Friday, January 25, 2013

விஸ்வரூபம் (2013) விமர்சனம் - இயக்குனர் கமலின் மாஸ்டர் பீஸ் படம்.

((( நோ ஸ்பாய்லர்கள் - No Spoilers )))

விஸ்வரூபம் படத்தை நான் வசிக்கும் சான் டியகோ நகரில் இன்று இரவு 8:30 காட்சி பார்த்தே விட்டேன். கடந்த ரெண்டு நாட்களாய் என்னுடைய எதிர்பார்ப்பு ஏகத்துக்கு எகிறி கிடந்தது, படம் அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று. இந்த படத்திருக்கு நான் கிட்ட தட்ட ஆறு மாதமாய் காத்து இருந்தேன், இத்தனை நாள் காத்திருப்புக்கு பலன் கிடைத்ததா என்றால், நிச்சியம் கண் மேல் பலன் கிடைத்தது. விஷுவல் ட்ரீட், மைன்ட் ப்லோவிங் படம் இது. தமிழில் இது வரை இது போன்ற ஒரு படத்தை நான் பார்த்ததே இல்லை என்று சொல்லும் அளவுக்கு படம் வெளி வந்து உள்ளது. படம் என்னுடைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தி செய்து உள்ளது என்றே சொல்வேன். கிளாஸ், டெக்னாலஜி, மரண மாஸ் என்ற அணைத்து வஸ்துகளையும் சரியான விகிதத்தில் கலந்து வழங்கி உள்ளார் இயக்குனர் கமல்ஹாசன். நான் பார்ப்பது தமிழ் படமா இல்லை, ஹாலிவுட் படமா என்கிற சந்தேகம் படம் முழுக்க எனக்கு வந்து கொண்டே இருந்தது. கமல் பேசும் தமிழை வைத்து தான் நான் பார்ப்பது தமிழ் படம் என்கிற உணர்வே எனக்கு வந்தது. அப்படி பட்ட படம் இது. வொர்த் வாட்சிங்.


படத்தின் ஒன் லைனர், படத்தின் பாடல் வெளியீடு விழாவில் ஏற்கனவே கமல் சொல்லி இருக்கிறார். விஷ் (கமல்) மற்றும் பூர்ணிமா (பூஜா குமரி) இருவருக்கும் கல்யாணம் நடந்து, அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசிக்கிறார்கள். விஷ் கதக் சொல்லி குடுக்கும் மாஸ்டர். பூர்ணிமா அமெரிக்க வருவதருக்கு விஷ்சை திருமணம் செய்ய ஒத்து கொள்கிறார். பூர்ணிமாவிருக்கு விஷ் மீது பெரிய ஈடுபாடு கிடையாது. டைவர்ஸ் வாங்க விஷ்சிடம் எதாவது குறை கண்டுபிடிக்க வேண்டி பூர்ணிமா பிரைவேட் டிடக்டிவ் ஒருவரை அமர்த்தி அவரை பின் தொடர செய்கிறார். அந்த டிடக்டிவ் விஷ்ஷை பின் தொடர்ந்து செல்ல, அங்கு அவருக்கு அதிர்ச்சி காத்து இருக்கிறது. கதை அங்கிருந்து அசுர வேகம் பிடிக்கிறது. எதிர்பாரா திருப்பங்களுடன் பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், அல்கொய்தா, ஜிஹாத், தாலிபான், ஒசாமா பின்லேடன், என்று பயணம் செய்து கடைசியில் அமெரிக்காவில் அதுவும் அடுத்த பாகத்துக்கு ஆச்சாரம் போட்டு அட்டகாசமாய் முடிகிறது.


