கெட்ட அரசியல்வாதியை பழி வாங்க புறப்படும் சராசரி காமன்மேன் சந்திக்கும் பிரச்சனைகள் தான் "இவன் வேற மாதிரி". கெடுதல் செய்யும் அரசியல்வாதியை கடத்தி கொண்டு போய் அவர்களுக்கு பாடம் புகட்டுவது தமிழ் சினிமாவிற்க்கு பழைய கள் என்றாலும், அதையே புதிய பாட்டிலில் அடைத்து தர முயற்சி செய்து உள்ளார் இயக்குனர் எம் சரவணன். சிட்டிசன் படத்தில் அஜித் அத்திப்பட்டிகாகவும், சமுராய் படத்தில் விக்ரம் தன் காதலி கவிதாவிற்காக செய்த கடத்தல் பணியை போன்றே, விக்ரம் பிரபு சட்ட கல்லூரியில் குழப்பம் விளைவித்த சட்ட அமைச்சரின் தம்பியை கடத்தி நீதியை நிலைநாட்டுகிறார்.
தமிழ் நாட்டிற்கு பழக்கமான சட்ட கல்லூரி கலவரத்துடன் படம் ஆரம்பிகிறது. கலவரத்தை தூண்டி விட்டது சட்ட அமைச்சர். போலீஸ் வேடிக்கை பார்க்க நடந்த கலவரத்தில் 3 மாணவர்கள் கொல்ல படுகிறார்கள். அதை செய்தியில் பார்த்த குணசேகரன் (விக்ரம் பிரபு) ஆத்திரம் தாங்காமல் அமைச்சரை பழி வாங்க புறப்படுகிறார். அதற்கு அவர் தேர்ந்தெடுத்து வழி, 15 நாள் பரோலில் வந்த அமைச்சரின் தம்பியை (ஈஸ்வரன்) கடத்தி கொண்டு போய் அமைச்சரை சிக்கலில் மாட்டி விடுவது தான். குணசேகரன் எதிர்பார்த்தது போலவே அமைச்சரின் பதவி பறி போகிறது. பிறகு ஈஸ்வரனை ரீலீஸ் செய்கிறார். தன் அண்ணனின் பதவியை பறித்த விக்ரம் பிரபுவை தேடி கண்டுபிடித்து பழி வாங்க புறபடுகிறார், ஈஸ்வரன் விக்ரம் பிரபுவை கண்டுபிடித்து பழி வாங்கினாரா என்பது தான் மீதி கதை.
எம் சரவணனின் "எங்கேயும் எப்போதும்" எனக்கு மிகவும் பிடித்த படம். இரண்டு ட்ராக்கில் செல்லும் சாதாரண காதல் கதையை செம த்ரில்லர் போல் சொல்லி இருப்பார். பார்வையாளர்களை இறுதி காட்சியில் சீட்டின் நுனியில் கொண்டு வந்து விடுவார். ஆனால் பக்கா த்ரில்லர் ப்ளாட்டில் கோட்டை விட்டு விட்டார் என்றே நான் சொல்வேன். "தடையற தற்க்க" போல் பக்கா அக்ஷன் த்ரில்லர் மாதிரி வந்து இருக்க வேண்டிய படம், எளிதாக யூகிக்கக்கூடிய திரைக்கதை, பழக்க பட்ட கிளிஷேக்கள் என்று நிறைய இடங்களில் நொண்டி அடிக்கிறது. காதல் காட்சிகளில் மட்டுமே எங்கேயும் எப்போதும் சரவணன் தெரிகிறார். மற்ற காட்சிகளில் அவரின் ஸ்டைல் மிஸ்ஸிங்.
இது வரை மிர்ச்சி சிவா மட்டுமே "நோ எக்ஸ்பிரஷன்" நடிகர் என்று நினைத்து இருந்தேன். ஆனால் விக்ரம் பிரபு வாசன் ஐ கேர் விளம்பரம் போல் "நான் இருக்கிறேன்" என்று சொல்கிறார். படம் முழுக்க ஒரே முகபாவனைகைகள், முடியல பா. கும்கி யானை இவரை விட சிறப்பாக நடித்து இருந்தது, முதல் படம் என்பதால் ஓகே. ஆனால் இதில், முதல் படத்தை விட மோசமாக நடித்து உள்ளார் விக்ரம் பிரபு. அக்ஷன் காட்சிகளில் நன்றாக செய்து உள்ளார், ஆனால் ரொமான்ஸ், எமோஷனல் காட்சிகளில் தான் நன்றாக சொதப்பி உள்ளார்.
எங்கேயும் எப்போதும் படத்தில் வந்தது போன்றே இதிலும் செம க்யூட் கதாநாயகி சுரபி. ஒரு சதவிதம் கூட ஆபாசம் இல்லாமல், செம க்யூடாய் ஹீரோயின் கதாபாத்திரத்தை வடிவைமைத்து மீண்டும் தனது ரசனையை நிருபித்து உள்ளார் சரவணன். ஹீரோவின் நண்பன் கதாபாத்திரத்துக்கு காமெடியன் வைக்க வாய்ப்பு இருந்தும், வைக்காமல் கதையில் அதித நம்பிக்கை வைத்த இயக்குனரை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் ஹீரோ தேர்வில் இன்னும் கொஞ்சம் மென கெட்டு இருக்கலாம் என்று தோன்றுகிறது. அக்ஷன் காட்சிகளில் ஒளிப்பதிவு அட்டகாசம். பாடல்கள் ஓகே ரகம். இன்னும் கொஞ்சம் மென கெட்டு இருந்தால், இந்த வருடத்தின் பக்கா அக்ஷன் த்ரில்லராக வந்து இருக்க கூடும். அடுத்த படத்துல பார்த்துக்கலாம் சரவணன்.
