இந்த வருடத்தில் நான் மிகவும் எதிர்பார்த்த படமான "விஸ்வரூபம்" வரும் ஜனவரி-11 தேதி தியேட்டரில் ரீலீஸ் ஆகுமா இல்லையா என்று எனக்கு தெரியாது, ஆனால் எனது வீட்டில், அதுவும் எனது டிவியில் ஜனவரி-10 தேதி, இரவு 9:30 மணிக்கு கண்டிப்பாய் ரீலீஸ் ஆகிறது. ஆம், நான் எனது ஏர்டெல் டிடிஎச-ல் விஸ்வரூபம் படத்திருக்கு அட்வான்ஸ் புக்கிங் செய்து உள்ளேன். என்னை போலவே இங்கு ஹைதராபாத்தில் என்னுடன் பணி புரியும் நிறைய நண்பர்கள், அட்வான்ஸ் புக்கிங் செய்து உள்ளார்கள். இன்னும் சில நண்பர்கள், அவசர அவசரமாக ஏர்டெல் கனெக்ஷன் பெறுவதில் மும்மரமாய் இருக்கிறார்கள். அனைவருக்கும் கமலின் "விஸ்வரூபம்" மீது பயங்கர எதிர்பார்ப்பு என்று சொல்ல முடியாது, ஆனால் படத்தை தியேட்டர் ரீலீஸ்க்கு முன்பே பார்க்க போகிறோம் என்ற எண்ணமும், தங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, குடும்பத்துடன் இரவு உணவை சாப்பிட்டு கொண்டே ஒரு புது படத்தை பார்க்க போகிறோம், அதுவும் கமல் படத்தை பார்க்க போகிறோம் என்ற உணர்வே அனைவருக்கும் இருக்கிறது.
ஹைதராபாத்தில் தமிழ் படம் ரீலீஸ் என்பதே அறிய நிகழ்வு, அப்படியே ரீலீஸ் ஆனாலும் வெள்ளி, சனி, ஞாயறு என்று முன்று நாட்கள் தான் ஓடும். அதிலும் காலை காட்சி மட்டும் தான், சில நேரங்களில் இரண்டு காட்சிகள். நல்ல நடிகரின் படத்திருக்கு அதிக பட்சம் மொத்தம் 3~5 காட்சிகள் தான். அதில் ஒரு காட்சிக்கு டிக்கெட் எடுப்பது என்பது "பொங்கலுக்கு தட்கல்" டிக்கெட் எடுப்பது போன்றது. வெள்ளிகிழமை படத்திருக்கு புதன் கிழமையே "Book My Show" ஓபன் செய்து ரெப்ரெஷ் செய்து கொண்டே இருக்க வேண்டியது தான். நிறைய நேரங்களில் "பிம்பளிக்கி பிளாப்பி" தான். இப்படி பட்ட சூழநிலையில் வாழும் எங்களை போன்ற வெளி மாநில தமிழ் படத்தை விரும்பும் ரசிகர்களுக்கு டிடிஎச ரீலீஸ் என்பது மிக பெரிய வர பிரசாதம். வெளி மாநிலத்தில் வாழும் எங்கள் நிலைமையே இப்படி என்றால், வெளி நாட்டில் வாழும் தமிழ் சினிமா ரசிகர்களின் நிலைமையை நான் சொல்ல வேண்டியது இல்லை. கமல் இந்தியாவில் மட்டும் டிடிஎச் ஐடியாவை நிறுத்தி கொள்ளாமல், இந்தியாவிற்கும் வெளியே இதை கொண்டு செல்ல வேண்டும்.
கமல் தனது டிடிஎச் முயற்சி பற்றி சொன்ன போது, நானும் சிரித்தேன், நடக்கவே நடக்காது என்று தான் நினைத்தேன். ஆனால் கமல் நடத்தி காட்டி விட்டார். "கலைஞர் சீரியஸ்" என்பது போல், கமல் முன்றே மணி நேரத்தில் முன்னுறு கோடி ரூபாய் சம்பாரித்து விட்டார் என்று பேஸ்புக்கில் ஒரு வதந்தி பரவி கொண்டு இருக்கிறது. நான் எப்பொழுதும் சினிமாவின் லாப நஷ்ட கணக்கை பற்றி கவலை பட மாட்டேன். ஒரு ரசிகனாய் படம் எப்படி இருக்கிறது, நான் செலவு செய்த காசுக்கு படம் என்னை திருப்தி படுத்தியதா என்று தான் பார்பேன். ரஜினியின் தீவிர ரசிகனாகிய நான் இது வரை ரஜினி படத்திருக்கு மட்டும் தான் FDFS (முதல் நாள் முதல் காட்சி) பார்க்க, இல்லாட்டி முதல் நாளே பார்க்க கணக்கு வழக்கு இல்லாமல் பணத்தை செய்து உள்ளேன். பெங்களூரில் "சிவாஜி"-க்கு நான் குடுத்த ஒரு டிக்கெட் விலை 600/-, குப்பை தியேட்டரில் கூட கொண்டாட்டமாய் பார்த்தேன். "எந்திரன்" லாஸ் ஏஞ்சல்ஸ் அருகில் இருக்கும் ஒரு சிறு ஊரில் பார்த்தேன். டிக்கெட் விலை 30$ (1,200 ரூபாய்). எந்திரன் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆனவுடன் எதுவும் யோசிக்காமல் எனக்கும் எனது நண்பர்க்கும் சேர்த்து இரண்டு டிக்கெட் புக் பண்ணி விட்டேன். அதன் பிறகு தான் நண்பர் சொன்னார், 30$ என்பது இங்கு டூ மச், அவதார் கூட 15$ தான் என்று. ஆனால் எனக்கோ, அப்பாடி டிக்கெட் கிடைத்து விட்டதே என்கிற நிம்மதி மட்டும் தான் இருந்தது. ஏனோ ரஜினி மீது மட்டும் எனக்கு அப்படி ஒரு வெறி. ரஜினி படத்தை பார்க்க போகிறோம் என்பதே எனக்கு பெரிய சந்தோஷத்தை குடுக்கும்.
கமலை நடிகராய் பிடிக்கும், ஆனால் கமல் படத்தை பார்க்க போகிறோம் என்பதில் சந்தோஷத்தை விட ஒரு பயமே இருக்கும். படம் எப்படி இருக்க போகிறதோ என்கிற பயம், மட்டும்மல்ல, படம் எனக்கு புரியுமா என்கிற பயமும் எனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். விவரம் தெரிந்து கமல் படம் பார்க்க ஆரம்பித்த உடன் நிறைய தடவை பல்பு வாங்கி உள்ளேன். ஆளவந்தான், ஹேராம் (உலக சினிமா பாஸ்கரன் புண்ணியத்தில் இப்பொழுது தான் இந்த படத்தில் கமலின் உழைப்பு எனக்கு புரிந்தது, கமல் படத்தை ஜஸ்ட் லைக் தட் பார்க்க கூடாது என்ற உண்மையும் ஹேராம் தொடர் முலம் கிட்டியது) மும்பை எக்ஸ்ப்ரெஸ், அன்பே சிவம் என்று என்னில்அடங்கா தடவை பல்பு வாங்கி உள்ளேன். கமலின் நிறைய படங்கள் அவையார் ஆரம்ப பாடசாலையில் பயிலும் மாணவனுக்கு ஐ.ஐ.டி சிலபஸ் சொல்லி குடுப்பது போன்று இருக்கும். ஆனாலும் அவர் எப்படியும் ரசிகனின் ரசனை தரத்தை உயர்த்தியே தீருவது என்பதில் உறுதியாக உள்ளார். என்றாவது ஒரு நாள் அதில் வெற்றியும் பெறுவார்.