படத்தின் நாயகன் கமல் ஹாசன், இவரின் நடிப்பை பற்றி நான் சொல்லியே ஆக வேண்டும். மனிதர் அந்த காதபாத்திரமாகவே வாழ்ந்து உள்ளார். கதக் ஆடும் போது அவர் காட்டும் முக பாவனைகள் அற்புதம். ஏதோ ஒரு நளினமான பெண் தான் கமல் போல் வேடம் பூண்டு உள்ளாரோ என்கிற சந்தேகம் எனக்கு வந்தது. உண்மையான பெண் கூட இவர் அளவுக்கு முக  பாவனைகளை தந்துருபமாக காட்டி இருப்பாரா என்பது சந்தேகமே. படத்தில் கமலின் பரிணாம மாற்றம் (Transformation) காட்சி ஒன்று வரும், அந்த காட்சி ஒரு மாஸ் காட்சிக்கு எப்படி இருக்க வேண்டும் என்பதருக்கு தக்க சான்று. ஏசி குளிரிலும் எனக்கு கூஸ்பம்ப்ஸ் ஏற்பட்டது. செம சீன் அது. சண்டைகாட்சிகளில் கமல் கடுமையாக உழைத்து உள்ளார். ஆனால் ஆரம்ப காட்சிகளில் கமலின் முக சுருக்கம் நன்றாக தெரிகிறது. படத்தில் வயதான முக தோற்றத்தை ஜஸ்டிபை செய்து இருப்பார் கமல். நிருபமா விஷ்ஸிடம் டைவர்ஸ் கேட்க வயதான முக தோற்றத்தை ஒரு காரணமாக சொல்லி இருப்பார்.


படத்தின் கதாநாயகி நிருபமா (பூஜா குமரி) மற்றும் அஸ்மிதா (அண்ட்ரியா). இருவரில் பூஜா குமாரிக்கு கொஞ்சமே கொஞ்சம் ஹெவி ரோல். அமெரிக்காவில் Phd முடித்த அணு விஞ்ஞானியாக வருகிறார். இவர் பேசும் ஐயர் பாஷை சில நேரங்களில் சிரிப்பை வர வைத்தாலும், நிறைய நேரங்களில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. கமல் டச் காமெடி வசனங்கள் இவர் முலம் கேட்கலாம். பெரிய சிரிப்பு வர வில்லை என்றாலும் கண்டிப்பாய் ஸ்மைல் பண்ணலாம். அண்ட்ரியாவிருக்கு படத்தில் பெரிய ரோல் இல்லை, ட்ரைலரில் அவர் பேசிய வசனங்கள் தான் படத்தில் பேசி உள்ளார். பெருசாய் ஒன்றும் இல்லை.

வில்லன் ஓமர் (ராகுல் போஸ்), ஆப்கான ஜிஹாத் போராளியாக வருகிறார். நிஜமான ஆப்கான் ஜிஹாத் போராளி ஒருவன் எப்படி இருப்பான் என்று நான் கற்பனை செய்து இருந்தேனோ, அதே போல் தான் இவரும் நடித்து இருக்கிறார். மனிதர் அந்த காதபாத்திரமாகவே வாழ்ந்து உள்ளார். விஜயகாந்த் படத்தில் வரும் தீவிரவாதி வாசிம்கான் போல் இவர் என்று நீங்கள் கற்பனை செய்தால், ரொம்ப சாரி. இவர் கத்தி கூட பேச மாட்டார். எந்த காட்சியிலும் எரிச்சல் வருவது போல் இவரது ஆக்டிங் இல்லை என்பது பெரிய ஆறுதல். ஒரு காட்சியில் Tall sheikh வேறு வருவார், அவர் யார் என்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். ஓமர் ஏன் தமிழ் பேசுகிறார் என்பதருக்கு அவர் ஒரு காரணம் சொல்வர், "நான் கொஞ்சம் காலம் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருந்தேன், அதனால் எனக்கு தமிழ் தெரியும்" என்று சொல்லவர், இந்த காட்சி அவசியம் தேவை, இல்லை என்றால் படம் முழுக்க அவர் உருது தான் பேசி கொண்டு இருப்பார். தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்பு ஒன்று இந்த காட்சிக்கு ஆட்சேபனை செய்து ஓமர் என்கிற போராளி எப்படி இந்தியா வந்து திரும்பி போனார் என்று கமலிடம் ஆதாரம் கேட்கிறது. நெம்ப கஷ்டம் தான்.


