Sunday, June 09, 2013

அஸ்ஸாசின்ஸ் (2009)- திட்டமிட்ட விபத்துக்கள்- கேன்டனீஸ் மூவி

பதிவு எழுதி கிட்ட தட்ட முன்று மாதங்கள் ஆகி விட்டது. இங்கு அமெரிக்காவில் வேலை பளு காரணமாக பதிவுலக வாழ்கையில இருந்து தற்காலிக ஓய்வு எடுக்க வேண்டி நிலைமை. இடைப்பட்ட காலத்தில் பல நல்ல தமிழ்/ பிறமொழி திரைப்படங்கள் பார்க்க நேர்ந்தது ஆனாலும் ஏதோ ஒன்று எழுதுவதை தடுத்து கொண்டே வந்தது.அது நிச்சியம் சோம்பேறித்தனம் தவிர வேறொன்றும் இல்லை.
இந்த பதிவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை இந்த ப்ளாக் ரீடர்ஸ்களுக்கும் மற்றும் எனது நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன். அதாவது ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி எனக்கு "அப்பா" என்கிற உயரிய ப்ரோமோஷன் கிடைத்தது. பையன் பிறக்கும் போது நான் பக்கத்தில் இருந்து அவன் அழுகையை ரசிக்க முடியாமல் போனது எனக்கு பெரிய வருத்தமே. அந்த வருத்தத்தை போக்க மே மாதம் 15 ஆம் தேதி இந்தியா வந்து கிட்ட தட்ட முன்று வாரம் பையனுடன் இருந்து விட்டு நேற்று (ஜூன் 7) தான் திரும்ப யூ.ஸ் வந்து சேர்ந்தேன். இடைப்பட்ட நாட்களில் சென்னையில் பதிவுலகத்தை சேர்ந்த நண்பர்களை சந்தித்தது மனதுக்கு பெரிய நிறைவை குடுத்தது. பதிவு எழுதுவதை விட்டு விடுவது பெரிய முட்டாள்தனம் என்பதை உணர்ந்து கொண்டேன். நிறைய படங்களை எழுத முடியாவிட்டாலும் அவ்வப்போது நேரம் ஏற்படுத்தி நான் ரசித்த படங்களை பற்றி எழுதாமல் என்று எண்ணுகிறேன். பார்க்கலாம் எப்படி போகிறது என்று.

அஸ்ஸாசின்ஸ் AKA ஆக்சிடென்ட்ஸ் (2009) கேன்டனீஸ் மொழி திரைப்படம். கேன்டனீஸ் என்பது நமது பாஷையில் சைனீஸ் மொழி. இந்தியா டூ லண்டன் விமான பயணத்தில் இந்த படத்தை பார்க்க நேர்ந்தது. படம் அட்டகாசமான திரில்லர் வகையை சேர்ந்தது. இன்ஃபெர்னல் அஃபேர்ஸ் (Infernal Affairs - 2002) வகை கேன்டனீஸ் படங்களை நீங்கள் விரும்பி பார்த்து இருந்தீர்கள் என்றால் இந்த படம் உங்களுக்கு நிச்சியம் பிடிக்கும். The Departed (2006) படம் இன்ஃபெர்னல் அஃபேர்ஸ் படத்தின் தாக்கத்தில் உருவானது தான். 90 நிமிடங்கள் ஓடும் ஆக்சிடென்ட்ஸ் திரைப்படம் ஒரு நல்ல ரோல்லர் கோஸ்டர் ரைட் என்றல் அது மிகையாகாது. படத்தின் இறுதி காட்சி வரை சுவாரிசியமா இருக்கும். படத்தை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.


