தில்லு முல்லு (2013) படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த எவர் கிரீன் முழு நீள காமெடி படமான தில்லு முல்லு (1981) படத்தின் ரீமேக் என்று நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. இன்றும் கே டிவியில் ரஜினி நடித்த தில்லு முல்லு படத்தை போட்டால் இருக்கும் வேலையை அப்படியே போட்டு விட்டு படம் பார்க்க உட்கார்ந்து விடுவேன். ரஜினிக்கும் முழு நீள காமெடியும் வரும் என்பதை நிருபித்த படம். சீரியஸ் இரண்டு பொண்டாட்டி கதைகள், குழப்பமான இடியாப்ப குடும்ப சிக்கல் கதைகள் மட்டுமே எடுக்க தெரிந்தவர் என்று பெயர் பெற்ற கே. பாலச்சந்தர் தன்னாலையும் காமெடி படம் இயக்க முடியும் என்று நிருபித்த படம். "கோதாவரி கோட்டை கிழிடி" புகழ் விசு தான் பழைய தில்லு முல்லு படத்திருக்கு திரைக்கதை எழுதினார் என்பதை அவர் இந்த படத்தின் மீது கேஸ் போட்டவுடன் தான் நாம் அனைவரும் அறிந்த கொண்டிருப்போம்.
படம் வெளிவந்த காலத்தில் ரஜினி மிக பெரிய அக்ஷன் ஹீரோவாக வளம் வந்துகொண்டு இருந்தார், அவரின் அக்ஷன் ஹீரோ இமேஜ் உடைத்து காமெடி ஹீரோ இமேஜ் ஏற்படுத்தி குடுத்ததும் இந்த படம் தான். அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் இந்திரன் என்கிற ரஜினி என்ட்ரி ஆகும் ஒரு காட்சி போதும் ரஜினி கிளாஸ் நடிகர் என்பதை நிருபிக்க. இந்திரன்/சந்திரன் என்று மீசை வைத்து/மீசை இல்லாமல் இரு கதாபாத்திரங்களில் ரஜினி பிரமாத படுத்தி இருப்பார். மீசையை எடுக்கும் காட்சியில் ரஜினி நவரச முக பாவங்களை அருமையாக வெளி படுத்தி இருப்பார். இப்படி பட்ட கிளாசிக் காமெடி படத்தை ரீ-மேக் செய்யும் போது ஒரிஜினல் படத்தின் பக்கத்திலாவது வர வேண்டாம்மா, வெகு தூதூதூதூதூதூதூதூரம் தள்ளி இருக்கிறது தில்லு முல்லு (2013).
உலக நாயகன் + சூப்பர் ஸ்டார் பட்டங்களை இணைத்து அகில உலக சூப்பர் ஸ்டார் "சிவா" என்கிற டைட்டில் கார்டுடன் படம் ஆரம்பிக்கும் போதே மைல்ட் டவுட். சரி பழைய படத்தில் கமல் வக்கீலாக ஒரு கேரக்டர் செய்து இருப்பார், கமல் + ரஜினியின் கதாபத்திரங்களை தூக்கி சாப்பிடுவது போல் மிர்ச்சி சிவா கலக்கி இருப்பார் என்று பார்த்தால், பார்க்கும் நமக்கு தான் வயறு கலங்கி விடுகிறது. படம் முழுக்க ஒரே எக்ஸ்பிரஷன் தான்.
கொஞ்சமாவாது மாற்றம் வேண்டாமா ? பார்க்கும் நமக்கு சலிப்பு தான் ஏற்படுகிறது. ஸ்பூப் படமான் "தமிழ்படத்தில்" இவரின் ஒரே மாதிரியான முகபாவம் ஓகே, அதன் பிறகு வந்த எல்லா படங்களிலும் அதையே செய்து கொண்டு இருந்தால், பார்க்கும் தமிழ் மக்களுக்கு தான் கஷ்டம். பவர் ஸ்டார் இவரை விட நன்றாக நடிப்பார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.
