விகடன் வலைத்தளத்தில் இந்த கட்டுரையை படித்தேன். மிகவும் பிடித்து இருந்த காரணத்தால் அதை இங்கு பகிர்கிறேன்.
சுற்றிலும் ராணி, குதிரை, யானை, சோல்ஜர்கள் இருந்தும் ராஜாவை காப்பாற்ற முடியாமல் கமல் செஸ் ஆட்டத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறார். (இறுதி வெற்றி எனக்கே என்ற அவரது தன்னம்பிக்கைக்கு விடை தெரிய இன்னும் முழுசாக ரெண்டு வாரங்கள் காத்திருக்க வேண்டும்) எதிர் தரப்பில் ராணியும் இல்லை, குதிரையும் இல்லை. யானையும் இல்லை. ஆனால் ராஜாவை குறிவைத்து நெருங்கிக் கொண்டிருக்கும் அவர்களின் பக்கத்தில் துணையாக வைத்திருப்பது யாரை? அல்லது யார் யாரையெல்லாம்?
அதை தெரிந்து கொள்வதற்கு முன் கமல் என்ற முன்மாதிரியை,முழு கலைஞனை, கலியுகத்தின் கலிலியோவை பற்றி அறிந்து கொள்வது நல்லது.
'மகாநதி' திரைப்படம் தயாரிப்பில் இருந்த நேரம்.சென்னையிலிருக்கிற முன்னணி சினிமா எடிட்டர்கள் பலர் ரூம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தார்கள்."கமல் ஏதோ 'ஆவிட்'டுன்னு ஒண்ணு கொண்டு வராராம்.அஹ்ஹ்ஹஹ்ஹ்ஹ்ஹா...அதை கொண்டு வந்து வச்சுகிட்டுதான் மகாநதியை எடிட் பண்ண போறாராம்.அதென்ன ஆவிட்டோ, டேவிட்டோ? இங்க ஒருத்தனுக்கும் புரியல.தணிகாசலம் சாரு பிலிமை கையில புடிச்சு ஸ்பாட் வச்சு நறுக்கிற வேகம் வருமா? இல்ல அந்த பர்பெக்ஷன்தான் அதுல வந்துருமா? வௌங்கிரும்."
இவர்களின் பேச்செல்லாம் அப்படியே கமல் காதுகளுக்கும் போனது.ஆனால்"நம்ம படத்துக்கு ஆவிட் எடிட்டிங்தான்.மூவியாலாவெல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் இருக்காது.வேணும்னா அதையெல்லாம் மியூசித்துல பார்த்துக்கலாம்" என்ற கமல், இந்த விஷயத்தையும் ஒரு கை பார்த்துக்கலாம் என்று தன்னம்பிக்கையோடு களம் இறங்கினார்.
மும்பையிலிருந்து ஸ்பெஷலாக ஒரு எடிட்டர் வந்துதான் மகாநதியை எடிட் பண்ண வேண்டியதாயிற்று.இங்குள்ள யாரும் அதை கற்று கொள்கிற எண்ணத்திலேயே இல்லை. அவ்வளவு ஏன்? இதை வேடிக்கை பார்க்கக் கூட யாரும் வரவேயில்லை அங்கு.
அது நடந்து சில பல வருடங்களில் ஒவ்வொரு எடிட்டிங் ஸ்டுடியோக்களிலும் ஆவிட் புகுந்து கொண்டது. ஏதோ ஆமை புகுந்தது போல ஆவிட்டை பார்த்து அஞ்சிய அத்தனை எடிட்டர்களும் தடவி தடவி கற்றுக் கொண்டார்கள் இந்த ஆவிட் தொழில் நுட்பத்தை. அதுதான் கமல்ஹாசன்! படப்பிடிப்பு தளத்திலேயே ஒரு கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு ஸ்பாட் எடிட்டிங் செய்கிற அளவுக்கு தொழில் முற்றிப் போனதற்கு காரணமும் கமல்தானே அய்யா?
