Tuesday, November 19, 2013

வில்லா (2013) - பயமே இல்லா திகில் படம் !!

தமிழில், இல்லை இல்லை இந்தியாவிலே இது வரை வந்த திகில் பேய் படங்களிலே சிறந்தது எது என்று என்னை கேட்டால் கண்ணை முடி கொண்டு "பீட்சா" என்று சொல்வேன். ஹார்ட் பீட் எகிறும் அளவுக்கு பயத்தை விதைத்து இருப்பார்கள். அது போக கிளைமாக்ஸ் ட்விஸ்ட் யாராலும் அவ்வளவு சீக்கிரம் யூகித்து இருக்க முடியாது. ஹாலிவுடில் பீட்சா ரீமேக் செய்யபடுவதாய் கூட ஒரு செய்தி படித்தேன். அடுத்த பாகத்துக்கான அடித்தளத்துடன் தான் பீட்சா முடிக்க பட்டு இருக்கும். ப்ரம் மேக்ர்ஸ் ஆப் பீட்சா என்கிற விளம்பரத்தோடு வெளியான வில்லா பீட்சாவின் தொடர்ச்சியாய் இருக்கும் என்று தான் நம்பி இருந்தேன். ஆனால் படத்தின் முதல் ட்ரைலரில் ஒரு கதாபாத்திரம் “இது சீக்வலா ?” என்று கேட்க்கும், அதற்கு கதாநாயகன் “இல்ல, இது டோட்டலா வேற கதை” என்று சொல்லுவார். பீட்சாவின் தொடர்ச்சியாக இல்லாமல் இது புது கதைக்களம் என்று இயக்குனர் மிக தெளிவாக குறிப்பிட்டு விட்டார். அதனாலே வில்லாவை பீட்சாவுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது என்று முடிவு செய்து விட்டேன். ஆனால் "வில்லா" சராசரி திகில் படத்தின் அனுபவத்தையே எனக்கு குடுத்து ஏமாற்றி விட்டது.


கதையின் நாயகன் ஜெபின் (அசோக் செல்வன்) சாதிக்க துடிக்கும் இளம் எழுத்தாளர். அவரது அப்பா (நாசர்) கோமாவில் படுத்து இறந்து போகிறார். அப்பா இறந்தவுடன், தன் குடும்ப வக்கீல் முலம்  பாண்டிச்சேரியில் தனக்கு ஒரு வில்லா இருப்பது தெரிய வருகிறது. அதை விற்று தான் எழுதிய புத்தகத்தை பதிப்பிக்க விரும்புகிறார். அதனால் அந்த வில்லாவை விற்க தன் காதலி ஆர்த்தியை (சஞ்சிதா ஷெட்டி) கூட்டி கொண்டு பாண்டிச்சேரி செல்கிறார். அந்த வில்லாவில் சில பல ஓவியங்களை பார்க்கிறார். ஜெபின் வாழ்வில் பல வருடங்கள் முன்பு நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாய் அவ் ஓவியங்களை அவர் கண்ணுக்கு தெரிகிறது. அந்த ஓவியங்களை வரைந்தது யார் ?  ஏன் வரைந்தார்கள் ? ஓவியங்களில் வரைந்த இருந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தனவா என்கிற சுவாரசிய முடிச்சுகளை சுவாரசியம் இல்லாமல் அவிழ்ப்பது தான் மீதி கதை. 

எனர்ஜியை உருவாகவும் முடியாது, அதை அழிக்கவும் முடியாது. எல்லா வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு, என்று நாம் எப்போதோ படித்த அறிவியல் பாடங்களை வைத்து கதையை பின்னி இருக்கிறார் அறிமுக இயக்குனர் தீபன் சக்ரவர்த்தி. தன் அப்பா வரைந்த ஓவியங்களிலால் ஒருவனின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களும் திகில் முடிச்சுகளை, எப்படி அவன் எதிர்கொள்கிறான் என்பது தான் கதையின் ஆதார முடிச்சு. இதை வலுவில்லாத திரைக்கதையின் மூலம் சொல்லி சொதப்பி விட்டார். இன்னும் நிறைய பில்ட் வொர்க் பண்ணி இருந்தால் சிறப்பாய் குடுத்து இருக்கலாம்.


மணிவண்ணனின் 100 ஆவாது நாள் படத்தில் கூட, நளனி கனவில் காண்பது எல்லாம் நிஜத்தில் நடப்பது போல் கதை அமைக்க பட்டு இருக்கும். பேய், பிசாசு, பில்லி, சூனியம் என்று எந்த ஜல்லியும் அடிக்காமல், ஏன் அது போன்று நடக்கிறது என்பதருக்கு விஜயகாந்த முலம் மிக எளிமையாக விளக்கி இருப்பார் மணிவண்ணன். ராஜவின் பின்னணி இசை சாதாரண காட்சியை கூட திகில் காட்சி போன்ற தோற்றத்தை உண்டு பண்ணும். இதிலும் கனவு போன்றே எதிர்காலத்தை நடப்பதை கணிக்கும் கான்செப்ட் தான், ஆனால் நெகடிவ் எனர்ஜி, பிளாக் மேஜிக், நர பலி என்று ஏதோ ஏதோ சொல்கிறார்கள். சரி திகில் காட்சிகளாவது நன்றாக இருக்குமா என்று பார்த்தால், அதிலும் பெரிய அளவு தாக்கம் ஏற்படவில்லை.

