Sunday, June 24, 2012

சகுனி யூரோ கப், ஒரு ஜோக்


ஹைதராபாத்தில் மிக சில தமிழ் படங்களே நேரடியாக தமிழில் ரிலீஸ் செய்ய படும். கமல், ரஜினி, விஜய், சூர்யா, மற்றும் அஜித் படங்கள் கண்டிப்பாய் இங்கு ரிலீஸ் ஆகும். பெரும்பாலான தமிழ் படங்கள் பிரசாத்ஸ் மல்டிப்ளெக்ஸில் சனி, மற்றும் ஞாயற்று கிழமையில் காலை காட்சியாக மட்டுமே திரையிடப்படும். படம் ரொம்ப நன்றாக இருந்தால் அடுத்த வாரமும் ஓடும். நான் பார்த்த வரையில் கிட்ட தட்ட 10 வாரங்கள் (5 வாரம் டெய்லி நான்கு காட்சிகள், 5 வாரம் வீக் எண்டு ரெண்டு காட்சிகள்) ஓடி சாதனை புரிந்த படம் எந்திரன் மட்டுமே. சூர்யா படங்கள் அதிகபட்சம் 3 வாரம் வரை ஓடும். விஜய், அஜித் படங்கள் ரெண்டு வாரம் ஓடினால் அது எட்டாவது அதிசியம். ஹைதராபாத்தில் தமிழ் மக்கள் ரொம்ப ஜாஸ்தி, இருந்தாலும் ஏனோ இங்கு பெங்களூர் அளவுக்கு தமிழ் படங்கள் திரையிட படுவது இல்லை. அப்படியே ரிலீஸ் செய்தாலும் நிறைய காட்சிகளாக ஓடுவது இல்லை, வாரம் ரெண்டு காட்சிகள் தான். அந்த ரெண்டு காட்சிகளுக்கான டிக்கெட்டை ஆன்லைனில் புக் செய்து படம் பார்ப்பது என்பது இங்கு தீபாவளிக்கு தட்கல் டிக்கெட் புக் செய்வதை போன்ற அட்வென்ச்சர் அனுபவம். 90% முயற்சி தோல்வியிலே முடியும். சில நேரங்களில் வெற்றி பெறலாம். அப்படி பட்ட முயற்சியில் எனக்கு இந்த வாரம் வெற்றி (டிக்கெட்) கிடைத்தது. அப்படி டிக்கெட் கிடைத்த படம் தான் "சகுனி".
அதுவும் இல்லாமல் கார்த்திக்கு சூர்யாவை போலவே ஆந்திராவில் நல்ல மார்க்கெட் உள்ளது, அவரது முதல் டப்பிங் படம் "ஆயிரத்தில் ஒருவன்", இந்த ஊர் மக்களுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. பிறகு "பையா" பக்கா மசாலா படம், இங்கும் நன்றாக ஓடியது, "நான் மகான் அல்ல" கூட இங்கு டப்பிங் செய்ய பட்டு சுமாராக ஓடியது. பருத்திவீரன் கூட "மல்லிகாடு" என்ற பெயரில் ரிலீஸ் ஆனது. ஆந்திர மக்களுக்கு ஹீரோவோ அல்லது ஹீரோயின் சாவது போல் படம் எடுத்தால் கொலை வெறி கோபம் வந்து விடும், படம் ஊத்தி கொள்ளும்... அதனாலே நம்ப ஊரில் ஹீரோ செத்த "ரமணா" இங்கு "தாகூர்" ஆக மாறி வரும் போது ஹீரோ ஜெயிலில் இருந்தது ரிலீஸ் செய்ய படுவது போல் படத்தை முடித்து இருப்பார்கள்.... நம்ம ஊர் "காக்க காக்க" இந்த ஊர் "கர்ஷனா" வாக மாறும் போது அசின் கதாபாத்திரம் கடைசியில் சாகாது. அதனாலே இங்கு பருத்திவீரன் ஊத்தி கொண்டது. இவர்களுக்கு பிடித்தது மாஸ் படங்கள் தான். ஹீரோ சும்மா தொடையை தட்டி பஞ்ச் பேச வேண்டும், ஹீரோயின் தொடையை தட்டி டூயட் பட வேண்டும் என்பது இங்கு எழுத படாத விதி.
கார்த்திக்கு ஆந்திராவில் மார்க்கெட் இருக்கு என்பதாலே சுத்தமாய் லாஜிக்கே இல்லாமல் இந்த ஊர் ஸ்டைலில் படம் எடுக்க வேண்டும்மா என்ன ???? சகுனி ஆந்திரா மக்களை குறி வைத்து எடுக்க பட்ட படம் போல் தான் எனக்கு தெரிகிறது. ஆனால் கொடுமை என்னவென்றால் "சகுனி" இந்த ஊர் மக்களுக்கும் சுத்தமாய் பிடிக்கவில்லை. ஆந்திரா மக்கள் டேஸ்டக்கே படம் சரி இல்லை என்று சொன்னால், ரசனையில் பல மடங்கு உயர்தவர்கலான தமிழ் மக்களும் மட்டும் படம் பிடித்து விடுமா என்ன ???? படம் சுர (சுறாவை விட) மொக்கை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி "ராஜபாட்டை" என்கிற உலக சினிமாவை 30 நிமிஷம் பார்த்தேன். அது தான் நான் பார்த்துததிலே மொக்கை படம் என்று எண்ணி இருந்தேன், இந்த படம் அதை முறியடித்து விட்டது.
