ஸ்பைடர் மேன் படங்கள் ஏற்கனவே முன்று பாகங்களாக வெளி வந்த பொழுதிலும், அது எல்லாம் செல்லாது...செல்லாது, ரொம்ப சுமாரா இருக்கு, எல்லாத்தையும் அழி, முதல இருந்தது ஸ்பைடர் மேன் சீரீஸ் எடுப்போம்ன்னு கிளம்புனாங்க சோனி கம்பெனி. இந்த முறை ஸ்பைடர் மேன் சீரீஸ் டைரக்ட் செய்ய அவங்க செலக்ட் செய்த ஆளு "மார்க் வெப்" (Mark Webb). இவரு இதுக்கு முன்னாடி பெருசா எந்த பெரிய பட்ஜெட் படங்களும் எடுத்தது கிடையாது. (500) Days of Summer அப்படிங்கிற ரொமானஸ் படத்தை மட்டும் தான் சொல்லிக்கிற மாதிரி எடுத்து இருந்தார். அவர் மேல நம்பிக்கை வைச்சு சோனி நிறுவனம் அவருக்கு இந்த வாய்ப்பை குடுத்தாங்க. குடுத்த வாய்ப்பை ரொம்பவே நல்லா பயன்படுத்தி இருக்காரு வெப். படு மொக்கையான, தூங்கி வழிஞ்ச பேட்மேன் சீரீசை நோலன் ரீபூட் (Reboot) பண்ணுனாறு, அதுல ஒரு அர்த்தம் இருந்திச்சு. ஆனா ஸ்பைடர் மேன் சீரீஸ் முத முனு பாகத்ததிலும் நல்லா சம்பாரிச்ச அப்புறமும் நாங்க ஸ்பைடர் மேன் சீரீஸ்யை ரீபூட் பண்ணுவோம்ன்னு சோனி சொன்னது என்னால் ஏத்துக்க முடியல. சரி விடுங்க, அவங்க படத்தை எடுத்துட்டாங்க, நம்ம கடமை படத்தை பார்கிறது, கடமையை மட்டும் சரியா செய்வோம்..
படத்தோட தீம் பழைய "ஸ்பைடர் மேன்" படத்தோட தீம் தான். ஹீரோ, ஹீரோயின் எல்லாருமே புதுசு. ஹீரோ பீட்டர் பார்க்கர் சிறுவனா இருக்கும் போது அவரோட அப்பா, அம்மா அவரை விட்டுட்டு போயிறாங்க. எங்க போனாங்கன்னு அடுத்த பாகத்தில் சொல்லுவாங்கன்னு நினைக்கிறன். ஏன் போனாங்கன்னு இந்த பாகத்தில் சொல்லுறாங்க. ஹீரோ பீட்டர் தன்னோட அத்தை, மாமா கூட வளருகிறார். பெரியவன் ஆனதும் தன்னோட அப்பா, அம்மா ஏன் தன்னை விட்டுட்டு போனாங்கன்னு தேடி போகும் போது அவர் அப்பா கண்டு பிடிச்ச பார்முலா ஒன்னு இவருக்கு தெரியவருது. அதோட நூல் பிடிச்சு போறப்ப ஆஸ்கார்ப் (Oscorp) என்கிற ஆராச்சி நிறுவனத்தில் தன்னோட அப்பா வேலை செஞ்சாருன்னு தெரியவருது. ஆஸ்கார்ப் (Oscorp) நிறுவனம் பழைய ஸ்பைடர் மேன் -பார்ட்-1 ல வரும் அதே நிறுவனம் தான்.
