இந்த வருடத்தில் இறுதியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான தூம் -3 எதிர்பார்ப்பை நிறைவேற்றியதா இல்லையா என்பதை பார்போம். ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு என்று ஒரு பார்முலா உண்டு. முதல் பத்து நிமிட சாகச காட்சி, படத்தின் பெயர் போடும் போது பிரபல பாப் பாடகியின் பாடல், ஜேம்ஸ்பாண்ட் M மை சந்தித்து வில்லனை பற்றி அறிந்து கொள்வார், பிறகு பாண்ட் வில்லனை தேடி அவனது இடத்துக்கு செல்வார், முதல் முயற்சியில் தோல்வி, பிறகு இரண்டாம் முயற்சியில் வில்லனை விழ்த்தி வெற்றி பெறுவார். இது போன்ற பிக்ஸ்டு டெம்ப்ளேட் தான் அணைத்து ஜேம்ஸ்பாண்ட் படங்களிலும் காண கிடைக்கும்.
இதே போல் தான் தூம் சீரீஸ்க்கு என்று ஒரு டெம்ப்ளேட் இருக்கிறது. அது திருடன் - போலிஸ் விளையாட்டு. முதலில் திருடன் ஒரு கொள்ளையை வெற்றிகரமாக நடத்தி விடுவான். பிறகு இரண்டாம் கொள்ளை, அதில் போலீஸ் திருடனை பிடிப்பது போல் அருகில் வரும், ஆனால் திருடன் தப்பித்து விடுவான். கடைசியாக முன்றாவது கொள்ளை. அதில் போலீஸ் திருடனை பிடித்து விடும். இடையில் மானே தேனே போல் திருடனுக்கு அழகிய காதலி என்ற கதைக்கு திரைக்கதை எழுதினால் தூம் ரெடி.
இதில் போலீஸ் கேரக்டருக்கு அபிஷேக் பச்சன் என்று பிக்ஸ் செய்து கொண்டு, திருடன் கேரக்டருக்கு ஹீரோக்களை மாற்றி கொண்டே இருப்பார்கள். தூம் -1 திருடன் கேரக்டர் செய்தது ஜான் ஆபிரகாம், தூம் -2 க்கு ரித்திக் ரோஷன். இந்த முறை திருடனுக்கு அமீர்கான் என்ற அறிவுப்பு வந்தவுடனே படத்தை ரொம்பவே எதிர்பார்த்து விட்டேன். ஆனால் பலவீனமான் திரைக்கதையால், ஆபரேஷன் (வசூல்) சக்சஸ், பேஷன்ட் (படம்) கவலைக்கிடம் என்று தான் சொல்ல தோன்றுகிறது. அமீர்கான் தூம் ப்ரண்ட்க்காக மட்டுமே நடிக்க ஒத்து கொண்டு உள்ளார் என்று நினைக்கிறன். முழு கதையை கேட்டு இருக்க மாட்டார் என்றே நான் நினைக்கிறன்.
சிகாகோவில் சர்கஸ் கம்பெனி நடத்தி வருபவர் ஜாக்கி ஷெராப். அவரது மகன் தான் ஆமிர்கான். வெஸ்டர்ன் பேங்க் ஆப் சிகாகோ மூலமாக கடன் வாங்கி சர்கஸ நடத்தி வருகிறார். வாங்கிய கடனை திருப்பி தர முடியாத நிலையில் வங்கியில் இருந்து சர்க்கஸை நடத்துவதை நிறுத்தி விடுகிறார்கள். கடைசியாக தன்னிடம் உள்ள ஒரு மேஜிக் ஆக்ட்டை வங்கி ஆட்களுக்கு செய்து காட்டுகிறார். அதில் திருப்தி ஏற்பட்டால் வங்கி சர்கஸ் நடத்த தொடர்ந்து இடமும் பணமும் குடுக்கும். ஆனால் அந்த மேஜிக் ஆக்ட் வங்கி ஆட்களை கவரவில்லை. கடன் நிறுத்தப்படுகிறது. விரக்தியில் தன் மகன் முன்னாலே ஜாக்கி தற்கொலை செய்து கொள்கிறார்.
