Friday, December 20, 2013

பிரியாணி (2013) - செம டேஸ்ட் மா !!

சான்டியாகோவில் ரீலீஸ் ஆகும் அணைத்து தமிழ் படங்களையும் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்ற கொள்கையின் படி இன்று இரவு "பிரியாணி" படத்துக்கு சென்றோம். கார்த்திக்கின் முந்திய படங்களினால் ஏகத்துக்கும் பல்பு வாங்கி இருந்த காரணத்தால் பிரியாணியை ஸ்கிப் செய்து விடலாம் என்று தான் முடிவு செய்து இருந்தேன். இருந்தாலும் வெங்கட் பிரபுவின் இயக்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து தான் படத்துக்கு சென்றோம். கோவா தவிர்த்து வெங்கட்டின் அணைத்து படங்களும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. வெங்கட் பிரபு வழக்கம் போல் எங்களை ஏமாற்ற வில்லை. பிரியாணியை மிகுந்த சுவையுடன் பரிமாறி, வயறு நிறைய திருப்தியுடன் எங்களை திருப்பி அனுப்பி உள்ளார். வெங்கட் ஸ்டைலில் நல்ல சஸ்பென்ஸ் படம் பார்த்த திருப்தி கிட்டியது.


சுகன் (கார்த்திக்) மற்றும் பிரேம்ஜி சிறு வயது நண்பர்கள். தற்சமயம் ஒரே கம்பெனியில் வேலை செய்கிறார்கள். கார்த்திக்கின் காதலி ஹன்சிகா. வீக் எண்ட்டில் பப்பு, பார்ட்டி என்று வாழ்க்கையை கொண்டாடி மகிழ்கிறார்கள். இந்தியாவின் பெரிய பணக்காரர் நாசர். கிரானைட் முறைகேட்டில் சிபிஐ அவரை கைது செய்ய துடிக்கிறது. பிளே பாய் வாழ்க்கையை வாழும் கார்த்திக்கிற்கு ஒரு கெட்ட பழக்கம். பார்ட்டியில் தண்ணி அடித்துவிட்டால் வயிறு முட்ட பிரியாணி சாப்பிட வேண்டும். ஆம்பூரில் தண்ணி பார்ட்டிக்கு போகும் கார்த்திக் பிரேம்ஜி கூட்டணி பிரியாணி சாப்பிட அலைகிறார்கள். பிரியாணி சாப்பிடும் இடத்தில அழகிய (!) பெண் ஒருத்தியை பார்த்து அவள் பின்னால் போகிறர்கள். ரீசர்ட்டுக்கு போகும் அவர்கள் அங்கு குடித்து விட்டு மட்டை ஆகிறார்கள். 

முழித்து பார்க்கும் போது தான் தாங்கள் பெரிய பிரச்சினையில் மாட்டி இருப்பது தெரியவருகிறது. அதுவும் யாரோ இவர்களை ப்ளான் செய்து மாட்டி விட வைத்து இருப்பதும் தெரிய வருகிறது. அது என்ன பிரச்சனை, இவர்களை மாட்டி விட நினைப்பது யார், அந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டார்கள் என்பதை வெங்கட் பிரபு சரோஜா பாணியில் சொல்லி இருக்கிறார். முதல் பாதியில் நடைபெறும் சிறு சிறு சம்பவங்களை கூட இரண்டாம் பாதியில் மையின் சஸ்பென்ஸுடன் முடிச்சு போட்டு மிக அழகாய் அவித்து இருக்கிறார் இயக்குனர். முதல் பாதி ஜாலி பட்டாசு என்றால் இரண்டாம் பாதி நிற்காமல் வெடிக்கும் சரவெடி. 


கார்த்திக்கின் ஈவாய் சிரிப்பு, ஸ்டைல் என்று நினைத்து தலைசாய்ந்து நடக்கும் கோண நடை, கிண்டல் பேச்சு போன்ற கிளிசேக் மேனரிசம் எதுவும் இந்த படத்தில் இல்லை. மிகவும் சீரியஸாக நடித்து இருக்கிறார். பிளே பாய் கதாபாத்திரத்துக்கு நன்றாக பொருந்தி வருகிறார். அக்ஷன் காட்சிகளில் செமையாய் ஸ்கோர் செய்கிறார். பிரேம்ஜியை இவர் கலாய்ச்சு எடுக்கும் காட்சிகள் அனைத்துமே அருமை. ஹன்சிகாவிடம் பிரியாணி கடையில் நடந்த சம்பவங்களை விவரிக்கும் காட்சிகள் சிரிப்பு வெடி. ஹன்சிகா தனது பணியை கச்சிதமாக செய்து இருக்கிறார். ஒரு கவர்ச்சி (!) பாட்டு, ஹீரோ பின்னால் வர ஒரு பாட்டு என்று தன் வேலையை குறை சொல்ல முடியாத படி செய்து இருக்கிறார்.