அப்படியே இன்னொரு சம்பவம்...இன்று வீட்டுக்கு வீடு பரவிவிட்டது கம்ப்யூட்டர் சாதனம்! பதினைந்து அல்லது இருபது வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன், பல பத்திரிகை அலுவலகங்களில் கூட அது இருந்ததில்லை. க் ச் ம் என்று எழுத்துக்களை தேடி எடுத்து பொருத்தி கொள்கிற அவஸ்தையும் இருந்தது.ஒரு சில மிகப்பெரிய பத்திரிகை அலுவலகங்களில் மட்டும் டிடிபி என்று சொல்லப்படுகிற அதிநவீன தட்டச்சு இயந்திரத்தை பயன்படுத்தினார்கள்.ஏதோ பூச்சாண்டியை பார்ப்பது போலவே கம்ப்யூட்டரை பலரும் கருதி வந்த காலம் அது.
பத்திரிகையாளர்களை சந்திக்கிற சினிமாக்காரர்கள் பத்திரிகை செய்திகளை கைகளால் எழுதி,அதை ஜெராக்ஸ் எடுத்து விநியோகம் செய்வார்கள்.போட்டோக்கள்? நூற்றுக்கணக்கான போட்டோக்களை பிரிண்ட் போட்டு மேக்ஸி, போஸ்ட் கார்டு சைஸ் என்று விதவிதமாக தருவார்கள்.அதை ஒரு அட்டையில் ஒட்டி பிலிம் எடுத்து பிளேட் போட்டு என்று...ஆறேழு பரீட்சைகளை தாண்டிதான் ஒரு துணுக்கு செய்தியாக இருந்தாலும் பத்திரிகையில் இடம் பிடிக்கும்.
அந்த கால கட்டத்தில்தான் நான் கமல் பிரஸ்மீட் ஒன்றுக்கு சென்றிருந்தேன்.கேள்வி பதில் நேரம் முடிந்து கிளம்பும்போது அழகாக வட்ட வடிவில் ஒரு பொருளை கையில் கொடுத்தார்கள் கமல் அலுவலக ஊழியர்கள். அதுதான் குறுந்தகடு என்பதே தெரியாமல் கையில் வைத்துக் கொண்டு திருதிருவென விழித்தார்கள் அநேக நிருபர்கள். (நானும் கூட) இதுக்குள்ளேதான் கமல் சாரோட போட்டோ இருக்காம்.கொண்டு போய் ஆபிஸ்ல கொடுங்கப்பா. அவங்க கம்ப்யூட்டர்ல போட்டு கண்டுபிடிப்பாங்க என்றெல்லாம் ஆளாளுக்கு ஆம்ஸ்ட்ராங் ஆனார்கள்.
கமல் சொன்னார்,"இன்னும் கொஞ்ச நாளில் இப்படிதான் ஆகப்போவுது. போட்டோ பிரிண்ட் போட்டு கொடுக்கிற வழக்கமெல்லாம் மறைஞ்சுரும்"என்று. ஆழ்வார்பேட்டை ஏரியாவிலிருக்கிற இறைச்சி கடைகளில் 'தல'கறிக்கு அவ்வளவு விற்பனை இல்ல. ஏன்னா கமல் மாதிரி ரொம்ப பேரு இங்க இருப்பாங்க போலிருக்கு என்று கமென்ட் அடித்தபடியே கலைந்த கூட்டம்தான் நாங்கள் எல்லாம்.
எதையும் இன்னும் பத்து வருடங்கள் கழித்து...என யோசிப்பவர் கமல்.நாமெல்லாம் பஞ்சாங்கத்தில் நல்லநேரம் பார்த்துக் கொண்டிருந்தால்,கமல் அண்டார்டிகாவுக்கு அந்த பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை பற்றி யோசித்துக் கொண்டிருப்பார்.அவரால் நிறைவேற்றப்பட வேண்டிய காரியங்களில் ஒன்றுதான் இந்த டிடிஎச் ஒளிபரப்பு.(கமல் செய்யாவிட்டால் இதை வேறு யார் செய்து தொலைப்பதாம்?)
