த்ரிஷா இல்லாட்டி திவ்யா, என்கிற தமிழர்களின் கொள்கையை சரியாக புரிந்து கொண்டு சரியான நேரத்தில் வெளி வந்து கல்லா கட்ட போகும் திரைப்படம் தான் அலெக்ஸ் பாண்டியன். விஸ்வரூபத்தை எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு விஸ்வரூபம் வெளிவராமல் ஏமாற்றி விட, சரி கார்த்தியின் "அலெக்ஸ் பாண்டியன்" படத்திருக்கு போய் பண்டிகை சீசனை நல்ல முறையில் தொடங்குவோம் என்று நினைத்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடைத்து இருக்க கூடாது . ஐயா, ஒரு புது படத்தை நம்ம பதிவர்களில் விமர்சனம் எதுவும் படிக்காம பார்க்க நினைச்சது தப்பா ...?? அப்படி பார்க்க போன என்னைய இப்படியா கொத்து கொத்துன்னு கொத்தி அனுப்பனும் ???
தமிழ்ல சில நல்ல டைரக்டர், நல்ல நடிகரின் படத்தை காசு குடுத்து தியேட்டரில் பார்க்கும் வழக்கம் கொண்டவன் நான். அந்த லிஸ்டில் கார்த்தியின் பெயரும் "பருத்தி வீரன்", "ஆயரத்தில் ஒருவன்" காரணமாய் இருந்தது. இனி மேல் அந்த லிஸ்டில் கண்டிப்பாய் கார்த்தி இருக்க மாட்டார். இனி கார்த்தியின் அணைத்து படமும் டவுன்லோட் தான். சகுனியில் இருந்தாவது அவர் பாடம் கற்று இருக்க வேண்டும் . ஆனால் தான் எப்படி மொக்கையாய் நடித்தாலும் தமிழ் மக்கள் பார்ப்பார்கள் என்கிற எண்ணத்தில் மற்றுமோர் மரண மொக்கை படத்தை வழங்கி உள்ளார் கார்த்தி.
படத்தின் டைரக்டர் சூராஜ்யை நினைத்தால் எனக்கு பொறமையாக இருக்கிறது. எப்படி இந்த படத்தின் கதையை கார்த்தியிடம் சொல்லி ஓகே வாங்கினார் என்று. பெரிய திறமைசாலி தான். இப்படி தான் கதை சொல்லி இருப்பார் என்று நினைக்கிறன் . கார்த்தி சார், " ஓபன் பண்ணுனா நீங்களும் அனுஷ்கா மேடமும் ஓடுறீங்க, தண்டவாளத்துல ஓடுறீங்க, ட்ரைன் மேல ஓடுறீங்க , ஓடிகிட்டே இருக்கீங்க . வில்லன் உங்க ரெண்டு போரையும் ரிச்சா ஹெலிஹப்ட்டர்ல சேஸ் பண்ணுறான். அப்படியே உங்களை நோக்கி துப்பாகியால சுடுறான். நீங்க ரெண்டு பேரும் கடல்ல குதிக்கறீங்க. கட் பண்ணுனா நீங்க சந்தானம் சார் வீட்டுல ஹாய்யா படுத்துட்டு இருக்கீங்க.
