Sunday, January 13, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா (2013) - கொண்டாட்டம் ..!!!!

"அலெக்ஸ் பாண்டியன்" ஹாங் ஓவர் குறைய கண்டிப்பாய் இன்று "கண்ணா லட்டு தின்ன ஆசையா" படம் பார்த்தே தீருவது என்று நேற்றே முடிவு செய்து விட்டேன். இன்று காலை முதல் ஷோ போய் இந்த படத்தை பார்த்தேன். படம் ஆரம்பிக்கும் முன்பு " இன்று போய் நாளை வா" படத்தின் மூல கதையை வழங்கிய இயக்குனர் "திரு.பாக்யராஜ்" அவர்களுக்கு நன்றி என்ற வார்த்தைகளுடன் படம் ஆரம்பித்தது. படம் என்னுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றல் ?? நிச்சியம் என்னுடிய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது மட்டுமல்லாமல், என்னுடைய "அலெக்ஸ் பாண்டியன்" தலைவலியில் இருந்தும் விடுதலை கிடைத்தது. வயறு வலிக்க சிரித்து மகிழ்தேன். சந்தானம் ஏன் இந்த படத்தை "அலெக்ஸ் பாண்டியன்" ரீலீஸ் ஆகி ரெண்டு நாள் கழித்து வெளியிட்டார் என்று இப்பொழுது புரிகிறது. இரண்டு நாட்கள் கழித்து மொத்த கூட்டமும் தன் படத்திருக்கு வந்துவிடும் என்கிற அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது போன்ற கொண்டாட்டமான படத்தை பார்த்து நிறைய நாட்கள் ஆகிறது. 


சரி இப்பொழுது படத்தின் கதையை பார்போம். 1981 வருடம் வெளி வந்த "இன்று போய் நாளை வா" படத்தின் அதே கதை தான். "இன்று போய் நாளை வா" பிடிக்காது என்று தமிழகத்தில் யாரும் சொல்லி இது வரை நான் கேட்டது இல்லை. கே டிவியில் இந்த படத்தை எப்பொழுது போட்டாலும் இருக்கும் வேலையை அப்படியே போட்டு விட்டு படம் பார்க்க உட்கார்ந்து விடுவேன், எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத படம். அட்டகாசமான திரைகதையை கொண்ட படம் இன்று போய் நாளை வா. ஒரு பெண்ணை முன்று கதாநாயகர்கள் லவ்வுவதை செம நகைச்சுவையாக சொல்லி இருப்பார் பாக்யராஜ். அந்த படத்தை சிறு சிறு மாறுதல்கள் உடன் மறுபதிப்பு செய்து சந்தானம், ராக்கிங் பவர் ஸ்டார், சேது மற்றும் விஷாகாவை கொண்டு வழங்கி உள்ளார் இயக்குனர் மணிகண்டன். 

வேலை வெட்டி எதுவும் இல்லாத வழக்கமான தமிழ் ஹீரோ கதாபாத்திரம் சிவா (சேது). இவரது வீட்டுக்கு எதிர் வீட்டில் புதுசாய் குடி வரும் சௌமியாவை (விஷாகா ) பார்த்தவுடன் காதல் கொள்கிறார் சிவா. அவருடன் சேர்ந்து அவரின் நண்பர்கள் "கால்கட்டு கலியபெருமாள்" என்கிற கே.கே (சந்தானம்) மற்றும் பவர் குமார் (பவர் ஸ்டார்). முன்று பேரும் எப்படியாவது சௌமியா மனதில் இடம் பிடிக்க போட்டி போடுகிறார்கள். இறுதியில் யார் போட்டியில் வெற்றி பெற்றார் என்கிற கேள்விக்கான விடையை பயங்கர நகைச்சுவையுடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.