கடைசியாக கமல் "சாதாரண சினிமா ரசிகனை", என்னையும் சேர்த்து திருப்தி படுத்திய படம் என்றல் அது "தசாவதாரம்" மட்டும் தான். அதிலே எனக்கு இன்னும் முதல் காட்சி, மற்றும் கடைசி காட்சி புரியவில்லை. "கிறிஸ்டியன் பிளெட்சர்", "ரங்கராஜ நம்பி" மற்றும் "வின்சென்ட் பூவராகவன்" ஆக மாறி என்னை குதூகல படுத்தி இருந்தார். "தசாவதாரம்" என்னை பொறுத்த வரை மாஸ் எண்டர்டேயினர். அது போன்ற ஒரு படத்தை தான் கமலிடம் இருந்து நான் மட்டும் அல்ல, சராசரி சினிமா ரசிகனும் எதிர்பார்க்கிறான். "விஸ்வரூபம்" அது போன்ற ஒரு படமாய் இருக்க வேண்டும். படத்தின் ட்ரைலர் கூட அப்படி தான் இருக்கிறது. இது வரை வந்த அணைத்து ட்ரைலர்களிலும் "இந்த கதையில எல்லோருக்கும் டபுள் ரோல்" என்கிற வசனம் இடம் பெறுகிறது, அது கொஞ்சம் நெருடலை தருகிறது. அது மட்டும் அல்லாமல், தமிழ் சினிமாவின் மாபெரும் வெற்றி அடைந்த படங்களில் அனைத்திலும் "டெர்ரர் அல்லது கெத்து வில்லன்" கதாபாத்திரம் ஒன்று கண்டிப்பாய் இருந்தே இருக்கும். கமலின் தசாவதாரதில் "பிளெட்சர்", எந்திரனில் "சிட்டி 2.0", மங்காத்தா "விநாயக் மகாதேவ்" , பாட்ஷா "ஆன்டனி", சிவாஜி "ஆதி",காக்க காக்க "பாண்டியா" என்று நிறைய உதாரணம் சொல்லலாம். "விஸ்வரூபம்" படத்தின் வில்லன் யார் என்றே ட்ரைலர் வைத்து சொல்ல முடியவில்லை. அது போக படத்தில் நடித்து உள்ள நிறைய நடிகர்கள் தமிழுக்கு புதுமுகங்கள். இவை எல்லாம் படத்தின் ஓட்டத்தை பாதிக்காது என்றே நம்புவோம் ஆக.
கடைசியாக ஏர்டெல் கஸ்டமர் கேரிடம் பேசியதில் இருந்து டிடிஎச்சில் இருக்கும் ஒரே குறை, படம் பார்க்கும் போது கரண்ட் கட் ஆனாலோ, அல்லது மோசமான வானிலை காரணமாக உங்க ஏரியாவில் மட்டும் ஒலிபரப்பு தடை பட்டாலோ, படத்தை மறு ஒளிபரப்பு பண்ண மாட்டார்கள். கரண்ட் கட் என்பது நமது பிரச்னை என்பதால் மறு ஒளிபரப்பு இல்லை என்கிற விளக்கம் எனக்கு குடுக்க பட்டது. அடுத்து படத்தை யாரும் ரெகார்ட் செய்ய முடியாது. அதருக்கு அவர்கள் குடுத்த விளக்கம் -நீங்கள் படத்தை பிரிண்ட் போட்டால், அல்லது உங்கள் கேமராவில் ரெகார்ட் செய்து, இன்டர்நெட்டில் உலாவ விட்டால், யாரின் டிடிஎச்சில் இருந்து கேமரா ரெகார்ட் செய்ய பட்டது என்று மிக சுலபமாக தெரிந்து விடும், படம் உங்கள் டிவியில் வரும் போது, உங்களுக்கு என்று ஒதுக்க பட்ட "யூனிக் பார் கோட்" ஒன்று உங்கள் திரையில் படம் முழுவதும் வரும். ஒவ்வொரு வீடுக்கும் ஒவ்வொரு கோட். அதனால், நீங்கள் ரெகார்ட் செய்தால் கண்டிப்பாய் யார் வீட்டில் இருந்து ரெகார்ட் செய்ய பட்டது என்பது தெரிந்துவிடும். ஆனால் இதருக்கு எல்லாம் நம் ஆட்கள் பயபடுவர்கள் என்று நான் நம்ப தயாராக இல்லை. படம் வெற்றி அடையுதோ இல்லையோ, ஆனால் கமலின் டிடிஎச் முயற்சி தமிழ்/இந்திய சினிமாவின் பெரிய புரட்சி என்றே நான் சொல்லுவேன்.
ஹாட்ஸ் ஆப் கமல் !!!
முதல் டி.டி.எச் அனுபவம் சூப்பராக அமைய வாழ்த்துக்கள்!
ReplyDelete* நம்ம இங்க fdfsக்குத்தான் மோதனும்!
வாங்க JZ, உங்களுக்கும் FDFS டிக்கெட் கிடைக்க வாழ்த்துக்கள்.
Deleteகமலின் DTH முயற்சி வரவேற்கத்தக்கதே.
ReplyDeleteஇதன் மூலம் பணம் போட்டவர்கள் விரைவில் லாபம் அடைய முடியும்.
இதனால் தியேட்டர்கள் பாதிக்கப்படமாட்டார்கள் எனபது எனது கருத்து.
தியேட்டர் போகும் பெரும் சதவீதம் இளம்ப்ரேயதினரே.
அவர்கள் கண்டிப்பாக தியேட்டருக்கு சென்று தான் பார்ப்பார்கள்
இப்பொழுதெல்லாம் படத்தின் மொத்த வசூலில் 80% முதல் பத்து நாட்கள் வரும் வருமானம் தான் என்கிறது ஒரு கணிப்பு.
மற்றும் வெளியூர் நண்பர்கள் பற்றிய உங்கள் கருத்து மிகவும் சரி.
அவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
உண்மை தான் கிருஷ்ணா, ஒரு புது டெக்னாலஜி வரும் பொழுது அதை நிறைய பேர் எதிர்ப்பது வாடிக்கை தான்.
Delete//இப்பொழுதெல்லாம் படத்தின் மொத்த வசூலில் 80% முதல் பத்து நாட்கள் வரும் வருமானம் தான் என்கிறது ஒரு கணிப்பு///
முதல் முன்று நாட்களில் 80% வருமானத்தை எடுத்து விடுகிறார்கள் என்று நான் நினைக்கிறன். முன்று நாட்களுக்குள் படத்தின் ரிசல்ட் தெரியும் முன்னே பணத்தை அள்ளி விடுகிறார்கள்.
டிடிஎச் - மீடியம் வயது உடையவர்கள், 30 வயதுக்கு மேல், வீட்டில் இருக்கும் குடும்ப தலைவிகளை குறி வைத்தே வருகிறது. 28 வயதுக்கு கம்மியாக இருப்பவர்களை டிவிக்கு இழுப்பது சிறிது சிரமமே.
ReplyDeleteராஜ்,
ரஜினி படமும் பார்த்துட்டு ,கமல் படமும் விரும்பி பார்க்கும் வகையில் என்னோடு ஒத்துப்போறிங்க:-))
லோகநாயகர் படத்தை நக்கல் செய்யப்பார்ப்பதாக நினைக்கலாம்,ஆனால் பார்த்துவிடுவது வழக்கம்.
// கமலின் நிறைய படங்கள் அவையார் ஆரம்ப பாடசாலையில் பயிலும் மாணவனுக்கு ஐ.ஐ.டி சிலபஸ் சொல்லி குடுப்பது போன்று இருக்கும்.//
இதுல ஒரு திருத்தம், அவ்வையார் ஆரம்பப்பாட சாலை சிலபசை ஐ.ஐ.டி சிலபஸ் என சொல்லி படம் காட்டுவது தான் லோகநாயகர் பாணி :-))
தசாவதாரம் படத்தில், சின்ன வயலில் இருக்கும் வைரசுக்காக சுனாமி வந்ததை ஜஸ்டிபை செய்திருப்பார்.
