சாண்டியாகோவில் வசிக்கும் எங்களுக்கு தமிழ் படங்கள் ரீலீஸ் ஆவதை வைத்து தான் பொங்கல் பண்டிகை நெருங்கி வந்து விட்டது என்கிற நினைப்பே வருகிறது. பொங்கல் போனஸாய் மாலை 6 மணி காட்சி ஜில்லாவும் இரவு 9 மணி காட்சி வீரம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. முதலில் "ஜில்லா" வின் பார்வை எப்படி என்று பார்போம். தலைவாவில் வாங்கிய சூடு இன்னும் ஆறாமல் இருந்த போதும், மோகன்லால் - விஜய் கூட்டணி, அதுவும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பு என்றதுமே நான் சற்றே அதிகம் எதிர் பார்த்து விட்டேன். நல்ல விறுவிறுப்பாய் வந்து இருக்க வேண்டிய படம் இயக்குனரின் அனுபவமின்மையால் நிறைய இடங்களில் நொண்டி அடிக்கிறது.
போலீஸ்கார்களை வெறுக்கும் ரவுடி சந்தர்பவசத்தால் போலீஸ் ஆனால் என்ன ஆகும் என்பதே ஜில்லா ஒன் லைனர். ஷிவன் (மோகன்லால்) மதுரை ஆட்டி படைக்கும் பெரிய தாதா. அவரிடம் வேலை பார்க்கும் ஷக்தியின் (விஜய்) அப்பாவை போலீஸ் ஒருவன் கொன்றுவிடுகிறான். அதனால் போலீஸ் மீதும் காக்கி சட்டை மீதும் தீராத வெறுப்பில் ஷிவனின் வளர்ப்பு மகனாய் வளர்கிறார் ஷக்தி. ஒரு சந்தர்பத்தில் தனக்கு போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் ஒரு ஆள் வேண்டுமென்று ஷிவா முடிவெடுக்க, போலீஸசை வெறுக்கும் ஷக்தி போலீஸ் (!!) ஆக்கப்படுகிறார். வேண்டா வெறுப்பாய் வேலைக்கு சேரும் ஷக்தி, ஊரில் ஷிவா செய்யும் தப்புகளை கண்டும் காணமல் இருக்கிறார்.
ஒரு விபத்தில் நிறைய உயிர் இழப்புகளை பார்க்கும் ஷக்தி மனம் திருந்தி நல்ல போலீஸாய் மாறி ஷிவனின் ரவடி சாம்ராஜியத்தை எதிர்க்க புறபடுகிறார். நல்லவனாய் மாறவே மாட்டேன் என்று அடம் பிடிக்கும் லாலேட்டனை, விஜய் எப்படி திருத்துகிறார் என்பதை நீட்டி முழக்கி சொல்லி இருக்கிறார் இயக்குனர். படத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் மோகன்லால் தான். மனிதர் தாதா கதாபாத்திரத்தில் நின்று ஆடி உள்ளார். வாயில் சுருட்டுடன் "ஷிவன்னா யாரு தெரியுமான்னு" பஞ்ச் பேசும் காட்சிகள் எல்லாம் அட்டகாசம். விஜயுடன் சவால் விடும் காட்சிகளிலும், வில்லத்தனம் காட்டும் காட்சிகளிலும் தான் தேர்ந்த நடிகர் என்பதை நிருபித்து இருக்கிறார். விஜய் - லாலேட்டனை காம்போ காட்சிகளில் விஜயை இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் அசல்டாய் தோற்கடித்து விடுகிறார்.