முன்று கதாநாயர்களின் அறிமுகம் வழக்கமான தமிழ் சினிமா வாய்ஸ் ஓவரில் ஆரம்பிகிறது. அதில் செமையாய் ஸ்கோர் செய்வது பவர் தான். மாஸ் ஹீரோவுக்கு கிடைக்கும் விசில் சத்தம் பவருக்கு கிடைத்தது. நானும் இவரை முதல் முறை பெரிய திரையில் பார்கிறேன். மனிதர் பின்னி பெடல் எடுத்து உள்ளார். நிறைய காட்சிகளில் நானே பவர்க்கு கை தட்டினேன். டான்ஸ் கற்று கொள்வது, சௌமியாவிடம் ப்ரோபஸ் செய்வது, ஹீரோயினை இம்ப்ரெஸ் செய்ய இவர் செய்யும் செண்டிமெண்ட் டிராமா, கிளைமாக்ஸ் டெர்ரர் பைட் என்று பவர் செய்யும் அனைத்து அலப்பறைகளும் சிரிப்பு சர வெடிகள் தான். இவரை மிக சரியாக உபயோக படுத்தி உள்ளார் இயக்குனர். ஆனால் முக எக்ஸ்பரஷன் மட்டும் வரவே மாட்டேன் என்கிறது. போக போக அடுத்த படத்தில் இருந்து பிக் அப் செய்து விடுவார் என்று நம்புவோம் ஆக.

அடுத்து சந்தானம், உண்மையில் இவர் காமெடி சூப்பர் ஸ்டார் தான். இயக்குனர் "ராஜேஷ்" காம்பினேஷனில் தான் இவரிடம் இருந்து இப்படி பட்ட காமெடி ட்ரீட்டை பார்த்து உள்ளேன். இது போன்ற நகைச்சுவை படங்கள் இன்னும் ரெண்டு குடுத்தால் இவருக்கு காமெடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை தாராளமாக வழங்கலாம். படத்தில் தேர்ந்த நடிகர் என்பது இவர் மட்டும் தான், அதனால் நிறைய இடங்களில் இவர் தான் படத்தை தாங்கி செல்கிறார். குபீர் சிரிப்பை வரவைக்கும் நிறைய கௌண்டர் அட்டாக்ஸ் காமெடியை படம் நெடுக்க தூவி உள்ளார், அட்டகாசம். இவர் சௌமியாவிடம் ப்ரோபஸ் காட்சியில் கை தட்டல் குறைய நிறைய நேரம் ஆனது. தன் படம் என்பதால் மனிதர் கடுமையாக உழைத்து உள்ளார் என்பது தெரிகிறது.


சேது என்கிற புது முக நடிகர் நடித்து உள்ளார். ஹீரோயின் விவேல் விளம்பரத்தில் நடித்தவர், "டல் திவ்யாவாக, இப்ப தூள் திவ்யா ஆகிடா". பாட்டு வாத்தியாராக VTV கணேஷ், டான்ஸ் மாஸ்டர் ஆக "வரலாறு படத்தில் அஜித்துக்கு டான்ஸ் சொல்லி குடுத்தவர், கோவை சரளா, பட்டிமன்ற ராஜா என்று நிறைய நடிகர்கள் நடித்து உள்ளார்கள்.சிறப்பு தோற்றத்தில் "சிம்பு" மற்றும் "கெளதம் மேனன்". இருவரும் VTV-2 படபிடிப்பில் இருப்பது போன்ற காட்சி அமைப்பு.

பாடல்கள் எல்லாமே படத்தில் தேவைக்கு ஏற்ப சரியான நேரத்தில் வருகிறது. பின்னணி இசை தேவையான அளவுக்கு வழங்கி உள்ளார் "தமன்". மொத்தத்தில் ஒரு காட்சியில் கூட நகைச்சுவை குறையாமல், லாஜிக் பற்றி அதிகம் யோசிக்க விடாமல்,  பெரிய குறை எதுவும் சொல்ல முடியாத படி திருப்தியான படத்தை வழங்கிய சந்தானம் மற்றும் பட குழுவினருக்கு என் நன்றிகள்.

கண்ணா லட்டு தின்ன ஆசையா - கொண்டாட்டம் ..!!!!

My Rating: 8.0/10......


21 comments:

  1. மாலையே படத்த பாக்குறேன் தல

    ReplyDelete
    Replies
    1. பாருங்க தல...உங்களுக்கும் பிடிச்சு இருந்தது போல...உங்க பதிவு படிச்சேன்..