படத்தோட கதை "தூள்" படத்தின் கதையை போன்றது. தூள் படத்தில் பாக்டரி கழிவு நீர் பிரச்சனைகாக விக்ரம் மந்திரியை பார்க்க சென்னை வருவார். அங்கு ஏற்படும் பிரச்சனைகள் சமாளித்து தன்னை ஏமாற்றிய மந்திரிக்கு பாடம் புகட்டுவார். தூள் படத்தில் அக்ஷ்ன், காமெடி, செண்டிமெண்ட் அனைத்தும் சரியான கலவையில் இருக்கும். படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. விக்ரம் பண்ணுவதில் லாஜிக் இடித்தாலும் நமக்கு எரிச்சல் வராது. சகுனி படமும் அதே போல் தான். ரயில்வே சப்வே கட்ட வேண்டி கார்த்திக் குடியிருக்கும் பெரிய வீட்டை முன்று மாதத்தில் இடிக்க நோட்டீஸ் குடுத்து விடுகிறார்கள் ரயில்வே ஆட்கள். தன் வீட்டை காப்பாற்ற வேண்டி சென்னை வரும் கார்த்தி தன்னை அரசாங்கமே ஏமாற்றுவதை உணர்கிறார். அதனால் தன்னை ஏமாற்றிய அரசாங்கத்தையே மாற்ற துணிந்து எடுக்கும் சகுனி தனமான முயற்சியே "சகுனி" படத்தின் கதை. ஏனோ தெரியவில்லை கார்த்திக் செய்யும் சகுனி தனமான வேலைகள் பார்க்கும் நமக்கு எரிச்சல் தான் ஏற்படுகிறது. கார்த்தி இன்னும் வளர வேண்டும் என்று நினைக்கிறன். சில நேரங்களில் அவர் காமெடி பண்ணுகிறாரா இல்லை சீரியஸ்யாக பேசுகிறாரா என்றே எனக்கு புரியவில்லை. தான் எப்படி நடித்தாலும் மக்கள் ஏற்று கொள்ளவார்கள் என்ற எண்ணமாய் கூட இருக்கலாம். கடைசி முன்று மெகா ஹிட் கூட காரணமாய் இருக்கலாம்.
படத்தின் ஒரே ஆறுதல் சந்தானம் தான். சும்மா சொல்ல கூடாது அவரின் கவுன்ட்டர் கமெண்ட்ஸ் வாய்ப்பே இல்லை. கார்த்திக் கதை சொல்லும் போது தியேட்டரில் ஆடியன்ஸ் குடுக்க வேண்டிய கமெண்டை எல்லாம் சந்தானமே குடுத்து நமக்கு வேலை இல்லாமல் செய்து விடுகிறார். ஆடியன்ஸ் லொள்ளு சபா பார்ப்பது போல் 20 நிமிஷத்துக்கு ஒரு வாட்டி பாட்டு பாட்டு என்று சத்தம் போடுவார்கள். சரியாய் ஒரு பாட்டு வரும், கொஞ்சம் நேரம் கழித்து செண்டிமெண்ட் செண்டிமெண்ட் என்று கேட்டால் உடனே செண்டிமெண்ட் சீன் வந்து விடும். கொஞ்சம் நேரம் கழித்து ஹீரோ வில்லனுக்கு சவால் விடும் காட்சி.. இன்னும் சரியாக சொன்னால் சகுனி படத்தை லொள்ளு சபாவில் கொஞ்சம் கூட மாற்றம் செய்யாமல் அப்படியே போட்டு விடலாம். அப்பேர்ப்பட்ட படம் இது.
இட்லி கடை வைத்து இருக்கும் ராதிகா சென்னை மாநகர் மேயர் ஆவது, ராமதாஸ்/ டி.யார் / சீமான் போன்ற ஒரு அரசியல் தலீவர் சி.எம் ஆவது போன்ற காட்சிகள் படத்தின் தரத்தை உங்களுக்கு பறை சாற்றுகிறது. படத்தில் ஹீரோயின் வேறு உள்ளார். பாட்டுக்கு உபயோகித்து உள்ளார் டைரக்டர். அனுஷ்கா, அண்டரியா வேறு கெஸ்ட் ரோல் செய்து உள்ளனர். பிரகாஷ்ராஜ் வழக்கம் போல் நடித்து உள்ளார். ஒரே மாதிரி கேரக்டரில் பிரகாஷ்ராஜயை பார்த்து பார்த்து எனக்கு சலிப்பு ஏற்பட்டு விட்டது. இது மாதிரியான படங்களில் நடித்து வரும் பணத்தில் தான் அவரால் நல்ல படங்களை குடுக்க முடிகிறது. இன்னும் இதே போல் பல டப்பா படங்களில் அவரை நடிக்க வேண்டுகிறேன். அப்பொழுது தான் "டூயட் மூவீஸ்" எடுக்கும் எதார்த்த படங்கள் சாதாரண ரசிகனின் பார்வைக்கு உலக சினிமா போல் தெரியும்.

