <போலி காரிகன்> ராஜேஷ் பதிவில் இட்ட கமெண்ட்ஸ் இங்கே. இவன் பிளாக்கர் ஐடி http://www.blogger.com/profile/13471892063903378299
இந்த சைக்கோ தான் மிகவும் ஆபத்தானவன்.
இவர்கள் இருவர் பற்றியும் யாருக்காவது தகவல் தெரிந்தால் தயவு செய்து பாஸ்கரன் அவர்களுக்கு தெரிய படுத்த வேண்டாம்.
சில நண்பர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க, பதிவில் இரண்டு பத்திகளை நீக்கி விட்டேன்.
சில நண்பர்கள் கேட்டு கொண்டதற்கு இணங்க, பதிவில் இரண்டு பத்திகளை நீக்கி விட்டேன்.