பிரேம்ஜி பற்றி என்ன சொல்ல. அவரிடம் ஆஸ்கார் நடிப்பை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆரம்பத்திலே "என்ன கொடுமை சார் இது", அளவுக்கு தான் நடிக்க முடியும் என்று மிக தெரிவாக சொல்லி விட்டார்கள். நீண்ட நாட்கள் கழித்து ராம்கி, நல்ல ரோல். வயது கூடினது போல் தெரியவில்லை. செந்துரபூவே படத்தில் பார்த்தது போலே இருக்கிறார். 90's அக்ஷன் ஹீரோவான் ராம்கிக்கு கிளைமாக்ஸ் சண்டைகாட்சியில் இன்னும் நல்ல ஸ்கோப் உள்ள அக்ஷன் பிளாக் வைத்து இருக்கலாம். நசார் வழக்கம் போல் தன் பங்கை மிக சிறப்பாய் செய்து இருக்கிறார். உமா ரியாஸ் சப்ரைஸ் பேக்கேஜ். காண்ட்ராக்ட் கில்லர் ரோலில் நன்றாக மிரட்டி உள்ளார். மௌன குரு படத்திருக்கு பிறகு நல்ல ரோல்.


சம்பத் மற்றும் ஜெயப்ரகாஷ் வீணடிக்க பட்டு விட்டார்கள். ஜெயப்ரகாஷ் கதாபாத்திரதால் கதைக்கு பெரிய யூஸ் எதுவும் இல்லை. போலீஸ் கேரக்டர் ஒன்று வேண்டும் என்பதால் அவரை நுழைத்து இருக்கிறார் என்று நினைக்கிறன். முந்திய வெங்கட் படத்தில் வந்த  ஜெய், வைபவ், அரவிந்த் ஆகாஷ் என்று அனைவரும் படத்தில் ஒரு காட்சியிலாவது தலை காட்டி விடுகிறார்கள். ரசிகர்கள் பல்ஸ் பார்த்து காட்சி வைப்பதில் வெங்கட் கில்லாடி. யார் யாருக்கு என்ன என்ன டயலாக் குடுத்தால் எடுபடும் என்று நன்றாக் தெரிந்து வைத்து இருக்கிறார். அதனால் தான் பிரேம்ஜி போன்ற நடிகர்கள் வைத்து தொடர்ச்சியாய் ஹிட் குடுக்க முடியாது. யுவனின் 100 படம் இது. இசை ஓகே, பின்னணி இசை எனக்கு ஏமாற்றமே. இன்னும் உழைத்து இருக்கலாம் யுவன். வெங்கட்டின் ஆஸ்தான் ஒளிபதிவாளர் சக்தி சரவணன், சேஸ்ஸிங் காட்சிகளில் கேமரா விளையாடி உள்ளது. கெஸ்ட் ரோலில் அஜித் வேறு இருக்கிறார் என்று யாரோ புண்ணியவான் விக்கிபீடியாவில் அப்டேட் செய்து இருந்தார்கள். அது மாதிரி எல்லாம் எதுவும் இல்லை. வெங்கட் பிரபுவின் சரோஜா படம் உங்களுக்கு பிடித்தது என்றால் நீங்கள் தவற விட கூடாத "பிரியாணி".

பிரியாணி - செம டேஸ்ட் மா 
My Rating: 8.0/10.
சமிபத்தில் எழுதியது : இவன் வேற மாதிரி (2013)


25 comments:

  1. பாஸ் நீங்க சொன்னதுக்காகவே படம் பாக்கலாம் போல இருக்கு. வெங்கட் பிரபுவோட எல்லாம் படமும் பிடிச்சிருந்தது, ஆனா இந்த படத்துக்கு போகலாமா வேணாமானு ஒரே குழப்பம்....காரணம் கார்த்தி தான். வழக்கம் போல அருமையான விமர்சனம். கலக்குங்க.......தூம் 3 எப்போ விமர்சனம் போட போறீங்க....!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நண்பா...தூம் 3 இந்த வார வீக் எண்டு ப்ளான். படம் பார்த்தவுடன் எழுதுறேன் பாஸ்.
      வெங்கடோட ஸ்டைல் உங்களுக்கு பிடிக்கும் என்றால் கண்டிப்பா பாருங்க.. சஸ்பென்ஸ் தெரியாம பார்க்கணும்... :-)

