ரஜினி என்கிற மாபெரும் நடிகரை மட்டுமே நம்பி மோஷன் காப்ச்சர் தொழில்நுட்பத்தை இந்திய சினிமாவில் அறிமுக படுத்தி இருக்கிறார்கள். இது போன்ற புது தொழில்நுட்பங்களை (ஆரோ 3D)கமல் மட்டுமே அறிமுக படுத்தி வந்துள்ளார். ரஜினிக்கு இதுவரை ஒரு புது தொழில்நுட்பத்தில் முதல் முறையாக அறிமுக படுத்த வாய்ப்பு இல்லாமலே போனது, என்னை போன்ற ரஜினி வெறியர்களுக்கு பெரிய குறையாகவே இருந்து வந்தது. இனி மேல் அந்த கவலை இல்லை. 3டி மோஷன் காப்ச்சர் டெக்னாலஜி என்கிற தொழில்நுட்பத்தை இந்தியாவிற்க்கே அறிமுக படுத்தியது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் என்று காலரை தூக்கி விட்டு சொல்லி கொள்ளலாம்.
2009ம் ஆண்டில் வெளியான "அவதார்" மற்றும் 2011ம் ஆண்டில் வெளியான "அட்வஞ்சர்ஸ் ஆஃப் டின் டின்" போன்ற படங்களை உருவாக்க பயன்படுத்தப்பட அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் உருவாக்கப்பட்ட படம் தான் கோச்சடையான். "அவதார்" "டின் டின்" படங்களை விட கோச்சடையானை உருவாக்குவதில் சிக்கல் அதிகம். பாண்டோரா கிரகத்தில் வாழும் "நாவியையோ" அல்லது டின் டின் கதாபாத்திரத்தையோ யாரும் பார்த்தது இல்லை, அதன் உடல் மொழியை எப்படி இருக்கும் என்று யாருக்குமே தெரியாது. நாவி இப்படி தான் நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நாவி எப்படி நடந்தாலும் மக்கள் ஏற்று கொள்வார்கள். ஆனால் ரஜினி எப்படி நடப்பார், எப்படி ஓடுவார், எப்படி சிரிப்பார் என்று , ரஜினியின் அணைத்து உடல்மொழியும் தமிழ் மக்களுக்கு அத்துபடி. இந்த சவாலை திறம்பட சாமாளித்து, நிஜ ரஜினியை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி உள்ளார்கள் பட குழுவினர்கள். நல்ல தொழில்நுட்பத்துடன் சிறந்த கதை மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை, உலக தரமான இசை என்று அணைத்தும் சரியான விகிதத்தில் சேர்ந்து விஷுவல் விருந்து படைத்தது இருக்கும் சரித்திர சாகசம் தான் கோச்சடையான்.
ஒற்றை வரியில் தந்தையை கொன்றவர்களை பழி வாங்கும் கதை என்று சொல்லி விட முடியாது. விறு விறு திரைக்கதை முலம் இந்த சாதாரண கதையை அற்புதமாய் செதுக்கி மற்றுமொரு ரஜினி மாஸ் படத்தை நமக்கு வழங்கி உள்ளார் செளந்தர்யா மற்றும் கே.ஸ் ரவிக்குமார் கூட்டணி. இது போன்ற விறுவிறுப்பான திரைகதை கடந்த இருபது ஆண்டுகளில் ரஜினிக்கு அமையவில்லை என்றே நான் சொல்வேன். இது போன்ற எக்ஸ்பிரஸ் வேக கதை கடைசியாய் சுரேஷ் கிருஷ்ணா பாட்ஷாவில் வழங்கி ரஜினி ரசிகர்களை திருப்தி படுத்தினார். அதன் பிறகு இப்பொழுது கோச்சடையான். பரம திருப்தி.
