நீண்ட காலமாய் தமிழ் பதிவர்களிடம், பேஸ் புக் பயனீட்டாளர்களிடம் ஒரு விதமான மேனியா இருப்பதை காண முடிகிறது, அதை மேனியா என்று சொல்வதும் சரி வராது. வேறு வார்த்தை கிடைக்காதால் இப்பொழுதுக்கு அதை மேனியா என்றே வைத்து கொள்வோம். அது என்ன வென்றால், எதாவது வித்தியாசமா கதையை, திரைகதையை கொண்டு ஒரு சுவாரிசயமான தமிழ் படம் வந்தால், அதன் மூலத்தை ஆராய்வது. அது எந்த ஆங்கில மொழி இல்லையென்றால் பிறமொழி படத்தில் இருந்து தழுவி/காப்பி அடித்து எடுக்க பட்டது என்ற ஆராய்ச்சியில் ஈடுபடுவது.
உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், துப்பாக்கி படம் - தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைகதையை கொண்டு வெளி வந்த படம், நிறைய பதிவர்கள் கண்டிப்பாய் இது ஏதோ ஒரு வெளிநாட்டு படத்தில் இருந்து சுட்டு எடுக்க பட்டது என்று எழுதினார்கள். ஆனால் எந்த வெளிநாட்டு படம் என்று இது வரைக்கும் யாராலும் துப்பாக்கி பார்த்தவுடன் சொல்ல முடியவில்லை. நிறைய பேர் துப்பாக்கியின் மூலத்தை கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்று "IMDB" தொறந்து வைத்து கொண்டு "டெரரிஸ்ட்" ஆக்டடை பின்னணியை கொண்ட பாரின் படங்களாய் பார்த்து தள்ளுகிறார்கள். என்றாவது ஒரு நாள் துப்பாக்கியின் மூலத்தை கண்டு பிடிக்காமல் விட மாட்டோம் என்று சபதம் பூண்டு உள்ளார்கள். எனக்கு இவர்கள் ஏன் இப்படி செய்து தங்கள் நேரத்தை வீணாக்கி கொள்கிறார்கள் என்பது மட்டும் புரியவில்லை. இவர்கள் இப்படி செய்வது, தமிழ் இணைய உலகம் தங்களை உத்து நோக்க வேண்டும், தங்களுக்கு நிறைய உலக சினிமா அறிவு உள்ளது என்று ரீடர்ஸ் எண்ண வேண்டும் என்கிற என்னமாய் கூட இருக்கலாம்.
தமிழ் படங்கள் அனைத்துமே ஆங்கில படத்தின் தழுவல் என்கிற எண்ணம் நிறைய பேரிடம் உள்ளது, எந்த அளவுக்கு அந்த எண்ணம் என்றால் "அலெக்ஸ் பாண்டியன்" என்கிற மொக்கை படம் ஆங்கில "டிரான்ஸ்போட்டர்" படத்தின் காப்பி என்று சொல்லும் அளவுக்கு. "டிரான்ஸ்போட்டர்" படத்தில் ஹீரோ வில்லனிடம் காசு வாங்கி கொண்டு ஹீரோயினை கடத்தி கொண்டு போய் விடுவார். அலெக்ஸ் பாண்டியன் படத்திலும் ஹீரோ அதே போல் செய்கிறார், அதனால் "அலெக்ஸ்" "டிரான்ஸ்போட்டர்" படத்தின் காப்பி என்று காரணம் சொல்கிறார்கள். எனக்கு எங்கு போய் முட்டுவதே என்றே தெரியவில்லை. "விஸ்வரூபம்" படத்தின் ஒன் லைனர் (கமல் மனைவிக்கு தெரியாமல் ஸ்பை ஆக இருப்பது) வைத்தே அது ''ட்ரூ லைஸ்" படத்தின் காப்பி என்று சொல்லும் மேதாவிகள் வாழும் சமுகத்தில் தான் நானும் வாழ்கிறேன்.