படத்தின் பின்னணி இசை மிக பெரிய ஏமாற்றம். டெம்போவை ஏற்றும் இசை என்று எதையும் சொல்ல முடியாது. நிறைய இடங்களில் மொக்கையாய் இருந்தது. கமல் இசை பொறுப்பை ஷங்கர், எசன்லாய்யிடம் குடுத்ததுக்கு பதில், ரஹ்மானிடம் குடுத்து இருக்கலாம். அவருக்கு ஏற்ற ப்ளாட். படம் இன்னும் அட்டகாசமாய் வந்து இருக்கும். படத்தில் வெறும் நிறைகள் மட்டும் தான் உள்ளது, குறைகளே இல்லையா என்று நீங்கள் கேட்கலாம், பெரிய குறை ஒன்று உள்ளது. வழக்கமா கமல் படத்தில் இருக்கும் குறை தான். படம் படித்தவர்களுக்கு தான் புரியும். நிறைய டெக்னிகல் வார்த்தைகள், சிலியும் பாம், ஆட்டாமிக் பவர், ஷீல்ட் பாக்ஸ் என்று பாமரன் கேள்விபடாத வார்த்தைகள் அப்புறம் அவனுக்கு அவ்வளவு தெரியாத அமெரிக்க ஆப்கன் போர் என்று சில விசயங்கள் இருக்க தான் செய்கிறது. ஆனால் ஆப்கான் போர், ஜிஹாத் பற்றி கொஞ்சம் இணையத்தில் படித்தவர்கள் இந்த படத்தை ஹாலிவுட் படத்திருக்கு இணையாக கொண்டாடுவார்கள். 

கடைசியாக இந்த படத்தில் தமிழ்நாடு முஸ்லிம் அமைப்புகள் சொல்வது போல், சர்ச்சைக்குரிய காட்சிகள், முஸ்லிமை இழவுப்படுதும் காட்சிகள் இல்லையா என்று என்னை கேட்டல், இல்லை என்று தான் நான் சொல்வேன். படத்தில் நிறைய இடத்தில அல்லா புகழ் தான் பாடி உள்ளார் இயக்குனர் கமல்ஹாசன். சின்ன ஸ்பாய்லர், படம் ஆரம்பித்த உடன் தெரிந்து விடும், படத்தில் கமல் பிராமன் இல்லை, அவர் "விசிம்" என்கிற முஸ்லிம் என்று. அப்புறம் இந்த படத்தை யார் எல்லாம் எதிர்க்கலாம் என்றால், அல் கொய்தா அமைப்பை சேர்ந்தவர்கள், ஜிஹாத் போராளிகள், வெடி குண்டு வைக்கும் தீவிரவாதிகள் வேண்டும் என்றால் எதிர்க்கலாம். காமன் மேன்னுக்கு இது ஒரு விஸ்வரூப அனுபவம்.
அடுத்த பதிவில் இயக்குனர் கமல் பற்றி எழுதுகிறேன்.

விஸ்வரூபம் - Mind Blowing...

My Rating : 8.4 ....


61 comments:

  1. ராஜ் விமர்சனத்தில spoilers கிடையாது என்று எனக்கு தெரியும்.. இருந்தாலும் மன்னிக்கணும் தல.. விமர்சனம் வாசிக்கவில்லை.. :'-) கமல் படத்தை முழுமையாய் ரசிக்கவே Im waitting..

    அடுத்து நம்ம தலைவரும் கமலுக்கு வாய்ஸ் கொடுத்து இருக்காரு.. பார்திங்களா??

    //விஸ்வரூபம் - Mind Blowing...//

    அப்பாடா.. இது போதும்..

    ReplyDelete
    Replies
    1. படிச்சேன் பாஸ். யாருக்கும் வலிக்காத மாதிரி நல்லா சொல்லி இருக்கார்.

      Delete
  2. /கூஸ்பம்ப்ஸ்//

    அப்படின்னா?? (மேலோட்டாமா வாசிச்சேன்.. ஹி ஹி)

    ReplyDelete
    Replies
    1. புல்லரிக்கிறது நண்பா...மாடு மேயலையான்னு மொக்கை போட கூடாது.

      Delete
    2. அரிச்சா சொறிஞ்சுக்க வேண்டியது தானே?? :)

      Delete
  3. //பரிமான//

    //என்பத்ருகு//

    //வளைத்தாலும்/

    பாஸ் அதிக இடத்தில எழுத்து பிழை அவசரத்தில் தள்ளாடி விட்டது போல..

    ReplyDelete
    Replies
    1. மாத்திட்டேன் நண்பா.டைப் பண்ணும் போது மணி நைட் ஒன்னு.

      Delete
  4. வண்க்கம் நண்பரே,
    அருமையான விமர்சனம். படம் சீக்கிரம் வெளிவரட்டும்,பார்த்து விடுவோம்!!

    நன்றி!!

    ReplyDelete
    Replies
    1. பாருங்க சார்வாகன், தமிழ்படத்தை ஹாலிவுட் தரத்துக்கு எடுத்து சென்றுள்ளார் கமல். ஒரு கோமாளி கும்பல் அதை அழிக்க நினைக்கிறது.

