கண்ணாமுச்சி ஆட்டம் காட்டும் முகம் தெரியாத வில்லனிடம் இருந்து தனது காதலை கதாநாயகன் காப்பாற்றும் கதை தான் 555.
மோசமான கார் விபத்தில் மாட்டும் அரவிந்த் (பரத்) மன ரீதியாக பாதிப்பு அடைகிறார். விபத்திருக்கு முன்பு தனக்கு லியானா என்கிற காதலி இருந்ததாகவும், விபத்தில் அந்த காதலி இறந்து விட்டதாகவும் நம்பி வாழ்கிறார். அவரை சுற்றி இருக்கும் சைக்கியாட்டிரிஸ்ட் டாக்டரும், அவரது அண்ணன் சந்தானமும் லியானா என்கிற பெண் இல்லவே இல்ல, பரத் இல்லாத ஒன்றை இருப்பாதாய் கற்பனை செய்து கொண்டு வாழ்கிறார் என்று அடித்து சொல்கிறார்கள். அவர்களது கருத்திருக்கு வலு சேர்ப்பது போல நிறைய சம்பவங்கள் நடைபெறுகிறது.
சிறிது சிறிதாக பரத் தனக்கு ஏதோ பிரச்னை என்பதை உணர்கிறார். தன் பிரச்சனையை உணர்ந்து இயல்பு வாழ்கைக்கு திரும்பும் போது தன்னை சுற்றி நடப்பது எல்லாமே நாடகம் என்பதை அறிந்து கொள்கிறார். யார் அந்த நாடகத்தை நடத்துகிறார்கள் என்பதை தேடி செல்லும் போது அவருக்கு பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வருகிறது. தன்னை சுற்றி பின்ன பட்ட முடிச்சுகளை பரத் அவிழ்க்கும் போது முகம் தெரியாத வில்லன் கும்பல் அவருக்கு இடைஞ்சல் குடுக்கிறது. யார் அந்த வில்லன், அவன் ஏன் பரத் வாழ்கையில் விளையாட வேண்டும் என்பதை பர பரப்பாய் சொல்ல ஆசை பட்டு ஏனோ தானோ என்று சொல்லும் படம் தான் 555.
படத்தில் வரும் சில தீடீர் திருப்பங்கள் நம்மை அட போட வைக்கின்றன. ஆனால் படத்தின் மிக பெரிய லெட் டவுன் வில்லன் மற்றும் அவனது படு மொக்கையான பிளாஷ்பேக் தான். நிறைய ஹைப் ஏற்றி விட்டு கடைசியில் படத்தை சப் என்று முடிந்து விடுவது தான் இயக்குனர் செய்த மாபெரும் தவறு. இதே குறை தான் "சமர்" படத்திலும் இருந்தது. இதிலும் அதே தவறு இருப்பதால் நல்ல படமாக வந்திருக்க வேண்டிய படம் சுமாருக்கும் கீழ் லிஸ்டில் சேர்ந்து விட்டது.
இயக்குனர் சசி, சொல்லாமலே,ரோஜாக்கூட்டம், டிஷ்யூம், பூ போன்ற மென்மையான படங்களை குடுத்தவர். முதல் முறையாக அக்ஷன் த்ரில்லர் முயற்சி செய்து உள்ளார். கதையை சரியாக தான் தெரிவு செய்து உள்ளார், ஆனால் கதைக்கான கதாபாத்திர தேர்வில் ஆரம்பிகிறது இவரது முதல் சறுக்கல். முதல் மற்றும் இரண்டாம் கதாநாயகி, வில்லன் மற்றும் அவனது அடியாட்கள் கூட்டம் என்று படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் மிகவும் மோசமான தேர்வு.
ஹீரோ மற்றும் செகண்ட் ஹீரோயின் காபி டேயில் சந்திக்கும் அந்த காட்சி டென்ஷனை ஏற்றி பர பரப்பாய் முடிந்து இருக்க வேண்டியது, ஆனால் இயக்குனர் அந்த காட்சியை படு மொக்கையாய் ஆரம்பித்து சப்பென்று முடித்து இருப்பார்.அதே போல் கிளைமாக்ஸ் சண்டை காட்சி, எப்படா சண்டை முடியும் என்று ஏங்க வைத்து இருப்பார் இயக்குனர். இவருக்கும் அக்ஷன் படங்களுக்கும் வெகு தூரம் என்பதை இந்த படம் நிருபித்து உள்ளது.
பரத் - 8 பேக்ஸ் வைத்து உள்ளார், படத்தின் ப்ரோமோஷனுக்கு மட்டுமே பயன்படுத்த பட்டு இருக்கிறது. படத்தின் கதைக்கு அந்த உடம்பு தேவையே இல்ல. முதல் பாதியில் காலேஜ் ஸ்டுடென்ட் போல் வருகிறார். ஒரு காட்சியில் மொட்டை வேறு அடித்து நடித்து உள்ளார். உடம்பை வளர்க ஜிம்யில் செலவு செய்த நேரத்தில் எங்காவது கூத்து பட்டறையில் சேர்ந்து நன்றாக நடிக்கவும் பயற்சி எடுத்து இருக்கலாம். "சின்ன தளபதி" என்று டைட்டிலில், இயக்குனர் பேரரசு படங்கள் முலம் டெரர் அப்நார்மல் படங்கள்
குடுத்து கொண்டு இருந்தவர், இந்த படத்திருக்கு பிறகு நார்மல் படங்கள் குடுப்பார் என்று நம்புவோமாக. அடுத்த படத்தில் சன்னி லியோனியோட ஜோடி சேர மட்டுமே அவரது 8 பேக்ஸ் உதவி செய்து உள்ளது.