மொத்தத்தில் சகுனி: பெரிய சங்கு.
டிஸ்கி: படம் நெட்டில் ரிலீஸ் ஆகி விட்டது. டோரென்ட் கிடைக்கிறது. சொந்த ரிஸ்கில் படத்தை பாருங்கள்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
யூரோ கப் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த முறை பெரிய ஷாக்கர்ஸ் எதுவும் இல்லாத அசுவாரிசியமான தொடராக இருக்கிறது. அண்டர் டாக்ஸ் யாரும் கால் இறுதிக்கு கூட வர வில்லை என்பது பெரிய குறை. ஒரு முறை கூட கோப்பையை ஜெயக்காத இங்கிலாந்து இந்த முறை வெல்ல வேண்டும் என்பதே என் எண்ணம்.யூரோ கப் வரலாற்றில் இங்கிலாந்து ஒரே முறை தான் செமி-பைனல்ஸ் வரை சென்று உள்ளது. உலகில் தலை சிறந்த வீரர்களை தனி தனியே கொண்ட இங்கிலாந்து ஒரு அணியாக ஆடும் போது படு சொதப்பலாக அமைந்து விடும். லக் சிறிதும் இல்லாத அணி என்றே சொல்லலாம். சம பலம் பொருந்திய இத்தாலி அணியுடன் இன்று கால் இறுதி ஆட்டத்தில் விளையாடுகிறது. பார்போம் என்ன நடக்கிறது என்று.
Update: 
லக் என்பது ஒரு துளி கூட இங்கிலாந்து அணிக்கு கிடையாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. பெனால்டி ஷூட் அவுட்டில் 2-1 என்று முன்னணி பெற்று, முட்டாள்தனமாக 2-4 என்று தோற்க உலகில் இங்கிலாந்து அணியால் மட்டுமே முடியும்.
இங்கிலாந்து சாக்கர் அணி= தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி..
Once again Heart Break for England Fans.....
புபான் (Buffon) மறுபடியும் தான் தான் உலகின் மிக சிறந்த கோல்-கீப்பர் என்பதை நிருபித்து விட்டார்.....
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