ஆமிர்கான் வளர்ந்துவுடன் வெஸ்டர்ன் பேங்க் ஆப் சிகாகோவை பழி வாங்க புறபடுகிறார். வங்கி கிளைகள் கொள்ளை அடிக்கிறார். முதல் கொள்ளை வெற்றி. இரண்டாம் கொள்ளையில், அபிஷேக் என்ட்ரி. இறுதி கொள்ளை என்னவானது என்பதை வெண்திரையில் கண்டு கொள்ளுங்கள். படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த மேஜிக் ஆக்ட்டை பார்த்தவுடனே அதன் ப்ரெஸ்டிஜ் எபெக்ட் தெரிந்து விடுகிறது. அதன் பிறகு வரும் இடைவேளை ட்விஸ்ட் பெரிய ஆச்சிரயத்தை குடுக்கவில்லை. வங்கியை கொள்ளை அடித்து ஆமிர்கான் தப்பிக்கும் காட்சியில் கிலோ கணக்கில் பூ கடையை காதில் சுற்றுகிறார்கள். வெறுமென சேசிங் காட்சிகள் மட்டுமே படம் முழுக்க வருகிறது. புதிசாலிதனமான காட்சிகள் மிஸிங், ஓசோன் அளவுக்கு லாஜிக் ஓட்டைகள் படம் முழுக்க பரவி கிடைக்கிறது.
படத்தில் கொஞ்சமே கொஞ்சம் சீரியஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது ஆமிர்கான் மட்டுமே. மனிதர் பின்னி உள்ளார். வில்லத்தனம் அவருக்கு பக்காவாய் பொருந்துகிறது. குறை சொல்ல முடியாத நடிப்பு. அபிஷேக் பச்சன் வழக்கம் போல் தன் போலீஸ் பணியை செய்து விட்டு போகிறார். அலட்டல் இல்லாத நடிப்பு. பிரேம்ஜியை எப்படி நாம் எல்லா வெங்கட் படங்களிலும் சகித்து கொள்கிறோமோ, அதே போல் தூம் படங்களில் நாம் உதய் சோப்ரா என்கிற கோமாளியை நாம் சகித்து கொள்ள தான் வேண்டும். இந்த முறை அந்த கோமாளியின் கடி ரொம்பவே ஜாஸ்தி. ஸ்கின் ஷோவுக்கும் லிப் கிஸ்க்கும் கத்ரீனா கைப், அவ்வளவு தான்.
ஜேம்ஸ்பாண்ட் தீம் மியூசிக் போல், தூம் தீம் மியூசிக் ஒன்று உள்ளது. எதன்னை வருடம் கேட்டாலும் அலுக்காது. தீம்மை கொஞ்சம் மெருகேற்றி உள்ளார்கள். ஆனால் பாடல்கள் சுமார், பின்னணி இசையும் ஓகே ரகம் தான். ஒளிப்பதிவு ரொம்பவே ஸ்லோவாக இருக்கிறது. ஸ்லோ மோஷன் காட்சிகளில் குட்டி துக்கம் போட்டு எழுந்து விடலாம். ஹிந்தி ஆடியன்ஸ் எந்த பெரிய ஹீரோ படம் வந்தாலும் விழுந்து எழுந்து பார்ப்பார்கள். இந்த படத்தையும் கண்டிப்பாய் பார்ப்பார்கள். சமிபத்தில் மெகா மெகா ஹிட் என்று சொல்ல படுகிற ஹிந்தி படங்களில் தரத்தை வைத்து பார்க்கும் போது, தூம் மெகா மெகா மெகா ஹிட் ஆகும் என்று நான் நினைக்கிறன். ஆந்திரா மக்களுக்கு இருக்கும் குறைந்த பச்ச லாஜிக் சென்ஸ் கூட ஹிந்தி ஆடியன்ஸுக்கு கிடையாது என்பது பல முறை நிருபணம் ஆகி உள்ளது. இந்த படம் வெற்றி அடைந்தால், அது மீண்டும் உறுதி படுத்த படும்.
Dhoom-3 ஆபரேஷன் சக்சஸ், பேஷன்ட் டெட்!!
My Rating: 6.4/10.
சமிபத்தில் எழுதியது: பிரியாணி (2013)
அப்போ நெட்ல பார்த்திடலாமா தல , எனக்கு தூம்1&2 பிடித்து தான் போனது :)
ReplyDeleteநெட்ல பாக்கலாம், ஆனா என்ன பொறுத்தவர அந்த அளவுக்கு இந்த படம் தகுதியானது இல்ல. செத்து போன அப்பா, இத்து போன ஒரு பிளாஷ்பேக், வீனா போன Revenge. இதெல்லாம் மொத்தமா சேர்த்தா அது தான் தூம் - 3.
