சர்ச்சைக்குரிய மெட்ராஸ் கஃபே திரைபடத்தை பார்க்கும் வாய்ப்பு நேற்று கிட்டியது. படத்தை தமிழ்நாட்டில் வெளியிட அரசாங்க தடை இல்லாதா போதும், படம் தமிழ்நாட்டில் வெளியாக வில்லை. நம் ஊரில் இருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள் படத்தை வெளியிட முடியாது என்று சொல்லி விட்டதால் தமிழ்நாட்டில் எங்குமே படம் ரீலீஸ் ஆகவில்லை. எந்த ஒரு கலைப்படைப்பையும் முடக்குவது என்னை பொறுத்தவரை தவறான செயல். நம் ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்தை திரைப்படமாக சொல்லலாம், படம் வெளிவந்தவுடன் மக்கள் படத்தை பார்த்துவிட்டு அது நல்லதா கெட்டதா என்று முடிவு செய்யட்டும். வெறும் நான்கு ஐந்து பேர் மட்டும் ஒரு திரைபடத்தை பார்த்து விட்டு, இது எங்கள் உணர்வுகளை பாதிக்கிறது, கண்டிப்பாய் ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்தும் அதனால் படத்தை தடை செய் என்று கோருவது மிக பெரிய அயோக்கியதனம். நான்கு அல்லது ஐந்து பேரை எப்படி ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரநிதிகள் என்று கூற முடியும். மக்களால் தேர்ந்தெடுக்க பட்ட பிரநிதிகள் சொன்னாலும் பரவாயில்லை. சீமான், வைகோ, ராமதாஸ் போன்ற அரசியல் தலைவர்கள் எப்படி நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்? இந்த படத்தை யாரும் பார்க்ககூடாது, அது உங்கள் உணர்வுகளை புண்படுத்தும் என்று சொல்ல இவர்களுக்கு யார் அதிகாரம் குடுத்தார்கள்? நான் தான் எனக்கு எஜமானன், நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிப்பேன், மற்றவர்களுக்கு அதை பற்றி தீர்மானிக்க உரிமை இல்லை. அந்த காரனத்திருக்கு மட்டுமே இந்த திரைபடத்தை நான் பார்த்தேன்.
ஒரு சராசரி சினிமா ரசிகனாய் மெட்ராஸ் கஃபே படம் என்னை பெரிய அளவில் கவரவில்லை, ஆனால் தமிழர்களின் உணர்வுகளை கொச்சைபடுத்தும் காட்சிகள் எதுவும் இல்லை. இல்லை என்பதை விட எனக்கு அப்படி தோன்றவில்லை. கடைசியாய் இது நேர்மையான் படைப்பா, என்றால் சத்தியமாய் நேர்மை என்பது மருந்திருக்கு கூட இல்லை. படத்தின் பெரிய காமெடியே ராஜீவ்காந்தியை நல்லவர் என்று சொல்வது தான். இந்த ஒரு விஷயத்திருக்கு மட்டுமே இந்த படம் எனக்கு பிடிக்காமல் போனது. எப்படி "நேரு" என்கிற ப்ளே பாய்யை, காம கொடூரனை இந்திய குழந்தைகளின் மாமா என்று சொல்லி, அவர் பேரில் "குழந்தைகள் தினத்தை" கொண்டாடுவது போல் ஒரு மோசமான சூழ்நிலையை வரலாறு உருவாக்கியதோ, அதே போன்ற ஒரு தவறை இப்பொழுது இந்த படத்தின் முலம் செய்ய முயற்சி மேற்கொள்ள பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி என்கிற அயோக்கியனை, ஊழல் பெருச்சாளியை இந்தியாவின் வளர்ச்சிக்கு பாடுபட்டவன், இலங்கையில் அமைதி திரும்ப ஆசை பட்டான் என்று காட்டுவது தான் என்னால் ஏற்றுகொள்ளவே முடியவில்லை. வரலாற்றை உண்மையா எடுக்க தைரியம் இல்லாதவன் எல்லாம் எதுக்கு படம் எடுக்கிறாங்களோ தெரியவில்லை. வரலாற்றை கொஞ்சம் படித்தவன் கூட சொல்லி விடுவான், இலங்கையில் அமைதி படை என்கிற பெயரில் ராஜீவ் அனுப்பிய படைகள் செய்த அட்டுழியங்களை பற்றி, முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பது போல் அமைதி படை செய்த அக்கிரமங்களை எல்லாம் மறைத்து மனசாட்சி இல்லாமல் படம் எடுக்க எப்படி தான் ஜான்க்கு மனம் வந்ததோ, தெரியவில்லை.
