Sunday, July 22, 2012

HR மேனேஜர் -நாய் வாடகைக்கு -ரெண்டு மாங்காய்

Dark Knight Rises ஹாங்ஓவரில் இருந்தது வெளி வர நெட்டில் மேய்ந்த போது கிடைத்த சில சுவாரிசியமான ஜோக்ஸ்.....!!!!
------------------------------------------------------------------------------------------------------------------
ஐடி HR மேனேஜர்:
ஒரு பெரிய IT கம்பெனியின் HR மேனேஜர் இறந்தபின் சொர்க்கம் போனார். வாயிலில் தடுக்கப்பட்டார். உங்களுக்கு நரகத்தில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார்கள்.
நரகத்துக்கு போய் ஒரு நாள் சோதனை ஓட்டமாக தங்கியிருப்பேன். பிடித்தால் தொடர்ந்து இருப்பேன். இல்லாவிட்டால் இங்கு வருவேன். இடம் தரவேண்டும் என்ற நிபந்தனையுடன் நரகம் போனார் மேனேஜர்.
அங்கு போய் பார்த்தால், நரகமா, சொர்க்கமா என்று இருந்தது. அருவிகள், பூங்காக்கள், மான்கள், மயில்கள், இன்னிசை, ரம்பை, ஊர்வசி ஆட்டம் என்று ஜெகஜ்ஜோதியாக இருந்தது.
மகிழ்ந்த மேனேஜர், திரும்ப சொர்க்க வாயிலோனிடம் வந்து, நரகத்திலேயே வசிப்பதாக எழுதிக் கொடுத்துவிட்டுப் போனார்.
மறுநாள்.. நரகம்..!
எங்கும் மரண ஓலம், சாம்பலும் புகையும் சூழ, கிங்கரர்கள், பாவிகளை கொத்து பரோட்டா போட்டுக்கொண்டிருக்க, மேனேஜர் பரிதாபமாகக் கேட்டார்..
"நேத்து பார்த்தது ஸ்கிரீன் சேவரா..?"
பதில் உடனே வந்தது,,,
இல்லை..அது ஸ்கிரீன் சேவர் கிடையாது.... நேற்று உன்னை நாங்கள் ரெக்ரூட் (Recruit) செய்தோம்..... ஆபீஸில் முதல் நாள் அப்படி தான் இருக்கும்...... இன்று முதல் நீ எங்கள் பணியாள்.....!!!!
------------------------------------------------------------------------------------------------------------------
எப்ப முடியும் ???? 
ஒரு முடிதிருத்தும் நிலையத்துக்கு ஒரு இளைஞன் வந்தான்.. அப்போது முடி திருத்துபவர் வேறொருவருக்கு முடி திருத்திக் கொண்டிருந்தார்.. இளைஞன் கேட்டான்..
"இவருக்கு முடிவெட்டி முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்..?'
"இரண்டு மணி நேரம்.."
இளைஞன் போய்விட்டான்.. மீண்டும் ஒருவாரம் கழித்து வந்தான்.....
" இந்த வேலை முடிய் எவ்வளவு நேரம் ஆகும்..?"
" இரண்டு மணி நேரம்.."
போய்விட்டான்.. மீண்டும் ஒரு வாரம் கழித்து வந்து...
" இவருக்கு முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்..?'
" ஒன்றரை மணி நேரம்.."
இளைஞன் வழக்கம்போல கிளம்பிப்போக.. முடி திருத்துநர் தன் மகனிடம் சொன்னார்...
"இந்த கிறுக்குப் பய எங்க போறான்னு பாத்துட்டு வாடா.."
அரைமணி நேரம் கழித்து பயல் திரும்பி வந்தான் வாய்கொள்ளாத சிரிப்புடனும் கையில் மசால் வடையுடனும்........
"அப்பா..அந்த கிறுக்குப்பய நம்ப வீட்டுக்குள்ளதான் போனான்.. அக்கா காசு குடுத்து என்ன வடை வாங்கிக்க சொன்னா...!"
------------------------------------------------------------------------------------------------------------------
நாய் வாடகைக்கு !!!!!
ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது, இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்படுவதைப் பார்த்தார். அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல, அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக செல்லக் கண்டார். இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய் வைத்திருந்தவரை அணுகி......
“இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை? ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?”
“முதலில் செல்வது எனது மனைவி.”
“என்ன ஆயிற்று அவருக்கு?”
“எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது”
“இரண்டாவது பிணம்?”
“அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச் சென்ற அவரையும் கொன்றுவிட்டது”
உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், “இந்த நாய் எனக்கு வாடகைக்குக் கிடைக்குமா?”
அதற்கு அவர் சொன்னார், “வரிசையில் போய் நில்லுங்கள்...!!!”
------------------------------------------------------------------------------------------------------------------
Deforestation
ரெண்டு மாங்காய்:
நம்ம பா.சிதம்பரமும் மன்மோகன் சிங்கும்  ஊட்டிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு எதிரில் ஒரு அழகான பெண்ணும், அவளது பாட்டியும் அமர்ந்திருந்தனர். கொஞ்ச நேரத்திலேயே நமது சிதம்பரத்துக்கும், அந்த பொண்ணுக்கும் இடையில் பார்வை பரிமாற்றங்கள் தொடங்கியது. சிறிது நேரத்தில் ரயில் ஒரு குகைப் பாதையில் நுழைந்தது. உள்ளே மையிருட்டு. அப்பொழுது ஒரு முத்தமிடும் சத்தம் கேட்டது. தொடர்ந்து ஒரு அறை விழும் சத்தமும் கேட்டது.
ரயில் சிறிது நேரத்தில் குகைப் பாதையிலிருந்து வெளி வந்த பொழுது, நால்வரும் அவரவரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தனர்.
பாட்டி மனதிற்குள் நினைத்தார், "அந்த ஆளுக்கு ஆனாலும் ரொம்ப திமிரு. என் பேத்திக்கு முத்தம் கொடுக்கிறானே படவா! ஆனாலும் என் பேத்தி பரவாயில்லை. உடனே அவனை அறைஞ்சுட்டாள்."
மன்மோகன் சிங் மனதிற்குள், "இந்த பயலுக்கு இப்படி முத்தம் கொடுக்கற அளவுக்கு தைரியம் இருக்கும்னு தோண்லையே!! ஆனாலும் அதற்காக அந்த பெண் என்னை அறைஞ்சிருக்க வேண்டாம்!!!"
அந்த பெண், "அந்த பையன் முத்தம் கொடுத்தத நினைச்சா சந்தோஷமா இருக்கு. அனா பாவம்! நம்ம பாட்டி அவனை அறைஞ்சுட்டாங்களே!!"
நம்ம சிதம்பரம் என்ன நினைச்சார் தெரியுமா? "வாழ்க்கைல இந்த மாதிரி ஒரு நிமிஷம் ஒருத்தனுக்கு கிடைக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனுமே. பின்னே சும்மாவா? ஒரே நேரத்துல ஒரு அழகான பெண்ணுக்கு முத்தம் கொடுத்துவிட்டு, மன்மோகன் சிங்கை அறையும் வாய்ப்பும் கிடைக்குமா என்ன?"
அந்த பொண்ணு தான் 2G ஸ்பெக்ட்ரம்ன்னு நான் சொல்ல மாட்டேன்...
------------------------------------------------------------------------------------------------------------------