      Delete
  2. ராஜ்,

    நீங்க சொல்றதப்பார்த்தா லோகநாயகர் ஜஸ்ட் எஸ்கேப்னு நினைக்கிறேன் ,பவர் ஸ்டார் கூட போட்டிபோட்டு அடிவாங்கினால் என்னாவதுன்னு தான் , சமயோசிதமாக ரிலீசை 25க்கு மாற்றிவீட்டார்னு நினைக்கிறேன் :-))

    ReplyDelete
    Replies
    1. வவ்வால்,
      விஸ்வரூபம் ரீலீஸ் ஏன் தள்ளி போச்சுன்னு ஊருக்கே தெரியும் .. :):):).
      நல்ல சுவாரிசியமான நகைச்சுவை படங்கள் எப்போதும் தோத்தது இல்ல..
      உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.. :):),புத்தாண்டு நமக்கு எப்பவுமே சித்திரை-1 தான்

      Delete
  3. பொங்கல் ,மற்றும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. OKOK மாதிரி அவுட் அன்ட் அவுட் காமெடியா இருக்குமா தல? நாளைக்கு படத்துக்கு போகலாம்னு இருக்கேன்..

    ReplyDelete
    Replies
    1. okok கூட கொஞ்சம் லவ், செண்டிமெண்ட்ன்னு போகும், இதுல வெறும் காமெடி தான்...பாருங்க தல.

      Delete
  5. அருமையான விமர்சனம் பாஸ்... பொங்கல் ரேஸில் இதுதான் வெற்றிக்குதிரை போலும்...

    கண்டிப்பாக பார்க்கனும்... ஆனால் அலெக்ஸ் பாண்டியன் படம் நல்லால்லன்னு மட்டும் சொல்லாதீங்க பாஸ்... நம்ம கண்ணோட்டம்தான் தப்பு :P

    ReplyDelete
    Replies
    1. பாஸ் , அலெக்ஸ் பாண்டியன் படம் பார்க்கும் போது கொண்டாட்ட மனநிலையில நான் இல்ல , அதுவும் இல்லாம போதிய இலக்கிய பக்குவம் இன்னும் வரல... :):):)
      அலெக்ஸ்பண்டியன் - தோல்வி "என்ன மாதிரியான சமூகத்தில் நாம் வாழ்கிறோம்"

      Delete
  6. தலிவர் பவருக்காக நிச்சயம் படத்தை சென்று பார்ப்பதாக இருக்கின்றேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க Yogaraja..நிச்சியம் பாருங்க ..நல்லா என்ஜாய் பண்ணுவீங்க

      Delete
  7. கண்டிப்பா பாத்தறோம் ஜி.

    ReplyDelete
  8. தல, அலெக்ஸ் பாண்டியன் உங்கள எவ்வளவு தூரம் பாதிச்சிருக்குன்னு எனக்கு நல்லா புரியுது :-)

    நான் இப்போ தான் இந்தப் படத்த பாத்துட்டு வர்றேன். சந்தானமே ஒரு படத்துல சொல்ற மாதிரி "இது ஒன்னும் அவ்வளவு பெரிய காமெடி இல்ல"னு தான் எனக்கு தோணுது! காமெடி சூப்பர் ஸ்டார் லாம் ரொம்ப ஓவர் தல! சந்தானம் நல்ல காமெடியன்தான். லவ் ப்ரபோஸ் பண்ற எடத்துல எல்லாம் நடிப்புலையும் கலக்குறார். ஆனால் ஒரே மாதிரியான காமெடியெல்லாம் விவேக்-வடிவேலு வுக்கே ஒரு ஸ்டேஜுக்கு மேல செட் ஆகல. அதெல்லாம் கவுண்டமணி-செந்தில் காலத்தோட முடிஞ்சு போச்சு. "இன்று போய் நாளை வா" க்ளாசிக். அதன் கிட்ட கூட வரமுடியாத ஒரு ரொம்ப சுமார் ரீமேக் தான் இந்தப் படம். பவர் ஸ்டார் நிச்சயம் கலக்குகிறார். ஆனால் இந்த கலக்கல், மேனரிஸம் எல்லாம் இன்னும் எத்தனை படத்தில் ஒர்க் அவுட் ஆகும்? இந்த படம் என்ன இம்ப்ரஸ் பண்ணல :-(