அங்க பீட்டர் கர்ட் கான்னர்ஸ் (Curt Connors) என்கிற தன் அப்பாவோட பழைய நண்பர் மற்றும் தற்போதிய விஞ்ஞானியை சந்திக்கிறார். அவருக்கு ஒரு கை இல்லை. அவர் ஒரு ஆராய்ச்சி செய்கிறார். அதாவது பல்லிக்கெல்லாம் வால் அறுந்தால் மீண்டும் தானாகவே வளரும் அல்லவா அது போல மனிதர்களுக்கு ஏதாவது உறுப்பு சிதைந்து விட்டால் அதை மீண்டும் வளர வைக்கும் ஆராச்சி தான் அது. அந்த ஆராச்சி கூடத்தில் இருக்கும் அறிய வகை சிலந்தி ஒன்று பீட்டரை கடித்து விடுகிறது. சாதா ஹீரோ இப்பொழுது சூப்பர் ஹீரோ ஆகி விடுகிறார். சிலந்தி மாதிரி செவுத்துல ஓட்டுறது, வேகமா ஓடுறது போன்ற பாதி சக்தி தான் அந்த சிலந்தி கடி முலமா வருது. கையில இருந்தது போற சிலந்தி வலையை ஹீரோ "Web Shooter" என்ற கருவி முலம் உருவாக்கி கொள்கிறான். இப்ப முழு ஸ்பைடர் மேன் ரெடி. ஹீரோ ரெடி..... வில்லன், ஹீரோயின் எல்லாம் ரெடி ஆக வேண்டாமா..??? இதுக்கு நடுவுல நமக்கு ஹீரோயின் பத்தின அறிமுகம் வேற குடுக்கிறாங்க. ஹீரோயின் பழைய மேரி ஜேன் கிடையாது. காமிக்ஸ் கதையில வர க்வென் ஸ்டேஸி (Gwen Stacy) தான் ஹீரோயின். இவங்க ஸ்பைடர் மேன் கூட ஒரே காலேஜ்ல படிக்ககிறாங்க.
பீட்டர்ரோட மாமா முதல் பாகத்துல வர மாதிரியே ஒரு கொள்ளைகாரனால் கொலை செய்ய படுகிறார். அந்த கொலை பீட்டர் கண்ணு முன்னாலே நடக்கிறது. அதை பீட்டர் தடுக்க தவறி விடுகிறான். ஸோ, பீட்டர்க்கு சமுக விரோதிகளை எதிர்த்து போராட காரணமும் ரெடி. இப்படியா சமுக விரோதிகளை எதிர்த்து போராடி வரும் பீட்டரை நியூயார்க் நகர போலீஸ் கேப்டன் ஜார்ஜ் ஸ்டேசி (George Stacy) தீவரமா தேடி வரார். இவரோட பொண்ணு தான் ஹீரோயின் க்வென் ஸ்டேஸி (Gwen Stacy). ஒரு ரொமாண்டிக் மாலை பொழுதில் பீட்டர் மட்டும் ஹீரோயின் ஸ்டேஸி இடையே காதல் பற்றி கொள்ள, பீட்டர் நான் தான் "ஸ்பைடர் மேன்" என்று போட்டு உடைத்து விடுகிறார். அந்த காட்சி மிகவும் அற்புதமாய் படமாக்க பட்டு இருக்கும். மெகா சீரியல் மாதிரி இழுக்காமல் டக் என்று பீட்டர் "ஸ்பைடர் மேன்" ரகசியத்தை போட்டு உடைத்தது பெரிய ஆறுதல்...
இப்ப வில்லன் எபிசோடு. கர்ட் கான்னர்ஸின் (Curt Connors) பல்லி ஆராச்சியில் வெற்றி கிட்டாமல் இருக்கிறது. பீட்டர் அவரை சந்தித்து தன் அப்பாவின் பார்முலாவை கான்னர்ஸ்யிடம் தருகிறான். அந்த பார்முலாவை எலிகளிடம் பரிசோதிக்கும் கான்னர்ஸ் எலிகளிடம் நல்ல முன்னேற்றத்தை காண்கிறார். பிறகு சந்தர்ப்ப வசத்தால் அந்த மருந்தை தன் மீதே செலுத்தி விடுகிறார். சிறிது நேரத்தில் அவரின் இழந்த கை மீண்டும் வளர்கிறது.... ஆனால் அதன் சைடு எபக்ட் ஆக கான்னர்ஸ் பாதி பல்லி, பாதி டைனோசர் மாதிரி மாறி விடுகிறார். மீண்டும் தன் பழைய நிலைக்கு போக மனம் இல்லாமல் அழிவு பாதையை தேர்வு செய்து விடுகிறார். தனது மருந்தை நியூயார்க் நகர மக்கள் அனைவரின் மீதும் செலுத்த முற்பட்டு பெரிய ப்ளான் போடுகிறார். அதை பீட்டரால் மட்டுமே தடுக்க முடியும் என்பதை பவர் ஸ்டார் ரசிகன் கூட சொல்லி விடுவான். ஆனால் கான்னர்ஸின் அந்த முயற்சியை ஹீரோ பீட்டர் தடுக்கும் விதம் மிக பிரமாதமாய் படமாக்க பட்டு இருக்கும். அதை அனைவரும் தியேட்டரில் சென்று பார்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.
