Saturday, July 20, 2013

மரியான் (2013)- மரிச்சு போயி !!!

நான் வசிக்கும் சாண்டியாகோவில் ககிட்டத்தட்ட எல்லா வாரமும் தமிழ் அல்லது தெலுங்கு படம் ஒன்று ரீலீஸ் ஆகி விடும். இந்த வாரமும் மரியான் ரீலீஸ் ஆகி இருந்தது. படத்தை வாங்கி ரீலீஸ் செய்வது எங்களை போன்ற பொறியாளர்கள் தான். எங்கள் கம்பெனியில் பணிபுரியும் சிலர் பார்ட் டைம் பிசினஸ் மாதிரி நன்றாக இருக்கும் என்று நம்பி சில தமிழ் படங்களை விலை குடுத்து வாங்கி தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் ஏரியாவில் தியேட்டரை வாடகைக்கு எடுத்து ஓட்டுவார்கள். தமிழ் படம் என்றால் சில நூறு டாலர் லாபம் பார்ப்பார்கள். இதே ஆட்கள் தான் தெலுங்கு படத்தையும் ரீலீஸ் செய்வார்கள் தெலுங்கு படம் எவ்வளவு மொக்கையாய் இருந்தாலும் பலா பழத்தில் ஈ மொய்ப்பது  போல் கூட்டம் அம்மும். முன்று ஷோகளும் கிட்ட தட்ட புல் ஹவுஸில் தான் ஓடும். தெலுங்கு மக்களின் சினிமா வெறி உலக அறிந்ததே. ஆனால் தமிழ் படங்களுக்கு கால் வாசி அரங்கு கூட நிரம்பாதது. பரதேசி படத்தை வெறும் 10 பேர் அமர்ந்து பார்த்தோம். விஸ்வரூபம் மட்டும் முக்கால் அரங்கு நிறைந்தது. 

மற்ற முக்கிய படங்கள் ரீலீஸ் ஆனாலும் தமிழ் மக்கள் விரும்புவது "ராஜ் தமிழ்" மற்றும் "einthusan" மட்டுமே. ஆனால் நாங்கள் எந்த தமிழ் படம் வந்தாலும் போய் விடுவோம். காரணம் அவர்களுக்கு நாங்கள் ஆதரவு தராவிடில் யார் தருவார்கள் என்கிற எண்ணம் தான். அதே காரனத்திருக்கு தான் "மரியான்" படத்திற்க்கும் போனோம். தனுஷின் ராஞ்ஜனா படத்தினால் நாங்கள் ரொம்பவே நொந்து நூடுல்ஸ் ஆகி இருந்தோம். இருந்தாலும் தனுஷ் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் கூட்டனியில் படம் பார்க்கும் படியாவது இருக்கும் என்று நம்ம்ம்பி போன எங்களை படம் ரொம்ம்ம்ம்ம்பவே சோதித்து விட்டது. சாரு தன்னுடைய வலைபதிவில் (அவர் புக் எல்லாம் படிக்கிற அளவுக்கு நான் கேஞ்சு பிடிச்சு அலையவில்லை) அடிக்கடி வதை வதை என்ற ஒரு வார்த்தையை சொல்லுவார் அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை நேற்று தான் புரிந்து கொண்டேன். மரியானின் அர்த்தம் மரணம் இல்லாதவன் என்று இயக்குனர் "பரத் பாலா" சொன்னார், அது தனுஷ் கதாபாத்திரத்துக்கு வேண்டும் என்றால் பொருந்தும், ஆனால் படம் பார்க்கும் ஆடியன்ஸுக்கு பொருந்தாது.