விஸ்வரூபம் படத்தை டிடிஎச்-ல் ஒளிபரப்பக் கூடாது.அப்படி ஒளிபரப்பினால் தியேட்டர்களை இழுத்து மூட வேண்டி வரும் என்று அவரவர் தொழில் குறித்து அச்சப்படுவதும் நியாயம்தான். சின்னத்திரை வந்தபோதும் இதே அச்சத்தோடு இருந்தவர்கள்தான் தியேட்டர்காரர்கள். ஆனால் அப்போதைவிட இப்போதைக்குதான் படங்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. எங்கள் படங்களை ரிலீஸ் செய்ய தியேட்டர் கிடைக்கவில்லை என்ற புலம்பலும் கூடியிருக்கிறது.இத்தனைக்கும் தினந்தோறும் மூன்று படங்களையாவது ஒளிபரப்பிவிடுகின்றன முன்னணி சேனல்கள்.
சின்னத்திரையில் படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்தபோது, சினிமாக்காரர்கள் திரண்டு சென்று அப்போதைய முதல்வர் கலைஞரை சந்தித்து முறையிட்டார்கள்."ஏன்யா... உங்க சினிமா வந்து நாடகத்தை அழிக்கலையா? அதுமாதிரிதான் இதுவும்.இந்த விஞ்ஞான வளர்ச்சியை ஏத்துகிட்டுதான் ஆகணும்" என்றார் கலைஞர். அதே போன்றதொரு 'உரத்த குரல்' இப்போது தேவைப்படுகிறது கமலுக்கும்!
ஆடியோ மார்க்கெட் ஒழிஞ்சுருச்சே என்று சினிமாக்காரர்கள் அலறும்போதுதான் அதைவிட பல மடங்கு கொட்டிக் கொடுக்கிறதே,சேனல் ரைட்ஸ்...அத பற்றி ஏம்ப்பா பேச மாட்டேங்கிறீங்க? என்ற எதிர் கேள்வி பிறக்கிறது இங்கே.
சரி விவாதத்தை விட்டுவிட்டு கமல் பிரச்சனைக்கு வருவோம்.சுமார் எழுபது கோடியை இந்த படத்திற்காக இறைத்திருக்கிறார் அவர்.நேற்று வந்த நடிகர்கள் எல்லாம், முப்பது கோடி சம்பளம் கேட்கும்போது சாதனையாளர் கமல்,படத்திற்கு ஆன செலவு போக பதினைந்து கோடியாவது இப்படத்தின் மூலம் தனக்கு கிடைக்க வேண்டும் என்று நினைப்பது தவறா?
இப்படத்தின் முதல் தயாரிப்பாளராக தன்னை இணைத்துக் கொண்ட பிவிபி நிறுவனம், போட்ட பணத்தை திரும்ப கேட்கிறது.சுமார் ஐம்பது கோடி ரூபாயை அவர் தரவேண்டிய நிலையிலிருக்கிறார்.ஆனால் விநியோகஸ்தர் தரப்பிலிருந்து இந்த படத்தின் மொத்த விலையுமே ஐம்பது கோடியாகதான் நிர்ணயிக்கிறார்களாம்.அதை மேலும் குறைக்கிற விதத்தில் நடுவில் வந்து சேர்ந்தது முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்பு.
விஸ்வரூபம் படத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கருத்துக்கள் சொல்லப்பட்டிருப்பதாக கிசுகிசுப்பு எழுந்ததுமே படத்தின் வியாபார தொகையும் பாதிக்குமேல் குறைக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.
தீப்பிடிக்கிற நேரத்தில் தப்பி ஓடுகிற வழியில் அழகான கோலம் போட்டிருக்க வேண்டும் என்றோ, அது கிழக்கு வாசலாக இருக்க வேண்டும் என்றோ நினைக்க முடியாது. நடுநிலையோடு நோக்கினால் கமலின் நிலையும் அதுதான். போட்ட பணத்தை எடுப்பதற்காக அவர் புதிதாக திறந்த புழக்கடைதான் இந்த டிடிஎச் என்று கருத வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் சுயலாபத்துக்காக உயிராக நேசிக்கும் சினிமாவை காவு கொடுக்கிறவரல்ல கமல் என்பதையும் அவரது கடந்த கால சினிமா வரலாறுகள் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
பாரம்பரியமான சினிமா நிறுவனங்கள் எல்லாம் எங்கே போயின? சத்யா மூவிஸ் எங்கே, தேவர் பிலிம்ஸ் எங்கே? சூப்பர்குட் எங்கே, எல்.எம்.எம் எங்கே? ஏ.வி.எம் நிறுவனம் ஏன் வருடத்திற்கு ஒரு படத்தை கூட எடுக்க மாட்டேன் என்கிறது? இன்னும் இதுபோன்ற முக்கிய நிறுவனங்கள் எல்லாம் ஏன் ஒதுங்கின? சினிமா ஆரோக்கியமாக இல்லை. பணம் போடுகிற முதலாளி அப்படம் ரிலீஸ் ஆகிற நேரத்தில் ஓடி ஒளிகிற அவல நிலை இங்கு தொடர்கிறது.