அடுத்த அரை மணி நேரம் நீங்களும் சந்தானம் சாரும் சேர்ந்து அவரோட முனு தங்கச்சிகளை வச்சு காமெடி பண்ணுறீங்க. எல்லாம் டபுள் மீனிங் காமெடி, அப்ப தான் யூத் ஆடியன்ஸ் கவர் ஆவாங்க. நீங்க கடல்ல விழுந்த இடத்தை வச்சு, வில்லன் குரூப் ஊர் ஊரா உங்களை தேடுறாங்க. ஹீரோயின் அனுஷ்கா மயக்கமா சித்த வைத்திய சாலையில இருக்காங்க. பிரஸ்ட் ஆப் குத்து பாட்டுக்கு சந்தானம் முனு தங்கச்சிகளை யூஸ் பண்ணுறோம். இடைவேளைக்கு பத்து நிமிஷம் முன்னாடி வில்லன் குரூப் நீங்க இருக்கிற இடத்தை கண்டுபிடிச்சு உங்களை சுமோ, இன்னோவா கார்ல சேஸ் பண்ணுறாங்க. நீங்க சந்தானம், அப்புறம் அனுஷ்கா மேடம் முனு பேரும் மாருதி -800 கார்ல 40 km ஸ்பீட்ல தப்பிச்சு போறீங்க. வில்லன் குரூப் 90 km ஸ்பீட்ல வந்தும் உங்களை பிடிக்க முடியல. அப்ப தான் சார் செம ட்விஸ்ட் ஒன்னு வருது கதையில, சந்தானம் சார், அனுஷ்கா மேடம் யாருன்னு கேட்க, நீங்க அவங்க "தமிழ்நாடு CM பொண்ணு" என்கிற பயங்கரமான நெஞ்சை உறைய வைக்கும் உண்மையை கூல்லா சொல்லுறீங்க. நீங்க தான் CM பொண்ணை கடத்துனீங்க என்கிற வரலாற்று உண்மையையும் சொல்லுறீங்க. அத்தோட இன்டர்வெல் விடுறோம்.
இன்டர்வெல்ல தப்பிச்சு போன ஆடியன்ஸ் போக மிச்ச மீதி இருக்கிற ஆடியன்ஸ்க்கு "நீங்க ஏன் CM பொண்னான அனுஷ்கா மேடமை கடத்துனீங்க" என்கிற காரணத்தை போட்டு உடைக்கிறோம். அப்படியே உங்களுக்கும் சீப் மினிஸ்டருக்கும் என்ன வாய்கா தகராறு ..??? அனுஷ்கா மேடமை நீங்க எப்படி புத்திசாலிதனமா பிளான் பண்ணி கடத்துனீங்க ..?? மேடம்க்கும் உங்களுக்கும் எப்படி கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆச்சு ..?? என்பது போன்ற பஸ்ட் ஆப் முடிச்சுகளை அவிழ்கிறோம். செகண்ட் ஆப்ல் விட்டதை பிடிக்கிற மாதிரி உங்களுக்கும் மேடம்கும் ரெண்டு செம குத்து பாட்டு போட்டு தாக்குறோம். மானே தேனே மாதிரி போர் அடிச்சா, நீங்க வில்லன்களை போட்டு கும்முறீங்க. கொஞ்ச நேரம் சந்தானம் கூட சேர்ந்து காமடி பண்ணுறீங்க. கடைசியில எல்லா வில்லன்களையும் கொன்னுட்டு மேடம் கையை பிடிக்கிறீங்க, அத்தோட"BAD BOYS" பாட்டை போட்டு குத்துயிர், கொலைஉயிர்ருமாய் இருக்கிற ஆடியன்ஸை மொத்தமா முடிக்கிறோம்.
இப்படி பட்ட மொக்கை கதைக்கு எப்படி தான் சிவக்குமார் குடும்பம் ஓகே சொல்லுச்சோ, சத்தியம்மா இன்னும் எனக்கு புரியல. இந்த படத்தை தெலுங்கு படத்தோட கம்பார் பண்ணுனா, அது தெலுங்கு சினிமாவை அவமான படுத்துற மாதிரி ஆகிரும். தெலுங்கு மக்கள் இதை விட மிக சிறப்பாய் மசாலா படம் எடுப்பார்கள்.
