Thursday, April 17, 2014

மேஜிக் நம்பர் 272 -ஐ பிஜேபியால் தொட முடியுமா ..?? கருத்துக்கணிப்பு முடிவுகள்.


இந்திய திருநாட்டின் தேர்தல் களம் சுடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. மேஜிக் நம்பரான 272 ஐ தொட்டு வெற்றி கனியை பறிக்க போவது, மோடி தலைமையிலான பி.ஜே.பி (NDA) கூட்டணியா இல்ல ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் (UPA) கூட்டணியா என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஜெயிக்க போவது மோடி தலைமையிலான அணி தான் என்பதை பெருன்பான்மையான மக்கள் முடிவு செய்து விட்டார்கள். ஆனால் பி.ஜே.பி கூட்டணியால் 272 ஐ தாண்ட முடியுமா இல்லையா என்பதை அலசுவது தான் இந்த பதிவின் நோக்கம். 

தேசிய கட்சிகளில் பி.ஜே.பி மட்டுமே பிரதம மந்திரி வேட்பாளரை தேர்தல் தொடங்குவதருக்கு 8 மாதங்களுக்கு முன்பே அறிவித்து, தேர்தல் வேளைகளில் இறங்கி விட்டது. காங்கிரஸ் கட்சி தன் பிரதம மந்திரி வேட்பாளரை வெளிப்படையாக அறிவிக்காதருக்கு தோல்வி பயம் தான் காரணம்  என்பதை யாரும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.  "இது வரை காங்கிரஸ் பிரதம மந்திரி வேட்பாளரை அறிவித்ததே இல்லை" என்ற விளக்கத்தை சப்பைக்கட்டு போல் தான் பார்க்க முடிகிறது. இது காங்கிரஸ் காட்சிக்கு விழுந்த முதல் அடி.


அடுத்த அதி முக்கிய அடி, காங்கிரஸுக்கு கூட்டணி அமைப்பதில் விழுந்தது. இந்தியாவில் தேசிய கட்சிகள் தான் ஆட்சியை பிடிக்கும் என்றாலும், அதற்கு மாநில கட்சிகளின் சப்போர்ட் நிச்சியம் தேவை. யாரும் எதிர்பாரா வண்ணம் எந்த மாநில காட்சியும் காங்கிரசை சீந்தாமல் போனது யாரும் எதிர்பாராது. 2009 லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி மேஜிக் நம்பரான 272 ஐ தாண்டுவதற்க்கு பெரிதும் உதவி செய்தது கூட்டணி கட்சிகள் தான். மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ் (19 MP), மு.காவின் தி.மு,க (18 MP) மற்றும் ஒய்எஸ்ஆர் ஒன்று பட்ட ஆந்திராவில் பெற்று தந்த 33 MP சீட் தான் காங்கிரஸ் (UPA) கூட்டணி இரண்டாவது முறை ஆட்சியில் அமர உதவி புரிந்தது. இந்த முறை (2014) மேற்கு வங்காளத்தில் மம்தா கை கழுவி விட, மு.கா இதயத்தில் கூட இடம் இல்லை என்று கையை விரிக்க. பெரிதும் நம்பிய தெலுங்கான ராஷ்ட்ரிய சமிதியும் நம்பிக்கை துரோகம் செய்து விட, வேறு வழியே இல்லாமல் அஜித் சிங்கின் ராஷ்டிரீய லோக் தள மற்றும் சரத் பாவரின் NCP (தேசியவாத காங்கிரஸ் கட்சி) மட்டுமே நம்பி களத்தில் இறங்கி உள்ளது. 

2009 ஆண்டு பி.ஜே.பி சொதப்ப முக்கிய காரணம் கூட்டணி தான். சென்ற முறை நிதிஷ்குமாரின் JD(U) தவிர்த்து பலமான கட்சிகள் எதுவும் NDA) கூட்டணியில் சேர வில்லை. சென்ற முறை செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இந்த முறை வழுவான கூட்டணி மற்றும் மிக மிக வழுவான பிரதம மந்திரி வேட்பாளரை கொண்டு களம் இறங்கி உள்ளது. வழுவான வேட்பாளார் மட்டும் போதாது என்று, மிக ஆக்ரோஷமாக பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது. "இந்தியா ஒளிர்கிறது" "இந்தியா தேய்கிறது" போன்ற காமெடி விளம்பரங்களை விட்டு, அந்த அந்த மாநிலங்களில் உள்ள லோக்கல் பிரச்சனைகளை முன்னிடுத்து பிரச்சாரம் செய்து வருகிறது. இத்தகையை பிரச்சாரத்தின் பலனை பி.ஜே.பி நிச்சியமாக MP சீட்ஸ் முலம் அறுவடை செய்யும் என்றே நான் நம்புகிறேன். தேர்தலில் பி.ஜே.பியின் கூட்டணியின் இலக்கான 272 ஐ தொட உதவி புரியும் முக்கிய மாநிலங்களை பற்றி இப்பொழுது பார்போம்.