ஸ்பைடர் மேன் ஆக நடித்த "ஆண்ட்ரூ கார்பீல்ட்" மிக சரியான தேர்வு என்று நான் சொல்வேன். ஏதோ நம் பக்கத்து வீட்டு பையன் போல் இருக்கிறார். ரொம்ப நல்லா நடித்து இருந்தார். எனக்கு ரொம்பவே பிடித்து இருந்தது....
ஸ்பைடர் மேன்: A New Begining...
---------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த வருஷம் விம்பிள்டன் தொடரில் ரஃபேல் நடால் யாரும் எதிர்பாராத விதமாக ரெண்டாவது சுற்றில் 100-வது இடத்தில் உள்ள செக். குடியரசின் லூகாஸ் ரோசோல்யிடம் 7-6, 4-6, 4-6, 6-2, 4-6 என்ற செட் கணக்கில் போராடி தோற்று போனார். இது நான் மட்டுமல்ல யாருமே எதிர் பார்க்காத தோல்வி. ஸ்பெயின் புட் பால் டீம் விளையடுறதை பாலோ செஞ்சிட்டு சரியா ப்ராக்டிஸ் செய்யாது தான் அவரோட தோல்விக்கு காரணம் என்று நடால் எதிர்ப்பு கும்பல் விஷம்ம பிரசாரம் செய்யுறாங்க. நான் அந்த மேட்ச் கடைசி செட் பார்த்தேன், லூகாஸ் போட்ட ஏஸ்சை (ACE) யாராலையும் தொட்டு இருக்க முடியாது. ஏதோ அன்னைக்கு ரொம்பவே மோசமான நாள் ஆக போச்சு நடால்க்கு. அடுத்த US ஓபன்ல நடாலின் விஸ்வருபத்தை ரொம்பவே எதிர்பார்கிறேன்.....
நடாலின் விம்பிள்டன் தோல்விக்காவது ஸ்பெயின் கண்டிப்பாய் யூரோ ஜெய்க்க வேண்டும்.. இத்தாலி ஜெயித்தால் என் சோகம் இன்னும் அதிகம் ஆகும்.......பார்போம்!!!!!!!!
![]() |
| Nadal Rosol Match |
ஒரு பிரபல எழுத்தாளர் அவரு.
அவரோட பழைய குடை ஒண்ணு வேண்டாம்னு
குப்பையில் வீசி எறிஞ்சிட்டாரு.
அடுத்த நாளே, அரோட வீட்டு வாசலில
வந்து நின்னாரு பக்கத்து வீட்டுக்காரரு-
அவர் வீசி எறிஞ்ச குடையோட:
‘சார் …உங்க குடையை யாரோ எடுத்து
குப்பைத் தொட்டியிலே போட்டிருக்காங்க! இதோ உங்க குடை!
கொடுத்துட்டுப் போயிட்டாரு......
கடுப்பான எழுத்தாளர், அதக் கொண்டு போயி
ஒரு பாழுங் கிணத்துல போட்டுட்டாரு.
அடுத்த நாளே அவரோட வீட்டு வாசலில் வந்து நின்னாரு
தூர் வாருற ஆசாமி ஒருத்தரு, கையில அதே குடையோட:
‘சார்…இதோ உங்க குடை
யாரோ கிணத்துல வீசி எறிஞ்சிட்டாங்க!’
கொடுத்துட்டுப் போயிட்டாரு, ரொம்பதான் கடுப்பாகிப்
போனாரு எழுத்தாளர். ராத்திரி முழுக்க யோசிச்சாரு:
‘எப்படி இதை ஒழித்துக் கட்டுவது?’
யோசனை ஒண்ணு உதயமாச்சு! அடுத்த நாள் -
அதை ஒருத்தரிடம் ஓசி கொடுத்து விட்டாரு.
அப்புறமென்ன! அது திரும்பி வரவேயில்லை.
"இரவல் என்றும் ஒரு வழிப்பாதைதான்"!!!!!!!!!!!!!!!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------ராஜா ராஜா தான்..மம்மி மம்மி தான்:
இந்த வீடியோவை பார்த்தால் கண்டிப்பாய் உங்கனால் சிரிக்காமல் இருக்க முடியாது...







.jpg)


