      Delete
  5. தங்களின் விமர்சனம் அருமை. படம்பார்க்க தூண்டுகிறது. நன்றி.

    ReplyDelete
  6. யார் எல்லாம் எதிர்க்கலாம் என்றால், அல் கொய்தா அமைப்பை சேர்ந்தவர்கள், ஜிஹாத் போராளிகள், வெடி குண்டு வைக்கும் தீவிரவாதிகள் வேண்டும் என்றால் எதிர்க்கலாம்.
    /////////////////////////////////////
    இனி இணையத்தில் இந்த படத்தை எதிர்த்து கருத்து சொன்ன அனைவரையும் நாம் தீவிரவாதி,டெரரிஸ்ட் என்றே அழைக்க வேண்டும் ராஜ்!

    அருமையான விமர்சனம் எனக்கு புத்தக வெளியீட்டு வேலை உள்ளது இல்லை என்றால் பாலகாட்டிலோ..? வடக்கன்சேரியிலோ பார்த்திருப்பேன்..!

    ReplyDelete
    Replies
    1. பாருங்க சுரேஷ். நிறைய பேர் ஆட்டு மந்தை மாதிரி படத்தை பார்க்காமலே நெகடிவ் கருத்து சொன்னது தான் அபத்தம்.

      Delete
  7. பொதுவாக லாஜிக் மீறல்கள் பற்றி பலர் பேசுகிரார்கள்: நான் படம் பார்க்கவில்லை. உங்கள் விமர்சனத்தை மட்டும் வைத்து எழுதியது...

    யார் வேண்டுமானலும் அமெர்க்காவில் எந்த ஒரு காரணமும் கொடுக்காமல் விவாகத்தை ரத்து செய்யலாம். அமெர்க்க நாட்டு சட்டப்படி யாரையும் யாருடன் வாழ சொல்லிக் கட்டாயப் படுத்தமுடியாது. ------கணவன் மனைவி இருவரும் இந்திய குடிமகன்களாக இருந்தால் கூட--------local state laws prevail----law of the land rules...!

    விவாகரத்து செய்ய...I don't want to live with my husband. I want to live separate; என்ற one லைனர் போதும். மனைவி கையில் பத்து பைசா இல்லாத அப்பாவிப் பெண்ணாக இருந்தாலும், அரசாங்கம் அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்கும். அதற்க்கு என்று women shelter-கள் இருக்கும். கேசு எல்லாம் அரசாங்கம் போட்டு பணத்தை கணவனிடமிருந்து வாங்கிக் கொடுத்து விடும். அரசாங்கம் அந்த கோர்ட் பீசையும் கணவனிடம் இருந்து வாங்கிக்கொள்ளும்.

    ஒரு கூடுதல் செய்தி....அமெரிக்க வரவிரும்பும் நம் பெண்கள் இங்கு வந்ததும் புருஷனை மொட்டை அடிக்க இங்கு பொய் சொல்லி காரியத்தை முடிப்பதும் உண்டு. இதில் நம்ம ஊர் இளைய தலைமுறை கில்லாடிகள் (பொது அறிவு ஜாஸ்தி என்று சொல்லவருகிறேன்).


    மனைவிக்கு பிடிக்கவில்லை என்றால்---அம்மி மிதித்து அருந்ததி பாத்து முப்பது முக்கோடி தேவர்கள் வாழ்த்த தாலி கட்டினாலும் அந்தக் கணவன் அவன் மனைவியை சம்மதம் இல்லமால் பார்க்க முடியாது; பேச முடியாது! கணவன் தொந்தரவு செய்தால் restraining orders போட முடியும்.

    அப்படியும் பார்த்தல் கணவனுக்கு ஃபீப் பிரியாணி தான்; நோ களி!
    -----------------
    [[அமெரிக்க வருவதருக்கு விஷ்சை திருமணம் செய்ய ஒத்து கொள்கிறார். பூர்ணிமாவிருக்கு விஷ் மீது பெரிய ஈடுபாடு கிடையாது. டைவர்ஸ் வாங்க விஷ்சிடம் எதாவது குறை கண்டுபிடிக்க வேண்டி பூர்ணிமா பிரைவேட் டிடக்டிவ் ஒருவரை அமர்த்தி அவரை பின் தொடர செய்கிறார்.]]

