Friday, November 22, 2013

இரண்டாம் உலகம் (2013) - சொதப்பல் செல்வா !!

இரண்டு உலகத்தில் பாரல்லாக நடக்கும் பேண்டஸி கதை தான் "இரண்டாம் உலகம்" என்று படத்தின் ட்ரைலர் பார்த்தவுடனே புரிந்து விட்டது. ட்ரைலர் உடன் நிறுத்தி இருக்க வேண்டும். செல்வா என்கிற சினிமா வெறியன் மீது நம்பிக்கை வைத்து, படம் பார்க்க சென்ற எங்களை இந்த அளவு வதைத்து இருக்க வேண்டாம். சாண்டியாகோவில் ரீலீஸ் ஆகும் அணைத்து தமிழ் படங்களையும் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும் என்கிற கொள்கை படி, வீக் டே என்று கூட பாராமல் இன்று படத்துக்கு சென்ற எங்களுக்கு இது மாதிரியான தண்டனை  கிடைத்து இருக்க கூடாது. 

செல்வாவிடம் “நீங்கள் இதுவரை எடுத்த படங்களில் ஒன்றை மொத்தமாக அழிக்க வேண்டுமென்று என்று சொன்னால் எந்தப் படத்தை அழிப்பீர்கள்” என்று ஒரு பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விக்கு சற்றும் தாமதிக்காமல் “ஆயிரத்தில் ஒருவன்” என்று சொன்னார். ஆனால் இனி மேல் அதே கேள்வியை இப்பொழுது கேட்டால், அவரது பதில் "இரண்டாம் உலகம்" என்று தான் வரும். செல்வாவின் கேரியரில் அவருக்கு அழிக்க முடியாத கெட்ட பேரை இந்த ஒரு படம் சம்பாரித்து குடுத்து விடும் என்று நான் நம்புகிறேன். மிஷ்கினுக்கு முகமுடி போல, செல்வாவுக்கு "இரண்டாம் உலகம்".


இரண்டு உலகம். இரண்டிலும் ஆர்யா - அனுஷ்கா ஜோடி. நிஜ உலகத்தில் வாழும் ரம்யா (அனுஷ்கா) டாக்டர். மதுவை (ஆர்யா) பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ஆர்யா முதலில் மது வேண்டாம் என்று சொல்கிறார், பிறகு ஓகே சொல்கிறார். பிறகு ரம்யா தனக்கு மது வேண்டாம் என்று சொல்கிறார். பிறகு ஓகே சொல்கிறார். படிக்கும் போதே தலை சுற்றுகிறதா ? படத்தில் இன்னும் பயங்கர குழப்பமாக இருக்கும். செல்வாவின் இத்தனை வருட படங்களிலே இது போன்ற மொக்கை காதல் எபிசோட்டை பார்த்து இருக்க முடியாது. 

பேண்டஸி உலகத்தில் யாருக்கும் தான் அடிமை இல்லை என்று சொல்லிகொள்ளும் வீர (!) பெண் வர்ணா (அனுஷ்கா). இவர் மீது மோகம் கொள்கிறார் அதே உலகத்தில் வாழும் ஆர்யா. கவனிக்க மோகம் தான், காதல் அல்ல. இந்த உலகத்தில் காதல், வெக்கம் என்றால் என்னவென்று யாருக்கும் தெரியாது. இந்த உலகத்தில் ராஜா வேறு இருக்கிறார். கடவுளும் வாழ்கிறார். சந்தர்ப்ப வசத்தால், ஆர்யா-அனுஷ்கா திருமணம் நடக்கிறது. ஆர்யா பிடிக்காமல் அனுஷ்கா விபரித முடிவு ஒன்றை எடுக்கிறார். அதே நேரத்தில் நிஜ உலகிலும் விபரிதம் ஒன்று நடக்கிறது. அது என்ன விபரிதம் என்று அறிந்துகொள்ள உங்களிடம் அசாத்திய பொறுமை இருந்தால், தியேட்டரில் போய் பாருங்கள். அப்படி பொறுமை இல்லையென்றால் படத்தை பார்க்காமல் இருப்பதே நன்று.