      Delete
  2. சார் உங்க விமர்சனத்தை காப்பி பண்ணி என்னுடைய பேஸ்புக் டைம்லைன்ல போட்டு இருக்கேன். உங்க பிளாக் நேமோட. உங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இருந்தா சொல் லுங்கி நீக்கிர்றேன்

    ReplyDelete
    Replies
    1. ஒன்னும் பிரச்சனை இல்ல சார்... இங்கிருந்து எத வேணா ஷேர் பண்ணுங்க..என்னோட பேரு கூட போடணுமுன்னு அவசியம் கிடையாது சார்... :-)
      உங்க வருகைக்கு மிக்க நன்றி...

      Delete
  3. படம் முழுக்க கலர்ஃபுல்லாக தெரிய வைப்பதில் வெங்கட் பிரபுவை மிஞ்ச முடியாது..சூப்பர் விமர்சனம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி செங்கோவி.. உங்க விமர்சனம் மேலோட்டமா படிச்ச அப்புறம் தான் நம்பிக்கையே வந்துச்சு... சிங்கப்பூர் இல்லாட்டி துபாய்ல இருந்து தான் முத விமர்சனம் வரும்...இந்த முறை உங்ககிட்ட இருந்து பாசிடிவ் ரிவியூ..ஓடனே கிளம்பிட்டோம்... :-)

      Delete
  4. விமர்சசனம் சூப்பர் பார்த்துற வேண்டி தான்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி சக்கர கட்டி....கண்டிப்பா பாருங்க...உங்களுக்கு பிடிக்கும்..

      Delete
  5. ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு தமிழ் படம் சூப்பர்ன்னு சொல்லிருக்கீங்க தல... நீங்க பாயின்ட்ட தான் செங்கோவி கூட அவர் விமர்சனத்துல சொல்லிருக்காரு.. எனக்கு சரோஜா பிடிக்கும்.. நிச்சயம் பார்க்கணும்

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா பார்த்திட்டு உங்க ஸ்டைல்ல ஒரு விமர்சனம் எழுதுங்க தல... :-)

      Delete
  6. //கார்த்திக்கின் ஈவாய் சிரிப்பு, ஸ்டைல் என்று நினைத்து தலைசாய்ந்து நடக்கும் கோண நடை, கிண்டல் பேச்சு போன்ற கிளிசேக் மேனரிசம் எதுவும் இந்த படத்தில் இல்லை. ///

    இல்லையே ஈவாய் சிரிப்பு இருக்கே

    ReplyDelete
    Replies
    1. வாங்க தமிழ்...பிளே பாய் கேரக்டருக்கு ஓகேன்னு நினைக்கிறன்.முந்திய கார்த்தி படங்களில் சீரியஸ் காட்சிகளில் கூட ஈவாய் சிரிப்பு சிரிச்சு நம்மளை கொல்லுவார்..இதில் அது போன்ற காட்சிகள் இல்லாதது மிக பெரிய ஆறுதல்..

      Delete
  7. அண்ணா,

    படம் பாத்துட்டு வந்த ஃப்ரண்ட்செல்லாம் அது பிரியாணி இல்ல குஸ்கா, பழைய பிரியாணி ஊசிப்போச்சுனு கலாய்ச்சிட்டு இருக்காங்க. நீங்க இப்டி சொல்லுறீங்க. ஆனா வெங்கட்பிரபுவோட எல்லா படமும்(இன்க்ளூடிங் கோவா) எனக்குப் பிடிக்கும். அதனால இப்போ ரொம்ப கொழப்பமா இருக்கு ? போலாமா வேணாமானு.. நாளைக்குதான் போறதா இருந்துச்சி.. பாக்கலாம்..!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல...
      நிறைய ஹாலிவுட் படம் பாக்கிறவங்களுக்கு வெங்கட் பிரபு படம் பிடிக்காது..வெங்கட் படத்துல இருக்கிற மாதிரி இதுலையும் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கு..அதனால் அவங்களுக்கு பிடிக்காமல் போகலாம்.
      கொஞ்ச சீன்ஸ் ஹங்ஓவர் படத்துல இருந்து சுட்டு இருப்பாங்க...ஆனா அதை பத்தி நீங்க கமெண்ட் பண்ண வாய்ப்பே தராமல் அவங்களே அவங்களை ஒட்டிக்குவாங்க, அது தான் வெங்கட் ஸ்டைல். படம் முழுக்க இது மாதிரியான நிறைய காட்சிகள் வரும்.. ஜெய் இன்ட்ரோ சீன் கூட செம கலகலப்பாய் இருக்கு..
      சஸ்பென்ஸ் தெரியாமல் போய் பாருங்க...கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்...