முதல் காட்சியில் அப்பு கமல் போல் சிவா நடிக்க "லம்பா லேகியத்தை" சாப்பிட்டு அவர் வளர்ந்து விடுவது போல் ஒரு மொக்கை காமெடி, அந்த ஒரு காட்சி போது படத்தின் காமெடி வறட்சியை சொல்ல. சிவாவின் பூர்விக வீடு கோர்ட் கேஸில் பறிபோகிறது, அதனால் அவரின் மாமா இளவரசின் யோசனை படி பிரகாஷ்ராஜ் நடத்தும் மினரல் வாட்டர் கம்பெனிக்கு இன்டர்வியூ வருகிறார். தேங்காய் சீனிவாசன் பின்னி பெடல்யெடுத்த ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ். வழக்கம் போல் மனிதர் தன்னுடைய கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்து உள்ளார், சரியாக சொன்னால் இவர் மட்டும் தான் படத்தில் நடித்து உள்ளார்.
பசுபதி என்கிற தந்து பெயருக்கு ப- பழனி மலை, சு- சுவாமி மலை, ப- பழமுதிர்சோலை தி- திருத்தணி என்று புது விளக்கம் குடுத்து ஏமாற்றி அந்த கம்பெனியில் வேலைக்கு சேருகிறார் சிவா. ஐபில் மேட்ச்சுக்கு அம்மாவுக்கு உடம்பு சரி இல்லை என்று போகும் சிவாவை மொபைல் வீடியோ ஆதாரத்தை வைத்து கையும் களவுமாக பிடிக்கிறார் பிரகாஷ்ராஜ். ஆனால் அது தான் இல்ல, தனது தம்பி கங்குலீ என்று பொய் சொல்லி மீசைக்கு பதில் தந்து தம்பிக்கு பூனை கண் என்று ரீல் விடுகிறார். தம்பி கதாபாத்திரத்திலும் கொஞ்சம் கூட மொடுலேஷன் மாற்றாமல் வந்து நம் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார். அதன் பிறகு பிரகாஷ்ராஜ் பொண்ணை லவ்லி சில பல மொக்கை காமெடிக்கு பிறகு எப்படி கரம்பிடிக்கிறார் என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பழைய கிளாச்சிக் படத்தில் இருந்து சில காட்சிகள் மாற்றி எடுத்து உள்ளார் இயக்குனர் பத்ரி. ஆனால் எந்த காட்சியிலும் புதுமை இல்ல. சிவாவின் நண்பராக பரோட்ட சூரி வருகிறார். அவர் கதாபாத்திரம் காமெடியா இல்ல சீரியஸ் என்று கடைசி வரைக்கும் புரியவில்லை. சௌகார் ஜானகி கலக்கிய அம்மா பாத்திரத்தில் கோவை சரளா. கொஞ்சமும் பொருந்தவில்லை. பிரகாஷ் ராஜ் சந்தேகத்துடன் இவரைப் பார்க்க வரும் நேரங்களிலெல்லாம் நாக்கில் வேலைக் குத்தி அவரை உட்கார வைத்து விடுகிறார்கள். மற்ற நேரங்களில் சென்னை தமிழ் பேசுகிறேன் என்று சும்மா கத்தி கொண்டே இருக்கிறார். படத்தின் இன்னொரு பெரிய மைனஸ் கதாநாயகி இஷா தல்வார். மும்பை இறக்குமதி போல் தெரிகிறார். முகத்தில் ஒரு களை இல்லை. நடிப்பு....? எந்த கடையில் கிடைக்கும் !!!
படத்தின் ஒரே அறுதல் சிவாவின் சின்னச் சின்ன டைமிங் வசனங்கள் தான். நீங்க பேஸ் புக்ல இருக்கீங்களா, என்று பிரகாஷ்ராஜ் கேட்க இல்லீங்க நான் மைலாபூர்ல இருக்கேன் போன்ற சில பல வசனங்கள் ஸ்மைல் வரவைக்கிறது, மற்ற படி கிளாச்சிக் தில்லு முல்லு போல் குபீர் சிரிப்பை வரவைக்கும் காட்சிகள் படத்தில் ஒன்றுமே இல்ல. கிளைமாக்ஸ் காட்சியில் "ஆங்கிரி பேட் மூக்கா" என்று சந்தானம் என்ட்ரி குடுத்து படத்தை காப்பாற்ற முயற்சி செய்கிறார். கிளைமாக்ஸ் காட்சி சுந்தர்.சி பாணி ஆள் மாறாட்ட காமெடி முயற்சி, பரவாயில்லை ராகமே.