இன்று இரண்டாம் உலகம் படத்திருக்கு போகும் முன்பு, செல்வாவின் ஆனந்த விகடன் பேட்டியை பார்த்துவிட்டு தான் சென்றேன். அவரின் பேச்சில் தான் சினிமாவை காக்க வந்த கடவுள் போலவும், தமிழ் ரசிகர்களுக்கு ரசனையே இல்லை என்பது போல் தோன்றும். ஆனால் உண்மையில் தமிழ் ரசிகர்களுக்கு ரசனை இருக்கிறதோ இல்லையோ, சகிப்புத்தன்மை ரொம்பவே ஜாஸ்தி. இது மாதிரி மெண்டல் தனமான படங்களை எல்லாம் சகித்து கொள்கிறார்களே. இந்த காவியத்தை முழுசாய் பார்த்த அனைவருக்கும் செல்வா வீடு வீடாய் சென்று, கையை பிடித்து நன்றி சொல்ல வேண்டும்.

ஆர்யா, செல்வா சொன்னதை அப்படியே கேட்டு நடித்து இருக்கிறார். அனுஷ்காவும் அதையே செய்து இருக்கிறார். இருவரும் இயக்குனர் மீது அதித நம்பிக்கை வைத்து, அவர் சொன்னதை அப்படியே செய்து இருக்கிறார்கள். ஆனால் இது போன்ற பலவீனமான கதையில், நடிகர்கள் என்ன தான் குட்டிகரணம் அடித்தாலும் எடுபட்டு இருக்காது. இது போன்ற செயற்கை தனமாக காட்சிகள் கொண்டு எந்த படமும் வந்தது இல்லை, இனி மேலும் வருமா என்று எனக்கு சந்தேகமே. 


ஆர்யா, அனுஷ்கா தவிர்த்து மற்ற நடிகர்களின் தேர்வில் பெரிய கோட்டை விட்டு உள்ளார் செல்வா. பேண்டஸி உலகில் வரும் கதாபாத்திரங்கள் அனைவருமே ஹிந்தி டப்பிங் நாடகங்களில் வருவது போல் வந்து செல்கிறார்கள். காட்சியமைப்பை பற்றி சொல்லவே வேண்டாம். படுமோசமாய் அமைக்க பட்டு இருக்கிறது. வசனங்கள், ஸ்கூல் டிராமாவில் கூட இதை விட சிறப்பாய் எழுதி இருப்பார்கள். கிராபிக்ஸ் காட்சிகளுக்கு நிறைய உழைத்து இருக்கிறார்கள். சரியாக சொன்னால் ஆயிரத்தில் ஒருவனை விட நன்றாக இருந்தது.

படத்தின் ஒரே ஆறுதல் பின்னணி இசை மட்டுமே. ட்ரைலரில் வரும் பின்னணி இசையை தான் படம் முழுக்க தவழ விட்டு இருக்கிறார் அனிருத். பாடல்கள், மெல்ல மெல்ல செத்து கொண்டிருக்கும் போது, கழுத்தில் ஏறி மிதிப்பது போல் இருக்கிறது. ஹாரிஸ் சார், அந்த 12B டியூன்னை எப்ப தான் விடுவீங்களோ ? பேண்டஸி உலகத்தை நம் கண் முன்னே கொண்டு வர மிகவும் மெனக்கட்டு இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. விஷுவல்ஸ் அனைத்துமே நன்றாக உள்ளது. வலுவில்லாத திரைக்கதை, மொக்கை காட்சிகளை கொண்டதால், இது செல்வாவின் வொர்ஸ்ட் மூவி என்று உறுதியாக சொல்லலாம்.

இரண்டாம் உலகம் - சொதப்பல் செல்வா !!
My Rating: 4.0/10.

சமிபத்தில் எழுதியது : வில்லா (2013)


25 comments:

  1. Replies
    1. $60 டாலர் செலவு செஞ்சு பார்த்த நாங்க தான் கிருஷ்ணா ரொம்ப பாவம்..இது மாதிரி எந்த படத்துக்கும் நான் ஏமாந்தது இல்ல... :(:(

      Delete
  2. Hi Raj,
    I read your review and came to know that you are in Santiago now.
    I Need some information about Santiago (Chile).
    If possible can you please send your email ID to my personal email ID (android4guru@gmail.com) ??
    I will write the details in email.
    Thanks!!

    ReplyDelete
  3. இவர் இனி மூடிக் கொண்டிருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.
    இயக்குனர்கள் தங்கள் பவுசை2 அல்லது 3 படங்களிலேயே தெரிந்துக் கொள்ள வேண்டும்.

    http://asokarajanandaraj.blogspot.in/2013/11/blog-post_22.html

    உங்களுக்கும் நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்...நானும் அவரின் பார்வையை படித்தேன்...