இலங்கை உள்நாட்டுப்போர் உச்ச கட்டத்தில் இருந்த "80's பிற்பகுதியில் கதை ஆரம்பிகிறது. ரா உளவு ஏஜென்ட்டாக விக்ரம் சிங் (ஜான் ஆப்ரஹாம்), யாழ்ப்பாணத்தில் பணி அமர்த்த படுகிறார். LTF தலைவர் அண்ணா பாஸ்கரனை (அஜய் ரத்னம்) பிடிக்கும் பொறுப்பை ஏற்றுகொள்கிறார். ஆனால் அவரை நெருங்க கூட முடியவில்லை. பிறகு LTF இரண்டாம் கட்ட தலைவர் மல்லையாவை சந்தித்து பதவி ஆசை காட்டி பாஸ்கரனை காட்டி குடுக்க சொல்கிறார்கள். மல்லையா பதவி ஆசையில் தன் தலைவரை காட்டி குடுத்து விடுகிறான். இந்திய படை பாஸ்கரனை சுத்தி வளைத்து தாக்க, அதில் அவர் இறந்துவிட்டார் என்கிற செய்தி பரவுகிறது. ஆனால் அந்த தாக்குதலில் இருந்து தப்பித்து மீண்டு வந்து தன்னை காட்டி குடுத்து அனைவரையும் கொல்கிறார். இந்திய அமைதி படையும் (!) திரும்ப பெற படுகிறது.
இந்தியாவில் தேர்தல் நடைபெறுகிறது. அதில் தான் ஜெயித்தால் "இலங்கையில் அமைதியை" திரும்ப கொண்டு வருவேன் என்று சபதம் போடுகிறார் Ex-பி.எம். இதை கேட்ட பாஸ்கரன் சீனம் கொண்டு அவரை கொல்ல திட்டம் தீட்டுகிறார். அந்த திட்டம் தீட்டப்படும் இடம் சிங்கப்பூரில் இருக்கும் "மெட்ராஸ் கஃபே". ஆக படத்திருக்கு பெயர் கிடைத்து விட்டது. LTF தலைவர்கள் பேசிய பேச்சுகளை ரா அமைப்பு டேப் செய்து டிகோடு செய்து, அந்த திட்டத்தை கண்டு பிடிகிறார்கள். பேச்சை முழுவதும் புரிந்து எந்த நேரத்தில், எந்த இடத்தில் படுகொலை நடைபெறுகிறது என்று கண்டு பிடிக்கும் அதே வேளையில் படுகொலை நடந்து விடுகிறது.