Friday, July 20, 2012

The Dark Knight Rises (2012)- Mind Blowing

The Dark Knight வெளி வந்து சரியாய் நாளு வருடம் கழித்து வெளி வந்து உள்ளது "The Dark Knight Rises". TDKR அளவுக்கு வேற எந்த படத்துக்கும் இவ்வளவு எதிர்பார்ப்பு இருந்து நான் பார்த்தது இல்லை. உலகமே பட ரிலீஸ்சை நாள் கணக்கில் எண்ணி பிறகு மணி கணக்கில் எண்ணி கொண்டு இருந்து. வானுயர்ந்த எதிர்பார்ப்பு. பேட்மேன் மேல் இருந்த எதிர்பார்ப்பை விட எனக்கு நோலன் மற்றும் வில்லன் பேன் (Bane) மேல் தான் எதிர்பார்ப்பு அதிகம். Bane மேல் எதிர்பார்ப்பு வர காரணம் ஜோக்கர். நோலன் உருவாக்கிய அதி அற்புத கதாபாத்திரம் ஜோக்கர். The Dark Knight படத்தில் அதகளம் பண்ணி இருப்பார். நோலன் இவ்வளவு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார...???? கண்டிப்பாய், உங்கள் எதிர்பார்ப்பையும் மீறி பூர்த்தி செய்து உள்ளார் நோலன். அவர் என்றுமே ஏமாற்றியது இல்லை. இந்த முறையும் பேட்மேன் ரசிகர்களை மட்டும் அல்லாது நோலன் ரசிகர்களையும் திருப்தி படுத்தி உள்ளார்.
கோத்தம் நகரை ஆழிக்க புறப்பட்டு வந்து இருக்கும் Bane மற்றும் அவனது படையை பேட்மேன் தடுத்து நிறுத்துவது தான் படத்தின் கதை என்று ஒரு வரியில் சொல்லி விட முடியாது. TDKR பார்பதற்கு காமிக்ஸ் படித்து இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் கண்டிப்பாய் பேட்மேன் திரைபடங்கள் முதல் ரெண்டு பாகம் பார்த்து இருக்க வேண்டியது அவசியம். பேட்மேன் முதல் பாகமான Batman Begins படத்தில் ப்ரூஸ் வேனை (Bruce Wayne) பேட்மேன் ஆக மாற்றிய League of Shadows என்ற ஒரு குழுவை பற்றி நோலன் சொல்லி இருப்பார். அடுத்து  வந்த Dark Knight படத்தில் லீக் ஆப் ஷடோவ்ஸ் பற்றி ஒரு வார்த்தை கூட வராது. ஆனால் TDK படத்தில் ஹார்வி டென்ட் (Harvy Dent) என்ற டிஸ்டிரிக்ட் அட்டர்னி (DA) என்ற கதாபாத்திரம் பண்ணும் கொலைகளுக்காண பழியை பேட்மேன் ஏற்று கொள்ளவது போல் படத்தை முடித்து இருப்பார். இந்த இரண்டு விஷயங்களையும் (League of Shadows & ஹார்வி டென்டின் கொலைகளையும்) மேலும் சில முதல் ரெண்டு பாக முடிச்சுக்கலையும் நோலன்  இந்த படத்தில் மிக அருமையாக அவிழ்த்து இருக்கிறார்.

TDK படத்தில் ஜோக்கரின் அறிமுகம் அந்த கதாபாத்திரத்தின் புத்திசாலி தனத்தை நமக்கு எடுத்து காட்டும். TDKR படத்தின் வில்லன் Bane, மிக மிக பலசாலி, ஸோ, அவனது அறிமுகம் எப்படி இருக்க வேண்டும் ?? சும்மா அட்டகாசமாய் இருக்க வேண்டாமா..??? நோலன் இந்த காட்சியில் பின்னி இருப்பார். நோலன் Bane-னின் அறிமுக காட்சியை அவனது பலத்தை நிரூபிப்பது போல் வைத்து இருப்பார். வானத்தில் பறந்து கொண்டு இருக்கும் ஒரு ஏரோ-பிலேன்னை Bane தகர்ப்பது போன்ற ஒரு காட்சி. தியேட்டரே கதறி விட்டது. நான் பார்த்தது வெறும் 70mm ஸ்கிரின் தியேட்டரில், அதுவே அட்டகாசமாய் இருந்தது, IMAX யில் பார்த்தால் இன்னும் பிரமாதமாய் இருந்தது இருக்கும்.அடுத்த வாரம் தான் IMAX பெரிய ஸ்க்ரீனில் பார்க்க போகிறேன்.
Bane Flight Scene
Bane ஆக நடித்து இருப்பவர் டாம் ஹார்டி (Tom Hardy). இவரது நடிப்பை ஜோக்கர் அளவுக்கு கம்பேர் செய்வது சரி இல்லை என்று நான் நினைக்கிறன். Bane தனது முகத்தை முக்காவாசி மாஸ்க் போட்டு மறைத்து இருப்பார். வெறும் கண்கள் அவரது நெற்றி, மற்றும் தோள்பட்டை மட்டுமே வைத்து ஜோக்கர் அளவுக்கு பெர்பார்மன்ஸ் குடுப்பது சத்தியமே இல்லை. ஆனாலும் ஹார்டி Bane ஆக மிகவும் சிறப்பான நடிப்பை வெளி படுத்தி இருப்பார். அவரது குரல் வித்தியாசமாய் இருக்கும் .ஜோக்கர் அளவுக்கு இல்லை என்றாலும் Bane மேல் எனக்கு பயம் வர தான் செய்தன. Baneனை வில்லன் என்பதை விட தீவிரவாதி என்றால் சரியாக இருக்கும். அவன் செய்யும் செயல் எல்லாமே தேர்ந்த பயங்கரவாதி போல் தான் இருக்கும். பேட்மேன்க்கு உடல் ரீதியான சவால் ஏற்படுத்தி இருப்பார் Bane. 

Catwomen ஆக நடித்த அன்னே ஹாத்வே (Anne Hathaway). அன்னேயிடம் இருந்தது இப்படி பட்ட பெர்பார்மன்ஸ் நான் சத்தியமா எதிர்பார்க்க வில்லை.படத்தில் இரண்டாவது பெஸ்ட் பெர்பார்மன்ஸ். நளினமான நடிப்பு ஆகட்டும், ஆக்சன் காட்சி ஆகட்டும், அன்னே அற்புதமாய் பண்ணி இருக்காங்க. சூப்பர் ஹீரோயின் CatWomen னை அப்படியே நாம் கண் முன்னே கொண்டு வந்து இருப்பார் அன்னே. அன்னே பேட்மேன் வாகனமான பைக் (Batpod) ஓட்டும் ஒரு காட்சி செமயாய் இருக்கும். படத்தில் அன்னே கதாபாத்திரத்தை கொண்டு நோலன் பல ட்விஸ்ட் வைத்து இருப்பார். அதை சொல்லி படத்தின் சுவாரிசியத்தை குறைக்க விரும்ப வில்லை.
Catwomen with BatPod
அடுத்து படத்தின் பெஸ்ட் பெர்பார்மர் மைக்கேல் கைன் (Michael Caine). இவர் பேட்மேனின் நலம் விரும்பி ஆல்ஃபிரட். இவரும் பேட்மேனும் பேசும் சில வசனங்கள் எனக்கு கண்ணீர் வர வழைத்து விட்டன. ஒரு சூப்பர் ஹீரோ/ ஆக்சன் படத்தில் இப்படி பட்ட உணர்ச்சி மிக்க காட்சிகள் வைக்க நோலனாலே மட்டுமே முடியும். God Father II, The Shawshank Redemption படத்தில் வரும் சில உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு ஈடான காட்சிகள் ஆல்ஃபிரட் மற்றும் பேட்மேன் பேசும் காட்சிகள். மொத்தமே நான்கு ஐந்து காட்சிகள் தான் ஆல்ஃபிரட் வருவார். ஆனால் அதில் ஆஸ்கார்க்கு போதுமான நடிப்பை வெளி படுத்தி இருப்பார். Hats Off கைன். 
Caine
கடைசியாக பேட்மேன் ஆக நடித்து இருக்கும் கிறிஸ்டியன் பேல். முதல் ரெண்டு பேட்மேன் படங்களை விட இந்த படத்தில் தான் பேல் தனது நடிப்பு முத்திரையை மிகவும் அழுத்தமாக பதித்து உள்ளார். ப்ரூஸ் வேனே (Bruce Wayne) ஆக 8 வருடங்கள் ஓய்வு எடுத்து கொண்டு இருப்பவரை Bane மற்றும் CatWomen இருவரும் சேர்ந்து மீண்டும் பேட்மேன் சூட் போட வைத்து விடுவார்கள். படத்தில் முதல் தடவையாக பேட்மேன் சூட் போட்டு கொண்டு பேல் பைக் (Batpod) ஓட்டும் அந்த காட்சிக்கு தியேட்டரே ஆரவாரம் செய்தது. Batpod யில் இருந்தது பறக்கும் வாகனமான BatWing க்கு பேட்மேன் மாறும் அந்த காட்சியை பார்த்த எனக்கு ஏ.ஸி குளிரிலும் வேர்த்து விட்டது. அப்படி பட்ட அட்டகாசமான காட்சி அது. மிகவும் அற்புதமாய் எடுத்து இருப்பார் நோலன். Bane மற்றும் பேட் மேன் சண்டை போடும் காட்சி இன்னும் நன்றாக எடுத்து இருக்கலாம்.