My Rating: 6.8/10.
இவன் வேற மாதிரி - ஒன்னும் புதுசா இல்ல.
My Rating: 6.8/10.
இவன் வேற மாதிரி - ஒன்னும் புதுசா இல்ல.
கரெக்ட் தான் ராஜ்.. இது ஒரு பக்கா ஆக்சன் படமாக வந்திருக்க வேண்டியது,,, ஆனால் ஏனோ கொஞ்சம் ஜவ்வாக இழுத்து சாதாரணபடமாக ஆக்கிவிட்டார்கள்.
ReplyDeleteவாங்க Manimaran....ரொம்பவே எதிர்பார்த்து விட்டேன்... :(
Deleteசுமாரான பெர்பாமன்ஸ் என்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை. மினிஸ்டராக வருபவரிடம் குறைந்தபட்ச மிடுக்கு கூட இல்லை. நாயகியும் முகபாவம் மட்டுமே லேசான ஆறுதல். கட்டிமுடிக்கப்படாத கட்டிடம்தான் கதையின் ஹீரோ. அது போல திரைக்கதையும் அரைகுறையாகத்தான் அலைபாய்கிறது.
ReplyDeleteஉண்மை தான் சிவா...வில்லன் கேரக்டரை இன்னும் கெத்தாக காமிச்சு இருக்கலாம் என்றே எனக்கும் தோன்றியது...
Deleteலேட்டா விமர்சனம் குடுத்தாலும், பக்காவா குடுத்திங்க ராஜ். படத்துல சுவாரசியம் மிஸ்ஸிங்.பாட்டு வரும் போது உட்கார முடியல, எந்த விதமான எதிர்பார்ப்பு இல்லாம படம் பாத்தா கொஞ்சம் ஓகே. இந்த வாரம் வர போற தூம் - 3, பிரியாணி, என்றென்றும் புன்னகை படங்கள் நால இந்த படம் நிச்சயம் அவுட். தூம் -3 யே எல்லா வசூலையும் அள்ளிட்டு போக போது. பிரியாணி தான் கொஞ்சம் டவுட்டா இருக்கு. அடுத்து தூம்-3 பாத்தா எழுதிடுங்க பாஸ்.
ReplyDeleteஉலக சினிமா விமர்சனகளுக்கு பேஸ்புக் இன் இந்த பக்கத்தை அணுகவும்.
ReplyDeleteஇதில் மிகவும் வித்தியாசமான திரைப்படங்கள் மட்டும் இடம் பெறும்..
https://www.facebook.com/hollywoodmve
My Posted Movies in this Page:
1) The Prestige (2006)
2) City of god (2002)
3) 11:14 (2003)
4) Run lola run (1998)
5) 3-Iron (2004)
6) Buried (2010)
7) Eternal Sunshine of the spotless mind (2004)
Mr.Nobody (2009)
9) The Chaser (2008)
10)The Thieves (2012)
11)Source Code (2011)
12)The Croods (2013)
13)Inception (2010)
14)Timecrimes (2007)
15)Rope (1948)
15)Groundhog day (1993)
16)Dial M for murder (1954)
17)The Terminal (2004)
18)Reservoir Dogs (1992)
19)Fight Club (1999)
20)Memento (2001)
21)A Beautiful Mind (2001)
22)Pulp fiction (1994)
23)The Shawshank Redemption (1994)
24)Children of Heaven (1998)
25)The way home(2002)
26)50 first dates (2004)
27)12 monkeys (1995)
28)The Curious Case of Benjamin Button (2008)
29)New World (2013)
30)Disconnect (2012)
31)Life is beautiful (1997)
32)The Dark Knight Rises (2012)
33)Memories of Murder (2003)
34)The Time Traveler's wife (2009)
35)Premonition(2007)
Like this page and get good hollywood movies updates in facebook itself.
https://www.facebook.com/hollywoodmve
அண்ணா,
ReplyDeleteவழக்கம்போல இந்த தமிழ்ப்படத்தயும் நீங்க முதல்ல பாத்து வாழ வச்சுட்டீங்க.. :) நான் இன்னும் பாக்கல. :( படம் பாத்துட்டு வந்த ஃப்ரண்ட்ஸ்லாம் ஹீரோயின் சூப்பர்ங்கறாய்ங்க. அதுக்காண்டியாச்சும் பாக்கனும்.
//இது வரை மிர்ச்சி சிவா மட்டுமே "நோ எக்ஸ்பிரஷன்" நடிகர் என்று நினைத்து இருந்தேன். ஆனால் விக்ரம் பிரபு வாசன் ஐ கேர் விளம்பரம் போல் "நான் இருக்கிறேன்" என்று சொல்கிறார்.//
செம்ம ஓட்டு-ங்ணா..!! :D
உண்மையில் இன்று மதியம் இந்த படம் பார்க்க போகலாம் என்று இருந்தேன் .என் நண்பனும் படம் ஓகே என்று சொன்னான்.11.30 வரை இந்த நிலைமை.11.35 நான் உங்கள் ப்ளாக் படிக்கிறேன்.மதியம் படம் பார்க்கும் எண்ணம் போய் விட்டது.
ReplyDeleteNice boss...
ReplyDeleteஒரு ஹாலிவுட் படம், ஃபர்ஸ்ட் சீன்ல ஒருத்தர் உயரமான மாடியிலருந்து office table-லருந்து
ReplyDeleteகுதிச்சுடரார். please tell me the name of the film?
உண்மை தான்.படத்தை இன்னும் நன்றாக எடுத்து இருக்கலாம்.ஜில்லா பார்த்த பிறகு இந்தப் படத்தைப் பார்த்ததாலோ என்னவோ படம் எனக்குப் பிடித்திருந்தது
ReplyDelete