நாள் ஆக, நாள் ஆக இந்த "காப்பியை கண்டுபிடிக்கும் மேனியா" ஜாஸ்தியா ஆகிறதே ஒழிய, குறைய மாட்டேன் என்கிறது. உண்மையில இது ஒரு விதமான மன நோய் என்றே நினைக்கிறன். இந்த காப்பி கண்டுபிடிக்கும் மேனியா கண்டிப்பாய் நமக்கு ஒரு படத்தை ரசிக்கும் மனநிலையை தராது, இது காட்சி, எந்த ஆங்கில படத்தில் இருந்து எடுக்க பட்டது, என்கிற சிந்தனையிலே அந்த காட்சியை ரசிக்க மாட்டோம்.
நானும் ஒரு காலத்தில் இந்த காப்பி மேனியாவில் அவதி பட்டேன், பிறகு யோசித்து பார்த்தால், நாமே நிறைய படத்தை பைரசி டவுன்லோட் செய்து பார்க்கிறோம், உரியவனுக்கு பணத்தை தராமல் படத்தை ரசிக்கிறோம், அதில் அந்த படம் வேற்று மொழி காப்பியாய் இருந்தால் என்ன, தழுவல் ஆக இருந்தால் என்ன. ஏன் அதன் மூலத்தை ஆராயிந்து மண்டையை குழப்பி சினிமாவின் உண்மையான சுவையை இழக்க வேண்டும் என்று எண்ணி, காப்பி ஆராய்ச்சியை விட்டு விட்டேன். இப்பொழுது முன்னை விட சினிமாவின் சுவை நன்றாக தெரிகிறது.
சிலரின் காப்பி மேனியா ரொம்ப மோசமாய் இருக்கும், தமிழ் படத்தின் ஏதாவது ஒரு காட்சியின் சாயல் வேறு ஒரு வெளிநாட்டு படத்தில் இருந்து விட்டால். படமே மொத்த காப்பி, படத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து உள்ளார்கள் என்று கைக்கு வந்ததை எழுதுவார்கள். அதற்க்கு சமிபத்திய உதாரணம் விஷால் நடிப்பில் வெளி வந்து "சமர்". இது "தி ட்ரூமேன் ஷோ" மற்றும் ''தி கேம்" படத்தின் அப்பட்ட காப்பி என்று சில பதிவர்கள் எழுதி இருப்பதை பார்க்க நேர்ந்தது.
ஆனால் என்னை பொறுத்த வரை "சமர்" படத்தின் ஒன்று அல்லது ரெண்டு காட்சிகளின் சாயல் மேற்சொன்ன படங்களில் இருக்கலாம், ஆனால் நிச்சியமாக அப்பட்ட காப்பி இல்லை. நன்றாக ரசித்து முடிச்சுகள் தெரியாமல் பார்க்க வேண்டிய படம். நல்ல த்ரில்லர் ரைட் போன அனுபவத்தை குடுக்கும்.
ஊட்டி பாரஸ்ட் ஆபீசர் மகன் விஷால், இவருக்கும் சுனைனாவுக்கும் காதல். சரியான புரிந்துணர்வு இல்லாததால் அந்த காதல் புட்டுக்கொள்ள சுனைனா தாய்லாந்து கிளம்பி போகிறார், அங்கிருந்து விஷாலுக்கு "உன்னை மறக்க முடியவில்லை... உடனே புறப்பட்டு பாங்காக் வா..." என லவ் லெட்டருடன் பிளைட் டிக்கெட்டையும் அனுப்பி வைக்கிறார். முன்பின் விமானத்தில் சென்ற அனுபவமில்லாத விஷால், ஏர்போர்டில் முழிக்க, அங்கு த்ரிஷாவை பார்க்கிறார், அவரிடம் சென்று உதவி கேட்க, த்ரிஷாவும் உதவி செய்கிறார். பாங்காக் வந்து சேரும் விஷாலுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. இவர் பெரிய கோடீஸ்வரன் என்று ஒரு கும்பல் சொல்கிறது, இன்னும் ஒரு கும்பல் இவரை கொலை செய்ய துரத்துகிறது என்று ஏகப்பட்ட ட்விஸ்ட். நிறைய முடிச்சுகள் விஷாலை சுத்தி போடபடுகிறது, விஷாலுடன் சேர்ந்து நாமும் குழம்புகிறோம். இறுதியில் போடப்பட்ட அணைத்து முடிச்சுகளும் ஒவொன்றாய் அழகாய் அவிழ்க்க படுகிறது. அந்த முடிச்சுகள் தெரிய படத்தை பார்ப்பது தான் நல்லது. கதை தெரிந்து இந்த படம் பார்ப்பது சுத்த வேஸ்ட்.
