Thursday, October 31, 2013

ஆரம்பம் (2013) - மாஸ் ஒன் மேன் ஷோ !!!

சான்டியாகோவில் எந்த தமிழ் படம் ரீலீஸ் ஆனாலும், தவறாது முதல் காட்சியே அட்டென்டன்ஸ் போடும் நாங்கள், அஜித்தின் ஆரம்பத்தை மட்டும் தவற விட்டு விடுவோமா என்ன ? வழக்கம் போல் முதல் நாள் முதல் காட்சியே தியேட்டரில் ஆஜர் ஆனோம். வீக் டே என்ற போதிலும் நிறைய தமிழ் மக்களை தியேட்டரில் காண முடிந்தது. அதில் முக்காவாசி தீவிர அஜித் ரசிகர்கள், மீதி பேமலி ஆடியன்ஸ். தியேட்டர் 70% நிரம்பியது. படம் எப்படி என்று இப்பொழுது பார்போம். ஆரம்பம் படத்தின் ட்ரைலர் என்னை பெரிதாய் கவரவில்லை. அதனால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் தான் சென்றேன். எதிர்பார்ப்பு இல்லாத படங்கள் என்னை என்றுமே ஏமாற்றியது இல்லை. ஆரம்பமும் என்னை ஏமாற்றவில்லை. பில்லா -2 வில் சராசரி ரசிகனை கவர தவறிய அஜித், இதில் நின்று மங்காத்தா ஆடி உள்ளார். 


மும்பை நகரில் முன்று முக்கிய இடங்களில் வெடி குண்டு வெடிக்கிறது. குண்டும் வைத்து, அதை போலீஸ்க்கும் தகவல் குடுக்கிறார் அஷோக் (அஜித்). இதற்க்கு இடையில் கம்ப்யூட்டர் ஹேக்கரான ஆர்யாவை கடத்தி கொண்டு வந்து, அவர் மூலமாக மும்பை நகரில் இயங்கி வரும் முக்கிய டிவி சேனலான "பிளாஷ் டிவியை" ஹேக் செய்து அதன் ஒளிபரப்பை தடுத்து நிறுத்துகிறார் அஜித். அது போக ஆர்யாவை வைத்து கொண்டே சில கொலைகளை வேறு செய்கிறார். அஜித் குறிவைப்பது மகாராஷ்டிரா ஹோம் மினிஸ்டர் மகேஷ் மஞ்ச்ரேகர் சாம்ராஜியத்தை. அஜித் யார் ? அவருக்கும் ஹோம் மினிஸ்டர்ருக்கும் என்ன தொர்பு. ஏன் குண்டுவெடிப்பு, டிவி சேனல் ஹேக்கிங் மற்றும் கொலைகளை செய்கிறார் என்கிற மர்ம முடிச்சுகளை முதல் பாதியில் போட்டு, அத்தனை முடிச்சுகளையும் பக்கா ஒன் மேன் அக்ஷன் பேக்கேஜ் முலம் அவிழ்த்து இருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

ஊருக்கே பிடிக்காதா பில்லா-2 எனக்கு மிகவும் பிடித்து இருந்தது, காதல், காமெடி என்ற வழக்கமான தமிழ் சினிமா போல் இல்லாமல் வித்தியாசமான முயற்சியாய் எனக்கு தெரிந்தது. பில்லா-2 தோல்வி அஜித்தை பழைய குருடி கதவை திறடி என்பது போல் வழக்கமான் தமிழ் சினிமாவிற்குள் இழுத்து விடும் என்று நினைத்தேன். அதற்க்கு இடம் தராமல், மீண்டும் ஒரு சோதனை முயற்சியில் இறங்கிய அஜித்தை பாராட்டியே ஆக வேண்டும். தனது பலம் என்ன வென்று மிக சரியாக புரிந்துவைத்து உள்ளார். டான்ஸ், ரொமான்ஸ் என்று எந்த விஷ பரிட்சையும் செய்யாமல், மங்காத்தாவில் செய்ததை போல், தனக்கு மிக கச்சிதமாய் பொருந்திய நெகடிவ் கதாபாத்திரத்தை சரியாய் செலக்ட் செய்தது மறுபடியும் ஜெயித்து காட்டி இருக்கிறார்.


அஜித் செம ஸ்மார்டாக இருக்கிறார். அவருக்கு என்றே சில டிரேட் மார்க் மேனரிசம் உண்டு. படம் நெடுக்க கூலிங்கிளாஸ் சகிதம் தான் வலம்வருகிறார். பல காட்சிகளில் பிட்டாக தெரிகிறார். பாடல் காட்சிகளில் ரொம்பவே குண்டாய் தெரிகிறார். டான்ஸ் பற்றி ரெண்டே வார்த்தையில் சொன்னால் ஹீ..ஹீ...பஞ்ச் டயலாக் பேசாமல் மாஸ் காட்சி குடுக்க ரஜினிக்கு பிறகு அஜித் தான் என்பதை மீண்டும் நிருபித்து இருக்கிறார். நடிப்பு பற்றி சொல்ல வேண்டுமென்றால், "மேக் இட் சிம்பிள்" என்று அதிக அலட்டல் இல்லாமல், சிம்பிள் பட் பவர்புல் பெர்பார்மனஸ் வழங்கி உள்ளார். சரியாய் சொன்னால் ஒத்தை ஆளாய் படத்தை முதல் பாதியிலும் இரண்டாம் பாதியிலும் தாங்கி உள்ளார். 