விஜய் படத்துக்கு படம் இளமையாய் ஆகி கொண்டே போகிறார். முந்திய படத்தை விட இன்னும் பிட்டாய் மற்றும் ஸ்மார்டாய் தெரிகிறார். நடிப்பு மற்றும் மானரிசத்தில் போக்கிரி ஸ்டைலை பாலோ செய்து உள்ளார். போக்கிரி படத்துக்கு செட் ஆனா அவரின் அசால்ட் மானரிசம் இந்த கதைக்கு நிச்சயம் செட் ஆகவில்லை. சீரியஸாய் வசனம் பேச வேண்டிய காட்சிகளில் வில்லுப்பாட்டு பாட்டுகாரன் போல் பல்லை கடித்து வாயில் முனுமுப்பதை தவிர்த்து இருக்கலாம். அவரை சொல்லி குற்றம் இல்லை, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும். விஜய் செமையா ஸ்கோர் செய்யும் டான்ஸ் ஏரியாவில் இந்த முறையும் கலக்கி உள்ளார்.
காஜல் அகர்வால் மேக்அப் மேன்க்கு சம்பள பாக்கி போல் தெரிகிறது. பார்பவர்களை பழி வாங்கி உள்ளார்கள். பார்பதற்க்கு கர்ண கொடூரமாய் இருக்கிறார். கதை சொல்லும் போதே உங்களுக்கு 4 சாங், அஞ்சு சீன் என்று சொல்லி தான் கால்ஷீட் வாங்குவார்கள் போல். ஒரு சீன் கூட எக்ஸ்ட்ரா இல்லை. ஹீரோ திருந்தும் காட்சியில் மட்டும் நடிக்க முயற்சி செய்து உள்ளார். மற்ற படி ஒன்றும் சொல்வதற்க்கு இல்லை. காமெடிக்கு சூரி. என்ன சிரிப்பு தான் வர மாட்டேன் என்கிறது.
படத்தில் வேண்டிய அளவு ட்விஸ்ட் உள்ளது. வலுவான கதையும் இருக்கிறது. ஆனால் திரைகதையை சுவாரிசியமாய் கொண்டு செல்வதில் இயக்குனர் சறுக்கி விட்டார். ஹீரோவின் கெத்தை காட்ட வேண்டும் என்றால்
வில்லன்னும் அதே அளவு கெத்துடன் இருக்க வேண்டும், இது மாஸ் சினிமாவின் எழுதபடாத விதி. ஆனால் இந்த படத்தில் வில்லன் யார் என்பதே கடைசி இருபது நிமிடத்தில் தான் தெரியவருகிறது. வில்லன் யார் என்கிற சஸ்பென்ஸ் தெரிந்தவுடன் வேகம் எடுப்பது போல் தெரிந்தாலும், அதன் பிறகு சப்பென்று முடிந்து விடுகிறது. இன்னொரு பெரிய குறை, லாஜிக் என்கிற வஸ்துவை நீங்கள் பூத கண்ணாடியை வைத்து தேடினாலும் கண்டு பிடிக்க முடியாது. அத்தனை லாஜிக் மீறல்கள்.
இசை இமான், பாடல்கள் எல்லாமே அட்டகாசம், பாடல்கள் காட்சியமைப்பும் செம. பின்னணி இசை சில காட்சிகளில் காதை பதம் பார்த்தாலும், நிறைய காட்சிகளில் நன்றாக இருந்தது. நீசன் திரைகதையில் இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டி இருந்தால் போக்கிரி பொங்கல் போல் வந்து இருக்கும். நல்ல நடிகர்கள், நல்ல கதை இருந்தும் சொதப்பியது இயக்குனர் மட்டுமே.
ஜில்லா - இன்னும் எடுத்து இருக்கலாம் நல்லா !!
My Rating: 6.9/10.
அப்ப 'ஜில்லா' படம், விஜய்க்கு அவரேஜ் படமா? பகிர்வுக்கு நன்றி ராஜ்.
ReplyDeletebelow அவ்ரேஜ் படம் தான் பிரசாத்... :-(
Deleteபடத்திற்கு பெரிய மைனஸ் அதன் நீளமும், விஜயின் போக்கிரித்தனமான நடிப்பும், தேவையே இல்லாத சில காட்சிகளும் வேகத்தடையாக வந்து செல்லும் பாடல்களும் தான்... இருந்தாலும் படம் ஓடுவதற்கு தேவையான அம்சங்கள் இருப்பதால் ஓடுவிடும் என்றே நினைக்கிறேன்..