படத்தில் நிறைய நோலன் ட்விஸ்ட் இருக்கிறது. படத்தின் முடிவு அல்லது சஸ்பென்சை பார்வையாளர்கள் யூகிக்க நோலன் படத்தின் நடுவில் சில கேரக்டர் முலம் கொஞ்சம் ஹின்ட் தருவார். The Prestige  படத்தில் கட்டர் (Caine) சொல்லும் ஒரு வசனம் முலமாக படத்தின் கிளைமாக்ஸ் பற்றி நோலன் ஒரு ஹின்ட் குடுத்து இருப்பார். அதே போல் இந்த படத்திலும் நிறைய ஹின்ட் குடுத்து இருப்பார் நோலன். The Child, Auto Pilot, மற்றும் ஆல்ஃபிரட் பேசும் சில வசனங்கள் முலமாக நீங்கள் கிளைமாக்சை ஓர் அளவு யூகிக்கலாம்.
முக்கியமாக பின்னணி இசை, Hans Zimmer மிகவும் அருமையான இசையை வழங்கி உள்ளார். பேட் மேன் Bane யிடம் அடி வாங்கி மறுபடியும் ரீ-என்ட்ரி ஆகும் காட்சியில் மனுஷன் பின்னி இருப்பார். கேமராமேன் Wally Pfister, இவர் தான் நோலனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர், ஸ்டாக் மார்க்கெட் பைக் சேஸிங் காட்சிகள், மற்றும் கிளைமாக்ஸ் BatWing சேசிங் காட்சிகளை மிகவும் தந்துருபமாய் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருப்பார். Bane கோத்தம் நகரை வெடிக்க வைக்கும் காட்சி, ரொம்பவும் ரியல்ஸ்டிக் ஆக படம் ஆக்கி இருப்பார் Pfister.
Bat-Wing
படம் மொத்தம் 165 நிமிடங்கள், ஒரு இடத்தில கூட ஏன் ஒரு வினாடி கூட எனக்கு போர் அடிக்க வில்லை. ஐயோ அதுக்குள்ளே முடிந்து விட்டதே என்று தான் இருந்து. படத்தில் சில பல குறைகள், லாஜிக் மிஸ்டேக் இருக்க தான் செய்தன, ஆனால் படத்தின் பிரம்மாண்டத்தின் முன்பு அதை எல்லாம் நீங்கள் மறந்து போவீர்கள். படத்தை அட்டகாசமாய் முடித்து இருப்பார் நோலன். படம் முடிந்த உடன் தியேட்டரே எழுந்து நின்று கை தட்டடியது. பெரிய வருத்தம் என்ன வென்றால் இனி மேல் பேட் மேன் படங்களை நோலன் இயக்க மாட்டார், பேட் மேன் ஆக பேல்லும் நடிக்க மாட்டார் என்பது உறுதி ஆகி உள்ளது. இனி மேல் வர போகும் பேட் மேன் படங்களை WB வேறு டைரக்டர் கொண்டு எடுக்க வேண்டியது தான். ஆனால் அவர்களால் நோலன் தொட்ட உச்சத்தை தொட முடியுமா என்பது சந்தேகமே !!!!!!
The Dark Knight Rises - EPIC CONCLUSION 

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் படத்தின் மிட் நைட் பிரிமியர் ஷோ ஒன்றில் புகுந்த ஒரு சைகோ கொலைகாரன் படம் பார்த்து கொண்டு இருந்த 12 அப்பாவி பொது மக்களை சுட்டு கொன்று உள்ளன். 24 வயது நிரம்பிய அந்த சைகோவின் பெயர் ஹோம்ஸ். அவனை அரெஸ்ட் செய்த கொலராடோ போலீஸ்யிடம் தான் தான் ஜோக்கர் என்றும் உளறி உள்ளன். இந்த மாதிரி பைத்தியக்கார்களுக்கு அமெரிக்காவில் பஞ்சமே இருக்காது. அனைவரையும் இந்த சம்பவம் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

My Rating: 9.2/10......


Wednesday, July 18, 2012

The Dark Knight Rises- ஜோக்கர் -பாகம்-2

நோலன் பேட்மேன் சீரீசில் எடுத்த இரண்டாவது படம் The Dark Knight (2008). இந்த முறை நோலன் தன் பேட்மேன் படத்திருக்கு தேர்வு செய்த வில்லன் ஜோக்கர். காமிக்ஸ் படித்த அனைவருக்கும் தெரியும், ஜோக்கர் தான் பேட்மேன் வில்லன்களிலே மிகவும் முக்கியமான வில்லன் என்று. அதுவும் இல்லாமல் அதி புத்திசாலி வேறு. பேட்மேன் ஜோக்கரை பிடிக்க ஒரு மூவ் அல்லது பிளான் A தயார் செய்தால், ஜோக்கர் அதை முறியடிக்க  16 மூவ் மற்றும் பிளான் A, B, C, D என்று பல பிளான் தயார் செய்து வைத்து இருப்பான். பிளான் A தோல்வி அடைந்தால் பிளான் B, அதுவும் போச்சு என்றால் பிளான் C. இப்படியாக  பேட்மேனை கவிழ்க வரிசையாக பல ஐடியாகளை எப்பொழுதும் தயாராகவே வைத்து இருக்கும் கதாபாத்திரம் தான் ஜோக்கர்.
அளவுக்கு அதிகமான கிறுக்குத்தனம், எதிரியை உளவியல் ரீதியாக பயமுறுத்தி கொலை செய்வது, பணத்தின் மீது துளியும் ஈடுபாடு இல்லாதது போன்றவை ஜோக்கரில் சில பண்புகள். பேட்மேனை தன்னால் மட்டுமே விழத்த முடியும் என்ற அசாத்திய நம்பிக்கை ஜோக்கர்க்கு உண்டு. இந்த மாதிரியான உளவியல் கதாபதிரங்களை     செதுக்கி திரையில் கொண்டு வருவது என்றால் நோலன்க்கு அல்வா சாப்பிடுவது போல். மனுஷன் பின்னி விடுவார். பேட்மேன் சீரீஸ் தவிர்த்து நோலன் எடுத்த அணைத்து படங்களும் உளவியல் சம்பந்த பட்ட படங்கள் தான். 15 நிமிடங்களுக்கு மேல எதையும் ஞாபகம் வைத்து கொள்ள முடியாத Memento, தூங்க முடியாமல் அவதி படும் Insomania, மாஜிக் கலைஞர்களின்  ரகசியங்களை சொன்ன The Prestige போன்ற பல உளவியல் படங்களை நோலன் எடுத்து இருந்தார்.
இப்படியாக உளவியல் படங்களை எடுப்பதில் வல்லவரான நோலன் ஜோக்கர் கேரக்டர்ரை பெரிய திரையில் எப்படி கொண்டு வர போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இதற்கு முன்பு வந்த Batman Begins வெற்றியும் The Dark Knight (2008) படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தன. ஆனால் நோலன் அனைவரின் எதிர்பார்ப்பையும் தனது ஜோக்கர் கதாபாத்திரம் முலம் தகர்த்து எறிந்து விட்டார். இது வரை வந்த அணைத்து சூப்பர் ஹீரோ படங்களில்…. ஏன் இனி மேல வர போகும் அணைத்து சூப்பர் ஹீரோ படத்தின் வில்லனாலும் நோலனின் ஜோக்கர் கதாபாத்திர படைப்பின் அருகில் கூட வர முடியாது. இப்படி பட்ட சிறப்பு மிக்க ஜோக்கர் கதாபாத்திரத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியவர் ஹீத் லெட்ஜர் (Heath Ledger).  The Dark Knight படத்தில் லெட்ஜர்  சும்மா அதகளம் பண்ணி இருப்பார். முகபாவத்தில் மட்டுமன்றி, உடலிலின் ஒவ்வொரு அங்கத்தினாலும் ஜோக்கருக்கு உயிரூட்டியிருபார் லெட்ஜர் .