எவ்வளவு கொடிய வைரஸ் ஆக இருந்தாலும் நிறைய பேரை பாதிக்க நிறைய அளவில் தேவை. ஒரு 10 மில்லி லிட்டர் வைரஸ் இருக்கும் குடுவையினால் 10 பேர் பாதிக்கப்படலாம்.
மேலும் திரவ நிலையில் இருப்பது காற்றில் பரவும் என சொல்வது :-))
சோடியம் குளோரைடே தான் வேண்டும் என்பது. குறைவான வெப்பத்தில் இருக்கவில்லை எனில் தானாகவே டீநேச்சர் ஆகி ,வீரியம் போய்விடும் :-))
கொதிக்கும் சுடுநீரில் போட்டாலே ஸ்டெரிலைஸ் ஆகிவிடும் :-))
வைரஸ் என்ற பேதோஜென் ஹோஸ்ட் செல் இல்லாமல் ஆக்டிவாக இருக்காது, அப்படி சாத்தியமெனில், கொசு கடியின் மூலமும் எய்ட்ஸ் பரவிவிடும் :-))
----------------------
டிடிஎச்சில் 300 கோடி கதையை பற்றி ஏர்டெல்லில் கேட்டு இருக்கலாமே, எதாவது சொன்னார்களா?
படம் பார்க்க எத்தனைப்பேர் இன்வைட் செய்வீங்க?
தமிழுக்கு தான் 1000,தெலுகு,இந்தி 500 ரூ எனப்போட்டு இருக்காங்க. தமிழ் தானே வாங்கினிங்க?
டாப் கார்டு அல்லது வங்கி மூலம் பணம் செலுத்தனுமா?
டிவி டியுனர் கார்டு மூலம் கணினியில் பதிவு பரிசோதனை செய்து பார்க்கலாமே,இல்லைனா டிவியின் A/V out, HDMI port மூலம் கணினியில் இணைத்து windows media centre மூலம் பதிவாகிறதா என பார்க்கலாமே?
பதிவு செய்ய முடியாத டெக்னாலஜி என்றாரே அது உண்மையானு தெரிஞ்சிடும்ல :-))
------------------
அமெரிக்காவில் வெளியாகும் தமிழ்படங்கள் எல்லாம் சிறப்புக்காட்சிகள் வகை, அதன் கட்டண நிர்ணயம் ,அமெரிக்க படங்களுக்கு நிகராக வைக்கத்தேவை இல்லை, அமெரிக்க சென்சார் சான்று, MPA rated பெறுவதில்லை. முடிந்த வரையில் கூடுதலாக கட்டணம் வைத்து போட்ட காசை எடுக்கவே பார்ப்பார்கள்.
சென்னையில் தமிழ் சினிமாவிற்கு 100 ரூ எனக்கட்டணம் வராத காலத்திலேயே இந்திப்படங்கள் ரூ 100க்கு மேலான கட்டணத்தில் தான் வெளியாகும். நான் சொல்வது 2000ம் ஆண்டு காலத்திலேயே.ஜெயப்பிரதா,மெலொடி,உட்லேண்ட்ஸ் ஆகிய தியேட்டர்களில் 100 ரூபாய் கட்டணத்தில் தான் இந்திப்படங்கள் எப்பொழுதும் வெளியிடுவார்கள். அடுத்தக்கட்டணம் 80 ரூ.அப்பொழுதெல்லாம் சத்யமில் அதிகபட்ச கட்டணம் 40 ரூ தான்!
-------------------------------
வாங்க வவ்வால்ஜி, உங்களை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு. முதலில் உங்களுக்கு என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
Deleteஉண்மை தான், நான் பார்த்த வரைக்கும் உங்களுக்கும் எனக்கும் நிறைய இடத்தில ஒரே frequency உண்டு. மோகன் குமார் ஆட்டோ பதிவில் (!!!), தான் அதை முதல் முதலில் பார்த்தேன்..
நீங்க சொல்லுற பாயிண்ட்ஸ் எல்லாமே கரெக்ட் தான். ஆனா, உங்க அளவுக்கு நான் தசாவதாரதில் லாஜிக் மிஸ்டேக்ஸ் கவனிக்கவில்லை. படம் என்னை அதிகம் யோசிக்க விடாமல் பர பர வென்று இழுத்து சென்றது. அது தான் அந்த படத்தின் வெற்றி என்று நான் நினைக்கிறன்.
//டிடிஎச்சில் 300 கோடி கதையை பற்றி ஏர்டெல்லில் கேட்டு இருக்கலாமே, எதாவது சொன்னார்களா?///
வவ்வால், 300 கோடி பற்றி எதுவும் கேட்கவில்லை. அது வதந்தி தான். என்னுடைய கணக்கு இது தான்..
DTH operator
Total Subscribers:4.8 crore (2011 Stats)
Market share
1. Dish TV 1.39 crore 28%
2. Tata Sky 92 lakh 19%
3. Airtel Digital TV 80 lakh 16%
4. Sun Direct 76 lakh 16%
5. Videocon D2H 61 lakh 13%
6. Reliance Digital TV 44 lakh 9%
இது மொத்த இந்தியா கணக்கு:
Airtel Digital TV மொத்தம் 80 லட்சம் இருக்கு. அதுல 3~5 லட்சம் பேர், பட விளம்பரம் வந்த இந்த ரெண்டு நாள்ல புக் பண்ணி இருப்பாங்க. இது மாதிரியான ஒரு விளம்பரம் (30 Lakh) வந்த உடன், இன்னும் நிறைய பேர் ஒரு உந்துதலில் புக் பண்ணுவாங்க. இது ஒரு விதமான மார்க்கெட்டிங்..
பட ரிலீஸ்க்கு இன்னும் 10 நாள் இருக்கு, கண்டிப்பா குறைஞ்சது 10 ~ 12 லட்சம் பேர் ஏர்டெல்ல மட்டும் பார்ப்பாங்க என்பது என்னோட கணக்கு. இது தப்பாய் கூட இருக்கலாம்.. :):)
ஏர்டெல் தவிர்த்து, இன்று வரை மற்ற ஆப்ரேட்டரிடம் இருந்து விளம்பரம் வர வில்லை. டீல் final ஆகி இருக்காது போல.
மொத்த ஆப்ரேட்டரும் படத்தை வெளியிட்டால், எல்லாம் சேர்த்து 30~35 லட்சம் வரலாம்.
(((Cont...)))
(((Cont...)))
Delete//படம் பார்க்க எத்தனைப்பேர் இன்வைட் செய்வீங்க?//
இல்ல ஜி, இப்போதைக்கு யாரையும் இன்வைட் பண்ணுற ஐடியா இல்ல, இன்னும் நாள் இருக்கிற காரணத்தால், நெருங்கிய நண்பர்கள் யாராவது வந்து படம் பார்க்க ஜாயின் பண்ணலாம்.
//தமிழுக்கு தான் 1000,தெலுகு,இந்தி 500 ரூ எனப்போட்டு இருக்காங்க. தமிழ் தானே வாங்கினிங்க?//
ஆமா ஜி, தமிழ்லில் தான் புக் செய்து உள்ளேன்.