ரியல் எஸ்டேட் புரோக்கர்களும், கள்ளப்பண முதலாளிகளும் ஆசைக்கு ஒரு படம் எடுத்து அதிலும் தானே ஹீரோவாக நடித்து ஒதுங்கிக் கொள்கிறார்கள்.அவ்வளவு ஏன்? பல்லாயிரம் கோடிகளை கையிருப்பில் வைத்துக் கொண்டு சினிமாவுக்குள் நுழைந்து கோலி குண்டு விளையாடும் கார்ப்பரேட் நிறுவனங்களே கூட விழிபிதுங்கி கிடக்கின்றன.
எல்லாவற்றுக்கும் காரணம் வியாபாரத்தை இங்கே சுதந்திரமாக செய்ய முடிவதில்லை என்பதுதான். சூழ்ச்சியும் அசந்த நேரத்தில் கால்களை வாரிவிடும் கலையும் இங்கே சகஜமாக இருக்கின்றன. படப்பெட்டிகளை டெலிவரி செய்யும்போது பேசிய பணத்தை எண்ணி வைக்கிற விநியோகஸ்தர்கள் இங்கே இருப்பதே இல்லை. இங்கு எல்லா படங்களின் டெலிவரியும் ரத்தக்கறையோடு நடப்பதை லேப் பக்கம் சென்றால் நடுங்க நடுங்க கவனிக்க முடியும்.
'விஸ்வரூபம்' விஷயத்தில் கூட கமலுக்கு எதிரான சில சினிமா பிரமுகர்கள் முஸ்லீம் அமைப்புகளையும், தியேட்டர்காரர்களையும் தூண்டி விடுவதாக கூறப்படுகிறது. ஒரு படம் தோல்வியடைந்தால் இதே சினிமாவிலிருக்கும் பெரும்பாலனோர் பார்ட்டி வைத்து கொண்டாடுகிறார்களே, சினிமா எப்படி பிழைக்கும்?
ஒரு சங்கத்தின் சட்டதிட்டங்கள் இன்னொரு சங்கத்தை கட்டுப்படுத்த முடியாது. ஆனால் சினிமாவில் முடியும். விருப்பமே இல்லாவிட்டாலும் இந்த கட்டுக்கோப்பான சட்டதிட்டங்களை எல்லாரும் மதித்தே ஆக வேண்டும் என்கிற முரட்டு சிந்தனை இங்கே பல வருடங்களாக இருக்கிறது.வேதனை என்னவென்றால் பணம் போடுகிற முதலாளியும் இங்கே கைகட்டி நிற்க வேண்டி இருக்கிறது.
கமல் என்ற முதலாளியின் நிலைமையும் இன்று அப்படிதானிருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் பலர்.'உன் தியேட்டரில் முறுக்கு விற்க கூடாது.சுண்டல் விற்க கூடாது' என்று சொல்ல எப்படி எந்த பட முதலாளிக்கும் அதிகாரம் இல்லையோ, அப்படிதான் 'உன் படத்தை டிடிஎச்-ல் ஒளிபரப்பக் கூடாது என்று இவர்கள் சொல்வதற்கும் அதிகாரம் இல்லை.
இந்த சின்ன உண்மையை புரிந்து கொண்டால் போதும்... விஸ்வரூபம் பிரச்னை, இவ்வளவு பெரிய அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து நிற்கவேண்டிய தேவையே இருக்காது!
நன்றி - ஆர்.எஸ். அந்தணன் (விகடன்)
நன்றி - ஆர்.எஸ். அந்தணன் (விகடன்)
ரொம்ப நல்ல article. படப்பெட்டி தகராறுகள்லாம் எனக்கு பெருசாக தெரியாது. நல்லவேளை ஷேர் பண்ணி என்னையும் வாசிக்க வைச்சிட்டீங்க.. (நான் விகடன்.காம் பக்கம் போறதே கிடையாது.)