      Delete
  8. Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி பிரசாத்...

      Delete
  9. இரண்டாவது பகுதி சூப்பர். ஆனா முதல் பகுதி இன்னும் கொஞ்சம் க்ரிஸ்ப்பாக இருந்திருக்கலாம். ஒக்கே தான்..

    ReplyDelete
  10. I usually read the sify review..so they itself has said that the movie is below average.but to my surprise u have said that the movie is gud..

    The review is gud.will try to see.

    ReplyDelete
  11. // ரசிகர்கள் பல்ஸ் பார்த்து காட்சி வைப்பதில் வெங்கட் கில்லாடி.// கரெக்டா சொன்னீங்க பாஸ்... இப்போ உள்ள ட்ரெண்டுக்கு தகுத்த மாதிரி படம் எடுப்பதில் அவர் கில்லாடிதான்...

    ReplyDelete
  12. Christopher Nolan பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்:

    Memento, The Dark Knight, Inception, The Dark Knight Rises படங்களின் இயக்குனர் Christopher Nolan பற்றிய சில அறியாத தகவல்கள்

    (1) இவருக்கு மொபைல் எண்ணும் ஈமெயில் அக்கௌன்டும் கிடையாது

    (2) ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஒரு நிருபர் "உங்களின் படங்கள் எல்லாம் ஒரு முறை பார்த்தால் புரிவதில்லை பலமுறை பார்த்தால் மட்டும் தான் புரிகிறதே ஏன்?" என்று நோலனிடம் கேட்டார். அதற்கு நோலன் "நான் ஒரு படத்தின் கதையை உருவாக்க எனக்கு 2 வருடங்கள் ஆகிறது. அதை 2 மணி நேரத்தில் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் என்ன நியாயம்?" என்று பதில் அளித்தார். (நம்ம ஊர் இயக்குனர்கள் 2 மணி நேரத்தில் கதையை எழுதிவிட்டு அந்த மோசமான கதையை 2 வருடங்களாக படம் எடுப்பார்கள்)

    மேலும் படிக்க
    https://www.facebook.com/hollywoodmve

    ReplyDelete
  13. தல படம் எனக்கு பிடிச்சிச்சு ஆனா வெங்கட் சொன்னது போல இப்படத்துல விஜய் நடிச்சி இருந்தா இன்னும் நல்லா இருந்து இருக்கும் போல அதுவும் லாஸ்ட் 30 நிமிடங்கள் சூப்பர் ஆக இருந்தது.

    ReplyDelete
  14. ஏன்னு தெரில படம் நல்ல பொழுதுபோக்கா அமைந்தாலும் எனக்கு பிடிக்கல

    உங்கள் விமர்சனம் அருமை

    ReplyDelete
  15. எப்படியும் பார்ப்பதில்லை என்கின்ற லிஸ்ட்டில் முதலில் இருந்த படம், ஆனால் உங்க விமர்சனத்தை பார்த்த பிறகு பார்க்க வேண்டும் போல இருக்கின்றது.......

    ஆனால் ஒரு பிரச்சினை, ஹீரோட முகத்தை பார்க்காமல் படத்தை பார்க்க முடியாதே...
    வெறுப்பேற்றி வெறுப்பேற்றி நம்மை கடுப்பாக்கிய அந்தக் கண்றாவி முகத்தை எப்படி சகித்துக் கொள்வது? ஏதாவது அட்வைஸ்??

    ReplyDelete
  16. "பிரியாணி (2013) - செம டேஸ்ட் மா !! " என்றுதான் தலைப்பு போட்டு இருக்கின்றது, ஆனால் முதல் தடவை பார்த்த பொழுது "பிரியாணி (2013) - செம வேஸ்ட் மா !! " என்றுதான் கண்ணுக்கு தெரிந்தது.....

    ReplyDelete