    ReplyDelete
    Replies
    1. முக்கியமானவையை வீட்டு விட்டேன்... விவாகரத்து செய்யாமல் இங்கு மற்றொரு திருமணம் செய்யமுடியாது; அனால், அந்தப் பெண் அவர் விரும்பும் ஆணுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளமுடியும்; அதே மாத்ரி கணவனாக இருந்தாலும், "அம்மி மிதித்து அருந்ததி பாத்து முப்பது முக்கோடி தேவர்கள் வாழ்த்த தாலி கட்டினாலும் அந்தக் கணவன் அவன் மனைவியை சம்மதம் இல்லமால் செக்ஸ் வைத்துக் கொள்ளமுடியாது.

      வைத்தால்...கணவன் மேல் ரேப் குற்றம் (கற்பழிப்பு); பல வருடங்கள் ஜெயிலில் தான் இருக்கவேண்டும்...அப்போ எப்பேர்பட்ட இந்துவுக்கும் ஃபீப் பிரியாணி பழகிடும்...!

      Delete
    2. wambaLki: I htink Raj is living in San Diego, CA! Are you explaining all these to him? I wonder why?

      Delete
    3. வாங்க நம்பள்கி, நீங்கள் சொல்லும் சட்டம் சரி தான். அப்படி பட்ட சட்டம் இங்கு இருந்தும் நிருபமா என்கிற இந்தியவில் வளர்ந்த பெண் கதாபாத்திரம் ஏன் தன் கணவர் மீது தப்பு கண்டுபிடிக்க டிடக்டிவ் வைக்கிறார் என்பதை காட்சியாக விளக்கி இருப்பார். அது ஏன் என்று படம் பார்த்தல் உங்களுக்கு புரியும்

      Delete
    4. வருண், நான் இங்கு வந்து ஒரு வாரம் தான் ஆகிறது, எனக்கு நம்பள்கி சொல்லும் சட்டம் பற்றி தெரியாது, I am just getting used to this country. :(:(.

      Delete
    5. Welcome to America, Raj! If you make it here, you can make anywhere in the world, Raj! LOL

      Delete
  8. சாரி பாஸ், ரொம்ப பொறாமையா இருக்கு :(

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஊர்லயும் 25ம் தேதி ரிலீஸ் பண்றோம்னு போட்டிருந்தாங்க.. ஆனா சத்தத்தையே காணோம். கொழும்பு பக்கம் எங்கயாச்சு படம் ஓடுது??

      Delete
    2. பாஸ், படம் இலங்கையிலும் நிறுத்திவச்சு இருக்காங்க.

      Delete
  9. ***சின்ன ஸ்பாய்லர், படம் ஆரம்பித்த உடன் தெரிந்து விடும், படத்தில் கமல் பிராமன் இல்லை, அவர் "விசிம்" என்கிற முஸ்லிம் என்று***

    I read another review in which it was saying Kamal is a brahmin in this movie but chicken-eating brahmin !

    May be it has double role? :)

    ReplyDelete
    Replies
    1. டபுள் ரோல் இல்ல வருண். He is a muslim character in this movie. His name is Wisim, he does prayer in many scenes :):) His wife Nirupamaa is a Brahmin and she eats chicken, Not Kamal .. :):):)

      Delete
  10. விமர்சனம் நல்லா இருக்கு பாஸ்... கமல் இஸ்லாமிய எதிர்ப்பு படம் எடுக்க மாட்டாருன்னு 100% நம்பிக்கை இருக்கு!! ஆனால், படம் கொஞ்சம் புரிஞ்சு, ரொம்ப புரியாத மாதிரி இருக்கலாம்ன்னு நினைச்சிகிட்டு இருந்தேன்.. நமக்குத்தான் படம் பார்க்க குடுத்து வைக்கல.. யூஎஸ்ல ஓடுதுல, நம்ம புட்டிபாலுக்கு சொன்னேன், பார்த்துட்டு சொல்றேன்னு சொல்லிருக்காரு...

    ReplyDelete
    Replies
    1. படம் தமிழ்நாட்டுல மாபெரும் வெற்றி எல்லாம் அடையாது தல, ஹேராம் மாதிரி தோல்வியும் அடையாது. தமிழ்நாட்டு பாமரனுக்கு புரியிற மாதிரி இன்னும் கொஞ்சம் சிம்பிளா சொல்லி இருக்கலாம்.

      Delete
  11. படம் பார்க்கும் ஆவலை தூண்டும் விமர்சனம்.கடைசி பத்தி அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க தேவா, தமிழ்நாட்டுல ரீலீஸ் ரிசல்ட் திங்கள் தெரிஞ்சுடும், அப்புறம் பாருங்க.