Deleteதியேட்டர்ல பார்க்கிற அளவுக்கு சூப்பர் படம் எல்லாம் கிடையாது தல... :-)
Deleteஇந்த படத்துக்குன்னு ஒரு எதிர்பார்ப்பு இருந்துச்சு,அதுல தீய வச்சிட்டானுங்க. நேத்து evening படத்துக்கு போனேன். எதிர்பார்த்த படி ஹவுஸ்புல், ஆன்லைன்ல டிக்கெட் போட்டு பிரண்ட்ஸ் கூட கெத்தா போனேன். தியேட்டர் வாசல்ல நிறைய பேருக்கு டிக்கெட் கிடைக்கல. சொல்ல போன அவங்க எல்லாரும் புண்ணியம் பண்ணவங்க. நாங்க தான் மாட்டிகிட்டோம்.இந்த படத்துல ஒரு காட்சில கூட எப்படி கொள்ளை அடிச்சான்னு காட்டவே இல்ல. நல்லா பயன்படுத்த வேண்டிய கிராபிக்ஸ் தொழில்நுட்பத்த லாஜிக் இல்லாம பயன்படுத்தி இருக்கானுங்க. குறிப்பா அந்த பைக் போட்டா மாறுவது மறுபடியும் பைக்கா மாறுவது முடியல...!இன்னும் நிறைய கொட்டனும் போல இருக்கு...இத்தோட கமெண்ட் முடிச்சுக்கறேன் பாஸ். எப்போதும் உங்க விமர்சனம் சூப்பர் தான் பாஸ். கலக்குங்க!!!
ReplyDeleteநன்றி Pratheep...படத்துல அமீர்கான் என்பதாலே நான் ரொம்ப எதிர்பார்த்தேன் பாஸ்.. வேற யாரவது நடிச்சு இருந்தா கூட இத்தனை எதிர்பார்ப்பு இருந்து இருக்காது..
Deleteஅமீர்கான் இது மாதிரியான மோசமான் திரைகதையில நடிச்சது தான் ஏமாற்றமே... :-)
இப்போதான் என்னுடைய விமர்சனத்தை போஸ்ட் செய்துவிட்டு இங்கு வந்து பார்த்த போது அதே கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.. :)
ReplyDeleteசேம் டேஸ்ட் பாஸ்..உங்களுக்கும் எனக்கும்...
Deleteநேற்று முதல் காட்சி பிரியாணி ஃபர்ஸ்ட் ஆஃப் ஏதோ ஓடுச்சு ஸெகென்ட் ஆஃப் தான் சூப்பர்
ReplyDeleteஅதை முடிச்சுட்டு இரவு காட்சி தூம் 3 அதன் இரண்டாம் பாகத்தோடு சற்று குறைவு தான் அனைத்து விசயங்களும் ஆனா ஒரு சில இடம் ரசிக்க வைக்கிறது
நன்றி சக்கர கட்டி...அமீர்கான் மட்டுமே அந்த சில இடங்களில் ரசிக்க வைக்கிறார்...மத்தபடி படம் மொக்கை தான்..
Delete/பிரேம்ஜியை எப்படி நாம் எல்லா வெங்கட் படங்களிலும் சகித்து கொள்கிறோமோ, அதே போல் தூம் படங்களில் நாம் உதய் சோப்ரா என்கிற கோமாளியை நாம் சகித்து கொள்ள தான் வேண்டும். இந்த முறை அந்த கோமாளியின் கடி ரொம்பவே ஜாஸ்தி./
ReplyDeleteஆமாம். உதய்யின் மொக்கை ஜோக்குகளுக்கு பக்கத்தில் இருந்த வடக்கத்தி இளைஞன் வாய்விட்டு சிரித்து என் பொறுமையை சோதித்தான். முடியல...!!
வாங்க சிவா...இங்க விழுந்து விழுந்து சிரிச்சாங்க...ஹிந்திகாரங்க காமெடி சென்ஸ்ல தீயை வச்சு தான் கொழுத்தனும்.. :-)
Deleteஇந்தப் படம் now you see me மற்றும் the prestige படங்களின் அட்டைக் காப்பி. ஹிந்திக்காரர்கள் ஹாலிவுட்டை காப்பியடிப்பதில் சளைத்தவர்களல்ல என்பதை இன்னொரு முறை நிரூபிக்கும் படம். ஆமிர் கான் நடிப்பிற்க்காக பார்க்கலாம் என்று தோன்றுகிறது.
ReplyDeleteநன்றி காரிகன்...the prestige படத்தின் அப்படமான் தழுவல் தான்...அதை சொன்னால் அமிர்கான் ட்விஸ்ட்டின் சுவாரிசியம் போய் விடும் என்பதால் விரிவாக எழுத வில்லை...
Deletenow you see me ஐ ஞாபகப் படுத்துனதால கேட்கின்றேன், அந்தப் படத்துக்கு விமர்சனம் ஏதாவது எழுதி இருக்கின்றீங்களா ராஜ்?