போட்டோ கமெண்ட்:
------------------------------------------------------------------------------------------------------------
மெக்சிகோ சலவைக்காரி ஜோக்:

மெக்ஸிகோவில் ஒரு சலவைக்காரி ஆற்றங்கரையில் துணி துவைத்துக் கொண்டிருந்தாள். அந்தப் பக்கம் போன ஆண்கள் அவளின் பின்பக்கமாக வந்து கசமுசா செய்து கொண்டு போய்க் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த அவளின் கழுதைக்கும் ஆசை வந்தது. எனவே கழுதையும் அவளை பின்பக்கமாக வந்து கசமுசா செய்தது. சிறிது நேரம் கழித்து சலவைக்காரி சொன்னாளாம்,

“அந்த ஏழாவது ஆள், மறுபடியும் வாங்க!”

இது தான் உண்மையான ஜோக்கா என்று தெரியவில்லை. நெட்டில் படித்தேன்


33 comments:

  1. photo commend அருமை .. நானும் அந்த ஜோக் படித்தேன் ... இந்த ஜோக்ஐ சுஜாத்தா அடிகடி பாதி சொல்லி மீதி சொல்லாமல் விடுவார் தனது கதைகளில்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜா..
      கண்டிப்பாய் நான் மேலே சொன்னது சுஜாதாவின் ஜோக்காய் இருக்காது.....ஏன் என்றால் இதில் நான்-வெஜ் ஜாஸ்தி....சுஜாதாவின் ஜோக்குகள் இவ்வளவு ராவாக இருக்காது..
      வருகைக்கு மிக்க நன்றி பாஸ்

      Delete
  2. என்ன ராஜ் ரொம்ப நாளாச்சு பதிவு எழுதி....ரொம்ப பிஸியா?

    சகுனி விமர்சனம் நல்லாருக்கு.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே..
      சிறிது நாட்கள் நான் ஊரில் இல்லை.. அதுவும் இல்லாமல் ஆபீஸில் கொஞ்சம் வேலை ஜாஸ்தி..அதனால் தான் பதிவு போட முடியவில்லை..இனி அடிக்கடி பதிவு போட முயற்சி செய்கிறேன்..

      Delete
  3. // படத்தோட கதை "தூள்" படத்தின் கதையை போன்றது,
    சில நேரங்களில் அவர் காமெடி பன்னுகிறாரா இல்லை சீரியஸ்யாக பேசுகிறாரா என்றே எனக்கு புரியவில்லை.
    படத்தின் ஒரே ஆறுதல் சந்தானம் தான்

    சேம் பின்ச் :-)

    பி.கு: சகுனி மாதிரியான பட்ங்களுக்கெல்லாம் விமர்சனம் எழுதி டைம் வேஸ்ட் பண்ணாதீங்க நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. அப்படி இல்லை நண்பரே.. ஏதோ நம்மால் முடிந்த பொது சேவை.. என்னை போல் யாரும் போய் ஏமாற கூடாது என்ற எண்ணமே இந்த பதிவு

      Delete
  4. ஆந்திர மக்களின் ரசனை பற்றிய அனாலிசிஸ் அருமையாக இருந்தது... மற்றபடி சகுனியை ராஜபாட்டை அளவிற்கு மட்டம் தட்டுவது டூ மச்... உண்மையான மெக்சிகோ சலவைக்காரி ஜோக் இதுதான்... உங்களுடைய பின்னூட்டப்பெட்டி கிடைப்பது ரயிலில் தட்கல் டிக்கெட் கிடைப்பது போல இருக்கிறது... தயவு செய்து பின்னூட்டபெட்டியின் ஸ்டைலை மாற்றவும்...