The Dark Knight  படத்தில் முதல் காட்சி ஒரு வங்கி கொள்ளையில் ஆரம்பிக்கும். ஜோக்கர் மற்றும் அவனது கூட்டாளிகள் மொத்தம் ஐந்து பேர் சேர்ந்து அந்த கொள்ளையை நடத்துவார்கள். அனைவரும் மாஸ்க் அணிந்து இருப்பார்கள். பார்பவர்களுக்கு யார் ஜோக்கர் என்றே தெரியாது. கொள்ளை முயற்சி நடக்க நடக்க...ஒவொருவராய் மற்றவர்களை கொலை செய்து கொண்டே வருவார்கள். அணைத்து கொலைகளும் சரியான டைமிங்கில் நடக்கும். கடைசியில் மிஞ்சி இருப்பது மாஸ்க் அணிந்த ஒரே ஆள் தான். எல்லாம் முடிந்த பிறகு கடைசியில் அந்த ஆள் மாஸ்கை கழற்றுவான், அவன் தான் தி ஜோக்கர். அந்த வங்கி கொள்ளை காட்சியிலே நமக்கு தெரிந்து விடும், இது சாதாரண படம் கிடையாது... ஜோக்கரும் சாதாரண வில்லன் கிடையாது என்று.
அடுத்து ஜோக்கர் இந்த படத்தில் பேசும் வசனங்கள். இவர் பேச ஆரம்பதாலே நமக்கு திகில் பரவ ஆரம்பிக்கும்.  ஒரு இடத்தில கூட ரத்தத்தை காட்டி இருக்க மாட்டார் நோலன். ஆனால் படத்தில் மொத்தம் 36 கொலைகள் நடக்கும். அதில் பாதிக்கும் மேல் ஜோக்கர் செய்வது தான்.

ஒரு காட்சியில் பென்சிலை மறைய வைக்கிறேன் பார் என சொல்லி கொண்டே பென்சிலை மறைய வைக்கும் அதிரடியிலாகட்டும், கிறிஸ்டியன் பேல் விருந்தில் நடுவே  புகுந்து " Good evening, ladies and gentlemen. We are tonight's entertainment! " என்று படு ஸ்டைலாக வசனம் பேசியபடி ஹீரோயினை மிரட்டு அந்த காட்சி ஆகட்டும், ஹீரோயினை  அந்தரத்தில் தொங்க விட்டு விட்டு பேட் மேனிடம் “Ooh, very poor choice of words”  என்று சொல்லி பேட்மேன் காதலியை அப்படியே விட்டு விடுவது ஆகட்டும், பேட்மேன் தனது மாஸ்க்கை கழற்ற வேண்டி ஜோக்கர் செய்யும் அட்டகாசங்கள் ஆகட்டும், பேட்மேனிடம் மாட்டிய பிறகு அந்த விசாரணை அறையில் பேசும் வசனங்கள் ஆகட்டும், மருத்துவமனையுள் புகுந்து அதை வெடிக்க செய்வது என்று லெட்ஜர் பின்னி எடுத்து இருப்பார்.
இந்த படத்தை நான் ஹைதராபாத் IMAX யில் தியேட்டரில் பார்த்தேன். நான் IMAXயில் பார்த்த முதல் படம் இது தான். அந்த அனுபவம் மறக்கவே முடியாத அனுபவம். ஒரு காட்சியில் நோலன் ஹாங்காங் நகரை வானில் இருந்து காட்டி இருப்பார். அதை பார்க்கும் போது நாமும் அந்தரத்தில் மிதப்பது போன்று இருக்கும். சுருக்க சொன்னால் Gaint Wheel –லில் மேலே இருந்து கீழே வரும் போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்று இருக்கும், அதே போன்ற அனுபவம் இந்த படத்தை IMAX யில் பார்க்கும் போது எனக்கு கிட்டியது.
Heath Ledger

எனக்கு பேட் மேன் கிறிஸ்டியன் பேலின் நடிப்பை விட ஜோக்கராய் நடித்த லெட்ஜர் நடிப்பு மிகவும் பிடித்து இருந்தது. இந்த படத்திற்கு தயார் செய்வதற்க்காக லெட்ஜர் தினமும் 15 மணி நேரம் தனியே ஹோட்டல் அறையில் பூட்டி கொண்டு பயற்சி செய்தாராம். படம் வெளி வருவதற்க்கு முன்று மாதங்கள் முன்பு அதிகமான டோஸ் கொண்ட மாத்திரைகளை எடுத்து காரணத்தால் இறந்து விட்டார். இந்த மாபெரும் நடிகர் The Dark Knight படத்திற்காக உயரிய விருதான ஆஸ்கார் விருதை பெற்றார்.
Let his Soul Rest in Peace....


Sunday, July 15, 2012

The Dark Knight Rises- பில்ட் அப்- பாகம் -1

இந்த பதிவு "The Dark Knight Rises" படத்திற்கான பில்ட் அப் மட்டுமே.....
நான் மட்டும் அல்ல உலகமே மிகவும் எதிர்பார்க்கும் "The Dark Knight Rises" படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 20. எந்திரனுக்கு பிறகு நான் ரொம்பவே எதிர்பார்க்கும் படம் The Dark Knight Rises. அதுவும் இல்லாமல் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர் "கிறிஸ்டோபர் நோலன்" அவர்களின் படம் வேறு. Christian Bale தான் பேட் மேன். நோலனின் ஆஸ்தான ஹீரோ Bale அவர்களின் அர்பணிப்பு பற்றி நான் சொல்ல ஒன்றும் இல்லை. Rescue Dawn மற்றும் The Machinist படங்கள் இவரின் நடிப்பு வெறியை உலகிற்கு எடுத்து காட்டிய படங்கள். ஹாலிவுட் கமல்ஹாசன் என்று கூட சொல்லலாம், நடிப்பில் !!!!! நோலன் மாதிரி நல்ல தரமான படங்களை இது வரைக்கும் யாரும் தொடர்சியா குடுத்து கிடையாது. படம் நல்லா இருந்தா கிரிட்டிக் (Critic) ரேட்டிங் வராது, ரேட்டிங் வந்தா படம் வசூல்ல சொதப்பிடும், வசூல் மற்றும் ரேட்டிங் ரெண்டுமே கிடைக்க பெற்ற ஒரே டைரக்டர் நோலன் மட்டுமே என்பது என் கருத்து...
நோலன் மொத்தமே ஆறு படம் தான் எடுத்து இருக்கார் The Following படத்தை நான் இந்த ஆறு படத்தில் சேர்க்க வில்லை. அதுல அஞ்சு படம் IMDB Top 125  லிஸ்ட்ல இருக்கு. Memento (2000) IMDB-8.6, Insomnia (2002), Batman Begins (2005) IMDB-8.3, The Prestige (2006) IMDB-8.4, The Dark Knight (2008) IMDB-8.9,Inception (2010) IMDB-8.8. Insomnia மட்டும் கம்மி ரேட்டிங் 7.2. அந்த படத்திருக்கு நோலன் திரைகதை எழுதாதது தான் காரணம். நோலன் அந்த படத்தை வெறும் டைரக்ட் மட்டுமே செய்து இருப்பார். நோலனின் மிக பெரிய பலமே அவரது திரைக்கதை தான். அவரது ஒவொரு படமும் நமக்கு புது புது அனுபவத்தை குடுக்கும். படத்தை ஒரு தடவை பார்ப்பது என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. நீங்க அவரின்  படங்களை எத்தனை முறை வேண்டும் என்றாலும் பார்க்கலாம். ஒவொரு முறையும் ஒரு புது விஷயத்தை அவரின் படம் முலம் நீங்கள் அறிவீர்கள். நேற்று கூட The Dark Knight படம் பார்த்தேன், ஏற்கனவே ஏழு எட்டு முறை பார்த்து இருந்தாலும் ஜோக்கர் கேரக்டர் பேசும் சில வசனங்கள் எனக்கு புதுசாய் தெரிந்தன. முதல் தடவை பார்க்கும் போது எனக்கு என்ன த்ரில் கிடைத்ததோ, அதில் சற்றும் குறையாத விறுவிறுப்பு மற்றும் த்ரில் நேற்றும் கிட்டியது. பார்வையாளனுக்கு என்ன வேண்டுமோ அதை மிக சரியாக கொடுப்பவர் நோலன்.    