      Delete
  4. நல்லா இல்லைன்னாலும் படம் பார்ப்பது நமது கடமை ஆயிற்றே தல.......

    ReplyDelete
    Replies
    1. படத்தை காசு குடுத்து பார்த்து என்னோட கடமையை நான் செஞ்சுட்டேன் தல...என்னோட சக்திக்கு மீறி செலவு செஞ்சுட்டேன்.. :):)

      Delete
  5. இந்த நேரத்தில் பதிவ நண்பர் பிரதீப் எழுதிய செல்வராகவன் பற்றிய பதிவை படித்தீர்களா? ஏன்னா பதிவு ? இவர் p-fool recommendation பற்றி தெரியுமா? பாவம் படம் வரும் முன் இவர் அதீத எதிர்பார்ப்பில் ஏதாவது சொல்லிவிடுகிறார்.ஆனால் இவர் எதிர் பார்க்கும் படங்கள் ஒன்று கூட தேறுவது கிடையாது.இவர் இந்த படம் பற்றி என்ன எழுதுகிறார் என்று பார்க்கணும்..
    --

    ReplyDelete
    Replies
    1. உள்ளேன் அய்யா :-)

      Delete
    2. படித்தேன் விஜய்..இன்னும் சரியாக சொன்னால் அவரின் பதிவை படித்தவுடன் தான் செல்வா படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்கிற எண்ணமே எனக்கு வந்தது. அது வரை இந்த படத்தை ஸ்கிப் செய்து விட வேண்டும் என்று தான் நான் நினைத்து இருந்தேன்.
      பிரதீப்க்கு ஒரு வேளை படம் பிடித்து இருக்கலாம்...ஆனா எனக்கும் அவருக்கும் ஒரே மாதிரியான் ரசனை தான்...பார்போம்.. :-)

      Delete
    3. @Baby ஆனந்தன்...தல அஞ்சு பேரை convince பண்ணி, வீக் டேல 7 டிகிரி குளிர்ல 30 மைல் டிரைவ் பண்ணி போய், $60 டாலரை செலவு செஞ்ச வெறுப்பு தல....நேத்து நைட் செம கடுப்பு. விடுங்க நம்ம தனியா பேசுவோம்... :-)

      Delete
  6. ராஜ், எனக்கு இந்தப் படம் பிடித்திருந்தது. கண்டிப்பாக ஒரு சாமானியனை திருப்தி படுத்தும் எந்த விஷயமும் இல்லையென்றாலும், உலக சினிமாவை ரசிக்கும் (நேசிக்கும் ) உங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவை நான் எதிர் பார்க்கவில்லை. ஆயிரத்தில் ஒருவன் நிச்சயம் மறக்கப் பட வேண்டிய படம் தான். ஒரு "half-baked" attempt. ஆனால் இந்தப் படத்தில் ஒரு நல்ல கற்பனை கதையை சொல்லியிருப்பதாய் எனக்குப் பட்டது. மே பி கொஞ்ச நாள் கழித்து பார்த்திருந்தால் பிடித்திருக்குமோ.. அதீத எதிர்பார்ப்பு தான் ஏமாற்றத்தின் காரணமோ?

    ReplyDelete
    Replies
    1. @ஆவி தல, எனக்கு படத்தின் மீது எந்த எதிர்பார்ப்பும் இல்ல. செல்வாவை பற்றிய ஒரு பதிவை படித்தவுடன் தான் படம் பார்க்கவே கிளம்பினேன்... :-)
      உலக படங்களை விரும்பி பார்ப்பவன் தான்.. ஆனா அந்த படம் என்னுள்ளே 1% ஆவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நல்ல அனுபவத்தை குடுக்க வேண்டும். ஆனால் இந்த படம் எனக்கு எரிச்சலை தான் குடுத்தது. ஆ.ஓ னை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்பதால் செல்வா அதே மக்களுக்கு தண்டனை குடுக்க வேண்டும் என்று தான் இந்த படத்தை எடுத்தாய் எனக்கு தோன்றியது... :-)

      Delete
  7. வொய் ப்ளட் சேம் ப்ளட்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சக்கர கட்டி... உங்க விமர்சனம் படித்தேன்...நிறைய இடங்களில் ஒத்து போகிறேன்..