//டாப் கார்டு அல்லது வங்கி மூலம் பணம் செலுத்தனுமா?//
நார்மல் ஏர்டெல் ரீசார்ஜ் பண்ணினா போதும். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை 310 ரூபாய்க்கு நான் ரீசார்ஜ் பண்ணுவேன். படம் டிடிஎச்சில் ரீலீஸ் ஆகும் நேரத்தில் நமது அக்கௌன்டடில் இருந்து 1000 ருபாய் எடுத்து விடுவார்கள். அதனால் முன்பே நமது அக்கௌன்டில் 1000 ரூபாய் இருக்கும் படி பார்த்து கொள்ளவும். பல வழிகளில் அக்கௌன்ட் ரீசார்ஜ் செய்யலாம்.
http://www.airtel.in/wps/wcm/connect/dth/Digital+TV/Recharge/
//டிவி டியுனர் கார்டு மூலம் கணினியில் பதிவு பரிசோதனை செய்து பார்க்கலாமே,இல்லைனா டிவியின் A/V out, HDMI port மூலம் கணினியில் இணைத்து windows media centre மூலம் பதிவாகிறதா என பார்க்கலாமே?//
//பதிவு செய்ய முடியாத டெக்னாலஜி என்றாரே அது உண்மையானு தெரிஞ்சிடும்ல :-)) ///
படத்தை ரெகார்ட் செய்ய முடியும். DTH record option வேலை செய்யாது. நமது கேமரா/மொபைல் கொண்டே ரெகார்ட் செய்யலாம். ஆனால் அப்படி ரெகார்ட் செய்தவர் யார் என்று ரொம்ப ஈசி யாக கண்டு பிடித்து விடுவோம். பதிவின் கடைசி பாராவில் அதை பற்றி அவர்கள் குடுத்த விளக்கத்தை சொல்லி இருக்கிறேன்.
ராஜ்,
Deleteநன்றி!, உங்களுக்கும் ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
பெரும்பாலும் கைப்பேசியில் பதிவுகள் படிப்பதால் உடனே கருத்து சொல்ல முடிவதில்லை, ஆனால் படித்துக்கொண்டு தானிருக்கிறேன்.
ஆமாம் இல்ல ஆட்டோ மேட்டரிலும் ஒத்த சிந்தனை தான்,மறந்துப்போச்சு, யதார்த்தமாக சிந்தித்தால் பல சமயம் கருத்து ஒத்துப்போயிடும்.
எனக்கு டிடிஎச் இல் போடுவதால் எனக்கு என்ன பிரச்சினை ,ஆனால் இல்லாத சிலவற்றை சொல்லி ஓவராக சவுண்டு வருவதால் ,உண்மையை சொல்ல வேண்டியதாகிவிடுகிறது.
சிவாஜி மீண்டும் 3டி ,டால்பி அட்மோஸ் 64 சேனலில் வெளியானது(முதல் இந்திய,தமிழ் படம்) ,ஆனால் இந்தளவுக்கு அலப்பரையே கொடுக்காமல் அடக்கமா தானே வெளியாச்சு ,அதற்கு சில காரணங்களையும் எனது பதிவில் சொல்லியிருந்தேன்.
என்னைப்பொறுத்த வரையில் பதிவு செய்ய முடியாத தொழில்நுட்பமே உலகில் இல்லை, DRM,HDCP முறை எல்லாம் ஹாலிவுட்டிலேயே தோற்றுப்போன ஒன்று. எல்லாவற்ரையும் கிராக் செய்துவிட்டார்கள்.
நம்ம ஊரில் வெறும் பார்கோடினை திரையில் வர வைப்பதால் எல்லாம் தடுக்க முடியாது.அதனை நீக்கவும் மென்பொருள் இருக்கு.ஃபாரன்சிக் வாட்டர்மார்க் என நம்ம கண்ணுக்கே தெரியாத வாட்டர்மார்க்குடன் தான் ஹாலிவுட் படங்கள் வருது ,அதுக்கும் திருட்டு டிவிடி விக்குறாங்க தானே :-))
நாம சொந்தமாக ரெக்கார்ட் செய்து விலைக்கா விக்க போறோம், அக்கம் பக்கம் நாலுப்பேருக்கு பாக்க உதவி தானே செய்யபோறோம், அதுக்கு என்ன பார்கோடு போட்டால் என்ன :-))
# 1000 ரூ என்பது அநியாய விலை என்பதாலும் , தியேட்டர்களில் உச்சபட்ச கட்டண எல்லையை அரசு தீர்மானிக்கிறது ஆனால் டிடிஎச் இல் அப்படி இல்லை என்பதால் ,ஒரு கட்டுப்பாடற்ற சந்தைக்கு தான் வழிக்காட்டும்,அப்பவும் காசு இருந்தா பாருங்கன்னு தான் சொல்வாங்களா?
# எல்லாப்படத்துக்கும் திருட்டு டிவிடி வரத்தான் செய்யுது,ஆனால் டைமிங்க் முக்கியம், படம் வெளியாகி நான்கு நாளா, முதல் நாள் இரவேவா என்பது , மேலும் முன்பை விட தரமான டிவிடி உருவாக்க முடியும் என்பதால் இன்னும் நன்றாக திருட்டு டிவிடி விற்கும் :-))
# முதல் 3 நாள் தான் முக்கியம் படத்தினை பற்றி நெகட்டிவ் விமர்சனம் வருவதற்குள் தியேட்டரில் கலெக்ஷன் பார்த்துவிடுவார்கள், ஆனால் இப்போ டிடிஎச் மூலம் நெக்டிவ்வா படம் நல்லா இல்லைனு செய்தி பரவினால் முதல் நாள் கூட்டமே காலி :-))
நம்ம வலைப்பதிவிலே கூட பார்க்கலாம் ,முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு காலை 11 மணிக்கே விமர்சனம் எழுதி ,படம் மோசம்னு காலியாக்குகிறார்கள், அதே நிலைமை டிடிஎச் மூலம் உருவானால் கஷ்டம் தானே, எனவே எல்லா படத்துக்கும் டிடிஎச் கைக்கொடுக்காது.
படம் நல்லா இருந்தா , தியெட்டரில் டிக்கெட்டோடு இலவசமா டிவிடி கொடுத்தாலும் ஓடும், நல்லா இல்லை என்றால் தலைகீழா நின்னு தலையால தண்ணிக்குடிச்சாலும் ஓடாது :-))
எனவே பெரிய பட்ஜெட் படத்துக்கு எல்லாம் இந்த டிடிஎச் ரிலீஸ் தேவையற்ற ரிஸ்க் ,சின்ன பட்ஜெட்டில் ஒரு கோடியில் எடுப்பவர்கள் டிடிஎச் மூலம் சில கோடிகள் தேறினாலும் பெரும் லாபம்,எனவே அவர்களுக்கு ஏற்ற ஊடகம் டிடிஎச்.
எவில் டெட் முதல் பாகம் விசிஆர் கேசட்டில் மட்டுமே ரிலீஸ் ஆச்சு, கேசட் விற்பனை சூடு பிடிக்கவே தியேட்டரில் வெளியிட்டார்கள்.
டிடிஎச் இல் பார்த்துவிட்டு ,சூட்டோடு சூடா விமர்சனம் எழுதுங்க,டிரெய்லர் பார்த்தே எனக்கு பல ஹாலிவுட் படங்கள் நியாபகம் வந்துடுச்சு :-))
இந்த அதி மேதாவி அங்குராசுகள் தங்கள் உடம்பில் இருக்கும் நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு இருந்தாலே போதும். இவங்க இம்சை தாங்க முடியல. யப்பா சாமி.
Deleteபதிவு செய்ய முடியாத டெக்னாலஜி, உலக தரமான படம், புதிய முயற்சி என்றெல்லாம் சொல்லுவது ஒரு மார்கெடிங் ஸ்ட்ராடெஜி. இதில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்யும் பொழப்பத்தவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது.
இந்த ஆள் ஒரு வேளை டியோடரென்ட் அடித்துக் கொண்டு பெண்கள் தொடர்ந்து வருகிறார்களா என்று தேடி பார்க்கும் கோஷ்டி போல் உள்ளது.
மார்கெட்டிங்கிற்காக சொல்லப் படும் எதிலும் உண்மை இல்லை என்பது வாங்குபவனுக்கும் தெரியும், விற்பவனுக்கும் தெரியும்.
அடுத்தது ஆயிரம் ரூபாய் அதிகம் என்று உளறுவது. மார்கெட் ஸ்டெபிலைசேஷன் என்று ஒன்று இருக்கிறது. எந்த பொருளையும் யாரும் அதிக விலைக்கும் விற்க முடியாது, குறைந்த விலைக்கும் விற்க முடியாது. அந்த பொருளின் சந்தை மதிப்பு என்னவோ அதற்கு தான் விற்க முடியும்.