முதல் முறையாக எம்எஸ்வி - யுவன் இசைக் கூட்டணி, தில்லு முல்லு டைட்டில் ரீமிக்ஸ் அசத்தலாக உள்ளது. ராகங்கள் பதினாறு... பாடல் மட்டும் கேட்க்கும் படி உள்ளது. தமிழ் நாட்டில் வசூல் ரீதியில் படம் வெற்றி என்று நியூஸ் படித்தேன். நமது மக்களின் காமெடி சென்ஸ் மீது கொஞ்சம் சந்தேகம் வந்து விட்டது. இப்பொழுது எல்லாம் கலைஞர் அரசியல் அறிக்கைகள் விடுவது இல்ல போல, அதனால் தான் இந்த மாதிரி மொக்கை காமெடி படங்கள் ஹிட் அடிக்கிறது. !!!!
தில்லு முல்லு (2013) - சிரிப்பே வராத காமெடி படம் !
My Rating: 6.0/10......
ரஜினியின் தில்லுமுல்லு பார்த்தவர்களுக்கு ரெண்டரை மணிநேரம் செம அறுவை புது தில்லுமுல்லு. பார்க்க விருப்பப்படுறவங்க பழைய தில்லுமுல்லு நெட்டில் டவுன்லோட் பண்ணி மறுபடி ஒருதடவை பார்த்துக்கோங்க பழையதில் கோல்மால் பிடிபடும் தருணங்களில் ரஜினியின் பதற்றம், படபடப்புடன் அதை சமாளிக்கும் நடிப்பு சிவாவிடம் சுத்தமாவே மிஸ்ஸிங்.. பயபுள்ள தமிழ்ப்படத்தில் நடிச்சமாதிரியே நடிச்சிட்டு போயிருக்கு. காமெடி திரைப்படத்தில் அப்பப்போதான் மெல்லியதாக சிரிப்பு வருகிறது. கிளைமாக்ஸில் சந்தானம் வரும் இடங்கள்தான் வெடிசிரிப்பு. திருட்டு காப்பி வந்ததும் கிளைமாக்ஸை மட்டும் யூடியூப்பில் பாருங்க...///
ReplyDeleteபேஸ்புக்கில் நான் போட்ட கமெண்ட்ஸ் :)
வாங்க மதுரன்...எனக்கும் அதே எண்ணம் தான்.
Deleteஇப்பவெல்லாம் நீங்க பதிவு எழுதுவதை சுத்தமா குறைச்சுடீங்க போல. அடிக்கடி இல்லாட்டியும் அப்ப அப்ப பதிவுலகம் பக்கம் வந்து பதிவு போடுங்க.. :):)
அநேகமான இடங்களில “தமிழ்ப்படம்” பார்க்கிற ஃபீலிங்தான் வந்திச்சு.
ReplyDeleteSAME BLOOD
ReplyDeleteவாங்க விஜய் என்ன ரொம்ப நாளா ஆளை காணம். வேலை அதிகமோ..??
DeleteIntha padatha en ellorum aha ohonu solranganne theriyala , nan kooda enakkuthan comedy sense kammiyadichonno ninachitten.
ReplyDeleteவாங்க Parthiban எனக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் ரசனை மேல லைட்டா டவுட் வர ஆரம்பிச்சிடிச்சு.
Deleteஅதற்கு ஈடாகுமா...?
ReplyDeleteவாங்க தனபாலன் சார்.. கிளாச்சிக் என்றுமே கிளாச்சிக் தான்.
Deleteபுதுமையாக எதுவும் இல்லை....
ReplyDeleteஉண்மை தான் தல..வருகைக்கு நன்றி..