      Delete
  12. உங்கள் விமர்சனத்தை எதிர்பார்த்திருந்தேன்.பூர்த்தி செய்துள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராஜ், கமல் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் சினிமா ரசிகர்களுக்கும் சேர்த்து நல்ல படத்தை வழங்கி உள்ளார் இயக்குனர் கமல்.

      Delete
  13. //எதிர்பாரா திருப்பங்களுடன் பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், அல்கொய்தா, ஜிஹாத், தலிபான், ஒசாமா பின்லேடன், என்று பயணம் செய்து கடைசியில் அமெரிக்காவில் அதுவும் அடுத்த பாகத்துக்கு ஆச்சாரம் போட்டு அட்டகாசமாய் முடிகிறது.//

    படம் முழுவதுமே எங்கள் மதத்தை அவமதிக்கிற மாதிரி இருக்கிறது என்று கமல் படம் போட்டுக்காண்பித்த தமிழக கலாச்சார தீவிரவாதிக்ள் புலம்பியதின் காரணம் இப்பொழுது புரிகிறது:)

    ReplyDelete
    Replies
    1. நிறைய ஆட்டு மந்தைகள் படமே பார்காம எதிர்ப்பு தெரிவிச்சாங்க.

      Delete
  14. முதல் முறையாக இந்த ப்ளாக்கிற்கு விசிட் செய்தேன்.விமர்சனம் நன்றாக இருந்தது,இப்படி ஒரு ப்ளாக் இருப்பதை facebook மூலமாக தெரிந்து கொண்டேன் facebookக்கிற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி பிரதீப். நேரம் கிடைக்கும் போது அப்ப அப்ப இங்க வாங்க.

      Delete
  15. சூப்பர் தல, கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விமர்சனத்தை தான் எல்லோரும் சொல்றீங்க :-) நாங்க இன்னும் ஒரு வாரம் (?) பொறுமையா இருக்கனும்னு நினைக்கிறேன்! (worth the wait தான?) பெங்களூர்ல அங்கங்க படம் ஓடுது. ஆனா எல்லாமே டப்பா தியேட்டர்ல. Auro 3D க்காக நான் சென்னை போய் படம் பார்க்கலாம்னு இருந்தேன். பீல் மிஸ் ஆகிரக்கூடாது. ஆனது ஆச்சு, படமும் நல்லா இருக்குன்னு தெரிஞ்சு போச்சு. பொறுமையாவே நல்ல தியேட்டர்ல பாத்துக்குறேன் :-)

    காலையிலிருந்தே உங்க தளத்தை எனது மொபைல்ல ரீஃப்ரெஷ் செய்து பார்த்துக்கிட்டே இருந்தேன் (ஆபீஸில் Blog ஓப்பன் ஆகாது). உங்க விமர்சனம் வெளியானவுடன் படித்து மொபைலிலேயே comment போட முயற்சித்தேன். ஏனோ தெரியவில்லை, கமெண்ட் பப்ளிஷ் ஆகவில்லை...

    ReplyDelete
    Replies
    1. பார்த்துட்டு சொல்லுங்க தல..நீங்க சரியா ஜட்ஜ் பண்ணுவீங்க. மோஸ்ட்லி உங்களுக்கும் எனக்கும் ஒரே டேஸ்ட் தான்.

      Delete
    2. தல... ஒரு வாரமெல்லாம் இல்ல, பிளான் பண்ணதுக்கு ஒரு நாள் மட்டும் தான் லேட் ஆச்சு. இன்னிக்கு மதியம் படம் பாத்துட்டேன் :-) வெற்றி!!

      படத்த பத்தி ஒரு நிச்சயம் ஒரு பெரிய பதிவு எழுதனும்னு கையெல்லாம் பரபரன்னு இருக்கு (ஆரம்பிச்சிட்டேன்). ஆனா... படத்த நம் நண்பர்கள் எல்லாரும் அடுத்த வாரம் பார்த்த பிறகு அந்தப் பதிவ போடலாம்னு இருக்கேன் :-)

      ஒன்று மட்டும் நிச்சயம், முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்த எத்தனையோ இந்தியப் படங்களை விட்டுட்டு இந்தப் படத்த ஏன் தடை செஞ்சாங்கன்னு தான் தெரியல. மதத்தின் பெயரால் செய்யப்பட்ட நாட்டின் அமைதியை அச்சுறுத்தும் மிகமட்டமான தீவிரவாதச் செயல்களில் இந்த எதிர்ப்பும் ஒன்று என்பது மட்டும் உறுதி. படம் வெளியான பிறகு மதத்தலைவர்கள் சொல்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்தப் படத்தை எதிர்த்த உண்மையான முஸ்லீம்கள் நிச்சயம் தங்களது முட்டாள்த்தனத்தை எண்ணி வெட்கப்படுவார்கள்!