கோட்டையபட்டினம் என்கிற தேசத்து மன்னன் ரிஷிகோடங்கன் (நாசர்). அந்த நாட்டில் தலைமை படைத்தளபதியாக இருப்பவர் கோச்சடையான் (ரஜினி). இவருக்கு ராணா, சேனா என இரு மகன்கள். கோச்சடையான் நல்லவன் யாருக்கும் அஞ்சா மாபெரும் வீரன். அதனால் நாட்டு மக்கள் அவர் மேல் அளவு கடந்த அன்பு வைக்கின்றனர். இது நாசருக்கு பிடிக்கவில்லை. ஆகையால் கோச்சடையானை எப்படியாவது அழிக்க வேண்டுமென்று முயற்சிக்கிறார். சதி செய்து கோச்சடையான்னை அழித்தும் விடுகிறார். தன் தந்தையை கொன்ற நாசரை எப்படி ராணா பழிக்கு பழி வாங்குகிறார் என்பதை எக்ஸ்பிரஸ் வேக திரைகதையில் விடை சொல்லி இருக்கிறார் கே.ஸ்.
முதல் இருபது நிமிடங்கள் படத்தோடு ஓட்டுவது கொஞ்சம் சிரமம் தான். மோஷன் காப்ச்சர் டெக்னாலஜிக்கு நம் கண்கள் பழக எடுத்து கொள்ளும் நேரம் தான் இது. கண்கள் பழகியவுடன் திரைக்கதை வேகம் எடுக்கிறது. சிறிது கூட தொய்வு ஏற்படாமல் இறுதி வரை டெம்போவை தக்க வைத்த இயக்குனர் செளந்தர்யாவிருக்கு பெரிய சபாஷ். கோச்சடையான், ராணா, சேனா என மூன்று கேரக்டரில் ரஜினி கலக்குகிறார். இவரது உடல் மொழி, ஸ்டைல்கள் படத்திற்கு பெரிய பலம். கோச்சடையான் ரஜினி ஆடும் சிவதாண்டவம் ரசிகர்களை கைதட்ட வைக்கிறது. ரஜினி பேசும் வசனங்கள், தத்துவங்களாக அனல் கக்குகின்றன. தீபிகா படுகோனேவை முதல் பாதியில் ரசிக்க முடியவில்லை. இருந்தாலும் இடைவேளைக்கு பிறகு ஸ்கோர் பண்ணுகிறார். மற்ற நடிகர்கள் தேர்வும் கன கச்சிதம். நாகேஷ்க்கு உடல்மொழியை செய்தவர் ரமேஷ்கண்ணா. மிகவும் நன்றாக செய்து உள்ளார். ஷோபனா, ருக்மணி, சண்முகராஜன் ஆகியோரின் கேரக்டர்களும் அம்சமாக உள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில், வைரமுத்து – வாலியின் வரிகள், கே.எஸ்.ரவிக்குமாரின் கதை, வசனம், ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு, ஆர்.மாதேஷின் கிரியேட்டிவ், ஆண்டனியின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் செளந்தர்யா பிரமாண்டமாக ஜெயித்திருக்கிறார்!
கோச்சடையான் (2014) - தாறுமாறு !!!
My Rating : 8.8
படம் வரும் முன்பே எல்லோரும் நிராகரிக்க தயாராய் இருந்த நிலையில் படம் ரிலீஸ் தள்ளி போய் ஏக கிண்டலுக்கு ஆளான படம்.ஒரு வழியாய் வந்த பின் அதே நெகடிவ் விமர்சனங்கள் தான் இருக்க போகின்றன என்று கொட்டாவி விட்டபடி சுவாரஸ்யம் இல்லாமல் பதிவுகளில் போனால் ஆச்சர்யம்.படம் சூப்பர் என்று.ரஜினி உடல் நிலை நன்றாக இருந்திருந்தால் இந்த படம் முழு நீள படமாகவே வந்து தெலுங்கில் ஒரு ரணதீரா போல் கோச்சடையான் இருந்திருக்கும் போல .மேலும் பாட்ஷாவுக்கு நிகராக எல்லாராலும் கொண்டாடும் படமாகவும் வந்திருக்க வேண்டியது.இங்கே குறிப்பிட வேண்டியவர் கே.எஸ்.ரவிக்குமார்.