      Delete
  8. உங்களோட கருத்தும் என்னோட கருத்தும் என்ன ஒரு முரண் :D , இந்த வாட்டியும் மிஸ் ரொம்ப லெங்க்த் ஆக ஆச்சே தல , சரிவுடுங்க நான் நாளைக்கு போறேன் திரும்ப :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க தல...உங்க பதிவுல வந்து பேசுறேன்... :-)

      Delete
    2. இந்த படத்துக்கு 4 ரேடிங்க் ரொம்ப ஓவர், Here are my thoughts after watching the movie,

      1. ஏன் ஆண்டவா என்ன இந்த உலகத்துல பொறக்க வச்ச ?
      2. சாமி ஐஸ குத்‌திங்ஸ்.....
      3. வீட்ல நடக்குற குறியீடுகளை மதிக்கணும்.
      4. Atleast one line ரிவ்யூ பாத்துட்டு படத்துக்கு போகனும்

      Delete
  9. அவசரப்பட்டுவிட்டேன் நண்பரே, உங்கள் review-க்கு பின் படம் பார்ப்பது பற்றி முடிவு செய்திருக்க வேண்டும், ஆனால் செல்வாவின் மீது கொண்ட நம்பிக்கையினால் 21 தேதி டிக்கெட் பதிவு செய்து விட்டேன். எனக்கும் ப்ளாக் எழுத ஆசை ஏற்பட்டு உள்ளது, இப்படம் பார்த்து விட்டு எனது review-வை ப்ளாக்-இல் எழுதலாம் என்று நினைத்தேன். என்ன செய்வது தமிழன் trailer-ஐ பார்த்து ஏமாந்து கொண்டிருக்கிறான் (என்னையும் சேர்த்து). படம் பார்த்து என்னுடைய முதல் பதிவை பதிய விரும்புகிறேன். மேலும் இனிமேல் உங்கள் உங்கள் review-பார்க்காமல் படம் செல்ல கூடாதென்று முடிவு செய்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க Pratheep, நானும் யாரவது ரிவியூ படித்து விட்டு படம் பார்க்க சென்று இருக்க வேண்டும். தவற விட்டு விட்டேன். :-(
      ப்ளாக் எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது ரொம்ப நல்லது பாஸ்..நான் உங்களுக்கு தனி மெயில் அனுப்புகிறேன். என்னால் முடிந்த உதவிகளை உங்களுக்கு செய்கிறேன். :-)

      Delete
  10. நிச்சயமாக சொதப்பலான திரைக்கதையும், வலுவில்லாத கதையும்தான் இறந்தான் உலகத்தின் தோல்விக்கு காரணமாக இருக்ககூடும்..இனிமேலாவது தன் பாணியை மாற்றிக்கொள்வாரா செல்வராகவன் ..?

    ReplyDelete
  11. உலக சினிமாவின் விமர்சனம், Trailer, டவுன்லோட் லிங்க், rating இவை அனைத்தும் ஒரே இடத்தில் தமிழில் கிடைக்கிறது.

    https://www.facebook.com/pages/Hollywood-Movies/174422536006819

    My Posted Movies in this Page:

    1) The Prestige (2006)
    2) City of god (2002)
    3) 11:14 (2003)
    4) Run lola run (1998)
    5) 3-Iron (2004)
    6) Buried (2010)
    7) Eternal Sunshine of the spotless mind (2004)
    8)Mr.Nobody (2009)
    9) The Chaser (2008)
    10)The Thieves (2012)
    11)Source Code (2011)
    12)The Croods (2013)
    13)Inception (2010)
    14)Timecrimes (2007)
    15)Rope (1948)
    15)Groundhog day (1993)
    16)Dial M for murder (1954)
    17)The Terminal (2004)
    18)Reservoir Dogs (1992)
    19)Fight Club (1999)
    20)Memento (2001)
    21)A Beautiful Mind (2001)
    22)Pulp fiction (1994)
    23)The Shawshank Redemption (1994)
    24)Children of Heaven (1998)
    25)The way home(2002)
    26)50 first dates (2004)
    27)12 monkeys (1995)
    28)The Curious Case of Benjamin Button (2008)
    29)New World (2013)
    30)Disconnect (2012)
    31)Life is beautiful (1997)
    32)The Dark Knight Rises (2012)
    33)Memories of Murder (2003)
    34)The Time Traveler's wife (2009)

    ReplyDelete