கார்த்தி, "பருத்தி வீரன்" படத்துல நடிச்ச ஆள். எப்படி எல்லாம் நடிச்ச நடிகர், இப்ப இப்படி மொக்கையா நடிக்கிறாரே. சோ சேடு ..!! கூடிய விரைவில் பரத், விஷால்,பாக்கு தல சுந்தர்.C , சிம்பு , தனுஷ் லிஸ்டில் சேர்ந்து விடுவார். அனைத்துக்கும் ஒரே எக்ஸ்ப்ரெஷன் காட்டி நடிக்கிறார். கோப பட சொன்னால் மொறைக்கிறார். மாறுங்க கார்த்தி, இல்லாட்டி சிரமம் தான்.
அனுஷ்கா - முதல் பாதியில் ஒரு டயலாக் கூட இல்லை. இரண்டாம் பாதியில் இரண்டு பாட்டுக்கு டான்ஸ் ஆடுகிறார். இவருக்கு இது மற்றுமொறு படம். ஒன்றும் சொல்வதருக்கு இல்லை. படத்தில் இருக்கும் ஒரே எண்டர்டைன்மெண்ட் சந்தானம் தான். இவர் இருந்த காரனத்தால் தான் படத்தில் சிறிது நேரம் ஒட்கார முடிந்தது. அனால் நிறைய டபுள் மீனிங் ஜோக்ஸ். டபுள் மீனிங் பேசியே ஒழிந்து போன விவேக் மாதிரி இவர் ஆகிவிட கூடாது.
பாடல்கள் ஒன்றுமே மனதில் தங்க வில்லை. "BAD BOYS" பாட்டு மட்டும் டிவி விளம்பரம் காரணமாக நான் எதிர்பார்த்து சென்றேன். ஆனால் கடைசியில் சுபம் போட்டவுடன் பாட்டை போட்டார்கள். எனக்கு "ராஜா பாட்டை" ஞாபகம் தான் வந்தது. பாட்டை ரசிக்கும் மனநிலையில் சத்தியமாக அப்பொழுது நான் இல்லை. எப்படா தியேட்டரை விட்டு வெளியே ஓடுவோம் என்கிற மனநிலை தான் எனக்கு இருந்தது. தம் இருந்தா போய் தியேட்டர்ல பாருங்க.
அலெக்ஸ் பாண்டியன் - மரண மொக்கை ..!!!!
My Rating: 3.2/10......
ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹ...................................
ReplyDeleteசேம் ப்ளட் ..ரொம்ப நொந்துட்டேன் பாஸ்.
Deleteஅப்பா நாங்க தப்பிச்சோம்.
ReplyDeleteஎங்களுக்காக நீங்க உங்க உயிரை ரிஸ்க் எடுத்ததற்கு அனுதாபங்கள்.
வாங்க கிருஷ்ணா..இன்னும் ரெண்டு மாசத்துல டிவியில போடுவாங்க..அப்ப கூட பார்த்துராதீங்க.
Deleteஉங்க தைரியத்தை பாராட்டுரேன்...
ReplyDeleteமுடியல ஜீவா...சத்தியமா முடியல...
Deleteபடம் பார்த்ததற்கு நன்றிகள். உங்கள் துணிச்சலையும் பெருந்தன்மையையும் பாராட்டுகிறேன். :)))
ReplyDeleteநொந்து நூல் ஆகிட்டேன் பாஸ்..
Deleteயோவ் போங்கய்யா... ட்ரைலர பார்த்தாலே தெரியல மரணமொக்கைன்னு,,,
ReplyDeleteபிரபா, சென்னையில இருக்கேன் நான்.. வேற படம் எதுவும் இல்ல..வழி இல்லாம போய் பொறியில மாட்டிகிட்டேன் ..
Deleteஹி ஹி நாங்க திருத்தணி.ல அடிபட்ட போது யாராச்சும் கேட்டிங்களா..
ReplyDeleteமாப்பிளைக்கு அடுத்த சுராஜ் படம்னதுமே அலெர்டாக வேணாமா???