சூப்பர் ஹீரோ கதைக்கு ஒரு புது இலக்கணத்தை ஏற்படுத்தியவர் நோலன். எல்லா சூப்பர் ஹீரோவிற்கும் ஒரே வேலை தான் இருக்கும், உலகத்தை தீய சக்திகளிடம் இருந்தது காப்பாற்றுவது. பேட் மேன் கூட அதே வேலையை தான் செய்வார். ஆனால் அதே வேலையை பேட் மேன் நோலனின் திரைக்கதை முலம் செய்யும் போது அது வேறு மாதிரியாக இருக்கிறது. நான் பார்த்த எல்லா சூப்பர் ஹீரோவும் கிராபிக்ஸ் முலமே தனது சாகசங்களை செய்து காட்டும் போது, நோலன் மட்டும் தனது பேட் மேன் படங்களுக்கு அதிகமாய் கிராபிக்ஸ் பயன்படுத்தாமல் ரியல் டைம் ஆக்சன் காட்சிகளை கொண்டு பேட் மேன் சீரீஸ் எடுத்து இருப்பார். பேட் மேன் காமிக்ஸ் படிக்காதவர்கள் கூட பேட் மேன் படங்களை குழப்பம் இல்லாமல் பார்க்கலாம். சரி இப்பொழுது Batman Series...

Batman Begins (2005) படத்தில் பேட் மேன்க்கு வெறும் அறிமுகம் மட்டுமே குடுக்க பட்டு இருக்கும். பேட் மேன் என்பவன் யார் ? அவனது பெற்றோர்கள், அவனது பலம், எப்படி அவன் பேட் மேன் ஆக மாறினான் என்பது போன்ற விஷயங்கள் Batman Begins படத்தில் சொல்லி இருப்பார் நோலன். சாதாரண திரைக்கதை, பெரிய ட்விஸ்ட் எதுவும் இல்லாமல் இருக்கும். வேறு சூப்பர் ஹீரோகள் போல் பேட் மேன்க்கு முழு உலகத்தையும் காக்கும் வேலை இல்லை. அவன் வாழும் கோத்தாம் நகரத்தை மட்டும் அழிவில் இருந்தது காத்தால் போதும். ஆனால் அந்த வேலை அவ்வளவு சுலபமானது கிடையாது. வேறு சூப்பர் ஹீரோக்கள் வில்லன்கள் பஞ்சத்தால் அவதி படும் போது, பேட் மேன்க்கு மட்டும் வில்லன்கள் பஞ்சமே கிடையாது. ஒவ்வொரு வில்லன்க்கும் ஒரு படம் என்று நோலன் எடுக்க வேண்டியது இருந்தால் நோலன் குறைந்தது பத்து பேட் மேன் படங்கள் எடுக்க வேண்டியது வரும். அதனால் நோலன் பேட்மேன் வில்லன்களில் மிக மிக சிறந்த வில்லனான ஜோக்கரை தனது இரண்டாவது படத்தில் உபயோக படுத்தி இருப்பார். முதல் பாகத்தில் ஒரு சுமாரான வில்லனை போட்டு இருப்பர். அவன் தான் "ஸ்கேர் க்ரோ" (Scarecrow). முதல் பாகத்தில் பேட்மேன்க்கு இவனை சமாளிப்பது பெரிய கஷ்டம் இல்லாது போல் இருக்கும். வில்லனின் பலத்தை/கேரக்டரரை வைத்து தான் சூப்பர் படங்கள் வெற்றி அடைகிறது என்று நான் சொல்வேன். சூப்பர் ஹீரோ படங்களில்  வில்லனாக சொத்தையாக இருந்தால் படம் சொத்தையாக தான் இருக்கும். இது அணைத்து படங்களுக்கும் பொருந்தும். 

நோலனின் தீவிர ரசிகர்களுக்கு  Batman Begins சிறிது ஏமாற்றம் என்றே நான் சொல்லுவேன், காரணம் படம் நேர்கோட்டில் போகும், ஹாப்பி எண்டிங், பெரிய ட்விஸ்ட் எதுவும் இல்லாதது போன்ற குறைகள் இருக்க தான் செய்தன. நோலன் Batman Begins முலம் Batman சீரீஸ்க்கு ரீபூட் (Reeboot) குடுத்தார். அதற்கு முன்பு வந்த பேட் மேன் படமான Batman & Robin  படு மொக்கையாய் இருந்தது. Batman & Robin உடன் ஒப்பிட்டு பார்த்தல் Batman Begins ரீபூட்க்கு ரொம்ப நல்ல தொடக்கமே. எப்போதும் புல் மீல்ஸ் சாப்பிடுவதற்கு முன்பு நன்றாக பசி ஏற்ற Appetizer  சூப் சாப்பிடுவோம், அது மாதிரியான Appetizer  சூப் தான் Batman Begins. அடுத்து நோலன் குடுத்து Dark Knight  என்னும் புல் மீல்ஸ். இது வரை வந்த பேட் மேன் படங்களில் மட்டும் அல்லாது ஹாலிவுட் வரலாற்றில் சிறந்த ஐந்து திரைப்படங்களை நாம் வரிசை படுத்தினால் அதில் Dark Knight  படத்திருக்கு நிச்சியம் ஐந்தில் ஒரு இடம் உண்டு. Dark knight  வெற்றிக்கும் மிக முக்கிய காரணம் அதன் வில்லன் "தி ஜோக்கர்". மிரட்டல் நடிப்பு என்றால் அது ஜோக்கர் தான்.