ஸ்க்ரீன் முழுக்க அஜித் ராஜ்ஜியம் செய்வதால், ஆர்யா அமெரிக்க மாப்பிளை போல் வந்து செல்கிறார். செகண்ட் ஹீரோ என்று கூட சொல்ல முடியாது. ஆனால் தனக்கு குடுத்த வேலையை மிக சரியாய் செய்து இருக்கிறார். அஜித்திடம் மாட்டி முழிக்கும் காட்சிகளிலும், அங்கிருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சிகளும் செம த்ரில்லர். ஆர்யா குண்டு பாய்யாய் தாப்ஸியிடம் லவ்வை சொல்லும் காட்சிகள் தான் காமெடி காட்சிகள் என்று இயக்குனர் நினைத்து விட்டார் போல் இருக்கிறது. பாவம் இயக்குனருக்கும் காமெடிக்கும் வெகு தூரம் என்று மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது. ஆர்யா, தாப்ஸி கெமிஸ்ட்ரி சுத்தமாய் வொர்க் அவுட் ஆகவில்லை. நயன்தாரா அஜித்திற்கு உதவி புரிகிறார். அஜித் யார் தெரியுமா என்று பிளாஷ்பேக் சொல்கிறார். மற்றபடி எந்த வேலையும் இல்லை. அதுல் குல்கர்னி, கிஷோர், ராணா என்று ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம் படத்தில் காண கிடைக்கிறது. ஆனால் அஜித் என்னும் திமிங்கலம் முன்பு இவர்கள் எல்லாம் சிறு சிறு மீன்கள் போல் தான் தெரிகிறார்கள். 


பாடல்கள் செம சொதப்பல். அஜித்திருக்கு என்று வரும் போது மட்டும் எப்படி தான் யுவனுக்கு பின்னணி அமைகிறதோ தெரியவில்லை. பிரமாத படுத்தி இருக்கிறார். யுவனின் பின்னணி இசை அட்டகாசம். ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் மும்பை மிக அழகாக தெரிகிறது. இமையமலை கிளைமாக்ஸ் கன் பைட் அதகளம். ATF க்கு வழங்க பட்ட புல்லெட் ப்ரூப் ஜாக்கெட்டில் நடைபெற்ற ஊழலை பற்றி சொல்ல ஆரம்பித்து, படம் எங்கெங்கோ செல்கிறது. லாஜிக் ஓட்டை ஓசோன் மண்டல ஓட்டையை விட மிக பெரிதாக இருக்கிறது. ஆனாலும் பரபரப்பான அக்ஷன் காட்சிகள் முலம் லாஜிக் ஓட்டைகளை பற்றி அதிகம் சிந்திக்க விடாமல் படம் மிக வேகமாய் நகர்கிறது. மொத்தத்தில் கூட்ஸ் வண்டி போல் மெதுவாய் ஆரம்பிக்கும் படம், பிறகு எக்ஸ்பிரஸ் வேகத்தில் பயணம் செய்து, பிளாஷ்பேக்கில் கொஞ்சம் வேகம் குறைந்து, பிறகு சூப்பர் எக்ஸ்பிரஸ் வேகத்தில் முடிகிறது. 

சமிபத்தில் எழுதியது : New World (2013) 
ஆரம்பம் - மாஸ் ஒன் மேன் ஷோ !!!
My Rating: 7.9/10.


17 comments:

  1. சூப்பர் தல நல்லா என்ஜாய் பண்ணி பார்த்து இருக்கீங்க போல உங்க விவரிப்புலையே தெரியுது , எனக்கும் அஜித் வர அனைத்து காட்சிகள் ரெம்ப பிடிச்சது. இந்த படம் நிச்சயம் நல்ல ரெகார்ட் பிரேக் கலக்சன் அள்ளும். சொல்லிவை ரிட்டேர்ன் ஒப் ரெகார்ட் ப்றேக்கர்னு சொல்லிவை :) ;)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா வசூல் சாதனை பண்ணும் தல... எனக்கு லாஜிக் ஓட்டைகளை மீறியும், ரொம்பவே பிடிச்சு இருந்தது..

      Delete
  2. பாத்தாச்சா ராஜ்.. கிட்டத்தட்ட உங்களுக்கும் அதே கண்ணோட்டம்தான்... செம..! SWORDFISH சம்மந்தமா ஏதாவது எழுதுவீங்கன்னு எதிர்பார்த்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க Manimaran, நான் SWORDFISH படம் பார்த்தது இல்ல, அதனால் அதை பத்தி எதுவும் எழுதல....

      Delete
  3. நன்றி ராஜ் தல... பிடிங்க பூங்கொத்த...:))))))))))

    ReplyDelete
    Replies
    1. நன்றி ganesh kumar. நீங்க அஜித் பேன்னா ரொம்ப பிடிக்கும், செம படம்..