ஜான் ஆப்ரஹாம் நன்றாக நடித்து உள்ளார் என்று சொன்னால் எனக்கு போஜனம் கிடைக்காது. உடம்பை வளர்த்தா மட்டும் பத்தாது, முகத்தில் கொஞ்சமாவது வேரியேஷன் காட்ட வேண்டாமா. மலச்சிக்கல் வந்து ஆள் போல் முஞ்சியை வைத்து உள்ளார். இன்வெஸ்டிகேஷன் செய்யும் காட்சிகளில் கொஞ்சம் கூட பரபரப்பே இல்லை, ஏனோ தானோ என்று தான் பல காட்சிகள் செல்கிறது. புலிகள் எத்தனை தைரியசாலி என்பதை உலகம் அறியும். அப்படி பட்ட புலி ஆதரவாளர்களிடம் இவர் உண்மையை வெளி கொண்டு வரும் காட்சிகள் தான் படத்தில் காமெடி இல்லாத குறையை தீர்த்து வைக்கிறது. ஒருவனை பார்த்தவுடன், "ஏய், உண்மையை சொல்லு", என்று இவர் கேட்ப்பார், அவரும் உண்மையை புட்டு புட்டு வைத்து விடுவார். 60 களில் வந்த எம்.ஜி.யார் படங்களில் கூட விசாரணை காட்சிகள் நன்றாக இருந்து இருக்கும்.
இயக்குனர் சூஜித் சிர்கார், தனக்கு மண்டையில் ஒன்றுமே இல்லை என்பதை காட்சிகள் முலம் தெளிவு படுத்தி உள்ளார். இது வரை யாரும் தொடாத கதைக்களம், நல்ல இயக்குனர் கையில் கிடைத்து இருந்தால் பின்னி இருப்பார்கள். அரவேக்காடு தனமாய் வரலாற்றை படித்து விட்டு மூளையை கழற்றி வைத்து விட்டு படத்தை இயக்கினால் இது போன்ற படங்கள் தான் கிடைக்கும். படத்தில் என்னை கவர்ந்த ஒரே எபிசோடு, தாணு என்கிற பெண் புலி ராஜீவை கொலை செய்ய தயார் ஆகும் காட்சிகள் தான். சிறிது நேரம் மட்டுமே வந்தாலும் அட்டகாசமான் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அந்த பெண். மற்ற படி குரங்கு கையில் கிடைத்த கொள்ளிக்கட்டை போல், இயக்குனர் தன்னையும் சுட்டு கொண்டு படம் பார்க்கும் நம்மளையும் சூடு போடுகிறார். 'நம் பிரதமர் (ராஜீவ் காந்தி) என்ன தப்பு செய்தார்? நாம் ஏன் அவரை இழந்தோம்?’- என்கிற கேள்விகளுடன் படத்தை முடித்து இருப்பார்கள், அதை பார்க்கும் போது, ராஜீவ் முதேவியை அன்றே படுகொலை செய்யாமல் விட்டு இருந்தால், 2007 இனப்படுகொலையை ராஜீவ் 1992 வருடமே நிகழ்த்தி இருப்பான்டா !@#!#$ பசங்களா என்று உரக்க கத்த தோன்றியது.
மெட்ராஸ் கஃபே - அரவேக்காடு அக்ஷன் த்ரில்லர்
///அரவேக்காடு தனமாய் வரலாற்றை படித்து விட்டு முலையை கழற்றி வைத்து விட்டு படத்தை இயக்கினால் இது போன்ற படங்கள் தான் கிடைக்கும். ///
ReplyDeleteஆவேசமாக எழுதியதால் எழுத்துப்பிழை வந்து விட்டது.
‘மூளையை’ என திருத்தி விடவும்.
திருத்திய பின் இப்பின்னூட்டத்தை நீக்கி விடவும்.
தவறை சுட்டி காட்டியதற்கு நன்றி
Deleteமாத்திட்டேன் சார்.
எந்த ஒரு படத்தையும் பார்வையாளராகிய நாம்தான் நிராகரிக்க வேண்டும்.
ReplyDeleteஎந்த ஒரு அமைப்பும் திரைப்படங்களை தடை செய்யும் போக்கை நாம் ஆதரிக்கக்கூடாது.
இத்தனை ஆர்ப்பாட்டம் செய்யும் அமைப்புகள்...
‘ஈழ விடுதலையை’ கருவாக்கி ஏன் ஒரு நல்ல சினிமாவை தர முயற்சிக்கவில்லை?