விஸ்வரூப DTH ரிலீஸ் வெற்றி அடைந்தால் அடுத்த படத்திற்கு 2000 ரூபாய் விலை வைப்பார்கள். தோல்வி அடைந்தால் அது 500 ரூபாய் ஆகும். ஒரு வேளை ஃப்ரீயா கொடுத்ததான் சில அதி மேதாவிகள் பார்ப்பார்களோ.
கடைசியாக, அவன் அவன் அவதார் படதுலயே அயிரத்தெட்டு லாஜிக் ஓட்டைகள் கண்டுபிடிகிறான். தசான்னு ஒரு புள்ள பூச்சிய அடிச்சுட்டு கோப்பை வேற கேக்குதாக்கும்.
எந்த விஷயத்த பத்தியும் ஒரு மண்ணும் தெரியாது, ஆனா எத பத்தி எழுதினாலும் வந்து சீன் போட மட்டும் தெரியும். காலி குடம் ஓவர் சத்தம் போடுதுடா சாமி.
நடு நிலமையோடு எழுதி இருக்கிறீர்கள்.
ReplyDelete//கமலின் நிறைய படங்கள் அவையார் ஆரம்ப பாடசாலையில் பயிலும் மாணவனுக்கு ஐ.ஐ.டி சிலபஸ் சொல்லி குடுப்பது போன்று இருக்கும்// ...புரிதல்!
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலாகுமரன்...
Delete## ஒரு ரசிகனாய் படம் எப்படி இருக்கிறது, நான் செலவு செய்த காசுக்கு படம் என்னை திருப்தி படுத்தியதா என்று தான் பார்பேன்.## Me too. nalla alasal....
ReplyDeleteநன்றி ஜீவன்சுப்பு..
Deleteவாழ்த்துக்கள் தல! இங்க பெங்களூர்ல என்கிட்ட ஏர்டெல் டிடிஎச் இல்லை. அப்படியே இருந்தாலும் நான் விஸ்வரூபத்தை தியேட்டரில் தான் பார்ப்பேன் :-) சாதாரண படங்கள் இங்கு வெளியாவதிலேயே பெரும் சிக்கல் இருக்கிறது. இந்தப் படம் எப்படி என்று தெரியவில்லை. #fingers crossed. அடுத்த வாரம் bookmyshow பார்த்தால் தெரிந்து விடும்!
ReplyDeleteடிடிஎச் என்பது வெளிமாநிலத்தவருக்கு என்று மட்டுமல்ல, வயதானவர்கள், குழந்தைகள், ஊனமுற்றவர்கள் இருக்கும் வீடுகளுக்கும் வரப்பிரசாதம் தான் :-)
உண்மை தான் தல.... இங்க படம் தமிழில், தியேட்டரில் ரீலீஸ் ஆகுமா என்று உறுதியாக சொல்ல முடியாது. படம் தெலுங்குகில் 100% ரீலீஸ் ஆகிறது.
Deleteபார்போம் என்ன நடக்கிறது என்று..
புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜ்.
ReplyDeleteஉங்கள் டிவியில் ஜனவரி 1 ரிலீஸ் ? ஜனவரி 1? அல்லது 11? எனக்கே சந்தேகம் .
இந்தியாவிற்கு வெளியேயும் dth முயற்சி செய்யவேண்டியது தான் முக்கியம்.
இருந்தாலும் 1000 ரூபாய் என்பது அதிகமாகத்தான் படுகிறது. 500 கூட ஓகே.
எனக்கு 90 கள் வரை ரஜினி தான் பிடிக்கும் அப்புறம் 96இல் இந்தியன் பார்த்த பின் கமல் வெறியன் ஆனேன்.அதன் பின் குண,மகாநதி என்று தேடி தேடி அவர் படங்களை பார்த்து மகிழ்ந்தேன்.
தசாவதாரத்தில் தெரிந்த விஷயம் என்னை கேட்டால் ரவிக்குமாரால் என்று தான் சொல்வேன்( புரிந்து கொள்ளவும் வெற்றிக்கு அல்ல,படம் ஓரளவு எல்லோருக்கும் புரிந்ததற்கு ).அவர் ஒரு பேட்டியில் சொன்னார்முதலில் கமல் சொல்வது எனக்கு நன்றாக புரிந்தால் தான் நான் மேற்கொண்டு அந்த காட்சிக்கு போவேன் என்று.ஆனால் விஸ்வரூபத்தில் எனக்கு ஆளவந்தான் தனம் தான் தெரிகிறது.நிறைய விஷயங்கள் அதாவது படம் ஓடும் அந்த கொஞ்ச நேராத்தில் எக்கச்சக்க விஷயங்கள் இருக்கும்.இருந்தாலும் படம் வெற்றி பெற்றால் மகிழ்வேன்.
உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் விஜய்... !!!
Deleteபடம் DTH ரீலீஸ் தேதி, ஜனவரி -10 இரவு 9:30 மணிக்கு, நான் தவறாக 1o என்று குறிப்பிட்டு விட்டேன்..typo Error... :):)
ஏனோ சின்ன வயசு முதல், இன்று வரை ரஜினி மீது எனக்கு தீவிர பற்று, பாசம். ஆனால் ரஜினியை தாக்கி வரும் பதிவுகளில் இது வரை யாரிடமும் சண்டை போட்டது இல்லை.. :):)
உண்மை தான், தசாவதாரதில் கே.எஸ் இல்லாவிட்டால், படம் கண்டிப்பாய் நொண்டி அடித்து இருக்கும். விஸ்வரூபம் - # Fingers crossed. இன்னொரு ஆளவந்தான், சத்தியமாக தாங்க முடியாது.
// அதுவும் எனது டிவியில் ஜனவரி-1௦ தேதி, //
ReplyDeleteராஜ் ஜன.10 -ம் தேதி இல்லை?
// இப்படி பட்ட சூழநிலையில் வாழும் எங்களை போன்ற வெளி மாநில தமிழ் படத்தை விரும்பும் ரசிகர்களுக்கு டிடிஎச ரீலீஸ் என்பது மிக பெரிய வர பிரசாதம். //
இங்கே இருக்கிறவங்க பலபேருக்கும் இது செளகர்யம்தான் ராஜ். எம் பொண்ணு பிறந்து 5 வருசம் வரை அவ அழுவானு தியெட்டர் போகலை. டிடிஎச்-ல போட்டிருந்தா இருந்தா வீட்லயே பார்த்திடுவோம்... இந்த மாதிரி வேறு சில காரணங்களால நிறஎஇஅ பேர் தியேட்டர் போகாஅத சூழல் இருக்குது...
திருட்டு வீசிடி எப்படி இருந்தாலும் வரும் டிடிஎச் இருந்தா மட்டும் வராதா என்ன... :-)))
// படம் எப்படி இருக்க போகிறதோ என்கிற பயம், மட்டும்மல்ல, படம் எனக்கு புரியுமா என்கிற பயமும் எனக்கு எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். விவரம் தெரிந்து கமல் படம் பார்க்க ஆரம்பித்த உடன் நிறைய தடவை பல்பு வாங்கி உள்ளேன். //
ஹஹஹா :-)))
//ராஜ் ஜன.10 -ம் தேதி இல்லை?///
Deleteஆமா ஜே. அது Typo...இப்பொழுது மாற்றி விட்டேன்.
//திருட்டு வீசிடி எப்படி இருந்தாலும் வரும் டிடிஎச் இருந்தா மட்டும் வராதா என்ன///
உண்மை தான் ஜே.....
ஊரான் காசில் படம் எடுத்தால் உலகம் முழுவதும் சூட்டிங்!
ReplyDeleteஎன் காசில் படம் ......பல்லாவரம் பக்கத்தில் பழைய கட்டிடத்தில்.....
வாங்க ttpian...