மரியான் (தனுஷ்) மீனவ கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அவரை விரட்டி விரட்டி காதலிக்கும் காதலி பனிமலர் (பூ பார்வதி). பனிமலர் மீது காதல் வராமல் இருப்பதருகு தனுஷ் ஒரு மொக்கை காரணம் சொல்கிறார். பிறகு திடிரென்று பனிமலர் மீது காதல் கொள்கிறார். குப்பத்து வில்லன் புல்லெட் ராஜாவிற்கும் பனிமலர் மீது காதல். தமிழ் வில்லனின் அகராதியை மீறாமல் இவர் பனிமலரை ஒரு தலையாய் காதலிக்கிறார். பனிமலரின் அப்பா (!!) வில்லனிடம் வாங்கிய கடனிருக்கு அவன் பனிமலரை கேட்கிறான். பனிமலர் மீது காதலில் விழுந்த தனுஷ் அந்த கடனை அடைக்க இரண்டு வருட காண்ட்ராக்டில் சூடான் நாட்டிருக்கு வேலைக்கு செல்கிறார். செல்லும் இடத்தில் அவரை சூடான் தீவிரவாதிகள் கடத்தி விடுகிறார்கள். அங்கிருந்து தப்பித்து மீண்டும் இந்தியா வந்து பனிமலரை கரம்பிடித்தாரா இல்லையா என்பதை விருப்பம் இருந்தால் தியேட்டரில் போய் பாருங்கள், இல்லை என்றால் இரண்டு மாதங்களில் "இந்திய தொலைகாட்சியில் முதல் முறையாக" போடுவார்கள் அப்பொழுது பார்த்து கொள்ளுங்கள்.

இந்த கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது என்று சொல்கிறார்கள். தனுஷும் கதையை கேட்டவுடன் நடிக்க ஒத்துக்கொண்டு இருப்பார் என்று நினைக்கிறேன் தனுஷிருக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள படம். அவர் மட்டுமே படத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நிறைய காட்சிகளில் வெறும் உடல்மொழியில் தான் சொல்ல நினைப்பதை சொல்லி விடுகிறார். ஆனால் நல்ல உழைப்பு இப்படி வீணாய் போய் விட்டதே என்கிற கவலை வருவதை தவிர்க்க முடியவில்லை.

 3, மயக்கம் என்ன, ஆடுகளம், பொல்லாதவன் போன்ற படங்களில் தனுஷ் தான் ஒரு கிளாஸ் பெர்பார்மர் என்பதை நிருபித்து இருக்கிறார். அவரின் நடிப்பு 3, மயக்கம் என்ன போன்ற படங்களில் வீணாய் போய் உள்ளது. இந்த படமும் அந்த லிஸ்டில் கண்டிப்பாய் சேரும், சேர்ந்துவிட்டது. தனுஷ் இனியாவது நார்மல் ஆடியன்ஸுக்கு பிடிக்கும் படியான படங்களில் நடிக்க வேண்டுகிறேன். 


சூடான் காட்சிகளில் இவர் காட்டும் மேனரிசத்தை பார்க்கும் போது புதுபேட்டை படம் ஞாபகம் வருவதை தவிர்க்க முடியவில்லை. அடுத்த படத்திலாவது நார்மல் தனுஷை எதிர்பார்கிறேன். எத்தனை நாட்கள் தான் தனுஷை மெண்டல் மற்றும் சைக்கோ கதாபாத்திரங்களில் காதலியின் கழுத்து பிடித்து பல்லை கடித்து வசனம் பேசுவதை மட்டுமே பார்ப்பது. போர் அடித்து விட்டது. முடியல பாஸ்..!! தீவிரவாதிகள் ஒரு காட்சியில் தனுஷை சித்திரவதை செய்வார்கள், அந்த காட்சியில் முதுகு காட்டி ஒட்கார்ந்து இருப்பது தனுஷ் இல்ல என்று சின்ன குழந்தை கூட சொல்லி விடும். அதே போல் கிளைமாக்ஸ் காட்சியில் கடல்கரையில் தனுஷின் டூப் நடப்பது போன்ற காட்சியும் அது தனுஷ் இல்ல என்று அப்பட்டமாய் காட்டி குடுக்கும். 

ஹீரோயின் பூ பார்வதி நன்றாக நடிக்க முயற்சி செய்கிறார், தனுஷ் அளவிருக்கு இவர் என்னை ஈர்க்கவில்லை. நிறைய காட்சிகளில் இவர் பேசும் தமிழ் புரியவில்லை. புயல் அடிக்கும் போது தனுஷ் கடலுக்கு சென்று திரும்பி வரும் காட்சிகளில் இவர் பேசும் தமிழ் வசனங்களை "இங்கிலீஷ்" சப்டைட்டில் உதவியுடன் தான் புரிந்து கொள்ள முடிந்தது. தேவையில்லாத காட்சிகளில் கிளீவேஜ் காட்டியுள்ளார். இரண்டாம் பாதியில் தனுஷ் சூடானில் மாட்டி கொண்ட பிறகு கனவு காட்சிகளில் மட்டும் வந்து மொக்கை பாட்டுக்கு ஆடி விட்டு செல்கிறார். 