      ஒரே ஒரு மாற்று கருத்து, எடுத்துக்கிட்ட தளத்துக்கு ஹேராம், விருமாண்டி கம்பேர் பண்ணும் போது, விஸ்வரூபம் நிச்சயமா கமலோட மாஸ்டர் பீஸ் இல்ல. ஆனா உலகத்தைப் பார்த்து ஒரு தமிழனா "எங்களாலும் நீங்கள் எதிர்பார்க்கும் "தரத்தில்" ஒரு படம் எடுக்க முடியும்" நாம் பெருமை பட்டுக்கலாம், அதுவும் இப்போதுள்ள தமிழ் சினிமா ரசிகனா, கர்வமே படலாம். ஓடிக்கொண்டிருக்கும் அத்தனைப் படங்களையும் தூக்கியெறிந்துவிட்டு விஸ்வரூபத்தை மட்டுமே திரையிடலாம்! It's a Promise... It took me sometime to believe I'm watching a Tamil movie!! Everything else comes next, right?

      விட்டா எல்லாத்தையும் நான் இங்கயே சொல்லிருவேன்... பதிவுல டிஸ்கஸ் பண்ணலாம் :-)

      Delete
  16. Thank you very much for a fantastic review. Looks like Viswaroopam gives more than what we expected. Unfortunate that we, movie-lovers and Kamal fans here in TN, can't watch it because of some religious extremists, who thinks it hurts their sentiments (only theirs, not the entire religious community).

    ReplyDelete
    Replies
    1. Thanks for your visit Arun. Soon Vishwaroopam will cross all hurdles.

      Delete
  17. Comment super .. I m visiting you blog first h time ..... Thanks for your review..

    ReplyDelete
    Replies
    1. நன்றி கார்த்தி, நேரம் இருக்கும் போது இங்க வாங்க.

      Delete
  18. ராஜ், நீங்கள் கொடுத்து வைத்தவர்கள்.. எங்களூரில் படம் ரிலீசாக வில்லை!! அழகான விமர்சனம்.. கதையை சொல்லாததற்கு நன்றி!
    படம் நன்றாக இருக்கிறது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.. ஆனால் பாமர ரசிகனும் ரசிக்க முடியுமா என்பதை படம் தமிழ்நாட்டில் ரிலிசாகி ஓடினால்தான் சொல்ல முடியும்.. பார்ப்போம்!!

    ReplyDelete
    Replies
    1. //ஆனால் பாமர ரசிகனும் ரசிக்க முடியுமா என்பதை ///
      இது தான் கார்த்தி பயமா இருக்கு. படம் வந்தா தான் தெரியும், கண்டிப்பா ஹேராம் அளவுக்கு தோல்வி அடையாது,

      Delete
  19. Raj, ur friendly comment in my blog inspired me. Post removed immediately.

    ReplyDelete
    Replies
    1. ஐயோ, நண்பா நான் நீங்கள் பதிவை நீக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அப்படி கமெண்ட் இட வில்லை. தவறாக நினைக்காதீர்கள்.
      விரிவான கதை பகுதியை மட்டும் எடுத்து விட்டு பதிவை வெளியிடுங்கள். நிறைய பேர் முழு கதையும் வெளியீட்டு விட்டார்கள், நீங்கள் எழுப்பிய சந்தேகங்கள் லாஜிக்காக இருந்ததால் நான் கமெண்ட் இட்டேன், வாங்க நாம் படத்தை பற்றி விவாதிப்போம். :):)

      Delete
  20. தல நான் படம் பார்த்துட்டு வந்து படிக்கிறேன்.... நீங்க போசுக்க்னுகதைய சொல்லி இருந்தீங்கன்னா ஒரு எதிர்பார்ப்பு குறைஞ்சிரும்

    ReplyDelete
  21. படம் பாருங்க சீனு, அப்புறமா பதிவை படிங்க. :):)

    ReplyDelete
  22. சரிவிகிதமாய் அமைந்துள்ளது படத்தை பற்றிய உங்க பதிவு தல...
    படத்தை நாங்களும் விரைவில் பார்ப்போம் என்று நம்புகிறோம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி தல. படம் கண்டிப்பா தமிழ்நாட்டுல ரீலீஸ் ஆகும், பாருங்க.