ReplyDeleteசிறப்பான பதிவு ராஜ்...
உண்மை தான் நண்பா...விஜய் இன்னும் சிறப்பாக செய்து இருக்கலாம்..
Deleteபடம் தேறுமா ராஜ்?
ReplyDeleteசத்தியமா அதை மட்டும் கணிக்க முடியாது விஜய்....தலைவா கூட 100 நாள் போஸ்டர் பார்த்து உள்ளேன்.. :-) ஆனால் வீரம் இதை விட நன்றாக உள்ளது...நீங்க ஜில்லா பார்த்திட்டு உங்க கருத்தை சொல்லுங்க...
Deleteராஜ்: நான் விமர்சனங்களை கவனிச்சுப் பார்க்கும்போது உங்கள் கணிப்புதான் சரி என்று தோன்றுகிறது. அதாவது வீரம், ஜில்லாவை விட ஒரு படி மேல் என்பது! ஒரு பய வாயைத் திறந்து உண்மையைச் சொல்ல மாட்டேன்கிறானுக, சும்மா போட்டு பூசி மொழுகிறானுக! :)
ReplyDeleteவருகைக்கு நன்றி வருண்...நானும் முதலில் வந்த சில விமர்சனங்களை வைத்து தான் படம் பார்க்கவே சென்றேன்.. ஆனால் படம் என்னை கவரவில்லை... :-)
Deleteராஜ்,
ReplyDelete//போலீஸ்கார்களை வெறும் ரவுடி சந்தர்பவசத்தால் போலீஸ் ஆனால் என்ன ஆகும் என்பதே ஜில்லா ஒன் லைனர்.//
"வெறுக்கும் ரவுடி"
#//போலீஸசை வெறுக்கும் ஷக்தி போலீஸ் (!!) ஆக படுகிறார்.//
"ஆக்கப்படுகிறார்"
# // படத்தில் எனக்கு மிகவும் கதாபாத்திரம் மோகன்லால் தான். மனிதர் தாதா கதாபாத்திரத்தில் நின்று ஆடி உள்ளார். //
மிகவும் "பிடித்த" கதாப்பாத்திரம்.
#//வாயில் சுருட்டன் "ஷிவன்னா யாரு தெரியுமான்னு" //
"சுருட்டுடன்"
#// நீசன் திரைகதையில் இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டி இருந்தால் //
"நேசன்"
நல்லா எடுத்திருக்கலாம்னு ஒருப்படத்தினைப்பற்றி நினைப்பது போல் இப்படிபளிச்சுன்னு தெரியிறாப்போல பிழைகளில்லாமல் எழுதியிருக்கலாம்னு தோன்றியதால் குறிப்பிடுகிறேன்.
அப்புறம் நானும்பிழைகளுடன் தானெழுதுகிறேன், ஆனால் வராமல் இருக்கனும் என முயற்சிப்பேன்,முயற்சிக்கிறேன்!
#//காஜல் அகர்வால் மேக்அப் மேன்க்கு சம்பள பாக்கி போல் தெரிகிறது. பார்பவர்களை பழி வாங்கி உள்ளார்கள். பார்பதற்க்கு கர்ண கொடூரமாய் இருக்கிறார். //
மேக் அப் மேன் சரியாக மேக் அப் போடாமல் எல்லாம் விட்டாலும்,இயக்குனர், கேமரா மேன் ஆகியோர்,காமிரா வழியாக "ஷாட்"பார்க்கும் போது குறையினை குறிப்பிட்டு சொல்லி சரி செய்ய சொல்லிவிடுவார்கள்,திரையில் ஒருவர் சரியாக தோன்றவில்லை எனில் அதற்கு முதற்காரணம்,பொறுப்பு இயக்குனர் மற்றும் கேமராமேனின் அலட்சியமே ஆகும்.
வவ்வால் ஜீ.. நான் இந்த ரிப்ளையை பார்க்கவில்லை..