சூடான் தீவிரவாதிகள் தான் காமெடி இல்லாத குறையை தீர்த்து வைக்கிறார்கள். என்ன மொழி பேசுகிறார்கள் என்று கடைசி வரை புரியவேயில்லை. தமிழ்நாட்டில் இந்த வாத்து மடையர்கள் பேசுவதையாவது சப்டைட்டில் போட்டார்களா என்று யாராவது சொல்லுங்க..ப்ளீஸ். ஒன்று சுட்டு கொண்டே இருக்கிறார்கள், இல்ல பேசியே மொக்கை போடுகிறார்கள். இயக்குனர் -பரத் பாலா, இவர் தான் "வந்தே மாதரம்" விளம்பரம் எடுத்தவராம். இவருக்கு ஆடியன்சை இரண்டரை மணி நேரம் காட்டி போட வைக்கும் கலை சுத்தமாய் தெரியவில்லை. உண்மை கதையை யதார்த்தமாய் எடுப்பதா இல்ல கமெர்ஷியலாய் எடுப்தாய் என்ற குழப்பத்தில் ரொம்பவே தடுமாறி உள்ளார்.


காஸ்டிங் படு மட்டமாய் செலக்ட் செய்து உள்ளார். தனுஷின் அம்மாவாக வரும் உமா ரியாஸ், பேசும் வசனங்கள் ஒட்டவே இல்லை. நல்ல நடிகையை வீண் அடித்து இருக்கிறார். அதே போல் பார்வதியின் அப்பா (!!) வாக வரும் "சலீம் குமார்" பேசும் தமிழ்...யப்பா காதில் ஈயத்தை காச்சி ஊற்றுவது போல் இருந்தது. இவர்கள் பேசும் தமிழ் ஹிந்தி டப்பிங் சீரியல் பார்த்த எபெக்ட்டை குடுத்தது.

இசை ரஹ்மான். முதல் பாடல் மற்றும் தனுஷ் மீன் பிடிக்க கடலில் இறங்கும் போது வரும் பின்னணி இசை மட்டுமே கேட்கும் படி இருந்தது. மற்றவை எல்லாம் ரஹ்மான் இசை அமைத்த மாதிரியே தெரியவில்லை. எடிட்டிங் ரொம்பவே மட்டமாக இருந்தது. காட்சி முடியும் முன்பே, அடுத்த காட்சியின் வசனம் ஆரம்பித்து விடுகிறது. 3 படத்தில் தனுஷ் கழுத்தை அறுத்து சாகும் காட்சியில் தியேட்டரே ஆரவாரமாய் கை தட்டியது. அதே போன்ற ரெஸ்பான்ஸ் இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியிலும் காண முடிந்தது. படம் முடிந்து விட்டதே என்று.

மரியான் (2013)- மரிச்சு போயி !!! 

My Rating: 5.9/10.


12 comments:

  1. தனுஷ் இனி கமெர்சியல் படங்களில் நடிப்பது நல்லது... விமர்சனம் அருமை...

    ReplyDelete
    Replies
    1. வாங்க பாஸ். ஆடுகளம், பொல்லாதவன் மாதிரியான படங்களை குடுத்தால் கூட போதும். :):)

      Delete
  2. /"சலீம் குமார்" பேசும் தமிழ்...யப்பா காதில் ஈயத்தை காச்சி ஊற்றுவது போல் இருந்தது./

    ஹா..ஹா..சரிதான். ரகுவரன் டப்பிங் பேசுன மாதிரி இருந்துச்சி!!


    ReplyDelete
    Replies
    1. சிவா,
      எனக்கு இவர் தான் சலீம் குமார்னு படம் முடிஞ்சு விக்கிபீடியா பார்த்து தான் தெரிஞ்சுகிட்டேன். ரொம்ப ரொம்ப நல்ல நடிகர் போல் இவரு. ஆனா படத்துல இவர் பேசுன வசனங்களுக்கு எல்லாமே தியேட்டரே ஒப்பாரி வச்சுச்சு.