ReplyDelete* "கலியுகத்தின் கலிலியோ"- சூப்பர் அடைமொழி!! :)
நன்றி JZ..கட்டுரை மையின் விகடன் சைட்ல வரல. news.vikatan சைட்ல படிச்சேன். ரொம்ப நல்லா எழுதி இருந்தார், அதனால் தான் ஷேர் செஞ்சேன்.
ReplyDelete///'உன் தியேட்டரில் முறுக்கு விற்க கூடாது.சுண்டல் விற்க கூடாது' என்று சொல்ல எப்படி எந்த பட முதலாளிக்கும் அதிகாரம் இல்லையோ, அப்படிதான் 'உன் படத்தை டிடிஎச்-ல் ஒளிபரப்பக் கூடாது என்று இவர்கள் சொல்வதற்கும் அதிகாரம் இல்லை.///
ReplyDeleteடி ட்டி எச் ல ரிலீஸ் பண்னக்கூடாதுனு சொல்லவில்லை. படத்தை டி ட்டி எச்ல ரிலீஸ் பண்ணினால் நீயே தியேட்டர் கட்டி நீயே ரிலீஸ் பண்ணி கிழிச்சுக்கோ னு சொல்ல உரிமை இருக்கு!
இது வியாபாரம். இவர் இஷ்டத்துக்கு எதையும் விக்க முடியாது.
இப்போ டி ட்டி எச் சரியாப் போகலைனு சொல்றாங்க. இப்போ என்ன பண்ணப்போறாரு?
Now he has to adjust with theater owners!
படம் jan 25 தேதிக்குத் தள்ளிப் போகுதாம். ஏதாவது புதுமையா செய்தால் ஒண்ணு வெற்றி இல்லைனா படுதோல்வி.
See, you need to adjust with people who are in business with you. You cant just set any parameters you want and expect others to listen to you!
sandiyar karan already claimed that it earned 300 crores! Now KH got nothing. May be he lost some money in advertisements if dth screenin is cancelled as it looks today!
வாங்க வருன்..
Delete//படம் jan 25 தேதிக்குத் தள்ளிப் போகுதாம்.//
எனக்கு என்னமோ இது ரூமர் மாதிரி தான் தோணுது...
நான் இப்ப தான் ஏர்டெல் கஸ்டமர் கேர் கிட்ட பேசுனேன். அவங்க கண்டிப்பா வியாழன் 9:30 DTH ரீலீஸ்ன்னு சொன்னாங்க. Book my Show வுல கூட pre-booking for 11th ஓபன் பண்ணிட்டாங்க.
கமலுக்கு இந்த படம் வாழ்வா சாவா பிரச்சினை மாதிரி தான் தெரியுது. நாளைக்கு Book my Show அட்வான்ஸ் புக்கிங் ஸ்டார்ட் பண்ணுனா, ரீலீஸ் conform..lets wait with Fingers crossed...
எனக்கு ரஜினி அளவுக்கு கமல் பிடிக்காது.. ஆனாலும் தமிழ் சினிமாவில் அவர் தவிர்க்க முடியாதவர், கிட்ட தட்ட கலைஞர் கருணாநிதி மாதிரி.. அவரை வெறுக்கலாம், ஆனால் ஒதுக்க முடியாது...
Raj: It is almost confirmed that it will NOT hit DTH or theater in Jan10-Jan12. It is being postponed to Jan 25th or so! They will refund your money soon!
DeleteYes..Varun. Latest news tells that DTH show has been cancelled and movie is postponed to 25th Jan. But I havent got any SMS conformation from Airtel yet..
Deleteநல்லதொரு பதிவு ராஜ்.
ReplyDeleteஉண்மை அவருக்கு வேறு வழி இல்லை.
பணம் எடுத்துதான் ஆகவேண்டும்.
//எனக்கு ரஜினி அளவுக்கு கமல் பிடிக்காது// எனக்கும் தான்.
ஆனால் தான் சம்பாதித்ததை சினிமாவிலேயே போடும் ஒரே ஆள் இவர் தான்.
கரெக்ட் கிருஷ்ணா..