    ReplyDelete
    Replies
    1. மாற்றி விடுகிறேன் பிரபா..
      நான் எனது கமெண்ட் பெட்டியை பதிவுடன் அட்டாச் (Embedded) செய்து உள்ளேன்..உங்களை போல் தனியாக வைக்க வில்லை.. அதனால் தான் உங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது....மாற்றி விடுகிறேன்

      Delete
  5. சகுனி - ஒய் பிளட் - சேம் பிளட் :( உண்மையிலேயே மிடியல..

    மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் இதுதான் #நான் வாசித்த வரையிலும்

    ReplyDelete
  6. இப்போல்லாம் லொள்ளு சபா வராதது இவர்கள் அதிர்ஷ்டமே... வந்திருந்தால் இந்தப்படத்தையெல்லாம் விட்டு விளையாடி இருப்பார்கள் :))

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் பாஸ்..
      லொள்ளு சபா இல்லாத குறையை சகுனி மாதிரி படங்கள் தீர்க்கிறது

      Delete
  7. மெக்சிகோ தேசத்து சலவைக்காரி ஜோக் என ஒன்று கிடையாது.
    அது ஒரு மித்.
    நாம் படிக்கும் நல்ல ஜோக்குகள் மெக்சிகோ சலவைகாரி ஜோக்கை ஞாபகப்படுத்தினால்...அதுதான் சுஜாதாவின் சலவைக்காரி ஜோக்.
    வாசகனிடம் அவர் இந்த விளையாட்டை தொடர்ந்து நடத்தினார்.
    இன்றும் இந்த ஜோக் பற்றி விவாதிக்கிறோம்.
    அதுதான் அந்த மகானின் வெற்றி.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ரசிகரே...
      அவர் சொல்லாமல் போனதாலே அந்த ஜோக் இன்னும் பிரபலமாக உள்ளது.....
      சுஜாதா ஒரு ஜீனியஸ்....சந்தேகமே இல்லை..

      Delete
  8. விஜய்க்கு ஒரு சுறா
    விக்ரமுக்கு ஒரு ராஜபாட்டை
    கார்த்திக்கு ஒரு சகுனி
    அஜித்துக்கு ஒரு பில்லா 2 ?

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பில்லா-2 இந்த அளவுக்கு மோசமா இருக்காது பாஸ்..
      மினிமம் உத்திரவாதம் கண்டிப்பாய் இருக்கும் என்று நான் நம்புகிறேன்..பார்போம் எப்படி இருக்கிறது என்று..

      Delete
  9. சகுனி....சத்தமே இல்லாத சனி ஆயிடுச்சு//

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அப்படி தான் தோன்றுகிறது...

      Delete
  10. //விஜய்க்கு ஒரு சுறா
    விக்ரமுக்கு ஒரு ராஜபாட்டை
    கார்த்திக்கு ஒரு சகுனி
    அஜித்துக்கு ஒரு பில்லா 2 ?//
    ரஜினிக்கு கோச்சடையான் உள்பட இனி வரும் படங்கள் அனைத்தும்..

    ReplyDelete
  11. சகுனி.. தியேட்டர் பக்கம் எட்டியும் பார்க்க வேணாம்னே தோணுது.. ஹைதராபாத்தின் சினிமா ரசனை பத்தி நீங்க சொன்ன விதம் ரொம்பவே ரசிக்க வைச்சுது!
    இப்படி அடிக்கடி வார்னிங் கொடுத்தீங்கன்னா நாம பல மொக்கைகளிலிருந்து தப்பிச்சுடலாம்!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா JZ..அடிக்கடி வார்னிங் குடுக்கிறேன்..

