25 வருடம் சிறைவாசம் முடித்து வரும் ஒரு கேங்க்ஸ்டர் தான் வாழ்வில் இழந்ததை திரும்பபெறும் போராட்டம்தான் கபாலி. இந்த நேரம் கபாலி படம் அனைவரும் பார்த்து இருப்பீர்கள். அதனால் படத்தில் எனக்கு பிடித்த காட்சிகளை மட்டும் இங்கு தொகுத்து உள்ளேன். படம் பார்க்காதவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம்.
Spoilers ahead:
"கபாலியில் நான் ரசித்த காட்சிகள்":
1) "மாய நதி" பாடலில், ஒரு வெளிநாட்டு ஜோடி பிரெஞ்சு கிஸ் அடித்து கொண்டுயிருக்கும் போது கபாலி, குமுதவல்லியை கண்ணில் காதல் ததும்ப பார்க்கும் காட்சி. ராதிகா ஆப்தே அதற்கு குடுக்கும் ரியாக்ஷன். மக்கள் தனக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் சும்மா குடுக்கவில்லை என்பதை ரஜினி நிருபித்த காட்சி.
2) தாய்லாந்து நாட்டில் நடக்கும் துப்பாக்கி சூடுக்கு பிறகு, யோகி தான் தன் மகள் என்று புரிந்து கொண்டு, தன் மகள் யோகி தனது கையை பிடித்து வெளியே கூட்டி கொண்டு வரும் போது யோகியை பார்க்கும் பார்வை. செம. அந்த காட்சியில் ரஜினி வாழ்ந்திருப்பார்.
3) நல்ல ராவான கொரியன்/அமெரிக்கன் கேங்க்ஸ்டர் படங்களை பார்க்கும் போது, எங்கே யாருக்கு எப்போது வெட்டு விழும் என்கிற ஒருவித பயம் நமக்கு வரும் பாருங்கள், அதே போன்ற பய அனுபவம் ரஜினி படத்தில் 3~ 4 காட்சிகளில் கிட்டியது மறக்க முடியா அனுபவம்.
4) பெட் ஷாப்பில் நடக்கும் சண்டைக்கு முன்பான பில்ட் அப் காட்சி.
5) கிளைமாக்ஸ் காட்சியில் டோனி லீயிடம் தன் மகள் பிடிபட்ட பிறகு, அந்த இடத்தில ரஜினி சோபா மீது கால் மீது கால் போட்டு உட்காரும் காட்சி, எப்படி ஒருவன் தன் மகள் துப்பாக்கி முனையில் இருக்கும் போது கூட இப்படி திமிராக இருக்கிறானே என்ற எண்ணம் எனக்கு வந்தது. அதன் பிறகு ரஜினி பேசும் வசங்கள் "கபாலியை" எனக்கு முழுமையாக உணர்த்தியை காட்சிகள்.
6) பண்ணை வீட்டில் குண்டடிபட்டு சோர்வாய் இருக்கும் போது, தன் மகள் முலம் தன் மனைவி எங்கோ உயிருடன் இருக்கிறாள் என்று அறிந்த பிறகு, சிறு குழந்தை போல் தேம்பி தேம்பி அழும் காட்சி செம. அந்த காட்சியை சினிமா தனம் இல்லாமல் மிக எதார்த்தமாய் படம்மாக்கிய ரஞ்சித்க்கு ராயல் சல்யூட். நாயகன் படத்தில் கிட்டத்தட்ட இதே போல் ஒரு சூழ்நிலை கமல் காட்டு எருமை பொறியில் மாட்டியது போல் அழுவார். அந்த காட்சியமைப்பை இன்று வரை பேச படுகிறது. சராசரி மனிதன் அது போல் செய்யமாட்டான். அது போக குண்டடிபட்டு ஓய்வில் இருக்கும் ஒருவன் அப்படி தான் அழுவான்.