    ட்ரீட்டுக்கு போன ஹோட்டல்ல சாப்பாடு நல்லா இல்லைன்னாலும் அந்த ஸ்பிரிட் போயிரக்கூடாதுங்கிறதுக்காக "சூப்பர்டா, செம எஞ்சாய்மென்ட்ல"னு சும்மா சொல்லிகிட்டு வருவோமே, அது போலத்தான் "காமெடி படத்துக்கு வந்திருக்கோம், சிரிக்கலன்னா எப்படி"னு என்னையும் சேர்த்து தியேட்டர்ல எல்லாரும் சும்மா சிரிச்சதா தான் எனக்குப் பட்டுச்சு :-(

    தல அலெக்ஸ் பாண்டியன் தான் கல்ப்ரிட். லட்டு படத்த கொஞ்ச நாள கழிச்சு பாருங்க. அப்பவும் உங்களுக்கு புடிச்சிருந்தா, என் காமெடி சென்ஸ்ல தான் ஏதோ பிரச்சனைனு நான் கன்பர்ம் பண்ணிக்கிறேன் :-)

    "கண்ணா லட்டு தின்ன ஆசையா" ஸ்பிரிட்ட குறைச்சதுக்க்கு மன்னிக்கனும்!

    ReplyDelete
    Replies
    1. தல எனது விமர்சனத்த என் FB Pageல எழுதியிருக்கேன். வாசிச்சிட்டு சொல்லுங்க :-)

      Delete
    2. உண்மை தான் தல..இது "இன்று போய் நாளை வா" அளவுக்கு இல்லை தான்....அது கிளாச்சிக், எப்ப பார்த்தாலும் நல்லா இருக்கும்,போர் அடிக்கவே அடிக்காது....
      இப்ப வர காமெடி படம் எல்லாமே ஒன்னு, அல்லது ரெண்டு தடவை பார்க்கலாம். "இன்று போய்" மாதிரி மல்டி டைம்ஸ் பார்க்கிற கிளாச்சிக் கடைசியா எப்ப வந்ததுன்னு எனக்கு ஞாபகம் இல்லை. காமெடிக்கு பெரிய ஹிட் ஆனா, okok, கலகலப்பு கூட ரெண்டாவது தடவை பார்க்கும் போது நிறைய இடத்துல எனக்கு சிரிப்பே வரல...
      பட் இந்த படம் நான் சமிபத்தில் பார்த்த காமெடி படத்திலே பெஸ்ட், என்னை மறந்து சிரிச்சேன் தல...
      உங்க விமர்சனம் படிச்சேன் தல...பிளஸ், மைனஸ் ரெண்டுமே எழுதி இருக்கீங்க .

      Delete
  9. சூப்பர் ராஜ்... வவ்வால் சொல்லியது போல கமல் கூட பவரிடம் அடி வாங்கியிருக்கலாம்...

    மற்றபடி நீங்கள் குறிப்பிட்டது போல ஹீரோ வெட்டி அல்ல... விளம்பர மாடல்...

    ReplyDelete
    Replies
    1. இருக்கலாம் பிரபா..எதுவும் நடந்து இருக்கலாம்... :):):)
      அட, ஆமா...மறந்துட்டேன் ..:(:(

      Delete
  10. நேற்று போகணும்னு இருந்தேன்... கடைசில தியேட்டருக்கு போய் சேரும்போது ஷோ டைம் மிஸ்ஸாகி விட்டதால அலெக்ஸ் பாண்டியனுக்கு போக நினைச்சு, அப்புறம் சகுனி மைண்ட்ல வந்து வார்னிங் கொடுத்ததால.. Jack Reacherக்கு போக வேண்டியதாப் போச்சு.. அதுவும் கொஞ்சம் ஸ்லோ த்ரில்லர் தான். இதை அடுத்த வாரம் டைம் கிடைச்சா பார்க்கலாம்!! :-)

    ReplyDelete