நேருவை பற்றிய இவ்வளவு காட்டமாக விமர்சித்தது ஆச்சரியமளித்தது.
ReplyDeleteஅவர் திரும்தி.மவுண்ட் பேட்டன் பிரபுவுடன் காதல் உறவு வைத்திருந்தார் என்ற அளவில் படித்திருக்கிறேன்.
அதுவும் உண்மையில்லை என்ற வாதம் வைக்கப்பட்ட நூலையும் படித்து இருக்கிறேன்.
பார்க்கின்ற பெண்களையெல்லாம் உறவு வைக்க துடிக்க அலையும் ‘தமிழினத்தலைவர்’ போல் நிச்சயம் நேரு இருந்திருக்கமாட்டார்.
அப்படி இருந்திருந்தால் அவரை காந்திஜி அருகிலேயே சேர்த்திருக்க மாட்டார்.
இந்த நாட்டை பொதுத்துறை நிறுவனங்கள் மூலம்தான் முன்னேற்ற முடியும் என அதற்காக உழைத்தவர் அவர்.
கம்யூனிசத்தில் உள்ள நல்லதையும்,
முதலாளித்துவ அமைப்பில் உள்ள நல்லதையும் எடுத்துக்கொண்டு ‘சோஷலிசம்’ என்ற புதிய பாதையில் இந்தியாவை முன்னேற்ற திட்டம் தீட்டி செயல் படுத்தியவர்.
அவரது வாரிசாக வந்த இந்திராவும் அதை நடைமுறை படுத்தினார்.
மிசா என்ற கொடுங்கோலாட்சிதான்
அவரது மோசமான தவறு.
ராஜீவ் காந்தி காலத்தில் இருந்துதான் காங்கிரஸ் ஊழலின் உறைவிடமாகப்போனது.
இன்று அந்நிய சக்திகளிடம் இந்தியாவை விற்று வருவதற்கு மூல காரணம் சோனியா.
சோனியா மூலமாக இந்த நாட்டை அடிமைப்படுத்தி சுரண்டி வருகிறார்கள் வெள்ளைக்காரர்கள்.
நம் கோபம் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி அழிக்க வேண்டிய தீய சக்தி ‘சோனியா காங்கிரஸ்தான்’.
ரொம்பவே காட்டமா எழுதி இருக்கீங்க தல. நேரு பற்றிய செய்திகள் எனக்கு அதிர்ச்சியளித்தது. இதெல்லாம் உண்மையிலேயே எனக்கு புதிய செய்திகள்.
ReplyDeleteகாங்கிரஸ் ஊழல் பெருச்சாளியை அளிக்கும் வரை இந்தியா முன்னேறப்போவது இல்லை. வரும் தேர்தலில் சரியான பாடம் புகட்டுவோம்.
நேரு மாதிரி ஒரு @#$ மாறியை பார்த்திருக்கே முடியாது தல. காஷ்மீர் பிரச்சனைக்கு பிள்ளயார் சுழி போட்டதே நேரு "மாமா" தான். ஓமர் அப்துல்லாவும் ராகுல் காந்திக்கும் இடையே இருக்கும் முக ஒற்றுமையை நீங்க கவனிச்சு இருக்கீங்களா.. தோண்ட தோண்ட கேவலமான பல விஷயங்கள் வரும். அப்படி பட்ட ஆளை பத்தி வரலாறு புக்ல எப்படி எழுதி இருக்காங்க, பாருங்க. அதே மாதிரி ராஜீவுக்கும் வரலாறு எழுத வேண்டி எடுக்க பட்ட படம் இது.
Deleteஓமர் - ராகுல் காந்தி முக ஒற்றுமையை பார்க்க:
https://www.google.com/search?q=omar+abdullah+rahul+gandhi&source=lnms&tbm=isch&sa=X&ei=evsbUpC2N4TtiwKHhIDIDA&ved=0CAkQ_AUoAQ&biw=1745&bih=868
முகத்தில் கொஞ்சமாவது வேரியேஷன் காட்ட வேண்டாமா...?????????????