படத்தில் அரை மணி நேரம் நீங்களும் விஷாலுடன் சேர்ந்து சுத்துவீர்கள், அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று ஏகத்துக்கும் நம்மை யோசிக்க வைத்து விடுவார் இயக்குனர் திரு. இவர் விஷாலை வைத்து "தீராத விளையாட்டு பிள்ளை" என்கிற மொக்கை படத்தை எடுத்தவர். சண்டைகாட்சிகளில் நிறையவே உழைப்பை பார்க்க முடிகிறது. ஆனால், விஷால் இன்னும் நடிப்பு கற்று கொண்டே வருகிறார் என்று நினைக்கிறன். நிறைய சீரியஸ் காட்சிகளில் இவர் நடிப்பை பார்க்கும் போது எனக்கு கொட்டாவி வந்தது. இவரை விட ஒரு நல்ல நடிகர் இந்த படத்தில் நடித்து இருந்தால் படம் இன்னும் நல்ல ரீச் ஆகி இருக்கும். பாலா பள்ளியில் ஒரு கோர்ஸ் படித்த பிறகும் இவ்வளவு தான் நடிப்பு வரும் என்றால், விஷால் ரொம்ப கஷ்டம் பாஸ்.
த்ரிஷா, அழகாய் வருகிறார், அளவாய் நடிக்கிறார். பாடல் காட்சிகள் மனதில் ஒட்டவே இல்லை. சுனைனாவிருக்கு சில காட்சிகள், மற்றும் ஒரு பாடல், அவ்வளவு தான். பெரிய வேலை இல்ல. படத்தில் காமெடி இல்லவே இல்லை. இது போன்ற சீரியஸ் படங்களுக்கு காமெடி அனாவிசியம் தான். வசங்கள் எஸ்.ரா, அவர் எழுத்தை போலவே, சுலபமாக சொல்லி புரிய வைக்க வேண்டியதை, கடினமாக ஆக்கி உள்ளார். நார்மலா பேச வேண்டிய வசங்களை, சுத்தி வளைத்து கஷ்டமான வார்த்தைகள் கொண்டு கதாபாத்திரங்கள் பேசுகிறார்கள். ஆனால் அவரின் எழுத்தை போலவே நன்றாக உள்ளது. தமிழுக்கு வித்தியாசமான கதையை யோசித்த இயக்குனர், மேக்கிங்கில், மற்றும் ஹீரோ தேர்வில் பெரிய ஓட்டை விட்டு விட்டார் என்றே நாள் சொல்வேன்.
சமர் - சுமார்
My Rating: 6.5/10......
அப்போ சமர் ஒருதரம் பாக்கலாம்னு சொல்றீங்களா?
ReplyDeleteகண்டிப்பா பார்க்கலாம் கிருஷ் , கதை சஸ்பென்ஸ் தெரியாமல் பார்க்க நல்ல படம் :):)
Deleteஇந்தப் படத்தின் கரு அப்படடமான ஆங்கிலத்தில் வெளியான இல்லுமினாட்டி கதைக்களம் ஆனால் பெயர் தெரியாது மன்னிக்கவும்.
Delete// உலக சினிமா அறிவு உள்ளது என்று ரீடர்ஸ் எண்ண வேண்டும் என்கிற என்னமாய் கூட இருக்கலாம். // நிச்சயம் அது தான் தல.. காப்பி போபியா நல்ல வச்சிருக்கீங்க...
ReplyDeleteசமர் பார்க்க முயலுகிறேன் தல
பாருங்க தல...நீங்க கண்டிப்பா ரசிப்பீங்க.
Deleteராஜ்,
ReplyDeleteகாப்பி கண்டுப்பிடிப்பாளர்களைப்பார்த்து செம காண்டாகிட்டிங்க போல, ஹி...ஹி நமக்கும் இந்த பழக்கம் உண்டுதேன் ,அதான் சினிமாவிமர்சனம் எல்லாம் எழுதுவதில்லை :-))
போஃபியா என்றால் வெறுப்பது ஒன்றை வேண்டி விரும்பி செய்வதை மேனியாக் என்பார்கள், ஒன்றை என்ன முயன்றும் நிறுத்த முடியாமல் செய்வதை "Obsessive-compulsive disorder (OCD)" என்பார்கள். சுருக்கமா அடிக்ஷன் எனலாம்.