Deleteதவறுகளை சுட்டி காட்டியதருக்கு நன்றி வவ்வால் ஜி.....நிறைய எழுது பிழைகள்...தவறுக்கு வருந்துகிறேன்...
Deleteஇரண்டு படங்கள் பேக் டூ பேக் பார்த்த களைப்பு, டைப் செய்யும் போது இரவு 2 மணி...ப்ரூப் பார்த்து இருக்க வேண்டும், செய்யவில்லை....அடுத்த பதிவில் கவனமாக இருக்கிறேன்... :-)
//#// நீசன் திரைகதையில் இன்னும் கொஞ்சம் வேகத்தை கூட்டி இருந்தால் //
Delete"நேசன்"//
அந்த டைரக்டரை நீசன்னு சொல்றது தப்பில்லை வவ்வால்& ராஜ்..
வாங்க செங்கோவி....Neason (நீசன்) என்று தான் நான் நினைக்கிறன்... அது போக சிவா சக்தி என்று சொல்லலாமல் , ஷிவா ஷக்தி என்று தான் அனைவரும் உச்சரிக்கிறார்கள்....
Deleteராஜ்,
Deleteசுட்டியதை தவறாக எடுத்துக்கொள்ளாமைக்கு நன்றி!
முதலில் வரும் புதியப்பட விமர்சனம் எனில் நிறையப்பேருப்படிப்பாங்க எனவே பளிச்சுனு தெரியிறாப்போல நிறைய பிழைகள் இருக்க வேண்டாம் என்பதாலே சுட்டினேன்.
ஒரே நாளில் அடுத்தடுத்து ரெண்டுப்படமா அப்போ கண்ணக்கட்டித்தான் இருக்கும்,அவ்வ்!
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
--------------------
சீனு,
பார்க்கலைனு சொல்றாரா இல்லை எதிர்ப்பார்க்கலைனு சொல்லுறாரா ,ஒன்னியுமே பிரியலையே அவ்வ்!
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
------------------------
செங்கோவி,
படம் கெளப்பின சூடு இன்னும் அடங்கலைய அவ்வ்!
தமிழ்ப்புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!
படம் பார்க்கும் போது நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே எழுதியுள்ளீர்கள் தல...
ReplyDeleteவாங்க தல....எனக்கு படம் திருப்தி இல்ல....நீங்க ஏன் ஜில்லா பத்தி எழுதல..???
Deleteநல்ல நடுநிலையான விமர்சனம், இதையே தான் நான் எழுதினேன் விஜய் ரசிகர்கள் கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார்கள்.
ReplyDeleteவருகைக்கு நன்றி கும்மாச்சி....உங்க விமர்சனம் படம் பார்த்து விட்டு வந்த பிறகு தான் படித்தேன்...கமெண்ட்ஸும் படித்தேன்....வளராத விசில் அடிச்சான் குஞ்சுகள் இருக்க தான் செய்கிறார்கள்...ஜஸ்ட் இக்னோர் பண்ணி விடுங்கள்... :-)
Deleteவிமர்சனம் சூப்பர் ஜி.. ரெண்டு வரியை என் பதிவுக்காக சுட்டு விட்டேன்.. :)
ReplyDeleteNice review.yday saw veeram it was ultimate mass entertainer by ajith baring few hiccups.
ReplyDeleteGoing to see Jilla by tomorrow.
அண்ணா,
ReplyDeleteஜில்லா இன்னும் பாக்கலீங்கண்ணா..!! போலாம்னு ப்ளான்லாம் போட்டு வச்சு, கடைசில போயிட்டு வந்தவய்ங்க நிலைமையப் பாத்து போக வேணாம்னு ஒத்தி வச்சாச்சி, இருந்தாலும் விஜய் வர்ற ஒருசில மாஸ் சீன்களைப் பாக்கறதுக்காச்சும் போகனும்.
நல்ல நடுநிலையான விமர்சனம் தல..!! :)