பீகார் & ஜார்கண்ட் (54) சீட்ஸ்:
     17 வருடம் கூட்டணியில் இருந்த JD(U)வை மோடி பிரதம மந்திரி வேட்பாளார்  பிரச்சனையில் கழட்டி விட்டு, ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சியுடன் சேர்ந்து தேர்தல் களம் காணுகிறது. பாஸ்வான் நம்ம ஊர் ராமதாஸ் போல், எந்த கட்சி வெற்றி பெறுவது  போல் தெரிந்தாலும், போய் ஒட்டி கொள்வார். 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் இருந்தவர், இன்று பி.ஜே.பியுடன் ஒட்டி கொண்டு உள்ளார். இவருக்கு மாநிலத்தில் பெரிய வாக்கு வங்கி இல்லை என்றாலும், தலித் மக்களிடையே நல்ல செல்வாக்கு உள்ளது. பத்து வருடம் ஆட்சியில் இருக்கும் நிதிஷ்குமாரின் JD(U)மீது ஏற்பட்டு இருக்கும் அதிருப்தி ஓட்டுகளையும், மோடி அலையும் சேர்த்து 
பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் முலம் எடுக்க பட்ட கருத்துக்கணிப்பு விபரம்:

பீகார் - 40
ஜார்கண்ட்-14
குஜராத் (26) சீட்ஸ்:
     என்ன தான் குஜராத் அளவுக்கு அதிகமாக காம்ப்ளான் குடித்து வளர்ந்து விட்டது, இல்லை அது இன்னும் முளைக்கவே இல்லை என்று இணைய போராளிகள் கூப்பாடு போட்டாலும், அந்த ஊர் மக்களுக்கு மோடி தான் பிடித்து இருக்கிறது, மீண்டும் மீண்டும் பி.ஜே.பியை தான் அவர்கள் தங்களை ஆளா இதுவரை தேர்ந்தெடுத்து உள்ளார்கள், இனிமேலும் தேர்ந்தெடுப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்ல. சென்ற லோக்சபா தேர்தலில் 11 சீட்களை இழந்து சிறிய தேகத்தை சந்தித்தாலும். தங்கள் ஊர் முதல்வர் பிரதம மந்திரி வேட்பாளார் என்பதாலும் இந்த முறை சிறு குறை கூட சொல்ல முடியாத படி முழு வெற்றியை தேடி தருவார்கள் என்று நம்புவோம் ஆக. பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள் முலம் எடுக்க பட்ட கருத்துக்கணிப்பு விபரம்:


  
கர்நாடகா (26) சீட்ஸ்:
  பிஜேபி இந்த முறை நல்ல சரிவை  சந்திக்க போகும் மாநிலம் இது தான் என்பதில் எந்த ஆச்சிரியமும் இல்லை. சென்ற சட்டசபை தேர்தலில் எடியூரப்பாவை இழந்து, தோல்வியை தழுவிய காரணத்தால், இந்த முறை அவரை மீண்டும் ஆட்டத்தில் சேர்த்து உள்ளார்கள். எடியூரப்பாவின் வருகை மற்றும் மோடி அலை எத்தனை தொகுதியை பெற்று தரும் என்று பொறுதிருந்து தான் பார்க்க வேண்டும். கருத்துக்கணிப்பு விபரம்:

கர்நாடகா (26)


மத்திய பிரதேசம் & சத்தீஸ்கர் (40) சீட்ஸ்:
  பிஜேபி ஆளும் மாநிலங்கள். நடந்து முடிந்த சட்டசபை தேர்தல்களில் விஸ்வரூப வெற்றியை பிஜேபிக்கு தேடி தந்த மாநிலங்கள். சக்திவாய்ந்த லோக்கல் தலைவர்கள் செளகான் & ராமன் சிங் இந்த முறையும் ஏமாற்றாமல் நல்ல வெற்றியை தேடி தருவார்கள் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்கிறது.
MP
CHAT
  
  மகாராஷ்டிரா: (48) சீட்ஸ்:
  இரண்டாவது பெரிய மாநிலம். நீண்ட காலமாய் ஆண்டு வரும் ஆளும் காங்கிரஸ் எதிரான உணர்வுகளை ஓட்டாக மற்ற மோடி மற்றும் சிவசேனா அரும்பாடு படுகிறது. மும்பை மற்றும் புனேவில் ஆம் ஆத்மி சிறிது ஓட்டை பிரிக்கலாம். கொங்கன் மற்றும் விதர்பாவில் சிவசேனா மற்றும் பிஜேபி  முறையே நன்றாக செய்வார்கள் என்று நம்புகிறேன். கருத்துக்கணிப்பு முடிவுகளும் அதயே சொல்கிறது.

மகாராஷ்டிரா-48
  ராஜஸ்தான்:  (25) சீட்ஸ்:

 நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜேபி கிளீன் ஸ்வீப் செய்த மாநிலம். சென்ற முறைக்கும் இந்த முறைக்கும் மிக பெரிய சீட் வித்தியாசம் இருக்கும் என்று கருத்துக்கணிப்பு சொல்கிறது.



 மேலே உள்ள மொத்த தொகுதிகளை வைத்து பார்க்கும் போது பிஜேபி கூட்டணி 140/219 இடங்களை பிடிக்கும் என்று எதிர்பார்கலாம். மேஜிக் நம்பரான 272 டைதொடுவார்களா இல்லையா என்பதையும் உ.பி,மேற்கு வங்கம்,  தமிழ்நாடு பற்றிய விரிவான பார்வையை அடுத்து பகுதியில் பார்போம்.


2 comments:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  2. மிக விரிவான அலசல்.... அடுத்த பதிவை இன்னும் காணோமே...!!!?

    ReplyDelete