Friday, July 13, 2012

பில்லா-2 டானின் வரலாறு

ஆக்ஷ்ன், காமெடி, காதல், செண்டிமெண்ட்ன்னு சினிமாவுல பல வகைகள் இருக்கு. ஆக்ஷ்ன்லியே பல வகையான படங்கள் இருக்கு. சில படங்கள் சாதா ஆக்ஷ்ன் படங்களா இருக்கும், ஹீரோ வில்லன் மற்றும் அவரோட கூட இருக்கிற அடியாட்களை கையிலே அடிச்சு தும்சம் பண்ணுவாரு. பார்க்கிற நமக்கும் வில்லனை போட்டு அடிக்கணும்ன்னு தோணும். படமும் பர பரன்னு இருக்கும். தூள், கில்லி மாதிரி படங்களை இந்த லிஸ்ட்ல சேர்க்கலாம். அடுத்தது மிரட்டல் ஆக்ஷ்ன், சும்மா பார்க்கிறவன் கண்ணுல கத்தி, அருவாளை விட்டு ஆட்டுறது, புதுபேட்டை, தடையற தாக்க மிரட்டல் ஆக்ஷ்ன் லிஸ்ட்ல சேர்க்கலாம். படம் பார்பவர்களுக்கு ஒரு மாதிரியான திகில் அனுபவத்தை இந்த மாதிரி மிரட்டல் ஆக்ஷ்ன் படங்கள் ஏற்படுத்தும். இப்ப புதுசா ஸ்டைலிஷ் ஆக்ஷ்ன் படங்கள்ன்னு ஒரு டிரண்ட உருவாகி இருக்கு. செம ஸ்டைலான ஆக்சன் காட்சிகள், எப்போ யாரு யாரை சுடுவாங்கன்னு தெரியாம இருக்கிறது தான் ஸ்டைலிஷ் ஆக்ஷ்ன் படங்களோட ஸ்பெஷாலிட்டி. பில்லா-2 மேல சொன்ன சாதா ஆக்ஷ்ன்ல ஆரம்பிச்சு, மிரட்டல் ஆக்ஷ்ன்ல பயணம் செஞ்சு செம ஸ்டைலிஷா முடியும்.
படத்தோட கதைய அவங்க போஸ்டரிலே சொல்லிட்டாங்க.. " Every Don has a History". இந்த படம் டான்னின் வரலாற்றை அப்படியே நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. ஒரு டானின் வாழ்கையை நாம் அருகில் இருந்தது பார்ப்பது போல் இருக்கிறது. ஒரு டான்னின் வாழ்கையை இவ்வளவு தந்துருபமாய் இது வரை யாரும் தமிழ்லில் படம் பிடித்தது கிடையாது. தமிழில் வந்த சிறந்த கேங்க்ஸ்டர் படங்களில் வரிசையில் பில்லா-2 படத்திருக்கு நிச்சியம் இடம் உண்டு. இது சாதாரண தமிழ் சினிமா கிடையாது, ஒரே பாட்டுல ஹீரோ கஷ்ட பட்டு பணக்காரனாக மாறுறது, கெட்டவனா இருக்கிற ஹீரோ ஹீரோயின் அன்பால நல்லவனா மாறுறது, ஹீரோ வில்லன் கூடவே இருந்திட்டு கடைசியில் "ஐயாம் போலீஸ், இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ், உன்ன பிடிக்க தான் மாறுவேசத்துல உன் கூட சேர்ந்து கெட்டவன் மாதிரி நடிச்சேன்னு" சொல்லுறது, போன்ற என்ற எந்த சராசரி விஷயமும் இந்த படத்துல கிடையாது. வேற என்ன தான் இருக்குன்னு கேட்குறீங்களா. இது இருக்கிறது வெறும் "அஜித், அஜித், அஜித் தான். அதுவும் ரொம்ப ரொம்ப ரொம்ப கெட்ட அஜித்...

அகதியா வர அஜித், மெல்ல மெல்ல எப்படி இன்டர்நேஷனல் டான் ஆக மாறுகிறார் என்பது தான் கதையே. முதல வைர கடத்தல்ல தொடங்கி, போதை மருந்துல கால் வச்சு, கடைசியில ஆயுத பிசினஸ்ல முடியுது படம். அஜித் எப்படி அகதியாக மாறுனாறுன்னு படத்துல எங்கேயும் சொல்ல பட வில்லை.  அதே போல் படத்தில் இலங்கை அகதி என்று வார்த்தை எங்கும் வர வில்லை. ஆனா அதுக்குள்ளே அஜித் இலங்கை அகதி, டான் ஆகி வர பணத்துல புரட்சிக்கு உதவி செய்வார்ன்னு கொளுத்தி போட்டுட்டாங்க. தினமலர் பேப்பர்ல இந்த வரிகளை பில்லா வரதுக்கு முன்னாடி போட்டு இருந்தாங்க """அஜித் இலங்கை அகதியாக இந்தியாவில் தஞ்சம் புகுந்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு இண்டர்நேஷனல் அளவில் ஈழப்புரட்சிக்கு உதவுவதாக கதை....""". இது மாதிரி எல்லாம் படத்துல காட்சி கிடையாது.
அப்புறம் படம் அல்பாசினோ நடிச்ச "SCARFACE" படத்தோட தழுவல் அப்படின்னு ஒரு பேச்சு வேற. அது உண்மை தான். சில காட்சிகள் SCARFACE படத்தில இருந்தது அப்படியே பயன்படுத்தி இருக்காங்க. SCARFACE படத்துல அல்பாசினோ போதை மருந்து விற்க ஒரு ஹோட்டல் அறைக்கு போவார், அவர் அந்த ரூம்ல நுழையும் போது அங்க ஒரு பொம்பளை டிவி பார்த்திட்டு இருக்கும். டீல் பேசிட்டு இருக்கும் போது அந்த கும்பல் பாசினோவையும் அவர் கூட வந்த நண்பனையும் பிடிச்சு வச்சுகிட்டு போதை மருந்தை குடுத்திட சொல்லி மிரட்டுவாங்க. டிவி பார்த்திட்டு இருந்த பொம்பளை திடிர்ன்னு மிஷின் கன் எடுத்து காட்டுற சீன் செமயா இருக்கும். அல்பாசினோவை அந்த கும்பல் ரொம்பவே கொடுமை படுத்துவாங்க, கடைசியில தன்னோட பிரென்ட் உதவியால அல்பாசினோ அந்த ஹோட்டல இருந்தது தப்பிச்சு, அந்த கும்பல் தலைவனை நடு ரோடுல சுட்டு கொல்லுவார். டென்ஷன் எகிற வைக்கும் காட்சி அது, அதே போல ஒரு காட்சி பில்லா படத்திலும் இருக்கும். ஆனால் இதில் பெரிய த்ரில் எதுவும் இல்லாமல் சுமாராய் இருக்கும். அந்த காட்சியில் வில்லன் தேர்வு சரியாக செய்ய பட இல்லை. இன்னும் நன்றாக செய்து இருக்கலாம்.

படத்தில் அஜித் பேசும் வாசங்கள் மிக மிக குறைவே. அத்திபட்டியை தொலைத்து விட்டு பேசிய அஜித்துக்கும் இதில் தேவை படும் போது மட்டும் பேசும் அஜித்க்கும் நிறையவே வித்தியாசங்கள். டான் படங்களின் முன்னோடியாக கருத படும் "GOD FATHER" படத்தில் வசனங்கள் மூலமாவே பார்க்கும் பார்வையாளர்களை மனதில் பயத்தை உண்டு பண்ணுவார் மார்லின் பிராண்டோ. அஜித் கூட அதே போல் முயற்சி செய்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்று உள்ளார்.
பழைய அஜித் படங்களில் பஞ்ச் டயலாக் என்று சொல்லி கொண்டு ஹை பிட்சில் வெறும் சவுண்ட் மட்டுமே விடுவார்.உ.தா: "நான் தனி மனுஷன் இல்லை, என் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு". ஆனால் இந்த படத்தில் அஜித் பேசும் ஒவொரு வசனமும் செம ஷார்ப், கொஞ்சம் அசந்தா நம்ம கழுத்தை கிழித்து விடும். 

படத்தில் அஜித் கொலை செய்கிறார். வெறும் கொலை மட்டுமே செய்கிறார். எதிரி என்று நினைபவர்களை கண்ட படி துப்பாகியால் சுடுகிறார். கேங் ஸ்டார் படத்துல கொலை செய்யாமல் வடையா சுடுவார்கள். வன்முறை அதிகம் தான். ஆனால் வன்முறை இல்லாமல் கண்டிப்பாய் கேங்க்ஸ்டர் வாழ்கையை படம் பிடிக்க முடியாது. ஆனால் என்னை பொறுத்த வரை முகம் சுளிக்க வைக்கும் வன்முறை கிடையாது. பார்க்க கூடியது தான்.

படத்துல ஹீரோயின் வேற இருக்காங்க. பாட்டுக்கு கூட அவங்களை உபயோக படுத்த வில்லை.அப்புறம் படம் இவ்வளவு வசூல் செய்தது, இவ்வளவு செலவு செஞ்சாங்க, இவ்வளவு தியேட்டர்ல போட்டாங்க, ஓடுமா ஓடாதா போன்ற எந்த விஷயமும் எனக்கு சம்பந்தம் இல்லாது. நான் ஒன்னும் படத்தோட டிஸ்ட்ரிபுட்டர் கிடையாது. வெற்றி தோல்வி பத்தி கவலை பட. படம் எனக்கு நல்ல அனுபவத்தை குடுத்திச்சு. எனக்கு படம் ரொம்பவே பிடித்து இருந்தது. அஜித்யின் திரைப்பட கேரியரில் இந்த படத்தை ஒரு மைல்கல் என்றே நான் சொல்வேன்..

பில்லா-2 : A Real Gangster..