      Delete
  23. படம் பார்ப்பதற்கான எதிர்பார்ப்பினை மேலும் கூட்டியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. பார்த்திட்டு உங்க எதிர்பார்ப்பு பூர்த்தி ஆச்சான்னு சொல்லுங்க நண்பா.

      Delete
  24. விறுவிறுப்பான விமர்சனம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மதுரை, அப்ப அப்ப நீங்களும் பதிவு எழுதுங்க.

      Delete
  25. நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்.இங்க(Tennesse) திங்கள்கிழமை போடுறாய்ங்க..எப்புடியாச்சிம் பாத்துடனும்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாரா, Tennessல தமிழ்மக்கள் கம்மி போல், இங்க தமிழ்ல முனு ஷோ, தெலுங்குல ஒரு ஷோ போட்டாங்க. எல்லாமே நல்ல கூட்டம்.

      Delete
  26. கமல் மாதிரியே பேலன்ஸ் பண்ணி பதிவு போட்டுட்டீங்க. அமெரிக்கா போனதுமே ஒரு நல்ல விருந்தா ?? :)) திரைக்கதையில் சில வழுக்கல்கள் என்று கேள்விப்பட்டேன். இரண்டாவது பாகத்தில முடிச்சை அவிழ்ப்பதற்காக இருக்கலாமோ ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க தமிழானவன், படத்தில் சில லாஜிக் மீறல்கள், கேள்விகள் இருக்க தான் செய்தன. ஆனால் அவை எல்லாம் உங்களுக்கு பெரிதாய் தெரியாது. எனக்கு படம் முடிந்தவுடன் எழுந்து நின்ற கை தட்ட தோன்றியது, தட்டினேன்.. :):):)
      கிளைமாக்ஸ் அதிரடியாக இருக்காது, அது தான் எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. மற்றபடி தமிழ் சினிமா வரலாற்றில் நிச்சியம் "விஸ்வரூபம்" ஒரு மைல் கல் என்றே நான் சொல்லுவேன்.

      படம் பாருங்க ..!!!

      Delete
  27. "அடுத்த பதிவில் இயக்குனர் கமல் பற்றி எழுதுகிறேன்." i am waiting.....

    ReplyDelete
  28. நான் இந்த விமர்சணம் படிதேன், உண்மைய சொன்ன ரொம்ப கேவலமா இருக்கு. நீங்க சொல்லறது பார்த்த நீங்க இவனோட fan அஹ இருபிங்கனு நினைக்கிறான். ஒரு விமர்சணம் எழுதும் போது இப்படி எழுத்த கூடாது, அதும் இல்லாம நான் நினைக்கிறான் உங்களுக்கு இன்னும் படம் பாக்க தெரில. இந்த விஷயத்துல கமல் win பண்ணிடருனு நான் நினைகிறான். யான்ன அவன் ஓவரு காட்சிலும் மறை முகமா முஸ்லிமை இழவுப்படுதும் காட்சிகள் இருக்கிறது. அது உங்களை மாதிரி ஜால்ரா போடும் விமசர்களுக்கு தெரியாது.நீங்க எல்லாம் படம் பாருங்க அதோட உங்க வேலைய பாக்கபோங்க. விமர்சனம் எல்லாம் எழுத வராதிங்க உங்களுக்கு இன்னும் அந்த அளவு அறிவு வரல.(((வழக்கமா கமல் படத்தில் இருக்கும் குறை தான். படம் படித்தவர்களுக்கு தான் புரியும்)))ஒரு கலைங்னன் படிகாதவர்களுகும் புரியும் படி படம் எடுக்க வேண்டும். இந்த மாதிரி எல்லாம் போட்டு நீங்க புத்திசாலினு காட்டாதிங்க. நான் கேட்குரான் நீங்க ரொம்ப புத்திசாலியா. உங்களை மாதிரி இருக்கறவங்கதான் உண்மையான படிகாதவர்கள். இப்ப என்னக்கு புரிது ஒரு அறிவு இல்லாதாவானுகுதான் இந்த படம் பிடிக்கும். எழுந்து கைதட்ட ஒரு காட்சியும் இல்ல

    ReplyDelete