கதாநாயகி மிருத்திகா. இவரை பற்றி நாம் சொல்லும் முன்பு சந்தானமே சொல்லி விடுகிறார். வழக்கமான் தமிழ் லூசு பெண் கதாபாத்திரம். நடிப்பு எந்த கடையில் கிடைக்கும் என்று கேட்பார் போல். வாய் அசைப்பும் படு மோசம். சீவிங் கம் மென்று கொண்டு இருந்திருப்பார் போல. இந்த சுமார் முஞ்சி பிகர்க்கு தான் படத்தில் இவ்வளவு அலப்பறை என்று என்னும் போது அட போங்கபா என்கிற எண்ணம் தான் வருகிறது.
இவர் மீது பரத்திருக்கு காதல் வருவதற்கான் காரணம் ஒன்றுமேயில்லை. அதே போல் பரத்திடம் அதிசிய சக்தி இருப்பதாய் நம்புவதலாம் டூ மச். இப்படிப்பட்ட அறிவாளியை விழுந்து விழுந்து காதலிப்பார் ஹீரோ.
அடுத்து சந்தானம், பல படங்களை காத்தது போல் இந்த படத்தையும் காப்பற்றி உள்ளார். முதல் முறையாக குணசித்திர நடிப்பை முயற்சி செய்து உள்ளார் என்று எண்ணுகிறேன். தன்னுடைய ட்ரேட்மார்க் டயலாக் டெலிவரி முலம் நிறைய இடங்களில் ஸ்கோர் செய்கிறார்.
கடைசியாக வில்லன், ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் மிகவும் தவறான தேர்வு. பாடல்கள் படம் எப்போது எல்லாம் நொண்டி அடிக்கிறதோ அப்பொழுது எல்லாம் கரெக்டாக வந்து நமது பொறுமையை சோதிக்கும். அதுவும் அந்த இழவு பாடல், கொடுமை ரகம். பரத் உடம்பை ஏற்ற எடுத்து கொண்ட நேர்த்தில் சசி திரைக்கதை இன்னும் நன்றாக செதுக்கி இருந்தால்,நமக்கு மற்றும்மொரு கஜினி கிடைத்து இருக்கும், திரைகதையில் சறுக்கி சமர் லிஸ்டில் சேருகிறது "555"
555 (2013) - உடம்பை வளர்த்தா மட்டும் பத்தாது !!!
My Rating: 6.4/10.
ஆஹா இந்த படம் கொஞ்சம் சுமாராக இருக்கும் என்று எதிர் பார்த்தேனே.சசி இதுவரை எடுத்த எல்லா படங்களுமே below average தான் .சொல்லாமலே,ரோஜா கூட்டம்,டிஷ்யூம் ,பூ .எல்லாமே ர்ப்ம்ப சுமார் தான்.ஆனால் வருட கணக்கில் எடுப்பார்.--
ReplyDeleteவாங்க விஜய், இந்த படம் சுமார் என்று கூட சொல்ல முடியவில்லை.
Delete'பழனி படிக்கட்டு’ மாதிரி பரத் உடம்பை செதுக்குனதுக்கு பதிலா திரைக்கதையை செதுக்கி இருக்கணும் இயக்குனர் சசி.
ReplyDeleteஉண்மைதான் சார். சசிக்கு அக்ஷன் படங்கள் எடுக்க தெரியாதுன்னு சரியாய் நிரூபணம் ஆகி இருக்கு.
Deleteசசி ய நம்பி போனேன் தல, பெருத்த அடி கொடுத்து அனுப்பி வைத்தார்! தூங்கி தூங்கி பார்த்த காட்சிகளில் சிலது மட்டும் தேவலாம் ரகம்
ReplyDeleteவாங்க அரசன், சில காட்சிகள் அட போடுற மாதிரி இருந்தது, ஆனா மொத்தமா லெட் டவுன் தான்.
Deleteதல,
ReplyDeleteஇந்தப்படத்துக்கு ரொம்ப மிக்ஸ்டு ரிவியூஸா வருது. தலைவா பாக்குறதுக்கு இதப்பாத்திரலாம்னு எல்லாரும் சொல்றாய்ங்க.
அத விடுங்க, நீங்க "ஆதலால் காதல் செய்வீர்" பாத்துட்டீங்களா ?
இங்க "ஆதலால் காதல் செய்வீர்" ரீலீஸ் இல்ல தல. நெட்ல வந்தா தான் பார்க்கணும். எல்லோரும் ஒரு மனதா நல்லா இருக்குன்னு சொல்லுறீங்க. நீங்க கூட ரொம்ப பாராட்டி இருந்தீங்க.
Deleteபடம் சிங்கம் தலைவா படத்திற்கு பரவில்லை என்று சில நண்பர்கள் கூறினார்கள்.
ReplyDeleteஇருந்தும் மொக்கை தான் போல.
San Diego போனதில் இருந்து அனைத்து படங்களையும் பார்த்துவிடுகிறீர்கள் போல.:)
வாங்க கிருஷ்ணா, இங்க இன்னும் என்னோட பாமிலி வரல, அந்த காரணத்துல தான் நிறைய ப்ரீ டைம் கிடைக்குது, அது போக இங்க இருக்கிற என்னோட நண்பர்கள் எந்த படத்தையும் விட்டு வைக்கிறது இல்ல. அதனால் தான் எந்த படம் வந்தாலும் போய் பர்த்திறது.
Delete