Deleteவிஸ்வரூபம் அமெரிக்கா, மற்றும் கனடா நாட்டில் தான் எடுத்து இருக்காங்க. "ராஜ்கமல் பிக்சர்ஸ்" கமல் சொந்த கம்பெனி என்று தான் நான் நினைக்கிறன்..
தமிழ் படம் கோடிகளில் எடுக்கப்படுவதற்கு முதல் காரணம் கமல். 1984 ஆண்டு வெளிவந்த விக்ரம் படம் தான் கோடி ரூபாய் பட்ஜெட்டில் வெளிவந்த முதல் படம். தயாரிப்பு கமல்.
Deleteகமலின் இந்த முயற்சி கண்டிப்பா வரவேற்ககூடியது... பாரதிராஜா முதன் முதலின் அவர் படத்து பாட்ட DD க்கு கொடுத்தப்பகூட இதே எதிர்ப்பு இருந்தது.. அதுக்கப்பறம் சினிமா வளர்சில எவ்ளோ மாற்றம்.. இப்ப ஒரு நாளைக்கு நாலு அஞ்சு படம் போடுறாங்க டிவில...
ReplyDelete// படம் உங்கள் டிவியில் வரும் போது, உங்களுக்கு என்று ஒதுக்க பட்ட "யூனிக் பார் கோட்" ஒன்று உங்கள் திரையில் படம் முழுவதும் வரும். ஒவ்வொரு வீடுக்கும் ஒவ்வொரு கோட். அதனால், நீங்கள் ரெகார்ட் செய்தால் கண்டிப்பாய் யார் வீட்டில் இருந்து ரெகார்ட் செய்ய பட்டது என்பது தெரிந்துவிடும். //
இந்த செய்தி எனக்கு புதுசு இப்பதான் தெரியும்..
// ஆனால் இதருக்கு எல்லாம் நம் ஆட்கள் பயபடுவர்கள் என்று நான் நம்ப தயாராக இல்லை //
சரிதான் இதெல்லாம் நாம்ம ஆளுங்களுக்கு பெரிய விடயமே இல்லன்னுதான் நானும் நெனைக்கிறேன்.. DTH Experience ya என்ஜாய் பண்ணுக ராஜ்.. அதபத்தி முடிஞ்சா ஒரு பதிவு போடுங்க :)..
கண்டிப்பா அகல், DTH Experience பற்றியும் முடிந்தால் பதிவு போடுகிறேன்.
Deleteதல சூப்பர் தல... கமல் படம் பற்றிய பார்வை அற்புதம்... கிரேசி வசனம் பட்டைய கிளப்பும்... களமல் உழைப்பு அசாத்தியமானது மற்றும் சாத்தியமானது அவர் நடிப்பால்
ReplyDeleteநன்றி தல..உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..
Deleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநீங்க இந்த பதிவு போடுவது எப்படியிருக்குதுன்னா விஸ்வபவனில் புதுசா சூடா வடை போடுறாங்கன்னு முன்பதிவு செய்தேன்னு சொல்வதோடு ருசித்துப்பாருங்கள் என சிபாரிசும் செய்கிறீர்கள்.இங்கே பதிவுக்கு பின்னூட்டம் போட்டவங்க ஆமா நாங்களும் அந்த கடையில சாப்பிட்டிருக்கோம் நல்ல முறுகலா,ருசியா இருக்குதே என்ற ரசனையாளர்கள் ரகம்.
ஆனால் நம்ம வவ்வால்ஜி பஜ்ஜியிலேயே ஓட்டையில்லை அது எப்படி வடையில ஓட்டை வரும்ன்னு சொல்ற ரகம்.வடை சாப்பிட்டா ரசிக்கனும்!ஓட்டைய பற்றி ஆராயக்கூடாது:)
புத்தாண்டு வாழ்த்துக்கள் ராஜ நடராஜன்....
Deleteஉங்க கருத்துக்கு நன்றி.... உங்கள் பின்னூட்டம் எனக்கு கமல் விழாவில் பேசுவது போல் இருக்கிறது... :):):):):)
நீங்களும் கமல் ரசிகராய் தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறன்.. ;)..
ராஜ்!உங்கள் மறுமொழிக்காக மறுபடியும் வந்தேன்.நன்றி.
ReplyDeleteமுதலாவதாக திரைப்படத் தொழில் என்பது வியாபாரம் சார்ந்த ஒரு கூட்டு முயற்சி.படம் நன்றாக வரவேண்டுமென்றுதான் பலரும் உழைக்கிறார்கள்.ஆனால் சந்தையில் எது வியாபாரமாகும்,சென்சார் பிரச்சினையில்லாமல் எப்படி தப்பிக்கலாம்,காம்ப்ரமைஸ் செய்ய வேண்டிய நிர்பந்தங்கள்,திரைப்படத்துறையின் பிரச்சினைகள்,சமூகத்துக்கு என்ன சொல்லப்போகிறோம்,கொஞ்சம் ஜாலியாக சிரிக்க வைக்கலாமே என்கிற வியாபார உத்தி,லாபம் என்ற மொத்த வடிவிலேயே ஒரு திரைப்படம் தயாரிக்கப்படுகிறது.லாப நோக்கமில்லாமல்,கருத்து பகிர்வு என்ற கோட்டுக்குள்ளேயே நாம் சின்னதா ஒரு பதிவு போடவே எவ்வளவு யோசிக்கிறோம்?ஒரு படத்தயாரிப்பில் உழைப்பு,திறமை,மனித வளம்,நிர்வாகத்திறமைன்னு எவ்வளவு இருக்கும்?
பெரும்பாலோர் ஒரே வட்டத்துக்குள் வரும்போது தனது நடிப்புத் திறமையை நிரூபித்த பின்னும் நடிச்சமா,காசை வாங்கினோமா என்று இல்லாமல் நடிப்புக்கும் அப்பால் புதிய முயற்சிகளை பரிட்சித்துப் பார்த்ததோடு படத்தின் தயாரிப்பையும் செய்வதோடு இன்னுமொரு புதிய முயற்சி என கமல் முயற்சி செய்யும் போது அதை வரவேற்க வேண்டும்.ஒரு திரைப்படத்தை உற்பத்தி செய்யும் போது பிடிச்சிருந்தால்,அதன் தரத்திற்காக டிடிஹெச் விலையை வாங்கும் திறனிருந்தால் வாங்கலாம்.இல்லை மெல்ல திரையரங்கில் பார்க்கலாம் என படம் பார்ப்பவர்கள் யோசிக்க வேண்டும்.அதனை விடுத்து திருட்டு வீடியோ,படத்தை பார்க்க விடாமல் முடக்குவேன் என்பது ஆரோக்கியமான வியாபார நடைமுறை அல்ல.
டாரன்டின் குவான்டினோ வழவழன்னு பாத்திரங்கள் பேசிகிட்டே ஒரு கொலையைப் பற்றி கதை சொல்லி முடிப்பதை ஆகா!ஓகோ என்பதும்,மார்லன் பிராண்டோ கடைவாயில் வெத்தலைக்கு பதிலா ஜவ்வுமிட்டாய் மாதிரி எதையோ அடக்கிகிட்டு தோட்டத்துல பெஞ்சு போட்டு பேசிறதை என்னமா டைரக்ஷன்,நடிப்புன்னு வாய் பொழப்பதும் அதையே கமல்,சிவாஜி செய்தால் ஓட்ட வடை என்பதும் தமிழர்களுக்கு கைவந்த விமர்சனம்.சரி அப்படியே ஆங்கிலப் படங்களுக்கு ஆகா சொல்வது ஆரோக்கியமான ஒன்று என்று வைத்துக்கொண்டாலும் கூட அதையே தமிழுக்கு கொண்டு வந்தால் காப்பின்னு தேள் கொட்டறது,வவ்வாலை பறக்க விடறது:)
ஆங்கிலப்படங்கள் மூளைக்கு வேலை கொடுப்பதை ரசிப்பதைப் போலவே கமல் படங்களும் மூளைக்கு வேலை தருது.நொள்ளை சொல்லக்கூடாதுன்னு இல்ல.ஆனால் நொள்ளைகளை மீறியதாக விமர்சனம் இருக்கனும்.ஐ.எம்.டி.பி,அழுகுன தக்காளி ஆங்கில பட விமர்சனங்களைப் பாருங்க,மொத்த துறையை பற்றியும் சொல்லி விட்டு படக்கருத்தையும் சொல்லி விட்டு உங்க மொழியில் சொல்லனுமின்னா படத்தில் நடிப்போ,காமிராவோ,கதையோ,இயக்கமோ எங்கே பல்ஃப் வாங்கிச்சுன்னு ஒற்றை வரியில் சொல்லி முடிச்சிருப்பாங்க.பட விமர்சனமும் ஒரு கலையே.அதை நிறை,குறை என ஒழுங்கா செஞ்சா என்ன?