7) செட்டியார் வீட்டில், சங்கிலி முருகன் அமெரிக்காவில் இருக்கும் தன் மகளுக்கு போன் செய்து "வள்ளியை" பற்றி விசாரிக்கிறேன் என்று சொல்லி போன் அடிப்பார், அந்த பக்கம் ரிங் போய் கொண்டே இருக்கும். அவர்கள் போன் எடுக்கும் வரை ரஜினி முகத்தில் தெரியும் பதட்டம். யப்பா அந்த பதட்டம் எனக்கும் ஒட்டி கொண்டது.
8) கிளைமாக்ஸ் காட்சியில் டோனி லீயிடம் ரஜினி பேசும் பஞ்ச் வசனங்கள், டயலாக் டெலிவரி செம.
9) பிளாஷ்பேக்கில் ரஜினியின் எனெர்ஜி. சும்மா தீ மாதிரி நடித்து இருப்பார். நாசர் பேசும் வசனங்கள் எல்லாமே சிம்பிள் மற்றும் பவர்புல்.
10) பள்ளி பட்டமளிப்பு விழாவில் ரஜினி தன் கதையை மாணவர்களுக்கு சொல்லும் காட்சிகள், மெது மெதுவாய் நமது டெம்போவை ஏற்றி, கதை சொல்லி முடிக்கும்போது அங்கு இருக்கும் மாணவர்களுக்கு இருக்கும் எமொஷனை நமக்குள் புகுத்தி இருப்பார். அந்த காட்சி முடியும் போது என் நெஞ்சு கனத்து போனது. இது போன்ற அனுபவம் வேறு எந்த காட்சிக்கும் எனக்கு கிட்டியது இல்லை. இந்த ஒரு காட்சிக்கும் மட்டும் கபாலியை நான் கொண்டாடி மகிழ்வேன்.
படத்தில் நான் குறைகள் என்று கருதுவது:
1) கடைசி கடைசி காட்சி, "டைகர்" ரஜினியை சுடும் காட்சி. அதை ரஞ்சித் தவிர்த்து இருக்கலாம்.
2) படத்தில் வரும் நிறைய கதாபாத்திரத்தின் பெயர் குழப்பங்கள். கிட்டத்தட்ட கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க தான் "யோகி" "ஜீவா" யார் என்றே புரிந்தது.
3) யூகிக்க கூடிய காட்சியமைப்பை தான் படத்தின் மிக பெரிய பலவீனம்.
4) மலேசியா சொல்லாடல்கள் புரிந்துகொள்ள சற்று கடினமாய் இருந்தது. தேத்தண்ணி, கோழிக்கறி, சாவடி, பொன்னழகு போன்ற சொற்கள்.
5) டோனி லீயின் சாம்ராஜியத்தை ரஜினி கீழே கொண்டு வரும் காட்சிகள் சப்பையாய் முடிந்தது பெரிய ஏமாற்றம்.
கபாலி இத்தனை கோடி வசூல் செய்தது, அந்த சாதனையை முறியடித்து போன்ற விசயங்களை பற்றி நல்ல சினிமாவை நேசிப்பவன் கவலை பட மாட்டான். நல்ல சினிமாவை விரும்பியவர்களுக்கு நல்ல விருந்தை ரஞ்சித்தும் ரஜினியும் வழங்கி உள்ளார்கள். பிடித்தவர்கள் எடுத்து கொள்ளலாம், பிடிக்காதவர்கள் "2.0" க்கு காத்து இருக்கலாம்.
கபாலி - முழுமையான் படம்
My Rating : 9.0
yes ....
ReplyDeleteஇதுதான் விமர்சனம். இது போன்ற ரசிகர்களுக்கான படம் தான் கபாலி...
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி. "God Father" படத்தில் கூட குறைகள் கண்டுபிடிக்கும் ரசிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள் :-)
Deleteஅனைவரையும் திருப்தி படுத்துவது முடியாத காரியம்.
