Monday, September 02, 2013

தங்க மீன்கள் (2013)- தூர்தர்ஷன் செண்டிமெண்ட் டிராமா

சராசரிக்கும் கீழ் புத்தி (IQ) உடைய குழந்தைக்கும், சரியான் படிப்பு இல்லாமல் நிலையான வேலைக்கு போகாமல், பணம் சம்பாரிக்க தெரியாத அப்பாவுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டம் தான் "தங்க மீன்கள்". கற்றது தமிழ் "ராமின்" இரண்டாவது படைப்பு இது. தமிழில் குழந்தைகளில் வாழ்வை யதார்த்தமாய் எடுத்து சொல்வது போல் வந்த படங்கள் ரொம்பவே குறைவு. மணியின் "அஞ்சலி" மற்றும் பாண்டியராஜனின் "பசங்க" படங்கள் குழந்தைகளின் நகர மற்றும் கிராம வாழ்கைகையை சாதாரண ரசிகனும் ரசிக்கும் படி படம் பிடித்து காட்டியிருந்தார்கள். 

அதே போன்று ராமுக்கு குழந்தைகளின் உலகை படம் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்துள்ளது. அது மாதிரி எண்ணம் வந்தது தவறு என்று நான் சொல்ல வில்லை. ஆனால் தான் என்ன சொல்ல வருகிறோம் என்று தெளிவாய் முடிவு செய்து இருக்க வேண்டும். மந்த புத்தி பெண் குழந்தை மற்றும் அதன் அப்பாவுக்கு இடையே இருக்கும் பந்தத்தை சொல்லவதா,  இல்ல தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் மேல்லானவை என்பதை சொல்வதா, இல்ல தனியார் பள்ளி ஆசிரியர்கள் குரலாய் ஒலிக்க வேண்டுமா என்பதில் ரொம்பவே குழம்பி விட்டார் ராம். படத்தின் முடிவில் போட்ட வார்த்தைகள் "போதுமான வசதிகள் இல்லையென்றாலும், போதிய வருமானம் கிடைக்கவில்லையென்றாலும், தன்னார்வத்தால் மாணவர்களுக்காகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு" என்கிற வாக்கியங்கள் நம்மை ரொம்பவே குழப்பி விட்டன. 


படத்தின் மையின் கதாபாத்திரம் செல்லம்மாவாக சிறுமி சாதனா. கதையின் ஆணிவேர் இவருடைய கதாபாத்திரம்தான். படம் முழுக்க ஒரு அப்பாவி மகளாக நெஞ்சை நெகிழ வைக்கிறார். விருது வாங்கும் அளவுக்கு நடிப்பை வெளி படுத்தி இருக்கிறார். செல்லமா பேசும் கொஞ்சும் தமிழை கேட்டுகொண்டே இருக்கலாம். "நிஜமா தான் சொல்றீயா" சிறு வயது அஞ்சலி போன்று எனக்கு தோன்றியது. இந்த குழந்தை‘எம்’முக்கும், ‘டபிள்யூ’வுக்கும் வித்தியாசம் தெரியாமல் குழம்பும் போது, ஆஹா, "தாரே ஜமின் பர்" போன்ற டிஸ்லெக்சியா (கற்றல் குறைபாடு) பற்றி பேச போகும் நல்ல படம் என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், அடுத்த காட்சியில் ராம் பணம் இல்லாமல் வறுமையின் நிறம் சிவப்பு போல் கஷ்டபடுகிறார். கடைசியாக குழந்தை வோடபோன் நாய் வேண்டும் என்று கேட்டு அதை வாங்க பிற்பாதி முழுக்க கஷ்டபடுகிறார். இப்படி திக்கில்லாமல் அலைகிறது கதை.

அடுத்த முக்கிய கேரக்டர் கல்யாணி (ராம்). கற்றது தமிழ் ஜீவாவின் மறு பதிப்பு. நார்மல் மனநிலையில் யோசிக்காத கதாபாத்திரம். இவர் "பெருசிடம்" சம்பளம் இல்லாமல் வேலை செய்வதருக்கு சொல்லும் காரணம் செல்லமாவிடம் நேரம் செலவிட வேண்டும் என்பது தான். அந்த அளவு பாசம் வைத்து இருப்பார். குழந்தையை இவர் மனைவி சூடு போட்டு விட்டார் என்று அறிந்து, கதறி அழும் காட்சியில் தனக்கு நடிக்கவும் வரும் என்று நிருபித்து இருக்கிறார். வெள்ளைகார தம்பதியிடம் இவர் லேப்டாப் பிடுங்கி கொண்டு ஓடும் காட்சிகள் நாடக தனமானவை. ஸ்கூல் பீஸ் கட்ட முடியாமல் கடன் கேட்டு போகும் நண்பனிடம் அசிங்கபடுவது, தனியார் பள்ளி டீச்சரிடம் போய் ஹை பிட்சில் கத்தி பேசி, பின்பு பிரின்சிபாலிடம் கெஞ்சி பேசி, கடைசியாய் அப்பாவிடம் அடி வாங்குவது என்று அக்மார்க ராம் டைப் செண்டிமெண்ட் காட்சிகள். இது போன்ற காட்சிகள் இப்பொழுது தூர்தர்ஷன் சீரியலில் கூட வருவது இல்லை. 