ReplyDelete--
உண்மை தான் விஜய்... நல்ல கதை, சுவாரிசியமான திரைக்கதை தோற்பதே இல்லை...
Deleteபடத்திருக்கு எதிர்பார்ப்பு இல்லாமல் போனது கூட ஒரு விதத்தில் நல்லது தான்..
தல உங்க விமர்சனம் படிச்சதும் எனக்கும் விமர்சனம் எழுதனும்னு கை பரபரக்குது no matter what i liked this movie very much
ReplyDeleteநன்றி தல...நீங்களுக்கு எழுதுங்க.. :)
DeleteRaj: Thanks for the review. I hear mixed report about the "crowd" for this Rajni movie as the fans were feared and less enthusiastic. As you skipped that part I wonder how big the crowd was?
ReplyDeleteவாங்க வருண்... கூட்டம் கொஞ்சம் குறைவு தான். லாங் வீக் எண்டு என்பதால், முதல் 3 நாட்களுக்கு தினமும் 5 காட்சிகள் ஒட்டினார்கள். அதனால் கூட கூட்டம் வராமல் போய் இருக்கலாம். ஞாயறு அன்று செம கூட்டம்... :-)
Deleteதலைவரே, டிக்கெட் போட்டிருக்கேன், படத்துல கிராபிக்ஸ் நல்லா இருக்கோ இல்லையோ, ஒரு புதிய முயற்சியின் அடித்தளமாய் தலைவர் வெச்சு எடுத்துட்டாங்க. படம் நாளைக்கு தான் பாக்க போறேன், எல்லாரும் கிராபிக்ஸா குறை சொல்றாங்க. இந்த புதிய முயற்சிய நம்ம ஆளுங்க நாலு வார்த்த பாராட்டி சொன்ன தான் என்ன :)
ReplyDeleteவிடுங்க Pratheep...குறை சொல்றவங்க சொல்லிகிட்டே தான் இருப்பாங்க.நல்ல கதை, செம விறுவிறுப்பான திரைக்கதை கண்டிப்பா வெற்றி பெரும் என்பது மறுபடியும் நிரூபணம் ஆகி இருக்கிறது.. கிராபிக்ஸ் பெரிய குறையாக எனக்கு தெரியவில்லை.
Delete//நாவி இப்படி தான் நடக்கும் என்று யாருக்கும் தெரியாது. நாவி எப்படி நடந்தாலும் மக்கள் ஏற்று கொள்வார்கள். //
ReplyDeleteஇதையே தான் நானும் சொல்லியிருக்கேன்.. :) :)
வாங்க ஆவி... :-)
Delete//நாகேஷ்க்கு உடல்மொழியை செய்தவர் ரமேஷ்கண்ணா. // இது புதிய தகவல்.. அருமையாக செய்திருக்கிறார்..
ReplyDeleteகுரல் குடுத்தவர் "நாகேஷ் கிருஷ்ணமூர்த்தி" என்று விகடனில் எழுதி இருக்கிறார்கள். உடல் மொழி பற்றிய விபரம் BBC தமிழ் தளத்தில் இருந்து பெற்றேன்.
Deleteபல நாட்கள் கழித்து இப்பொழுதுதான் ஒவ்வொரு பதிவாக வாசித்து வருகிறேன் தல... தீவிர ரஜினி ரசிகனுக்கு தீவிர ரஜினி வெறியனான நீங்கள் எழுதியிருக்கும் விமர்சனத்தைப் படிக்கும் பொழுதே விசிலடிக்க வேண்டும் என்று தோன்கிறது. கிராபிக்ஸில் கொஞ்சம் அதிருப்தி தான் என்றாலும், படம் ஏமாற்றவே இல்லை. ருத்ரதாண்டவத்தை விடுங்கள், ஷோபனாவிற்கு இணையாக தலைவர் ஆடிய பரதம் தான் எனக்குப் பிடித்த ஹைலைட்!
ReplyDeleteவாங்க தல...ரொம்ப நாளா ஆளை பார்க்க முடியல.. :-)
Deleteமறுபடியும் எப்ப பதிவு எழுத ஆரம்பிப்பீங்க :-)