      Delete
  4. அஜித்திற்கு மட்டுமல்ல அவரது ரசிகர்களுக்கும் ஆரம்பம் தீபாவளி விருந்துதான்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ். படம் உண்மையான் தீபாவளி விருந்து தான்..

      Delete
  5. vimarsanam nalla irunthathu sir. padam parkkanum.

    ReplyDelete
  6. 'தல' தீபாவளி தான்... ரசனைக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  7. நீங்க அஜீத் FAN என்ற சந்தேகம்.ஏன் என்றால் பில்லா 2 கூட நன்றாக இருந்ததாய் சொல்லி இருக்கிறீர்கள்.உங்களுக்கு GANGSTER படங்கள் பிடிக்கும் .அஜீத் அதற்க்கு நிறைய படங்களில் அதுபோல் நடித்து செட் ஆகிவிட்டார் அதனால் தான் கேட்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ரஜினி, கமல் ரொம்ப ரொம்ப பிடிக்கும். எவ்வளவு செலவு செஞ்சாலும் ரெண்டு பேர் படத்தை மட்டும் முத நாள் பார்த்திர வேண்டும். ஒரே நடிகருக்கு ரசிகனா இருக்கிற வயசு எல்லாம் எனக்கு கடந்து போச்சு விஜய்.. :):):):)
      எல்லாம் காலேஜ் லெவலோட முடிஞ்சுது. காலேஜ் படிக்கிறப்ப காக்க காக்க பார்த்து தீவிர சூர்யா ரசிகனா கொஞ்சம் நாள் இருந்தேன். யார் படம் வந்தாலும், நல்லா இருந்தா பாராட்டுவேன், மொக்கையா இருந்தா செம ஒட்டு ஓட்டுவேன். :):)
      இப்பவும் எனக்கு பிடிச்ச முனு அஜித் படங்களில் பில்லா-2வும் ஒன்னு. அமர்க்களம், வாலி அப்புறம் பில்லா-2 மட்டுமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச அஜித் படங்கள். ஏனோ பில்லா-2 க்கு மட்டும் என்னோட ரசனை வெகுஜனங்கள் கூட ஒத்து போகல.. :(
      ஆரம்பம் கண்டிப்பா அஜித்தோட மாஸ்டர் பீஸ் கிடையாது, நிறைய குறைகள் இருக்கு, ஆனா இன்னைக்கு இருக்கிற சூழ்நிலைக்கு படம் தாறுமாறா ஓடும். சுமாரான எத்தனையோ படம் ஓடி இருக்கு. அதுல ஆரம்பமும் ஒன்னு.. :)

      Delete
  8. Nice review raj..I am a huge ajith fan.but due to fate I could not see the movie yet...after seeing Ur review feeling much on when to see the movie.

    Reg billa 2..the main reason for the failure is the action sequences..nothing creditable and a big let down climax...also billa should use his mind more than his strength but not even a single scene for it..even now I feel it would have been a get movie if its been rightly executed

    ReplyDelete
  9. சரியாத்தான் சொல்லி இருக்குண்றீர்கள்., ஆரம்பம் படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகள் இருக்கு, ஆனால் படம் செம ஸ்பீடாக ஓடுவதால், அந்த ஓட்டைக்குள் எல்லாம் வண்டி விழாமல் பறக்கின்றது, ஆகவே அந்த ஓட்டைகளால் படத்திற்கு பாதிப்பு இல்லை.

    60 வயதிலும் ஹீரோக்கள் லவ்வு லவ்வு என்று 18 வயது காலேஜ் பெண்ணுடன் லவ்விக்கொண்டு டூயட் பாடிக் கொண்டு இருக்கும் பொழுது, அஜித் அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்காமல் விட்டதற்கு நிச்சயம் பாராட்டித்தான் ஆக வேண்டும்.

    ஆர்யா அஜித்திடம் மாட்டுப் படும் விடயத்தில், அம்மா கான்சர், அப்பா கடனாளி என்றெல்லாம் புளித்துப் போன தமிழ் பட செண்டிமெண்டை பயன்படுத்தாமல் விட்டதற்கும் பாராட்டத்தான் வேண்டும்.

    ஆனால், கொளுத்த குண்டு ஆர்யாதான் அவ்வளவாக சரிவரவில்லை. கமலஹாசன் வேலை எல்லாம் ஆர்யாவிட்கு சரிவராது என்பது புரிகின்றது. கைகள் வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக லாங் ஸ்லீவ் டிஷார்ட் மட்டுமே போடுவதை பார்த்தால் சிரிப்பாக இருந்தது. மொத்தத்தில் குண்டு ஆர்யா பின்னர் ஒல்லியாக மெலிந்தான் என்கின்ற கான்சப்ட் ஐ மட்டும் தவிர்த்து இருக்கலாம்.



    அஜித், அஜித் தான். விஜய் எல்லாம் எப்பதான் கத்துக் கொல்லுவாங்களோ?

    ReplyDelete