Friday, January 10, 2014

வீரம் (2014) - பக்கா செண்டிமெண்ட் அக்ஷன் பேக்கேஜ் !!

ஜில்லா முடித்த கையோடு வீரம் ஹாலில் நுழைந்தோம். ஜில்லா ஹேங்ஓவரில் இருந்து வெளி வந்து வீரத்தில் நுழைய சிறது நேரம் பிடித்தது என்னவோ உண்மை தான். ஆனால் லா லா லா இயக்குனர் விக்ரமன், மாற்றும் அக்ஷன் இயக்குனர் தரணி படத்தை ஒரே மூச்சில் பார்த்த அனுபவத்தை வழங்கியது வீரம். சாதாரன கதையை, சாரி கதையே இல்லாமல் கூட படத்தை பக்கா திரைக்கதை மூலம் சுவாரிசியமாய் குடுக்க முடியும் என்று நிருபித்து இருக்கிறார் இயக்குனர் சிறுத்தை சிவா.


கல்யாணமே வேண்டாம் என்று தன் தம்பிகளுடன் வாழும் விநாயகம் காதலில் விழுந்து அதில் ஜெயிப்பது தான் படத்தின் ஒன் லைனர். விநாயகம் (அஜித்) ஒட்டன்சத்திரம் மார்க்கட்டில் தன் நான்கு தம்பிகளுடன் வியாபாரம் செய்து வருகிறார். கல்யாணமே வேண்டாம் என்று வைராக்கியமாய் வாழ்ந்து வருகிறார். கல்யாணம் ஆகி பெண் ஒருத்தி வீடிற்குள் வந்தால் தம்பிகள் ஒற்றுமை குலைந்துவிடும் என்று நம்புகிறார். அதனால் தானும் கல்யாணம் பண்ண கூடாது, தன் தம்பிகளும் கல்யாணம் பண்ண கூடாது என்கிற எண்ணத்தில் உறுதியாய் இருக்கிறார். ஆனால் விநாயகத்தின் இரண்டு தம்பிகள் காதலில் விழ, அவர்கள் எப்படியாவது  விநாயகத்தின் மனதில் காதலை விதைத்து விட முயற்சி மேற்கொள்ளகிறார்கள். அதன் படி கோப்பெரும்தேவியை (தமன்னா) விநாயகத்துடன் முடிச்சு போட ப்ளான் செய்கிறார்கள்.

இவர்கள் காதல் சந்திக்கும் பிரச்சினை என்ன, அந்த பிரச்சனைகளில் இருந்து எப்படி விடுபட்டு ஒன்று சேர்ந்தார்கள் என்பதை செண்டிமெண்ட் மற்றும் அக்ஷன் காட்சிகளை சரியான விகிதத்தில் கலந்து கட்டி அடித்து உள்ளார் இயக்குனர். சால்ட் பெப்பர் லுக்கில் வெள்ளை வேஷ்டி சட்டையில் தன் நடையை (எடையை அல்ல) குறைத்து அசத்தி உள்ளார் அஜித். அக்ஷன் காட்சிகளில் அனல் பறக்கும் அளவுக்கு கோபத்தை காமித்து உள்ளார். ரிஸ்க் எடுத்து ட்ரைன் சண்டை காட்சியில் உயிரை துச்சமென மதித்து நடித்து உள்ளார். நடன புயல் பாக்கியராஜ், அளவுக்கு வர வில்லை என்றாலும், தன்னாலும் ஈடு குடுத்து டான்ஸ் ஆட முடியும் என்று நிருபித்து உள்ளார். முந்திய அஜித் படங்களில் டுயட் பாடல்கள் இல்லாமல் இருந்து பெரிய ஆறுதலாக இருந்தது. இதில் அஜித் ஆடும் நடனங்களில் இருந்து யாரும் தப்ப முடியாது. 


படத்தை ஒற்றை தூண் போல் தாங்குவதும் அஜித் தான். தமன்னாவுக்கு மாஸ் படங்களில் வரும் வழக்கமான கதாநாயகி போல் இல்லாமல் கொஞ்சமே கொஞ்சம் வெயிடான் ரோல். இவரை சுற்றி தான் மையின் கதை (!?) பின்ன பட்டு இருக்கும். இணையத்தில் அஜித் - தமன்னா ஸ்டில்ஸ் போட்டு அபியும் நானும் - 2 என்று  கலாய்த்து இருந்தார்கள். அந்த அளவுக்கு மோசம் இல்லை என்றாலும் அஜித் - தமன்னா ஜோடி கொஞ்சம் உறுத்தவே செய்கிறது. 

படத்தின் மிக பெரிய பலம் முதல் பாதி சந்தானம் மற்றும் இரண்டாம் பாதி ராமையா தான். சந்தானம் மற்றும் அஜித்தின் தம்பிகள் பண்ணும் அளப்பறைக்கு தியேட்டரே அதிருகிறது.  வெகு நாட்கள்கழித்து சிரித்து மகிழ்ந்தது இதில் வரும் காமெடி எபிசோடுக்கு தான். இரண்டாம் பாதி லா லா லா செண்டிமெண்ட்க்கு நாசர் குடும்பம். இவர்கள் பண்ணும் செண்டிமெண்ட் டிராமா எரிச்சலை கூட்ட வில்ல என்பது பெரிய ஆறுதல். அஜித் எதன்னை பேரை வெட்டினார் என்பதை எண்ணுவது சிரமம். ஆனால் மருந்துக்கு கூட போலீஸ் வர வில்லை. 