Deleteசுவாரஸ்ய சினிமா தகவல்கள்:
ReplyDeleteInception,The Dark Knight படங்களை இயக்கிய Christopher Nolan இன் முதல் படம் Following. முந்தைய பதிப்பில் இப்படம் வெறும் $6௦௦௦ (மூன்றரை லட்சம்) செலவில் எடுக்கப்ப்பட்டது என்று கூறியிருந்தோம். இப்பதிப்பில் எப்படி நோலன் இப்படதை இவ்வளவு குறைந்த செலவில் எடுத்தார் என்று பார்ப்போம்.
நோலன் இப்படத்தை தன் சொந்த சம்பளத்தில் எடுத்தார். அதனால் படத்தின் செலவை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்தார்.
1) படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் வேறு வேறு வேலை செய்யும் முழு நேர ஊழியர்கள். அதனால் அவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை வேலை இருப்பதால் நோலன் சனி மற்றும் ஞாயிறு மட்டுமே படப்பிடிப்பு நடத்தினார். இதனால் அவர் இந்த படத்தை முடிக்க முழுதாக ஒரு வருடம் ஆனது.
2) நோலன் இதில் 16mm கேமராவை பயன்படுத்தினார். இது மிக குறைந்த செலவில் படப்பிடிக்க கூடிய கேமரா. அதிலும் பிலிம் செலவைக் குறைக்க நடிகர்களை பலமுறை ஒத்திகை பார்க்க வைத்து படப்பிடிப்பு நடத்தினார். இதனால் ஒன்று அல்லது இரண்டு ஷாட்டிலேயே ஒவ்வொரு சீனையும் எடுத்தார்.
மேலும் படிக்க
https://www.facebook.com/hollywoodmve
நன்றி shankar..அனைத்துமே சுவாரஸ்ய சினிமா தகவல்கள்... உங்கள் வருகைக்கு மிக்க நன்றி.. :-)
Deleteராஜ்,
ReplyDeleteஇந்தியப்பொறுத்தவரையில் "நாலஞ்சு ஹிட்" கொடுத்த ஹீரோவா இருந்தா போதும், அவரை வச்சு என்ன எடுத்தாலும் பார்க்க மக்கள் தயார் :-))
கூடத்தொட்டுக்க ஊறுகாயா "மினி டிரஸில்" ஹீரோயின்கள் மட்டுமே மாறிக்கிட்டு இருப்பாங்க. இதை ஓம் ஷாந்தி ஓம் படத்துல ஷா ரூக்கானே கிண்டல் அடிச்சு காட்சியும் வச்சிருப்பார் :-))
# எந்த மொக்க இந்திப்படமா இருந்தாலும் தமிழ் டப்பிங்ல்கில் பார்த்தால் "செம காமெடியா" இருக்கும் , உதய் சோப்ரா "அண்ணே ,அண்ணினு பேசுறத கேட்டாலே சிரிப்பு பிச்சுக்கும்ல அவ்வ்.
# காத்ரினாவுக்காகவே படம் பார்க்கலாம், கண்ணுக்கு நிறைவா இருக்கும் ...ஹி...ஹி!
இதே மசாலா இந்தி திரையுலகில் தான் "தாரே சமின் பர், பான் சிங்க் தோமர்" எல்லாம் வந்து வெற்றியடையுது என்பதையும் கவனித்தால் "இந்தி ஆடியன்ஸின் தாரள மனசு புரியும்"
நம்ம ஆளுங்க இன்னும் குளிர் கண்ணாடி போட்ட ஹீரோ கோட் போட்டுக்கிட்டு "ஸ்லோமோசனில்" நடந்தாலே படம் ஹிட்டுனு பார்க்கிறவங்க அவ்வ்!
வாங்க வவ்வால்....ஹிந்தி ஆடியன்ஸ் சில நல்ல படங்களுக்கு ஆதரவு குடுத்தாலும்...நிறைய தரம்மில்லா படங்களை மெகா ஹிட் ஆக்கி விடுவார்கள்...சல்மானின் சமிப படங்கள், க்ரிஷ் போன்ற படங்களை மனதில் வைத்து அப்படி சொன்னேன்...
Deleteகாத்ரினாவுக்காக படம் பார்பது கொஞ்சம் டூ மச்...ஒரே ஒரு பாடல் மட்டுமே ஸ்கின் ஷோ...மத்தபடி படத்துல அவங்க வரவே மாட்டாங்க...
ஹிந்தி ஆடியன்ஸ் ரசனையை கம்பேர் பண்ணுனா நம்ம ஆளுங்க டேஸ்ட் உசத்தி தான்... :-)
நான் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்ள விரும்பவில்லை
ReplyDeleteஎச்சரிக்கைக்கு மிக்க நன்றி ராஜ்