கல கல விமர்சனம்
//கோப பட சொன்னால் மொறைக்கிறார்//
பாஸ் என்னது இது??? கோப பட சொன்னா எல்லாருமே முறைகிறது தானே வழமை.. :)
வோய் மொக்கை படத்தோட மொக்கை விமர்சனத்துல வந்து லாஜிக் பார்த்துகிட்டு..பிச்சு புடுவேன் ..பிச்சு....
Deleteஎப்படி மொறைக்காம கோப படனும்ன்னு "தூள்" படத்துல விக்ரம் பண்ணி காட்டி இருப்பார். அதை சொன்னேன் பாஸ்.
பாஸ் சூப்பர் ஏன் பங்குக்கு நானும் கிழி சுருக்கேன் http://chakkarakatti.blogspot.in/2013/01/blog-post_12.html
ReplyDeleteநீங்களும் நல்லா கழுவி ஊத்தி இருக்கீங்க...மனசே ஆறல தல..
Deleteசூப்பரா எழுதியிருக்கீங்க...தெளிவா மொக்கைன்னு தெரிஞ்சி போச்சு....இனி பாடம் பார்க்கிற தொல்லை இல்லை....
ReplyDeleteவாங்க அகிலா மேடம்..
Deleteபடம் ரொம்ப மொக்கைங்க ...எனக்கு தல வலி தான் மிஞ்சிச்சு.. :(
தல trailer பார்த்தபின்னும் நீங்க எப்படி நம்பி இந்தப் படத்துக்கு போனீங்கனு தான் நான் யோசிக்கிறேன் :-) இந்த படமெல்லாம் ஹிட் ஆனாதான் அது மெடிக்கல் மிராக்கிள். இந்த ரிசல்ட் எதிர்பார்த்தது தான். சகுனி க்கு பிறகு இந்தப் படத்தையும் மெகா ரிலீஸ் பண்ணிருக்காங்க. சமர் ரிலீஸ் ஆச்சா இல்லையான்னே தெர்ல. லட்டு தின்ன ஆசையா வும் சத்தத்தையே காணோம். மாமா கம்பெனி மூலமா மொத்தமா இந்த விடுமுறை சீசனை குத்தகைக்கு எடுத்திருக்கார் கார்த்தி. வருடத்தின் முதல் படத்தை மரண ப்ளாப்பாக கொடுத்து இந்த வருடத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள். மற்றுமொரு 2012ஐ யோசிக்கவே முடியவில்லை :-(
ReplyDeleteவாங்க தல...படம் வசூல் ரீதியாவும் மரண அடி வாங்கி இருக்கு..
Deleteபொங்கலுக்கு புது படம் பார்க்கிற பழக்கம் தான், என்னைய இந்த உலக சினிமாவுக்கு போக வச்சது. அடுத்த மாசம் நல்ல டைரக்டர்ஸ் படம் லைன்னா வர இருக்கிறது. பார்போம்...எதிர்பார்போம்.
தல படம் இருந்ததுன்னு முக்கியம் இல்ல, பட் நீங்க எப்படி எழுதி இருக்கீங்க அது தான் முக்கியம்.... உங்க நடையில் இயக்குனர் கதை சொல்லுவது போல் காயை நகர்த்தியது அற்புதம்.....
ReplyDeleteபடம் நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன்
வாங்க சீனு...
Deleteசென்னையில இருந்த காரணத்தால இந்த மரண மொக்கையை பார்க்க வேண்டியதா போச்சு.என்னை மாதிரி வேறு யாரும் ஏமாற கூடாது என்கிற என்னத்தில் தான் பதிவு போட்டேன்.