Deleteகமல் தவிர்த்து பிரகாஷ் ராஜ் கூட தான் சினிமாவில் சம்பார்த்திதை சினிமாவில் தான் முதலீடு செய்வார்.
எந்த தொழிலில் EARN பன்னுகிறாயோ , அதே தொழிலில் INVEST பண்ண வேண்டும் என்ற RULE எதுவும் உள்ளதா ? . IN CASE , RAJINI இந்த இக்கட்டில் மாட்டி கொண்டால் , இந்த அறிவு ஜீவிகள் என்ன பாடு படுத்தி இருப்பார்கள் . KAMAL என்பதால் MEDIA மற்றும் BLOGGERS அடக்கி வாசிக்கிறார்கள் .
Deleteவாங்க ROSHAN.....
Deleteஅப்படி எந்த ரூல்லும் கிடையாது நண்பா ...!! அப்படி செய்தால் நல்ல படங்கள் வரும் என்ற எண்ணம் தான் . ரஜினியால் அது போன்று செய்வது கஷ்டம் தான் ..அவர் பர்சனல் லைப் அப்படிப்பட்டது .. :):)
ரஜினியாக இருந்தால் இதை விட பலமாக காய்ச்சி எடுத்து இருப்பார்கள் . எந்திரன் - படமா படையெடுப்பா ...?? குசேலன் , பாபா நஷ்டம் ..?? ஒகேனக்கல் பிரச்னை , என்று பல விஷயங்களில் ரஜினியை கண்டபடி எழுதி தள்ளி , தங்கள் வயிது எரிச்சலை தீர்த்து கொண்டார்கள் ... இது எப்பொழுதும் தொடர்ச்சியாக நடைபெறும் நிகழ்வுகள் தான் .
கமலு டிடிஹெச்சில் காட்டட்டும், தெருத்தெருவாக பயாஸ்கோப்பில் காட்டட்டும், இல்லை தனி ரூமில் யாருக்கு வேண்டுமானாலும் காட்டட்டும். யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள்.
ReplyDeleteஉன்னிடம் வரும் முன்னர் ஒரே ஒரு முறை வப்பாட்டியிடம் சென்றுவிட்டு வருகின்றேன் என்று பொண்டாட்டியிடம் சொன்னால் உலகில் எந்தப் பொண்டாட்டியும் சும்மா இருக்க மாட்டார்.
நேற்று வரை தியேட்டரால் கொழுத்துவிட்டு இன்று சொந்த அரிப்புக்காக பாதை மாறினால் பலரும் கேள்வி கேட்பார்கள்.
வாங்க ராவணன், நீங்க சொல்லுற லாஜிக் எனக்கு சரியா படல.. நான் இருக்கிற ஊருல கண்டிப்பா தமிழ் படம் ரீலீஸ் ஆகாது. அப்படியே ஆனாலும் டிக்கெட் கிடைக்காது. புது படம் பார்கிறது குதிரைகொம்பு. எல்லா தமிழ் படமும் நெட்ல டவுன்லோட் பண்ணி தான் பார்போம், அது போன்ற ஊர்களுக்கு என்னை பொறுத்த வரை DTH நல்ல விசயம் தான்.
Deleteபழைய காலத்துல எல்லோரும் ஹோட்டல்ல போய் தான் சாப்ட்டாங்க, இப்ப அதே சாப்பாட்டை போன் பண்ணுனா ஹோம் டெலிவரி பண்ணுறாங்க. இன்னும் ஹோட்டல் இருக்க தான் செய்யுது. அழிந்து விடவில்லை. இப்ப வெல்லாம் கன்சூமர் நான் காசு குடுக்க ரெடி, எனக்கு comfort லெவல் தான் முக்கியம் என்று சொல்லுறான். அது போன்ற ஒரு முயற்சி தான் DTH...!!
இந்த கமெண்டை ரொம்பவே ரசிச்சேன்.. சரியான உவமை!