பிற சேர்க்கை: நண்பன் JZ எழுதிய கருத்து எனக்கு மிகவும் பிடித்து இருந்தது... அதையும் பதிவில் சேர்த்து உள்ளேன்..:

படத்தில் இறுதிக் காட்சி வரை வன்முறையைக் கையாண்டிருப்பது அலுப்பை ஏற்படுத்துகிற என்ற கருத்துக்கு பதில் இதோ:

பில்லா பாகம்-1 நினைவிருக்கிறதல்லவா... அதில் பிரபு பில்லாவின் எழுச்சி பற்றி பில்டப் பண்ணும் சீன்களையும், அஜித் படத்தில் காட்டப்படும் லெவலையும், அவரது சொர்க்க மாளிகையும், அங்கு திரியும் கவர்ச்சி நாயகிகளையும், இருந்தும் அவர்கள் மீதும், நயனின் மீதும் பெரிதாக ஈடுபாடு கொள்ளாமல் விலகிச் செல்வதையும், அவர் பின்னால் காட்டப்பட்ட அடியாள் பலத்தையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்..

இல்லாத இவை அனைத்தையும், உருவாக்க வேண்டிய பெரும் பொறுப்பு டோல்டி தலையில் விழுந்திருக்கிறது.. அவ்வளவு முக்கியமாக காட்டப்படும் பில்லா, அவனது எழுச்சிப் பாதையில் அதிகமான வயலன்ஸையும், அதிகமான கவர்ச்சியையும் பார்க்காமலா வந்திருப்பான்??..

அகதியாக வந்த ஒருவனுக்கு எடுத்த எடுப்பிலேயே இன்டர்நேஷனல் டானாக முடியாது.. படிப்படியாக அவன் முன்னேறுவதைக் காட்டுவததற்கு அதிகப்படியான சண்டைக்காட்சிகள் தேவையே! சண்டைக்காட்சிகள் அலுப்படிக்கிறது என்பதற்காக படத்தின் நீளத்தை கூட்டி காமெடி சீன்களையும், ரொமான்ஸ் சீன்களையும் போட்டிருந்தால் அது கேங்க்ஸ்டர் படம் என்று குறிப்பிடுவத்கே தகுதியற்றதாக மாறிவிட்டிருக்கும்!
தமிழர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.. பொங்கியெழுவார்கள் என்பதற்காக கடைசி வரை இந்த மாதிரி படங்கள் வந்து விடாமலா போய்விடும்? குடும்பத்தோடு பார்க்க வேண்டாம், இளகிய மனம் கொண்டவர்ககள், வயது குறைந்தவர்கள் பார்க்க வேண்டாம் என்பதற்குத்தான் "ஏ" சேர்ட்டிஃபிகேட் இருக்கே..எல்லாரும் பார்ப்பதற்காக அல்ல என்று சொன்ன பின்னும் போய் பார்த்துவிட்டு படத்தை 'அதற்காக' குறை கூறுபவர்கள் இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்!

படத்துக்கு A ரேட்டிங் கொடுத்தால் அது படம் வசூல் குவிப்பதற்கான நிகழ்தகவைக் குறைத்துவிடும்தான். ஒத்துக்கொள்கிறேன்.. மாறாக படத்தை U/A ஐ நோக்கி எடுத்திருந்தால், அது படத்தின் கதைக்கு தேவையான intensityஐ குறைத்துவிட்டிருக்கும்..


Sunday, July 01, 2012

ஸ்பைடர் மேன்....விம்பிள்டன்....மம்மி


ஸ்பைடர் மேன் படங்கள் ஏற்கனவே முன்று பாகங்களாக வெளி வந்த பொழுதிலும், அது எல்லாம் செல்லாது...செல்லாது, ரொம்ப சுமாரா இருக்கு, எல்லாத்தையும் அழி, முதல இருந்தது ஸ்பைடர் மேன் சீரீஸ் எடுப்போம்ன்னு கிளம்புனாங்க சோனி கம்பெனி. இந்த முறை ஸ்பைடர் மேன் சீரீஸ் டைரக்ட் செய்ய அவங்க செலக்ட் செய்த ஆளு "மார்க் வெப்" (Mark Webb). இவரு இதுக்கு முன்னாடி பெருசா எந்த  பெரிய பட்ஜெட் படங்களும் எடுத்தது கிடையாது. (500) Days of Summer  அப்படிங்கிற ரொமானஸ் படத்தை மட்டும் தான் சொல்லிக்கிற மாதிரி எடுத்து இருந்தார். அவர் மேல நம்பிக்கை வைச்சு சோனி நிறுவனம் அவருக்கு இந்த வாய்ப்பை குடுத்தாங்க. குடுத்த வாய்ப்பை ரொம்பவே நல்லா பயன்படுத்தி இருக்காரு வெப். படு மொக்கையான, தூங்கி வழிஞ்ச பேட்மேன் சீரீசை நோலன் ரீபூட் (Reboot) பண்ணுனாறு, அதுல ஒரு அர்த்தம் இருந்திச்சு. ஆனா  ஸ்பைடர் மேன் சீரீஸ் முத முனு  பாகத்ததிலும் நல்லா சம்பாரிச்ச அப்புறமும் நாங்க ஸ்பைடர் மேன் சீரீஸ்யை ரீபூட் பண்ணுவோம்ன்னு சோனி சொன்னது என்னால் ஏத்துக்க முடியல. சரி விடுங்க, அவங்க படத்தை எடுத்துட்டாங்க, நம்ம கடமை படத்தை பார்கிறது, கடமையை மட்டும் சரியா செய்வோம்..
படத்தோட தீம் பழைய "ஸ்பைடர் மேன்" படத்தோட தீம் தான். ஹீரோ, ஹீரோயின் எல்லாருமே புதுசு. ஹீரோ பீட்டர் பார்க்கர் சிறுவனா இருக்கும் போது அவரோட அப்பா, அம்மா அவரை விட்டுட்டு போயிறாங்க. எங்க போனாங்கன்னு அடுத்த பாகத்தில் சொல்லுவாங்கன்னு நினைக்கிறன். ஏன் போனாங்கன்னு இந்த பாகத்தில் சொல்லுறாங்க. ஹீரோ பீட்டர் தன்னோட அத்தை, மாமா கூட வளருகிறார். பெரியவன் ஆனதும் தன்னோட அப்பா, அம்மா ஏன் தன்னை விட்டுட்டு போனாங்கன்னு தேடி போகும் போது அவர் அப்பா கண்டு பிடிச்ச பார்முலா ஒன்னு இவருக்கு தெரியவருது. அதோட நூல் பிடிச்சு போறப்ப ஆஸ்கார்ப் (Oscorp) என்கிற ஆராச்சி நிறுவனத்தில் தன்னோட அப்பா வேலை செஞ்சாருன்னு தெரியவருது. ஆஸ்கார்ப் (Oscorp) நிறுவனம் பழைய ஸ்பைடர் மேன் -பார்ட்-1 ல வரும் அதே நிறுவனம் தான்.
அங்க பீட்டர் கர்ட் கான்னர்ஸ் (Curt Connors) என்கிற தன் அப்பாவோட பழைய நண்பர் மற்றும் தற்போதிய விஞ்ஞானியை சந்திக்கிறார். அவருக்கு ஒரு கை இல்லை. அவர் ஒரு ஆராய்ச்சி செய்கிறார். அதாவது பல்லிக்கெல்லாம் வால் அறுந்தால் மீண்டும் தானாகவே வளரும் அல்லவா அது போல மனிதர்களுக்கு ஏதாவது உறுப்பு சிதைந்து விட்டால் அதை மீண்டும் வளர வைக்கும் ஆராச்சி தான் அது. அந்த ஆராச்சி கூடத்தில் இருக்கும் அறிய வகை சிலந்தி ஒன்று பீட்டரை கடித்து விடுகிறது. சாதா ஹீரோ இப்பொழுது சூப்பர் ஹீரோ ஆகி விடுகிறார். சிலந்தி மாதிரி செவுத்துல ஓட்டுறது, வேகமா ஓடுறது போன்ற பாதி சக்தி தான் அந்த சிலந்தி கடி முலமா வருது. கையில இருந்தது போற சிலந்தி வலையை ஹீரோ "Web Shooter" என்ற கருவி முலம் உருவாக்கி கொள்கிறான். இப்ப முழு ஸ்பைடர் மேன் ரெடி. ஹீரோ ரெடி..... வில்லன், ஹீரோயின் எல்லாம் ரெடி ஆக வேண்டாமா..??? இதுக்கு நடுவுல நமக்கு ஹீரோயின் பத்தின அறிமுகம் வேற குடுக்கிறாங்க. ஹீரோயின் பழைய மேரி ஜேன் கிடையாது. காமிக்ஸ் கதையில வர க்வென் ஸ்டேஸி (Gwen Stacy) தான் ஹீரோயின். இவங்க ஸ்பைடர் மேன் கூட ஒரே காலேஜ்ல படிக்ககிறாங்க. 
பீட்டர்ரோட மாமா முதல் பாகத்துல வர மாதிரியே ஒரு கொள்ளைகாரனால் கொலை செய்ய படுகிறார். அந்த கொலை பீட்டர் கண்ணு முன்னாலே நடக்கிறது. அதை பீட்டர் தடுக்க தவறி விடுகிறான். ஸோ, பீட்டர்க்கு சமுக விரோதிகளை எதிர்த்து போராட காரணமும் ரெடி. இப்படியா சமுக விரோதிகளை எதிர்த்து போராடி வரும் பீட்டரை நியூயார்க் நகர போலீஸ் கேப்டன் ஜார்ஜ் ஸ்டேசி (George Stacy) தீவரமா தேடி வரார். இவரோட பொண்ணு தான் ஹீரோயின் க்வென் ஸ்டேஸி (Gwen Stacy). ஒரு ரொமாண்டிக் மாலை பொழுதில் பீட்டர் மட்டும் ஹீரோயின் ஸ்டேஸி இடையே காதல் பற்றி கொள்ள, பீட்டர் நான் தான் "ஸ்பைடர் மேன்" என்று போட்டு உடைத்து விடுகிறார். அந்த காட்சி மிகவும் அற்புதமாய் படமாக்க பட்டு இருக்கும். மெகா சீரியல் மாதிரி இழுக்காமல் டக் என்று பீட்டர் "ஸ்பைடர் மேன்" ரகசியத்தை போட்டு உடைத்து பெரிய ஆறுதல்...
இப்ப வில்லன் எபிசோடு. கர்ட் கான்னர்ஸின் (Curt Connors) பல்லி ஆராச்சியில் வெற்றி கிட்டாமல் இருக்கிறது. பீட்டர் அவரை சந்தித்து தன் அப்பாவின் பார்முலாவை கான்னர்ஸ்யிடம் தருகிறான். அந்த பார்முலாவை எலிகளிடம் பரிசோதிக்கும் கான்னர்ஸ் எலிகளிடம் நல்ல முன்னேற்றத்தை காண்கிறார். பிறகு சந்தர்ப்ப வசத்தால் அந்த மருந்தை தன் மீதே செலுத்தி விடுகிறார். சிறிது நேரத்தில் அவரின் இழந்த கை மீண்டும் வளர்கிறது.... ஆனால் அதன் சைடு எபக்ட் ஆக கான்னர்ஸ் பாதி பல்லி, பாதி டைனோசர் மாதிரி மாறி விடுகிறார். மீண்டும் தன் பழைய நிலைக்கு போக மனம் இல்லாமல் அழிவு பாதையை தேர்வு செய்து விடுகிறார். தனது மருந்தை நியூயார்க் நகர மக்கள் அனைவரின் மீதும் செலுத்த முற்பட்டு பெரிய ப்ளான் போடுகிறார். அதை பீட்டரால் மட்டுமே தடுக்க முடியும் என்பதை பவர் ஸ்டார் ரசிகன் கூட சொல்லி விடுவான். ஆனால் கான்னர்ஸின் அந்த முயற்சியை ஹீரோ பீட்டர் தடுக்கும் விதம் மிக பிரமாதமாய் படமாக்க பட்டு இருக்கும். அதை அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.
ஸ்பைடர் மேன் ஆக நடித்த "ஆண்ட்ரூ கார்பீல்ட்" மிக சரியான தேர்வு என்று நான் சொல்வேன். ஏதோ நம் பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கிறார். ரொம்ப நல்லா நடித்து இருந்தார். எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது....