ReplyDeleteராஜ்.நீங்கள் இவ்வளோ காட்டமா ஒரு விமர்சனம் எழுதி இப்போதான் படிக்கிறேன்.செம காரம்.உங்கள் அரசியல் பார்வை எனக்கு புரிய தொடங்கியுள்ளது.நேரு பற்றி நானும் பல விஷயங்கள் கேள்விபட்டுள்ளேன்.இங்கே தெய்வீகமாக மதிக்கப்படும் ஒரு பாடகியே அவரது கீப்பாக இருந்ததாக கூட கேள்வி.நிறைய வெள்ளைக்கார துரைமார்களின் மனைவிகளோடு அவர் உறவு இருந்ததால்தான் வேலைக்காரன் இந்த நாட்டைவிட்டு ஓடிப்போனான் என்று ஜோக் கூட படித்துள்ளேன்.
ReplyDeleteஎங்கேயோ வெளி நாட்டில் லவ்,கும்மாளம் என்று இருந்த ராஜீவை இந்திரா இறந்தவுடன் கொண்டுவந்துவிட்டனர்.அவருக்கு ஒரு -----உம் தெரியாது,சுதந்திரம் வாங்கி 67 ஆண்டுகள் ஆகியும் இந்தியா முன்னேறாமல் இருப்பதற்கு காங்கிரஸ் தான் காரணம்.இது என் கருத்து.--
இல்ல விஜய், இந்த படம் என்னையை ரொம்பவே கோவபடுத்திடுச்சு. மனசே அறல். இன்னும் நிறைய எழுதுனேன், ஆனா வெளியிடல.
Delete"நேருவை பற்றிய இவ்வளவு காட்டமாக விமர்சித்தது ஆச்சரியமளித்தது.
ReplyDeleteஅவர் திரும்தி.மவுண்ட் பேட்டன் பிரபுவுடன் காதல் உறவு வைத்திருந்தார் என்ற அளவில் படித்திருக்கிறேன்.
அதுவும் உண்மையில்லை என்ற வாதம் வைக்கப்பட்ட நூலையும் படித்து இருக்கிறேன்.
பார்க்கின்ற பெண்களையெல்லாம் உறவு வைக்க துடிக்க அலையும் ‘தமிழினத்தலைவர்’ போல் நிச்சயம் நேரு இருந்திருக்கமாட்டார்.
அப்படி இருந்திருந்தால் அவரை காந்திஜி அருகிலேயே சேர்த்திருக்க மாட்டார்."
யார் மேல் கோபம் உங்களுக்கு? நீங்கள் காங்கிரஸ் அபிமானி போல தெரிகிறது. உங்க காந்திஜி எப்படிப்பட்டவர் தெரியுமா சார்? இந்த லிங்கை சொடுக்கி பாருங்கள் புரியும்.
http://rajcritic.wordpress.com/2010/07/19/gandhi-was-a-sex-maniac
காந்திஜி தன் சுய சரிதையில் சொல்லிய விஷயங்களை...
Delete‘புனைவு புரட்டு’ செய்திருக்கும் அயோக்கியத்தனமான ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதி விட்டால் அதை அப்படியே நம்பி ஏமாற நான் முட்டாள் இல்லை.
அதே போல் காந்திஜியை கண்மூடித்தனமாக பின்பற்றும் பக்தனும் அல்ல.
நேதாஜி விஷயத்தில் அவரது நடவடிக்கை பற்றி எனக்கு மாற்றுக்கருத்து உண்டு.
எத்தனை விமர்சனங்கள் அவர்கள் மேல் வைத்தாலும் இந்த தேசத்தின் மீது பற்று வைத்திருந்தார்கள்.குடும்பத்தை இழந்தார்கள்.