Deleteசார் இந்த உவமை ஆமையில் என்ன பயன்.... ஒருவர் ஒரு படத்தை எடுக்கிறார்.. அத இங்க குடு அங்க குடுன்னு ரகளை பண்ண வேண்டிய அவசியமா.. உலகத்தில எத்தனையோ பிரச்சனை இருக்கு.. உன் வியாபாரத்தை ஏதோ உலகமகா விசயமா போட்டு பாடாப் படுத்த வேண்டிய அவசியம் என்ன... ஆப்டர் ஆல் சினிமாதான.. சரி கமல் படம் எத்தனையோ நஷ்டம் அடஞ்சிருக்கு.. அப்ப இந்தத் தியேட்டர் ஓனருங்க வந்து அத சரி கட்டுவாங்களா...? அப்படி லாபம் வந்தா அத எல்லாருக்கும் பகிருவாங்களா....? கைய கடிக்காம இருக்க ஆயிரம் நியாயமான வழிய பாக்கக் கூடாதுன்னு அலப்பற பண்ண வேண்டிய அவசியம் என்ன....? படத்த வெளிய வர விடாம பண்ண வேண்டிய அளவு அந்தப் படம் வந்தா உலகப் புரட்சியா நடந்துறப் போவுது....? சே...
Deleteபடம் எடுக்கும் தயாரிப்பாளருக்கே படம் சொந்தம் என்னும் சிறிய உண்மை பலருக்கு பரியாதது ஆச்சரியம் கலந்த வருத்தமளிக்கிறது. எதிர்க்க இத்தனை பேர் ஒன்றுகூடும் போது, கைகொடுக்க கமலுக்கு யாரும் இல்லை :-( தனி ஆளாக போராடிக்கொண்டிருக்கிறார். நாடகக் கொட்டகைகள் தியேட்டர்கள் வந்த போது, சைக்கிள் ரிக்ஷா ஆட்டோ வந்த போது, சுவர் சித்திரங்கள் ப்ளெக்ஸ் போர்டுகள் வந்த போது என்று பல சமயங்களில் ஒன்று வந்த போது இன்னொன்று காணாமல் போனதை இங்கு பலரும் மறந்துவிட்டார்கள். மாற்றம் என்பது மாற்றமுடியாதது என்பது பழைய பழமொழி. தியேட்டரில் டிக்கெட் விலையையும் குறைக்க மாட்டார்கள், படத்தை வேறு வழியிலும் வெளியிட விடமாட்டார்கள். "உன் உழைப்புக்கு நாங்க வக்கிறது தான் கூலி" என்று இவர்கள் இன்னும் எத்தனை நாளைக்கு தான் சர்வாதிகாரத்தனமாக ஆடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்த முறை கமலின் டிடிஎச் ரிலீஸ் கைவிடப்பட்டாலும், நாளை இந்த முறை பிரபலமடைந்து பல நல்ல தயாரிப்பாளர்கள் உருவாகி நல்ல படங்கள் எளிமையான வகையில் மக்களைச் சென்றடையும் போது யோசிப்பார்கள், கமல் அன்றே சொன்னாரே என்று... இல்லை, கமல் அப்போது ஹாலிவுட்டில் இருப்பார். அங்கு போய் குத்தம் கண்டுபிடித்துக் கொண்டிருப்பார்கள் நம்மாட்கள், லட்சியவாதிகள். தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடச் சொல்லவில்லை. தரையில் போட்டு நசுக்காமலாவது இருக்கலாம் அல்லவா?
ReplyDeleteஆமா தல.. கமல் சதுரங்க விளையாட்டில் ராஜாவை கிட்டத்தட்ட இழந்துட்டார், நாளைக்கு உறுதியா தெரிஞ்சிடும்.
Deleteஅருமையான விசயங்களைக் கொண்ட பதிவைத் தான் எங்களுக்கு பகிர்ந்து உளீர்கள். கமல் பற்றி இன்னும் சில விசயங்களை அறிந்து கொண்டேன்....
ReplyDeleteகடைச்யில் இப்படி பின் வாங்கி விட்டாரே .இதில் காமெடின விஷயம் படம் எடுப்பதை 10 வருஷத்திற்கு முன்பே நிறுத்திவிட்ட சில காமெடி பீஸ்கள்( கே.ராஜன் போன்றோர் ) கமலுக்கு எச்சரிக்கை விடுவதுதான்.மேலும் சினிமா உலகம் கமல் பக்கம் சப்போர்ட் செய்வார்கள் என்று எத்ரிபார்தேன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeletegood action movie
ReplyDeleteSAP SF