கூட்டம் நிறைந்த பீக் ஹவர்ஸ் டிராபிக்கில் இளம் பெண் ஓட்டி வந்த கார் பஞ்சராகி நடுவில் நின்று விடுகிறது. பின்னால் வரும் நடுத்தர வயதுக்காரர் கடுப்பாகி தனது காரை காலியான பக்கத்து தெருவுக்கு திருப்புகிறார். நேரத்தில் அவர் ட்ரக் ஒன்றுக்கு வழிவிட்டு ஓரமாகச் செல்கையில் வீதியின் மேலே கட்டியிருந்த பேனர் ஒன்று எதிர்பாராத விதமாக கார் கண்ணாடி மீது விழுகிறது. இவர் காரை விட்டு இறங்கி கடைக்கார‌ரிடம் பேனரை அகற்றும்படி சொல்கிறார். அவரோ அது தன்னுடையதில்லை, மேலே உள்ளவர்களுடையது என்கிறார். கோபத்தில் காரை ஓட்டி வந்தவர் பேனரை இழுக்க, அதை கட்டியிருந்த கம்பி விசையுடன் அவருக்கு மேலேயுள்ள கண்ணாடியில் மோதி, கண்ணாடி உடைந்து அவர் மீது மழை போல பொழிகிறது. அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க சாய்கிறார் காரை ஓட்டி நடுத்தர வயது ஆசாமி. முதலுதவிக்கு அவரை எடுத்துச் செல்லவோ, ஆம்புலன்ஸ் உதவிக்கு வரவோ முடியாதபடி சுற்றிலும் ட்ராஃபிக் ஜாம். சற்று நேரத்தில் எல்லோரும் பார்த்து நிற்க அந்த  துரதிஷ்டவசமாக விபத்தில் அவர் இறந்து போகிறார்.

சிறிது நேரம் கழித்து தான் நமக்கு புரிகிறது இது விபத்து இல்ல, திட்ட மிட்ட படுகொலை என்பது. இதில் இருந்து நாம் நிமிர்ந்து உட்காருவோம். அடுத்து இந்த கொலையை செய்தவர்களை பற்றி நாம் தெரிந்து கொள்வோம். அவர்கள் நான்கு பேர் கொண்ட டீம். அழகிய இளம் பெண், வயதான அங்கிள் ஒருவர், குண்டு மனிதன் இவர்கள் மூவரையும் வழி நடத்தும் விபத்துகளை திட்டமிடும் பிரைன் (Brain) எனப்படும் இளைஞன். தமிழ் சினிமா பாஷையில் சொன்னால் கூலிப்படை. ஆனால் இவர்களின் வொர்க்கிங் ஸ்டைல்தான் வித்தியாசம். யாருக்கும் சந்தேகம் வராதபடி விபத்து போல் கொலைகளை செட்டப் செய்வதுதான் இவர்களின் ஸ்பெஷாலிட்டி.

அடுத்து இவர்களுக்கு ஒரு ஆஃபர் வருகிறது. நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் அமர்ந்து இருந்து ஒரு பெரியவரை கொலை செய்ய வேண்டும் என்பது தான் அந்த வேலை. இவர்களும் அந்த வேலையை ஏற்று கொண்டு அதற்கான ப்ளான் தயார் செய்கிறார்கள். அந்த காட்சி மிகவும் நன்றாக படமாக்க பட்டு இருக்கும், அந்த ப்ளானை மிகவும் வி‌ரிவாக காட்டுவார்கள். சக்கர நாற்காலி மனிதரை இவர்கள் வெற்றிகரமாக கொலை செய்த பிறகு எதிர்பாராதவிதமாக அவர்கள் டீமைச் சேர்ந்த குண்டு மனிதன் விபத்தில் இறந்து போகிறான். இறப்பதற்கு முன் பிரைனிடம் அவன் சொல்வது, "இதுவும் விபத்துதானா?"