கூலி வேலை தான் செய்வது என்று முடிவு செய்தவுடன், அதை கொச்சின் சென்று தான் செய்யவேண்டுமா ?? அதே கூலி வேலை அவர் இருக்கும் ஊரில் கிடைக்காதா ?? பிரிவை காட்ட வேண்டும் என்று வேண்டுமென்றே திணிக்க பட்ட காட்சிகள் நிறைய உள்ளது. தியேட்டர் கிடைக்கலன்னு மட்டும் ஒப்பாரி வச்சா போதாது, கொஞ்சம் முளையை யோசிச்சு சீன் எடுக்கவும் செய்யவும். ராம் மட்டும் இல்லாமல் செல்லமாவை சுற்றியே முழு கதையும் பின்னி இருந்தால் படம் கண்டிப்பாய் பேச பட்டு இருக்கும். அப்படியே ராம் இருந்தாலும், அவரை நார்மலாக உலாவ விட்டு இருக்கலாம். 

கற்றது தமிழில் செய்த அதே பிழையை தான் இதிலும் செய்து உள்ளார் ராம். அதில் கதாநாயகனுக்கு தமிழ் படித்தால் வேலை கிடைக்கவில்லை. தமிழ் படித்தால் வேலை கிடைப்பது கஷ்டம் என்று தெரிந்தே தானே படித்தார் ? தவறை தான் செய்துவிட்டு சமூகத்தை குறை கூறுவார். மெண்டல் தனமாய் ஐடி துறையில் வேலை செய்யும் ஒருவனை பிடித்து டார்ச்சர் செய்வார். பாலா கூட இது போன்ற மெண்டல் கதாபாத்திரங்களை பல படங்களில் காட்டி உள்ளார். அதை பார்க்கும் எனக்கு பயம் அல்லது பரிதாபம் வரும். ஆனால் ராம் படங்களில் வரும் மெண்டல் கதாநாயகர்களை பார்க்கும் எனக்கு எரிச்சல் தான் வருகிறது. ஊரோடு ஓத்து வாழ முடியாதவனை எங்கள் ஊரில் கிறுக்கன் என்று சொல்வோம். இதிலும் ஊரோடு ஓத்து வாழ தெரியாதவனின் வாழ்க்கையை தான் பதிவு செய்து உள்ளார் ராம். அவனின் கிறுக்குதனங்களுக்கு குறைவேயில்லை. சோ, எரிச்சல் தரும் காட்சிகளுக்கு பஞ்சமேயில்லை.


பணம் இல்லாதவர்கள் மட்டுமே ரொம்ப நல்லவர்கள், பாசத்துக்கு எதுவும் செய்பவர்கள். பள்ளி படிப்பு படிக்காதவர்கள் உண்மையில் அறிவாளிகள், ஆனால் சமுகத்தின் பார்வையில் முட்டாள்கள் என்கிற கருத்தை இந்த படத்தின் மூலமும் திணிக்க பார்க்கிறார் ராம். வெள்ளையா இருகிறவன் பொய் பேச மாட்டான் என்பது போல் இருக்கிறது, இவர் சொல்ல வந்த கருத்து. படித்தவன் எல்லாம் முட்டாள்கள், வாத்தியார் முட்டாள், ஆஸ்திரேலியாவில் இருந்து ஊருக்கு வந்த சாப்ட்வேர் இன்ஜினியர் முட்டாள், அவர்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாமே அபத்தமானவை. ராம் எடுக்கும் முடிவுகள் மட்டுமே சரியானவை என்பது போல் பல காட்சிகள் வைத்து இருக்கிறார். 

நிறைய இடங்களில் படத்தை தாங்கி நிற்பது யுவனின் பின்னணி இசை தான். நீண்ட நாட்கள் கழித்து வெகுநாட்கள் மனதில் தங்கும் இசையை கொடுத்துள்ளார் யுவன். ராமின் மனைவியாக ஷெல்லி கிஷோர், அப்பா, ‘பூ’ ராமு, அம்மா ரோகிணி, பூரிக்காக தன் சாவை தள்ளி போடும் சிறுமி என மற்ற அணைத்து கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து செதுக்கிய ராம், முக்கிய கேரக்டரான கல்யாணி மற்றும் செல்லமாவை ரொம்பவே குழப்பமாக வடிவைமைத்து, ரொம்பவே குழப்பமாக திரையில் காட்டி இருக்கிறார். அது தான் படத்தின் மிக பெரிய மைனஸ்.

தங்க மீன்கள் - தூர்தர்ஷன் செண்டிமெண்ட் டிராமா

My Rating: 6.5/10.