இன்று குடும்பத்திற்காக இனத்தையும், மொழியையும், நாட்டையும் காட்டிக்கொடுக்கும் ‘தமிழினத்தலைவன்’ போல் கேடு கெட்ட அரசியல்வாதி எந்த நாட்டிலும் இருக்கவில்லை.
நான் காமராஜர் இருக்கும் வரை காங்கிரஸ்காரன்.
அதற்கு பிறகு கருணாநிதியின் மேடைப்பேச்சு சாகசத்தில் மயங்கி கிடந்தவன்.
இன்று மயக்கம் தெளிந்து, ‘லெனின், பிடல், ஹோசிமின், மாவோ, சாஸ்திரி,மொரார்ஜி, காமராஜர்’ போல் ஒரு தலைவன் இந்த நாட்டை வழி நடத்த வரமாட்டானா என ஏங்கி தவமிருப்பவன்.
"நேருவை பற்றிய இவ்வளவு காட்டமாக விமர்சித்தது ஆச்சரியமளித்தது.
ReplyDeleteஅவர் திரும்தி.மவுண்ட் பேட்டன் பிரபுவுடன் காதல் உறவு வைத்திருந்தார் என்ற அளவில் படித்திருக்கிறேன்."
நேரு வச்சா காதல் உறவு! 'தமிழினத்தலைவர்' வச்சா கள்ள உறவு? நல்லா இருக்குங்க நியாயம்.
நேரு தன்னை விரும்பிய பெண்ணிடம் உறவு வைத்திருந்தார் என்றுதான் அத்தனை கதைகளும் கூறுகின்றன.
Deleteதமிழினத்தலைவர் கற்பழித்து ‘வல்லுறவு’ கொண்ட ‘வரலாறே’ உண்டு.
நீங்கள் படித்த நேரு மீதான ‘கட்டுக்கதைகளை’ படித்து வைத்திருக்கிறேன்.
‘தானைத்தலைவன்’ கற்பழித்த ‘வரலாறுகளை’ அவரது நெருங்கிய கழகக்கண்மணிகள் மூலமாகவே தெரிந்து வைத்திருக்கிறேன்.
அவர்கள், தனது தலைவனின் சாகசக்கதைகளாக...
‘நடந்தவற்றை’ கூறும் மனோபாவத்தை கண்டு வியந்தும் போயிருக்கிறேன்.
உலகில் தன்னை தலைவனாக்கிக் கொண்டோர் எல்லோரின் புனிதப் பட்டங்களுக்குப் பின்னால் பல மறைக்கப்பட்ட கருப்பு பக்கங்கள் உள்ளன. ராஜிவை மேற்குலக சக்திகள் புலிகள் ஊடாய் தீர்த்தது, இந்தியாவை திறந்தவெளி பொருளாதார சந்தையாக்கவே. புலித் தலைவர் பிரபாவின் பின்னால் கூட பல குற்றச்சாட்டுகள் உள்ளன. கள்ள கடத்தல்கள், ஆயுத தொழில், ஆட் கடத்தல்கள், இனவெறி, படுகொலைகள் என பற்பல. எந்தவொரு அதிகார சக்தியும் தம்மை நம்பிய அப்பாவிகள் தலையில் ஏறிக் கொண்டு ஆட்டம் போடும். இந்திய ராணுவம், சிங்கள அரசுகள், தமிழ் புலிகள், பிற தமிழ், சிங்கள, முஸ்லிம் குழுக்கள் நடத்திய படுகொலைகள், போர்க்குற்றங்கள், பாலியல் குற்றங்கள் போன்றவை முழுமையாக விசாரிக்கப்பட்டு உலகில் எங்கு போய் மறைந்து கிடந்தாலும் அக் குற்றவாளிகளுக்கு தண்டனைக் கொடுக்கப்படல் வேண்டும். எனது எண்ணமும் அவாவும் இது தான்.
ReplyDelete