நான் ட்ரைலர பாத்தவுடனேயே முடிவுபண்ணிட்டேன் பாக்க கூடாதுன்னு
ReplyDeleteவாங்க லக்கி..நான் மாட்டிகிட்டேன் .. :(:(
Deleteகார்த்தி படமே தியேட்டரிலும், டி.வி.டியிலும் பார்க்கக்கூடாதுன்னு முடிவு பண்ணி ரொம்ப நாளாச்சு.. அநியாயத்துக்கு மாட்டிக்கிட்டீங்களே!.. பார்க்கப்போன என் நண்பன் ஒருவன் நிதி மோசடி கேஸுல நஷ்ட ஈடு கேட்டுருவோமான்னு யோசிக்கற அளவுக்கு போயிருக்கான்!
ReplyDeleteவாங்க JZ.. இப்ப தான் அந்த நல்ல முடிவை நானும் எடுத்து உள்ளேன்.
Deleteடவுன்லோட் கூட நீங்களே பண்ணவேண்டாம். உங்க நண்பர்கள் யாராச்சும் பண்ணுவாங்க.. அவங்ககிட்டருந்து வாங்கிக்கோங்க..
ReplyDeleteவாங்க Shareef, கார்த்தி நடிக்கிற படத்தை பார்க்கும் போது அது தான் பண்ணனும் போல..
Deleteதல .. நீங்களும் சிக்கி சிதைஞ்சிருக்கிங்க போல .. லட்டு பார்த்து கூலாவுங்க ..(விமர்சனம் பார்த்துட்டு போங்க இதுக்காவது )
ReplyDeleteவாங்க அரசன், லட்டு தான் மனசை ஆறுதல் படுத்திச்சு.
Deleteஏங்க..தனுஷ அந்த லிஸ்டுல சேர்த்துட்டீங்க.. இப்போதைக்கு கொஞ்சம் நல்லா நடிக்கிறவரு அவருதான் :)
ReplyDeleteவேங்கை, மாப்பிள்ளை போன்ற படங்களை ஞாபகம் வச்சு அப்படி எழுதிட்டேன் தல.
Deleteதிரையரங்க உரிமையாளர்கள் இப்ப ரொம்ப மகிழ்ச்சியா இருப்பாங்களே!
ReplyDeleteஎப்படியோ உங்க தியாகத்தை பாராட்டனும்:)
ஆமா ராஜ், விஸ்வரூபம் வரும் போது தியேட்டர் எல்லாம் ப்ரீயா இருக்கும். :):)
Deleteபொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்றதால் சில நாட்கள் பதிவுலகம் பக்கம் வரமுடியல.
ReplyDeleteராஜ் எப்படி இந்த படத்தை போய் எதிர்பார்த்தீர்கள்.? உங்களை விட சினிமா அறிவு குறைவாக கொண்ட நானே இந்த படத்தின் ரிசல்ட் யூகித்து விட்டேன்.எப்படி சிக்கினீர் ? சென்னையில் படம் பார்க்கணும் என்றால் எதாவது ஆங்கில படம் போய் இருக்கலாமே ராஜ்.ஒரு ஆறுதலுக்காக சொல்கிறேன்.தப்பாக எடுத்துகொள்ளவேண்டாம்.உங்கள் லட்டு தின்ன ஆசையா விமர்சனம் படித்தேன் .நான் இதுவரை புது படம் எதுவும் பார்க்கவில்லை.லட்டுதான் பார்க்கலாம் என்று இருக்கிறேன்.
த்ரிஷா இல்லாட்டி திவ்யா-- செம பாயிண்ட் .முதல் பாலே சிக்ஸர் அடிதா மாதிரி இருந்தது.
அதெல்லாம் ஓகே .பாக்கு தல --இது யார் புது நடிகர்.தமிழில்.
இந்த படத்தை டவுன்லோடு கூட பண்ணக்கூடாதுன்னு முடிவோடு இருந்தேனுங்க...அடுத்து விஸ்வரூபத்துக்கு வெயிட்டிங்..
ReplyDeleteநான் இன்னும் பார்க்காத மரண மொக்க படத்துக்கு நல்ல மரண அடி கொடுத்துட்டீங்க நண்பா