கணினியே இல்லாமல் திரைப்படம் பார்க்கும் தொழில் நுட்பமெல்லாம் வந்துடுச்சு.கட்டு கட்டா திருட்டு வீடியோ சேர்க்கும் காலம் மலையேறிக்கொண்டிருக்கிறது.பிடிச்சா டி.டி.ஹெச்ல் படம் பாருங்கள்.பிடிக்கலைன்னா திரையரங்கில் படம் பாருங்கள்.
இந்த வருடப் பொங்கல் விஸ்வரூபம்தான்.
ராஜ், மீண்டும் வந்து உங்கள் கருத்தை கூறியதருக்கு எனது நன்றிகள்....
Deleteஉண்மையில் உங்கள் கருத்து தான் எனதும், உங்களுடன் 100% உடன்படுகிறேன்.
நான் என்னுடைய நிறைய பழைய பதிவுகளில் சொல்லி இருப்பதும் இது தான். கமல் (கமல் மட்டும் அல்ல, இன்னும் நிறைய தமிழ் சினிமா ஜாம்பவான்களையும் சேர்த்து தான்) வெள்ளைக்காரனை பார்த்து காப்பி அடிக்கிறான், கொரியா படங்களை பார்த்து டீ அடிக்கிறான் என்று சொல்லி தன் மேதாவித்தனத்தை பதிவர்கள் காட்டுவதில் எனக்கு உடன்பாடே இருந்தது இல்லை. ஒரு தமிழ் சினிமா ரசிகனாய் எனது ஆசை எல்லாம், நல்ல கதையம்சம் உள்ள படங்கள், வித்தியாசமான படங்கள், முன்று மணி நேரம் என்னை கட்டி போடும் படங்கள், என்னை பாதிக்கும் படங்கள் தான். அதன் மூலத்தை ஆராய்வதில் எனக்கு உடன்பாடே இல்லை.
//ஆங்கிலப்படங்கள் மூளைக்கு வேலை கொடுப்பதை ரசிப்பதைப் போலவே கமல் படங்களும் மூளைக்கு வேலை தருது///
உண்மை தான், நீங்கள் சொல்லுவதை அப்படியே ஏற்று கொள்கிறேன். கமல் இது வரை டைரக்ட் செய்த படங்கள், முன்று. ஹேராம், விருமாண்டி, விஸ்வரூபம்.
ஹேராம், நான் மிகவும் வெறுத்த படம், காரணம் அந்த படம் வந்த பொழுது, நான் பள்ளியில் படித்து கொண்டு இருந்தேன். அந்த வயதில் அந்த படத்தை புரிந்து கொள்ளும் அறிவு எனக்கு இல்லை, இப்பொழுது மட்டும் அறிவு வந்து விட்டதா என்று கேட்காதீர்கள். படத்தை இப்பொழுது தான் பாஸ்கரன் உதவியில் 60% புரிந்து கொண்டு உள்ளேன், இன்னும் ஹேராமை முழுமையாக ஏற்று கொள்ள எனக்கு சிறிது அவகாசம் தேவை.
விருமாண்டி - கமல் இந்த படத்தில் தான் ஆடியன்ஸ் பல்ஸ் அறிந்து சரியாக படத்தை எடுத்து இருந்தார். நான்- லீனியர் பாணி, அதுவும் தமிழில், எங்கள் கிராமத்து பின்னணியில். உலக சினிமா என்கிற வார்த்தை அறிந்திராத வயதில் நான் பார்த்து அசந்த போன படம்.
ரோஷோமன் படம், விருமாண்டி சாயல் என்று ஒரு மேதாவி எழுதியதை படித்து, ரோஷோமன் படம் பார்த்தேன். அதில் அகிரோ ஒரே சம்பவத்தை நான்கு பேர் தங்கள் பார்வையில் சொல்வது போல் எடுத்து இருந்தார். ஆனால் கமல், அதை எல்லாம் மீறி, விருமாண்டியில் பல சம்பவங்களை ரெண்டு பேர் (கொத்து, விருமா) தங்களை நல்லவர்கள் போல் காட்டி சொல்லுவது போல் எடுத்து இருந்தார்.
இப்பொழுது யாரவது என்னிடம் சில நிகழ்வுகளை விவரித்தால், அதில் அவர் என்னிடம் பொய் சொல்லுவது போல் தோன்றினால், "விருமாண்டி ஸ்டைல்ல கதை சொல்லுறீங்களே" என்று கலாய்பது உண்டு.
விஸ்வரூபம், அது போன்ற ஒரு அனுபவத்தை எனக்கு குடுக்க வேண்டும் என்பது தான் என் ஆவல்...
//ஐ.எம்.டி.பி,அழுகுன தக்காளி ஆங்கில பட விமர்சனங்களைப் பாருங்க,மொத்த துறையை பற்றியும் சொல்லி விட்டு படக்கருத்தையும் சொல்லி விட்டு உங்க மொழியில் சொல்லனுமின்னா படத்தில் நடிப்போ,காமிராவோ,கதையோ,இயக்கமோ எங்கே பல்ஃப் வாங்கிச்சுன்னு ஒற்றை வரியில் சொல்லி முடிச்சிருப்பாங்க.பட விமர்சனமும் ஒரு கலையே.அதை நிறை,குறை என ஒழுங்கா செஞ்சா என்ன?///
இல்லை ராஜ், நான் எழுதும் பட விமர்சனங்களில் (!! அதை விமர்சனம் என்று தான் நான் நினைத்து கொண்டு இருக்கிறேன்)
என்னால் இயன்ற வரை நிறை/குறை பற்றி எழுதவே முயற்சி செய்து உள்ளேன். புதிதாக ரீலீஸ் ஆகும் படங்களுக்கு தமிழ்/ஆங்கிலம் அப்படியே எழுதுவதாய் நான் நினைக்கிறன். பழைய படங்கள் என்றால் படத்தின் கதை சொல்லி தான் விமர்சனம் எழுதி உள்ளேன். நேரம் இருந்தால் சில பதிவுகளை படித்து பாருங்கள்.
இந்த பதிவு நான் கமல் படங்களின் (ஹேராம், ஆளவந்தான், அன்பே சிவம், மும்பை எக்ஸ்ப்ரெஸ்) விமர்சனம் செய்ய வில்லை. படம் பார்த்தேன், என்னை கவரவில்லை என்ற தொனியில் தான் "பல்பு" என்று சொன்னேன். விரிவாக படங்களை பற்றி எழுத எனக்கு தோன்றவில்லை.
மற்றபடி எனக்கும் "விஸ்வரூபம்" வெற்றி அடைந்து, கமல் அதில் கிடைக்கும் காசை கொண்டு வேறு ஒரு புதுமையான படத்தை எடுக்க வேண்டும் என்பது தான் எனது ஆவல்.