      Delete
  12. இன்னும் படம் பார்க்கல நண்பா..ஆனால் மொக்கைனு நீங்க சொல்லி நம்ப முடியுது..ஏனா நிறைய பேர் அதைதான் சொல்றாங்க.
    விமர்சனம் தூள் கிளப்புது..ஆங்காங்கே ஹைதராபாத் ரசிகர்களின் ரசனையை தூவி விட்டதில் சுவாரஸ்யம்..தொடருங்கள் நண்பா..நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி குமரன்...நீங்க பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சுன்னு நினைக்குறேன்..அடிக்கடி எழுதுங்க..

      Delete
  13. Replies
    1. ரொம்ப நன்றி தனபாலன் சார்...

      Delete
  14. // ஆந்திரா மக்கள் டேஸ்டக்கே படம் சரி இல்லை என்று சொன்னால், ரசனையில் பல மடங்கு உயர்தவர்கலான தமிழ் மக்களும் மட்டும் படம் பிடித்து விடுமா என்ன ????// ஹா ஹா ஹா நான் நினைத்தேன் நீங்க சொல்லிட்டீங்க

    //கதை "தூள்" படத்தின் கதையை போன்றது. // அட ஆமா

    சகுனி படத்துக்கு போயிட்டு நல்ல தூக்கம் தான் வந்தது நண்பா. சுத்த வேஸ்ட்.

    //மெக்சிகோ சலவைக்காரி ஜோக்:// இதன் தாக்கம் உங்களையும் விட்டு வைக்க வில்லையா....

    இது போன்ற பல மெக்சிகோ சலவைக்காரி ஜோக்குகளைப் படித்து விட்டு சுஜாதா சொன்னாரம் நல்ல வேலை இவை எல்லாம் பரவாயில்லை என்று....


    சூப்பர் பதிவு....

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு
      //இது போன்ற பல மெக்சிகோ சலவைக்காரி ஜோக்குகளைப் படித்து விட்டு சுஜாதா சொன்னாரம் நல்ல வேலை இவை எல்லாம் பரவாயில்லை என்று....///
      ஆனா கடைசி வரைக்கும் அவர் அந்த ஜோக்கை சொன்னதே இல்ல...

      Delete
  15. நேற்று தான் சங்கு சகுனி பார்த்தேன் என்ன தான் ஏற்கனவே பார்த்த கேட்ட மொக்க கதை என்றால்லும் நல்லா சந்தானம் ஜோக் ஜாலியா போனது....படம் பல இடங்களில் கடுப்பு ஏற்றுது....படத்தில் மட்டும் தான் அவங்க என்ன நினைகின்றனரோ அது அப்படியே நடந்து விடும்....நாசர் பேசாமல் இரு சொல்லுவாராம் பெரிய சாமியாராய் மாறிவிடுவாராம் என்ன கொடுமை இது....கொடுமை செய்த ராதிகா ஆட்கள் கரண்ட் பில் கட்டியதும் ஓட்டு போட்டு விடுவாங்களாம்........

    ReplyDelete
    Replies
    1. நன்றி தல...இந்த படத்துக்கு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு டிக்கெட் புக் பண்ணுனேன்..படம் ரொம்ப மொக்கையா இருந்ததால வந்த கோபம் தான இந்த பதிவு...
      அடிக்கடி வாங்க....

      Delete
    2. இனி வராமல் இருப்பேனா ஏற்கனவே வந்து கொண்டு தான் உள்ளேன் நண்பா என்ன கமெண்ட் தான் போட முடியவில்லை...

      Delete
  16. லொள்ளு சபா பார்க்க சுவாரசியமா இருக்குமே .......

    ReplyDelete
  17. ..antha mexico salavaikaari joke athaan paa..............

    ReplyDelete
  18. //////ஹீரோயின் தொடையை தட்டி டூயட் பட வேண்டும்/////
    சம நக்கல் ராஜ் உங்க எழுத்துல......
    மொக்கை படம் என்றாலும் உங்கள் விமர்சனம் படிப்தற்கு நகைச்சுவை கலந்து நன்றாக இருந்தது.

    ReplyDelete
  19. good post. nice to read.
    shyam sundar

    ReplyDelete