சமரை ஆங்கிலப்படம் காப்பி என்பவர்களுக்கு கூடுதல் தகவல், அந்த ஆங்கிலப்படமெல்லாம் வருமுன்னரே பாண்டிய ராஜன் இது போல ஒரு கதையில காமெடியா நடிச்சிட்டார், ஆனால் கடைசியில் இரட்டை வேடம்னு முடிச்சிருப்பாங்க. படம் பேரு மறந்து போச்சு ,நியாபகம் வந்தா சொல்கிறேன்.
வாங்க வவ்வால், நீங்க லாஜிக்கா பேசுவீங்க. உங்க லாஜிக் சில சமயம் ஏத்துகிற மாதிரி இருக்கும். ஆனா லாஜிக்கே இல்லாம பேசுறவங்க மேல தான் என்னோட கோபம்...:):)
Deleteபதிவுல மேனியான்னு மாத்திட்டேன். அப்புறம் நானும் நீங்க சொல்லுற பாண்டியராஜன் படம் பார்த்து உள்ளேன், அது நார்மல் டபுள் ஆக்ட் படம் தான், வித்தியாசமான கதை கிடையாதுன்னு நினைக்கிறன்.
இந்த காப்பி ஃபோபியா பதிவுலகம் வந்த புதிதில் என்னையும் தொற்றிக்கொண்டுதான் இருந்தது ராஜ்..உங்களைப்போலவே ரொம்பவும் யோசித்து இந்த பழக்கத்தை விட்டு தொலைத்துவிட்டேன்...உலகில் எந்த படைப்பும் இன்னொரு படைப்பை சார்ந்தோ சாயலிலோ இருப்பது என்பது சகஜமான ஒன்றே..வரும் ஒவ்வொரு படத்திலும் உள்ள புதுமைகளை ரசிக்காமல், "உலக காப்பிகளை" தேடுவதால் பலனிருப்பதாக தெரியவில்லை.
ReplyDeleteவிமர்சனம் சுருக்கமாகவும் சிறப்பாகவும் உள்ளது..படத்தின் முதல் ஒரு மணி நேரம் சுவாரஸ்யமானவை..சில திருப்பங்கள் நல்ல திருப்தியை வழங்கியது.தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி நண்பா.
கண்டிப்பா குமரன், நீங்களும் அடிக்கடி எழுதுங்க.
Deleteபடத்தை ஆகா ஓஹோ என்று புகழ முடியாவிட்டாலும், கடைசி அரைமணி நேரத்தை தவிர்த்து இது சுவாரசியமான படமே. எந்த படத்தையும் இது மேல்நாட்டு படத்தின் காப்பியா இல்லையா என்று ஆராய தேவை இல்லை (அப்படியே ஜெராக்ஸ் எடுத்து வரும் படங்களை தவிர). நல்ல விமர்சனம். நன்றி தலைவரே
ReplyDeletePlease correct the article, You should say "mania" not phobia. Phobia is a condition of being afraid of something.
ReplyDeleteChanged Bro....thx for your suggestions.. :):)
Deleteபடம் இன்னும் பார்க்கலை. பார்த்த பிரெண்டஸ் நல்லதாத்தான் சொன்னாங்க!
ReplyDeleteவிஸ்வரூபம் ட்ரீட் முடிஞ்சதுக்கப்புறம் இதைப் பார்க்க இருக்கிறேன்..
எல்லா தமிழ் படத்துலயும் ஹீரோ பேன்ட் ஷர்ட் தான் போடறார், இது ஹாலிவூட் காப்பி தானே? தமிழ் படம்னா வேஷ்டி சட்டையில நடிக்கணும். அதனால எல்லா தமிழ் படமும் ஆங்கில பட காப்பிதான்.
ReplyDeleteசமர் படம் ஓகே, சஸ்பென்ஸ் ரிவீல் பண்ணின விதம் கொஞ்சம் போரிங், மத்தும்படி பார்க்கக்கூடிய படம் தான்.