ராஜ்,
Deleteநீங்க சொன்னது சரி தான் மேதாவி தனத்தினை காட்ட வேண்டாம் என்பதால் தான் சினிமா விமர்சனமே எழுதுவதில்லை :-))
எல்லாருமே,காப்பி,டீ அடிக்கிறார்கள் தான், ஆனால் யாரெல்லாம் நானே ரூம் போட்டு யோசித்தேன் என பீலா விடுகிறார்களோ அவர்களை தான் பதிவர்கள் கழுவி கழுவி ஊத்துறாங்க என்பதையும் கவனிக்கவும் :-))
ராமநாரயணன் காப்பி,டீ அடிக்கிறார்,ஆனால் யாரு கண்டுக்கிறாங்க, ஆனால் ஆத்தோ ஆத்துன்னு ஆத்துறவங்கலை தான் கலாய்க்கிறாங்க :-))
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குனர் என்றால் ராமநாரயணன் தான், அவரது எந்தப்படமும் விநியோகஸ்தர்களை நஷ்டப்படுத்தவே படுத்தாது, காசுக்கேத்த வடை விற்பார் :-))
----------
ராச நட,
மேற்கண்டதில் உமக்கும் பதில் இருக்கு, மேலும் 1000 ரூபா விலையை முடிஞ்சா பாருன்னு சொல்வது எப்படி உங்க உரிமையோ, அதனை தியேட்டரில் போய் பாருங்கன்னு சொல்லவும் உரிமையில்லை, திருட்டு டிவிடியில் பார்த்தால் முடிஞ்சா வந்து புடிச்சுக்கோன்னு தான் மக்கள் சொல்வாங்க :-))
பெட்ரோல்,டீசல் விலையில் 50 பைசா ஏறினால் மட்டும் தான் மக்கள் அடிவயிற்றில் தீப்பிடிச்சா போல அலறுவாங்க :-))
எந்த பொருளுக்குமே விலை நிர்ணயம் என்பது நியாயமானதாக இருக்க வேண்டும், முடிஞ்சா காசு கொடுத்து பாரு என்றால் ,அவனவன் இஷ்டப்படி விலை வச்சுட்டு முடிஞ்சா வாங்கி அனுபவின்னு சொல்லிக்கிட்டு இருப்பாங்க.
பாவப்பட்டவன் விவசாயி தான் அவனால் தான் எதுக்குமே வாயத்தொறக்க முடியாது, மீறித்தொறந்தா வாயில மண்ணள்ளிப்போட்டுறுவாய்ங்க :-((
***டாரன்டின் குவான்டினோ வழவழன்னு பாத்திரங்கள் பேசிகிட்டே ஒரு கொலையைப் பற்றி கதை சொல்லி முடிப்பதை ஆகா!ஓகோ என்பதும்,மார்லன் பிராண்டோ கடைவாயில் வெத்தலைக்கு பதிலா ஜவ்வுமிட்டாய் மாதிரி எதையோ அடக்கிகிட்டு தோட்டத்துல பெஞ்சு போட்டு பேசிறதை என்னமா டைரக்ஷன்,நடிப்புன்னு வாய் பொழப்பதும்***
Deleteஉங்களுக்கு என்ன பிரச்சினைனு தெரியலை. ஹாலிவுட் படங்களைப் பார்த்து வாயைபொழந்துகொண்டு பார்க்கும் முதல் ஆள் கமலஹாசன் தான். பார்த்ததோட விடாமல் அந்த குப்பைகளை அள்ளிக்கொண்டு வந்து அரைகுறையாக தமிழில் வாந்தி எடுப்பதும் அந்தாளுதான். இது ஏன் உங்களை மாரி மேதைகளுக்குப் புரியமாட்டேங்கிது???இல்லைனா நாயகன் பத்தி பேசும்போது காஃபாதர் பற்றி இவர் பேச வேண்டிய அவசியம் என்ன?
Pulp fiction and Godfather are movies of that century. There is absolutely nothing wrong in appreciating those movies and directors of such creations.
Kamalahassan watches all the hollywood movies to GET IDEAS and end up COPYING them knowingly or unknowingly.
You need to ask KH to keep off from watching Hollywood movies and stop flying to US every month!
You need to tell him, not to make a big deal out of his meeting with Osborne!
You act so silly when you act as a Kamalahassan fan!
இது கமலஹாசன் இண்டெர்வியூ...
Delete///But Mr. Srinivasan wouldn’t allow a car to be demolished; so we were forced to use the scene from The Godfather. ///
இவரு நாக்கை தொங்கப் போட்டுக்கிட்டு காட்ஃபாதர் படம் பார்த்து இருக்காரு. அதன் விளைவுதான் இது! பார்த்து மட்டுமல்லாமல் அதை எல்ல்லாருக்கும் கொடுத்து பார்க்க சொல்லியிருக்காரு..
நடராஜன்: நீங்க ஊருக்கு உபதேசம் செய்யும் முன்னால், மேதை கமலஹாசனுக்கு உபதேசம் செய்வது நலம்! ஏன்னா வருதான் வாயை பொழந்துகொண்டு காட்ஃபாதர் மார்லன் பிராண்டோவை பார்த்து இருக்கிறார்.
power cut
ReplyDeleteபாஸ் அப்ப படம் முடிஞ்ச உடனே எங்களுக்கு விமர்சனம் வந்துறனும் ஏன்ன நாங்க தியேட்டர் ல பாக்குறது சந்தேகமா இருக்கு ரிலிஸ் ஆகுமா ஆகாதனு டி வி ல பாக்கலன்னு பார்த்த கேரென்ட் இருக்குமா இருகதாணு சந்தேகமா இருக்கு விமர்சனம் படிச்சாவது கொஞ்சம் ஆருதல இருக்கும் அப்பரம் ஆளவந்தான் மும்பை எக்ஸ்ப்ரெஸ் அன்பே சிவம் முனுமே சூப்பர் படம் பாஸ் ஹேராம் நான் இப்ப வரைக்கும் பார்கள பாஸ்
ReplyDelete///என்றாவது ஒரு நாள் அதில் வெற்றியும் பெறுவார். ////
ReplyDeleteஎன் விசயத்தில் சில இடங்களில் கமல் பெரு வெற்றி பெறுகிறார் என்றே சொல்ல வேண்டும்!
நிச்சயமாக தமிழ் சினிமாவில் கமல் எடுத்து வைக்கும் எந்த ஒரு புதிய முயற்சியும் பிற்பாடு மிகப்பெரிய அங்கீகாரம் பெறுகிறது.இதற்கு நிறைய உதாரங்களும் உள்ளது.விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப தன் வியாபார உத்தியை மாற்றிக்கொள்பவன் தான் மிகச்சிறந்த வியாபாரி. உலக சினிமா வரலாற்றிலே முதல் முறையாக என அறிமுகப்படுத்தும் இந்த டிடிஎச் முறை நிச்சயமாக எதிர்கால சினிமாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய விதை...
ReplyDeletevarun un pirachina enna...naan நினைக்குறேன் உங்க ஆளுங்க ஒருத்தன் நடிச்சா மட்டும்தான் அது நல்ல படமா ..போயா போய் உங்க மத பதிவர்களின் பதிவுகளுக்கு தாளம் போடு ...
ReplyDeleteதல,
ReplyDeleteநீங்களும் ரஜினி ஃபேனா?? நானும் தான் தல..!! :) :) :)
அது என்னானு தெரில.. யாராச்சும் நான் ரஜினி ஃபேன்-னு சொன்னா போதும்.. அவங்கள எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போய்டும். அந்த வகையில நீங்களும் நெருங்கிட்டீங்க..!!
தலைவர் படம் பார்க்கும்போது மட்டும்தான் எந்த லாஜிக்கும் பாக்காம என்ஜாய் பண்ணி பாக்குறது.
கமல் படங்கள பாத்து தான் நானும் நெறய விஷயங்கள தெரிஞ்சிக்கிட்டேன்.
ஒத்த ரசனையுடைய உங்கள சந்திச்சதில ரொம்ப சந்தோஷம் தல. இனிமே அடிக்கடி வருவேன் தல. :)