இரண்டு வில்லன்கள். இருவருமே நன்றாக செய்து உள்ளார்கள். ஆனால் தெலுங்கு வாடை ஜாஸ்தி. தேவி ஸ்ரீ பிரசாத்தை இனிமேல் பிண்ணனி இசையமைக்க மட்டும் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். பாடல்கள் எதுவுமே மனதில் தங்க வில்லை. பிண்ணனி இசை தான் டெம்போவை குறைக்காமல் கதையை நகர்த்துகிறது. டூயட் பாடல்களை முன்று நிமிடங்களுக்கும் குறைவாக வைத்ததும் பெரிய ஆறுதல். அஜித்குமார் படம் எல்லாம் குடும்பத்தோட பார்த்து எத்தனை காலம் என்று, பெருமூச்சு விடுபவர்கள் எல்லோருக்கும் பதில் சொல்லியிருக்கிறது இந்த திரைப்படம். எண்பதுகளில் வந்த முரட்டுகாளை படம் போல் ரொம்ப சாதாரண கதையில் அக்ஷன், செண்டிமெண்ட், காமெடி ரொமான்ஸ் என்று எல்லா வஸ்துகளையும் சரியான விகிதத்தில் கலந்து கட்டி ஜெயித்து இருக்கிறார் இயக்குனர்.

வீரம்  - பக்கா செண்டிமெண்ட் அக்ஷன் பேக்கேஜ்.

My Rating: 7.8/10.


14 comments:

 1. ஹாய் ராஜ், அருமையான விமர்சனம். தல இப்போ சரியான ரூட்ல போய்கிட்டு இருக்கார்னு சொல்லுங்க.

  ReplyDelete
  Replies
  1. நன்றி பிரசாத். அனுபவமிக்க டைரக்டர், தனக்கு தெரிந்ததை/வருவதை சரியாக செய்வது, தனி மனித துதி இல்லாமல் இருப்பது என்று தன் ரூட்டில் மிக சரியாக போய் கொண்டு இருக்கிறார் அஜித். :-)

   Delete
 2. பக்கா கமர்ஸியல் பேக்கேஜ்.... நடனப்புயல் பாக்யராஜ்....!!!!???? சிறப்பான பதிவு..

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பா...தமிழ் சினிமாவை புரட்டி போட வந்த படம் எல்லாம் கிடையாது. காசு குடுத்து போனவர்களை நன்றாக திருப்தி படுத்தி அனுப்பி உள்ளார் இயக்குனர்...அந்த விதத்தில் பார்த்தல் இது வெற்றி படம் தான்.....

   Delete
 3. ஆந்திர மசாலாவை குறைத்திருக்கலாம் என்று தோன்றியது

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் தல....நாங்க சைலென்ட் தியேட்டர்ல பார்த்தோம்....நீங்க நல்ல கூட்டமான தியேட்டர்ல பார்த்து இருக்கீங்க போல... :-)

   Delete
 4. Same thoughts raj.Dance was worse.and 2nd half could have been trimmed little.other than than pacca entertainer. As a thala fan it completely satisfied me.and my throat pain shows that.

  ReplyDelete
 5. அட போங்க பாஸ்... ஜில்லாவும் வீரமும் ஒரே ரக மொக்கைகள்தான். வீரம் இடைவேளை வரைக்கும் அறுவையோ அறுவை. ஒருவேளை அஜித் ரசிகர்களுக்கு பிடிச்சிருக்கலாம். மற்றும்படி படம் செம மொக்கை.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. நடுநிலையான விமர்சனம், எப்பவும் போல விமர்சனம் சூப்பர் பாஸ். வீரமும் கொஞ்சம் மொக்க தானு சொல்றாங்க. நீங்களே சொல்லுங்க ? வீரம்.. பாக்கலாமா.. வேணாமா ?

  ReplyDelete
 8. படம் அவ்வளவ்வா பிடிக்கலை கொஞ்சம் மொக்கை தான் அஜித் வரும் காட்சிகள் தான் செம்ம...

  ReplyDelete
 9. வீரம் நிச்சயம் நல்ல வெற்றி படமாகவும் அஜித்தை பி & சி ரசிகர்களிடம் நல்லவிதமாகவும் கொண்டு சேர்க்கும் தல

  ReplyDelete
 10. அண்ணா,
  கொஞ்சம் சென்டிமெண்ட் காட்சிகளையும், டூயட் பாடல்களையும் கம்மி பண்ணிருந்தா இன்னும் பர்ஃபெக்ட் என்டெர்டெயினரா வந்திருக்கும். ரொம்ப நாள் கழிச்சி குடும்பத்தோட பாக்கற மாதிரியான அஜித் படம். :)

  ReplyDelete