ஸ்பைடர் மேன்: A New Begining...

---------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த வருஷம் விம்பிள்டன் தொடரில் ரஃபேல் நடால் யாரும் எதிர்பாராத விதமாக ரெண்டாவது சுற்றில்  100-வது இடத்தில் உள்ள செக். குடியரசின் லூகாஸ் ரோசோல்யிடம் 7-6, 4-6, 4-6, 6-2, 4-6 என்ற செட் கணக்கில் போராடி தோற்று போனார். இது நான் மட்டுமல்ல யாருமே எதிர் பார்க்காத தோல்வி. ஸ்பெயின் புட் பால் டீம் விளையடுறதை பாலோ செஞ்சிட்டு சரியா ப்ராக்டிஸ் செய்யாது தான் அவரோட தோல்விக்கு காரணம் என்று நடால் எதிர்ப்பு கும்பல் விஷம்ம பிரசாரம் செய்யுறாங்க. நான் அந்த மேட்ச் கடைசி செட் பார்த்தேன், லூகாஸ் போட்ட ஏஸ்சை (ACE) யாராலையும் தொட்டு இருக்க முடியாது. ஏதோ அன்னைக்கு ரொம்பவே மோசமான நாள் ஆக போச்சு நடால்க்கு. அடுத்த US ஓபன்ல நடாலின் விஸ்வருபத்தை ரொம்பவே எதிர்பார்கிறேன்.....
நடாலின் விம்பிள்டன் தோல்விக்காவது ஸ்பெயின் கண்டிப்பாய் யூரோ ஜெய்க்க வேண்டும்.. இத்தாலி ஜெயித்தால் என் சோகம் இன்னும் அதிகம் ஆகும்.......பார்போம்!!!!!!!!
Nadal Rosol Match
---------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு பிரபல எழுத்தாளர் அவரு.
அவரோட பழைய குடை ஒண்ணு வேண்டாம்னு
குப்பையில் வீசி எறிஞ்சிட்டாரு.

அடுத்த நாளே, அரோட வீட்டு வாசலில
வந்து நின்னாரு பக்கத்து வீட்டுக்காரரு-
அவர் வீசி எறிஞ்ச குடையோட:
‘சார் …உங்க குடையை யாரோ எடுத்து
குப்பைத் தொட்டியிலே போட்டிருக்காங்க! இதோ உங்க குடை!
கொடுத்துட்டுப் போயிட்டாரு......

கடுப்பான எழுத்தாளர், அதக் கொண்டு போயி
ஒரு பாழுங் கிணத்துல போட்டுட்டாரு.

அடுத்த நாளே அவரோட வீட்டு வாசலில் வந்து நின்னாரு
தூர் வாருற ஆசாமி ஒருத்தரு, கையில அதே குடையோட:
‘சார்…இதோ உங்க குடை
யாரோ கிணத்துல வீசி எறிஞ்சிட்டாங்க!’
கொடுத்துட்டுப் போயிட்டாரு, ரொம்பதான் கடுப்பாகிப்
போனாரு எழுத்தாளர். ராத்திரி முழுக்க யோசிச்சாரு:
‘எப்படி இதை ஒழித்துக் கட்டுவது?’

யோசனை ஒண்ணு உதயமாச்சு! அடுத்த நாள் -
அதை ஒருத்தரிடம் ஓசி கொடுத்து விட்டாரு.

அப்புறமென்ன! அது திரும்பி வரவேயில்லை.

"இரவல் என்றும் ஒரு வழிப்பாதைதான்"!!!!!!!!!!!!!!!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------
ராஜா ராஜா தான்..மம்மி மம்மி தான்:
இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாய் உங்கனால் சிரிக்காமல் இருக்க முடியாது...


---------------------------------------------------------------------------------------------------------------------------