10 comments:

  1. சில காட்சிகள் அபத்தமாக தான் உள்ளன...இருந்தாலும் சினிமா... ரசிப்போம்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க தனபாலன், உங்க கருத்துக்கு நன்றி..

      Delete
  2. குறைகளை என்று இந்தப் படத்தை என்னால் பார்க்க முடியவில்லை... அழகான கேமரா கோணம் நல்ல பின்னணி இசை... மேலும் கற்றது தமிழ் ராம் மற்றும் கல்யாணி போன்ற கேரக்டர்களை நிஜ வாழ்க்கையிலும் சந்தித்து உள்ளேன், சில சமயம் நம்முள்ளும் அந்த சைக்கோ உலவுகிறான் என்ன ராம் அதை மட்டுமே மையப் படுத்தி அந்த பிம்பத்தை தேவையில்லாமல் பெரிதாக்கிக் காட்டியுள்ளார்...

    ஐ.க்யு குறைவான குழந்தை என்றும் எங்கேனும் காட்டினார்களான்னு தெரியல, ஆனா ஆயிரம் பெருசா, நூறு பெருசா ன்னு ஆசிரியர் கேட்கும் காட்சியில குழந்தையின் லேட்ரல் திங்கிங் நல்லா இருந்தது, அதனால தான் ஐ.க்யு பற்றி சொன்னேன்...

    மற்றபடி திரைகதை வடிவமைப்பு எதை மையபடுத்த விரும்புகிறார்கள் என்பதில் ஏற்பட்ட குழப்பத்தில் ஒத்துப் போகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல, ஒரு காட்சியில் ராமின் மனைவி தன்னால் தான் செல்லமா இப்படி மந்த புத்தியாக இருக்கிறாளா என்று கேட்பார். அது போக ராமின் அப்பா வேறு ஒரு காட்சியில், ராமும் அவர் மனைவியும் பள்ளி படிப்பை முடிக்காத காரணத்திலால் தான் குழந்தை செல்லமாவும் படிப்பில் ஆர்வம் இல்லாமல் மந்தமாக இருக்கிறாள் என்று கூறுவார்.
      அதுபோக படமும் ரொம்பவே ஸ்லோ போச்சு. எப்படா படம் முடியும்னு நெளிய வச்சுரிச்சு.

      Delete
  3. தல,

    படம் இன்னும் இங்கயே (பெங்களூரு) ரிலீஸ் ஆகலியே அதுக்குள்ளார எப்டி நீங்க பாத்தீங்க..??
    இங்கே அடுத்த வாரம்தான் ரிலீஸ் ஆகும்னு நினைக்கிறேன். பாத்துட்டு அப்பாலிக்கா வரேன் தல..!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல... இங்க ஒரு ஷோ மட்டும் போட்டாங்க. பார்த்திட்டு உங்க கருத்தை சொல்லுங்க. :):)

      Delete
  4. கற்றது தமிழ் தோல்வியில் பாடம் படிக்கவில்லை இயக்குனர் ராம்.
    அதே போன்று அபத்தமான குப்பையை தருவதற்கு இத்தனை வருடங்களா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார், நீங்க மனசு நிறைஞ்சதான்னு கேட்ட ஆளு கிட்ட தியேட்டர் நிறைஞ்சுதுன்னு பதில் சொல்லும் போதே நினைச்சேன், உங்களை படம் பெருசா ஏமாத்திடுச்சுன்னு.

      Delete
  5. நான் படிக்கிற முதல் நெகடிவ் விமர்சனம் ;)

    படம் வருவதற்கு முன்னரே, பாடல்கள், ட்ரெயிலர், விளம்பரங்கள் பார்த்து, இந்த படம் ஒரு உணர்ச்சிக் குவியலாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். பலர் ஆஹா ஓஹோ என்று வர்ணித்தபோதே அதை ஓரளவு உறுதிப்படுத்திட்டேன்.. இப்போ நீங்க சொன்னதும் கன்ஃபோர்ம் பண்ணியாச்சு :) நான் இன்னமும் படம் பார்க்கல்ல !

    படத்தை எல்லோரும் ஒரேயடியாக உயர்த்தி பேசுவதை பார்த்தால் தமிழ் ரசிகர்கள், பத்து அடி பறக்கும் சண்டைக்காட்சி ரசனையில் இருந்து கிளிசரின் ரசனைக்கு மாறிவிட்டார்களோ என்று பயமா இருக்கு. ஏற்கனவே மைனா, கும்கி என்று செண்டிமெண்ட் க்ளைமாக்ஸ் படங்களை ஹிட் பண்ணவச்சிருக்கிறாங்க :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க மதுரன்,
      உணர்ச்சி குவியல் தான்.. ஆனா எல்லாமே செயற்கைதனமாக இருந்திச்சு. மைனா, கும்கி போன்ற படங்களில் ஒரு ஜீவன் இருந்திச்சு, இந்த படத்துல அது டோடலா மிஸ்ஸிங்.

      Delete