      Delete
  3. அவ்வளோ மொக்கயா படம். சில பதிவுகளில் ஒரு முறை பார்க்கும்படி இருப்பதாக எழுதியுள்ளர்களே ! உங்கள் இடத்தில subtitle உடன் தான் படம் வெளிவருமா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க விஜய்,
      இது வரை நான் பார்த்த வொர்ஸ்ட் மூவி லிஸ்ட்ல இந்த படத்திருக்கு நிச்சியம் இடம் உண்டு. இங்க இங்கிலீஷ் தவிர்த்து வேற எல்லா மொழி படங்களுக்கும் இங்கிலீஷ் "சப்டைட்டில்" கண்டிப்பா போடணும். சில தமிழ் படங்களுக்கு வெள்ளைகாரனும் வந்து ஒட்கார்ந்து இருப்பான். சூடான் காமெடி பாய்ஸ் பேசுற வசனங்களுக்கு மட்டும் சப்டைட்டில் போடல. சில வார்த்தைகள் இங்கிலீஷ்ல இருந்திச்சி, பலது புரியவேயில்லை. அது தான் கேட்டேன்.

      Delete
  4. //தேவையில்லாத காட்சிகளில் கிளீவேஜ் காட்டியுள்ளார்//

    தல,
    முதல் பாதில அதுவும் இல்லனா ரொம்பவே போரடிச்சுருக்கும் தல.. கொடுத்த காசுக்கு கொஞ்சமாச்சும் வொர்த்னா அது இது தான்.. ஹிஹி.. :) :)

    ReplyDelete
  5. ஆஹா.... ட்ரெயிலர் வந்த நாளில் இருந்து ரொம்பவே எதிர்பார்த்த படம், இப்பிடி ஆயிருச்சே!! தியேட்டர்லபோய் பார்க்கிற எண்ணத்தை கைவிட்டுட்டேன். பனிமலரை டிவிடில பாத்துக்கலாம் :D

    ReplyDelete
  6. படம் சுமார் தான். அதற்காக ஒரேடியாக ஒதுக்கிவிட மனம் வரவில்லை. பல நாட்கள் இந்தப் படத்திற்காக காத்திருந்தேன் :-(

    தனுஷ் தான் ஒரு அருமையான நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் (போன் சீன், சிறுத்தை சீன், ஜெகன் சாப்பாடு சீன்...)'பூ'பார்வதி பல இடங்களில் ஓவர் ஆக்டிங். லைவ் டப்பிங் செய்திருப்பார்கள் போல, மலையாள வாடை இருந்ததால் சரியாக அவர் பேசுவது புரியவில்லை (அவரது தொலைக்காட்சிப் பேட்டிகளைக் கேளுங்கள்) பத்தாத குறைக்கு மட்டமான உடை வேறு. அந்தக் கிராமத்துப் பெண்களிலேயே இவர் மட்டும் தான் "அந்த" மாதிரி உடையணிந்திருந்தார், சலீம் குமார் - "ஆதாமிண்ட மகன் அபு" என்ற மலையாளப் படத்திற்காக தேசிய விருது வாங்கிய நடிகர். மலையாளிகளுக்கு இவர் நம் வடிவேலு ரேஞ் காமெடியன். ஆனால் இந்தப் படத்தில் (தமிழில் முதல் படம்) ஏன் நடித்தார் என்று தெரியவில்லை :-( பின்னணி இசை, ஒளிப்பதிவு, தனுஷ் - பார்வதி (சில இடங்களில் நடிப்பு எல்லாம் பரத்பாலாவின் அனுபவமில்லாத இயக்கத்தால் பாழாகிவிட்டது. காணாததைக் காட்டப்போகும் உற்சாகத்தில் (லொக்கேஷன்கள், சூடான் தீவிரவாதிகள்) திரைக்கதையை செமயாகச் சொதப்பிவிட்டார். அருமையாக வந்திருக்க வேண்டிய படம், ஒன்றுமில்லாமல் போய்விட்டது...

    ReplyDelete
  7. நச் விமர்சனம்...மொக்கையான படத்திற்கும்...

    ReplyDelete
  8. படத்தின் விஸுவலிர்காக ஒரு முறை பார்க்கலாம் என்று இருந்தேன் ராஜ்.
    ஆனால் இப்பொழுது பின்னர் பார்த்துக்கொளலாம் என முடிவு செய்துவிட்டேன்.

    ReplyDelete