நாயகன் அசோக், படம் முழுக்க இறுக்கமான முக தோற்றத்துடன் தான் வருகிறார். கதையின் தேவைக்கு அப்படி வருகிறாரா, இல்லை அவரின் முகமே அப்படித்தானா என்று புரிந்துகொள்ள முடியவில்லை. திகில் காட்சிகளிலும் ஒரே மாதிரியான முகபாவனைகைகள். பீட்சா விஜய் சேதுபதியுடன் கம்பேர் செய்தால் ஒன்றுமே இல்லை. நாயகி சஞ்சிதா ஷெட்டி, சூது கவ்வும் ஷாலுமா. நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை. இவரின் கதாபாத்திரத்தை பீட்சா போல் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் வைக்கிறேன் என்று சொல்லி குழப்பி கூல் ஆக்கி விட்டார் இயக்குனர்.

பின்னணி இசையில் சந்தோஷ் நாராயணன் கலக்கியிருந்தாலும் படத்தின் திரைக்கதை அவருடைய பின்னணி இசைக்கு ஈடு கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. நெகடிவ் எனர்ஜியை விரட்ட எடுக்க படும் முயற்சியின் போது ஒளிப்பதிவில் கலக்கியிருக்கிறார் தீபக் குமார், ஆனால் பார்வையாளனை பயமுறுத்தும் வகையில் காட்சிகள் இல்லாமல் போனது அவரின் துரதிஷ்டம். கடைசியாக இன்னும் மெனக்கெட்டு கட்டி இருந்தால் வில்லா பேச பட்டு இருக்கும்.

வில்லா - பயமே இல்லா திகில் படம்.
My Rating: 6.2/10.

சமிபத்தில் எழுதியது : FAR CRY 3


15 comments:

  1. நான் படம் பார்க்கும் போது Paranormal Activity படத்தை மனதில் வைத்து பார்த்தேன்.. ஒரே Genre என்பதால்.. என்னைப் பொறுத்தவரை PA ஐ விட நம்முடையதில் த்ரில் element இருப்பதாக பட்டது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தல...நான் எந்த படத்துடன் கம்பேர் பண்ண வில்லை...நல்ல கான்செப்ட், இயக்குனர் சொதப்பி விட்டார் என்றே நான் எண்ணுகிறேன். :-)

      Delete
  2. படம் எனக்கு பெரிய ஏமாற்றம்.நான் தீபாவளி படங்கள் கூட பார்க்காமல் இந்த படத்தை முதல் நாள் 2வது காட்சியே பார்த்து பல்பு வாங்கினேன்.ஆனாலும் உங்க ரேடிங் அதிகம் தான்.என்னை கேட்டால் 4/10.

    ReplyDelete
    Replies
    1. வாங்க விஜய், Horror பிரியரான உங்களுக்கு கண்டிப்பாய் இது ஏமாற்றம் அளித்தே இருக்கும்.. :-)

      Delete
  3. வணக்கம் தல ஆனா எனக்கு பிடிச்சி இருந்தது பீட்சா அளவுக்கு இல்லை தான் ஒரு முறை பார்க்கலாம் இப்பவும் இதை அடுத்த பாகம் நம்ம எஸ்.ஜே.சூர்யா வச்சி நல்ல கொண்டு போகலாம் சூர்யா -சஞ்சிதா நல்லா இருக்கும் போல :P ;)

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல.. இன்னொரு பாகத்துக்கு முயற்சி செய்ய மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறன் தல... பீட்ஸாவின் தொடர்ச்சியாய் கூட எடுத்து இருக்கலாம். வீம்புக்கு புதிய கதையை தேர்வு செய்தது போலே எனக்கு தோன்றியது.

      Delete
  4. உங்களின் பாணியில் விமர்சனம் நன்று...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன்...

      Delete
  5. டவுன்லோட் போட்டு வச்சுருக்கேன்.. பாக்குறதுக்கு ஒரே முசுப்பாத்தியா இருக்கு..!! பாக்கலாம் தல..!! இந்த வாரம் இரண்டாம் உலகம் ரிலீசு.. ஞாபகம் இருக்கா ??

    ReplyDelete
  6. போய் நொந்து தான் தல வெளிய வந்தேன் ... எனக்கு சுத்தமா பிடிக்கல ...

    ReplyDelete
  7. இதையேதான் நானும் சொன்னேன் பாஸ்... பீட்சாவின் பெயரை தேவையில்லாமல் விளம்பரத்துக்காக உபயோகித்து கெடுத்து வச்சிருக்கிறார்கள்... படத்தில் எந்த இடமும் ஆஹா சொல்லும்படியாக இல்லை :(

    ReplyDelete
  8. உலக சினிமா விமர்சனங்களுக்கு
    https://www.facebook.com/pages/Hollywood-Movies/174422536006819

    ReplyDelete
  9. உலக சினிமாவின் விமர்சனம், Trailer, டவுன்லோட் லிங்க், rating இவை அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் கிடைக்கிறது.
    https://www.facebook.com/pages/Hollywood-Movies/174422536006819

    ReplyDelete