Deleteடேய் யார் நி
Deleteசிரிப்பு வரலைனாலும் பரவாயில்லை அழுகை வர வைக்கிறானுக
ReplyDeleteவாங்க லக்கி, நீங்க சொல்லுறது உண்மை தான், பல இடங்களில் எரிச்சல் தான் வந்தது.
Deleteஅய்யய்யோ உடனே தில்லுமுல்லு பாக்கணும் போல இருக்குதே.... இப்ப எதவாது டிவியில போட்டா நல்லா இருக்கும் இல்ல... ஒவ்வொரு பிரேமும் ரசிச்சு பார்த்த படம்... தலைவன் இடத்தில எவனையும் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை தல... அதே தான் நான் பழைய தில்லுமுல்லு பத்தி தான் பேசுறேன்...
ReplyDeleteஇந்த ஹீரோயின் வுவ்வே..
தில்லுமுல்லுவிற்கு விசு தான் வசனம் என்று எனக்கு முன்பே தெரியும்... முதல் முறை தெரிந்த பொழுது நான் உங்களைப் போல் அட இவரா என்று ஆச்சரியப்பட்டேன்
வாங்க தல. பழைய தில்லு முல்லு கிளாச்சிக் காமெடி படம். ரஜினி வாழ்ந்து காட்டிருப்பார். சிவா அந்த கதாபாத்திரத்தின் பக்கத்துல கூட வரல.
Deleteதல,
ReplyDeleteநான் இன்னும் படம் பாக்கல..பாக்கவும் போறதில்ல.. ஆனாலும் படம் மொக்கனு முன்னாடியே தெரிஞ்சு போச்சு..!! க்ளாசிக் காமெடிப் படமான "தில்லுமுல்லு"வ ரீமேக் பண்ணனும்னு நினச்சதே ஒரு பெரிய தப்பு தல..!!
இப்பலாம் வர வர காமெடிங்கற பேர்ல குப்பையத்தான் கொட்டுறாய்ங்க. சிச்சுவேஷன் காமெடிங்கறதே இல்லாம போச்சு. வெறும் வசனத்துலயே கிச்சு கிச்சு மூட்டப் பாக்குறாய்ங்க. அதுக்கு சிரிக்கலனா ஹ்யூமர் சென்ஸ் இல்லாதவன்னு நம்மளயே ரிவீட்டு அடிக்குறாய்ங்க.. இவிங்க என்னிக்குமே இப்டித்தான் தல.. நாம குப்பைகள தவிர்த்துட்டு நல்ல படங்கள பாப்போம். உற்சாகப்படுத்துவோம்.
அப்புறம் பழய தில்லுமுல்லு திரைக்கதை வசனம் விசுவா ? எனக்கு புதிய செய்தி இது. ஆச்சரியமா இருக்கு.
தில்லுமுல்லு 2013 படத்தின் வெற்றி பயப்பட வைக்கிறது.
ReplyDeleteஇதே ரீதியில் போய் காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு போன்ற படங்களையும் கை வைத்து விடுவார்களோ ?
இந்த மாதிரி பழைய படங்களை ரீமேக் செய்வதில் இருந்து தடை வாங்கினால் தான் இதருக்கு முடிவு உண்டு சார்.
Deleteபடு போர்’ங்க. படம் பிடிக்கவில்லை.
ReplyDeleteவருகைக்கு நன்றி விஜி..
Deleteஆர்வகோளார்ல் நான் இப்படம் பார்க்க இருதேன் நல்ல வேளை தடுத்து ஆட்கொண்டீர்கள்! நன்றிகள் பல !
ReplyDeleteவருகைக்கு நன்றி பாஸ்.. கூடிய சீக்கிரம் புதிய தலைமுறை சேனல்ல போடுவாங்க பாஸ்.. அதுல பாருங்க. :)
Deleteஎப்டியுமே இந்த படம் நம்ம பதிவர்கள திருப்தி படுத்தாதுன்னு ஏற்கனவே தெரிஞ்சிடிச்சு.. இங்கும் அதே அதே..
ReplyDeleteஆனா படம் வெற்றின்னு வெளியில பேசிகிராய்ங்க..
நமக்கு தான் காமெடி சென்ஸ் குறைஞ்சு போச்சு போல.
Delete