இதை கேட்டவுடன் மற்ற டீம் மெம்பெர்ஸ்க்கு பயம் பிடித்து கொள்கிறது. குண்டு ஆள் இறந்து போனது நிஜமாகவே விபத்தா இல்லை அவர்களைப் போல் யாரேனும் திட்டமிட்டு உருவாக்கிய விபத்து கொலையை என்று? பிரைன் தனது விசாரணையை முடுக்கி விட, சக்கர நாற்காலி ஆளின் இன்சூரன்ஸ் ஏஜெண்ட் மீது சந்தேகம் வலுக்கிறது. ஏஜெண்ட் தான் குண்டு ஆளை திட்டமிட்டு கொலை செய்து விட்டான் என்று பிரைன் நம்பி அந்த ஆளை நெருங்கும் சமயம் இவர்கள் டீமின் வயதான அங்கிள் மற்றுமொரு விபத்தில் உயிரை விடுகிறார். இனி பழிக்கு பழி என்று பிரைன் முடிவு செய்து ஏஜெண்டை விபத்து போல் கொலை செய்ய துல்லியமாய் திட்டமிட்டு தனது ப்ளானை செயல்படுத்தும் போது தான் உண்மை தெரியவருகிறது. அதுவும் கடைசிக்கு கடைசியாக தான் யார் கொலையாளி என்று தெரியவருகிறது. அது தெரியும் போது நிச்சியம் ஒரு "அட" போட வைக்கும். அது என்ன வென்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆக்சிடென்ட்ஸ் - விபத்தா..?? கொலையா...??

படத்தின் ட்ரைலர் காண:
http://www.youtube.com/watch?v=V9ljtnwHOUE

My Rating: 7.7/10......


15 comments:

  1. முன்பே சொன்னாலும், மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்... அப்பாவானதற்கு வாழ்த்துக்கள் ராஜ்... நான்கைந்து பத்தியில் சொல்லபட்ட விமர்சனமே படத்தின் விறுவிறுப்பைக் காட்டுகிறது... அருமை... இன்னும் பார்த்த படங்களைப் பற்றி எழுதுங்கள்... ரேட்டிங் கொடுக்கவில்லையே ?

    ReplyDelete
    Replies
    1. நன்றி அகல்'. ரேட்டிங் கொடுத்துவிட்டேன்.

      Delete
  2. அவ்வப்போதாவது இது போல் தொடரவும்...

    ப்ரோமோஷனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் ராஜ்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்..

      Delete
  3. வாழ்த்துக்கள் தல! மிக்க மகிழ்ச்சி :-)

    Accidents படம் பற்றி ஏற்கனவே எங்கோ படித்து படத்தையும் பார்த்தும் இருக்கிறேன். அருமையான படம். தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
    Replies
    1. எழுதுறேன் தல...நீங்களும் அப்ப அப்ப தொடர்ந்து எழுதுங்க.

      Delete
  4. தந்தையாக பதவி உயர்வு பெற்றதற்கு வாழ்த்துகிறேன்.

    நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து எழுதவும்.

    ReplyDelete
  5. Congratulation!!!

    Review superb!

    ReplyDelete
  6. நீங்கள் இந்தியா வந்ததையும் தந்தை ஆனா சந்தோசத்தையும் பதி உலக நண்பர்களின் சந்திப்பு பற்றியும் நீங்கள் கூறும் முன்பே நங்கள் அறிந்து கொண்டோம் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்..உங்களை தான் சந்திக்க முடியவில்லை.

      Delete
  7. தல,

    முதல்ல தந்தையாக ப்ரமோஷன் பெற்றதுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    படத்தப்பத்தி ரெண்டே பாராவில சொல்லி விறுவிறுப்பைக் கூட்டிட்டீங்க. படம் பாக்கனும்னு ஆர்வம் வருது. கண்டிப்பா பாப்பேன் தல.
    (நட்புக்கும் அறிமுகத்துக்கும் நன்றி தல..!! மீண்டும் வருவேன்..!!)

    ReplyDelete
    Replies
    1. அடிக்கடி சந்திப்போம் தல..

      Delete
  8. வாழ்த்துக்கள் பாஸ்

    ReplyDelete