அருமையான விமர்சனம்.. ரஜினியின் நடிப்பிற்காக இந்த படம் பேசப்படும் ..
ReplyDeleteநன்றி..
வருகைக்கு நன்றி நண்பா. ரஜினிக்கு ஸ்டைல் மட்டும் தான் செய்ய தெரியும் என்று நினைத்து இருந்த இந்த இளைய தலைமுறை மக்களுக்கு சரியான பதில் குடுத்து இருக்கிறார். :-)
DeleteKabali is a fantastic movie. It's not Dalit movie as said by some stupid people. It's a movie for all oppressed/suppressed people. It's great movie. Do not label it as a Dalit movie. I m very much surprised by the Tamil people, who says it as salut movie. Where does he use any caste name? Common people, don't be prejudiced! Be honest and accept the real fact! Kabali is a great movie. Go and watch more.
ReplyDelete...who say it as Dalit movie...(not salute movie)
Deleteவருகைக்கு நன்றி நண்பா. சிலர் சொல்லுவது போல் என் கண்ணுக்கு தலித்தியம் தெரியவில்லை. கிளைமாக்ஸ் காட்சியில் காலம் காலமாக அடிமை பட்டு இருக்கும் மக்களின் வலியை ரஜினி பிரதிபலித்து இருப்பது போல் தான் நான் உணர்ந்தேன். ரஜினி பேசிய வசங்களை விட
Deleteஅதை டெலிவரி செய்த விதம் தான் என்னை மிகவும் கவர்ந்தது.
Ennanga thala intha 18 masama padam ethum pakalaya. Oru review kuda kanom enga poninga. Ungala madhiri padatha endha bandha vum illama review panravanga romba kammi than neenga ivlo gap vitta epdi. Nalla review bro nethu than 2nd time pathen FDFS padam ithu illa nu purinjidhu. Raging Bull padam vandhappa ithe madhiri than negative reaction irunthucham poga poga athu one of the greatest and influential film ever made nu ippa iruka ella successful directors um solvanga. This film too will stand the test of time. Neenga konjam adikadi nalla padangalayavadhu review pannunga bro. All the best.
ReplyDeleteNice review sir. Pls write continuously . Don't stop writing. Every week Sunday 1 post sure u can write sir
ReplyDeleteரொம்ப நாட்களுக்கு பிறகு வருகிறேன்..
ReplyDeleteஅதுவும் உங்கள் எழுத்தை மீண்டும் வாசிப்பதில் ஒரு வித மகிழ்ச்சி.
நல்ல விமர்சனம்..
குறைகள் இல்லாத படம் இல்லை..ஒவ்வொரு பார்வையும் ஒவ்வொரு விதமாக இருப்பதை குறை என்று சொல்ல முடியாது.படம் எனக்கு பிடிக்கவே செய்தது..அதுவும் சூப்பர் ஸ்டாரை "நடிகனாக" பார்த்ததில் சந்தோஷம்.தொடருங்கள்..வாழ்த்துக்கள்
Dhanus Now In HollyWood Must Read & Share It---
ReplyDeletehttp://aknfilmnews.blogspot.com/2016/10/the-extraordinary-journey-of-fakir.html
This comment has been removed by the author.
ReplyDeleteWe are the Best Digital Marketing Agency in Chennai, Coimbatore, Madurai and change makers of digital! For Enquiry Contact us @+91 9791811111
ReplyDeleteThanks for the article…
Best Digital Marketing Agency in Chennai
Best SEO Services in Chennai
seo specialist companies in chennai
Brand makers in chennai
Expert logo designers of chennai
Best seo analytics in chennai
leading digital marketing agencies in chennai
Best SEO Services in Chennai
Really Nice Post, Thanks for sharing & keep up the good work. Agra Same Day Tour Package
ReplyDeleteBest IT Training in Chennai
ReplyDeleteOrganic Chemistry tutor
Organic chemistry
online tutor
Organic chemistry