Saturday, November 19, 2011

போரின் கொடுரத்தை உணர்த்தும் Black Hawk Down-(2001)

இந்த இடுகையின் முலமாக நான் உங்களுக்கு அறிமுக படுத்த போகும் படம் Black Hawk Down. படம் வெளிவந்த ஆண்டு 2001. இந்த படம் சோமாலியாவில் நடந்த உள் நாட்டு போரை மையமாக கொண்டு எடுக்க பட்டு இருக்கும். நான் போரை மையபடுத்தி எத்தனையோ படங்களை பார்த்து இருந்தாலும் இந்த படம் ஏற்படுத்திய பாதிப்பை வேற எந்த படமும் எனக்குள் ஏற்படுத்தியது இல்லை.
இந்த படம் 1999 ஆம் வெளிவந்த Black Hawk Down: A Story of Modern War என்ற நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்க பட்டு இருக்கும். அந்த நாவல் 1993 ஆம் ஆண்டு சோமாலியாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுத பட்டு இருக்கும்.

எனக்கு போரின் அறிமுகம் சின்ன வயசுல நடந்துச்சு. சின்ன வயசுல DD National மட்டுமே இருந்த காலத்தில, ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிக்கு கடவுள் கிருஷ்ணர் சங்கு ஊதி போரை ஆரம்பிப்பார். பாண்டவர்கள் பக்கத்தில் இருந்து அர்ஜூனன் அம்பை விடுவர். அந்த ஒரு அம்பு பத்து அம்பா மாறி கெட்டவாங்களை போய் குத்தும். சில நேரத்துல அம்பு பக்கத்துல வந்த உடனே வில்லன் மறைஞ்சி போய்டுவார். பார்க்க நல்லா இருக்கும். நான் வளர வளர போர்ன்னா அது இல்லை, அது ரொம்ப மோசமானதுன்னு தெரிஞ்சது.
இந்தியாவில் நான் வாழும் காலத்தில் நடந்த போர்னா அது கார்கில் போர் தான். அப்புறம் கொஞ்சம் வருஷம் கழிச்சு அமெரிக்கா தனது கண்டுபிடிப்புகளை பரிசோதனை செய்ய மற்றும் பெட்ரோல் கொள்ளைக்காக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மேல போர் தொடுத்தது. அப்போ கூட போரை பற்றியும், அதன் உண்மையான பாதிப்புகளையும் நான் உணரவில்லை. இலங்கையில் நாம் ஈழமக்கள் மீது போர் தொடுக்க பட்டதே, அப்பொழுது தான் போரின் கொடுமையை நான் உணர்தேன்.

இந்த படம் நமக்கு போரின் தாகத்தை அதன் வலியை நமக்கு உணர்த்தும். போர் காட்சிகள் மிகவும் தந்துருப்பமாக படமாக்க பட்டு இருக்கும். இளகிய மனம் படைத்தவர்கள் இந்த படத்தை தவிர்ப்பது நல்லது. சரி படத்தை பற்றி பார்போம்.
ஆண்டு 1993: சோமாலியாவில் உள்நாட்டு போர் நடந்து கிட்டு இருக்கு. இப்போ சமீபத்தில் EGYPT & LIBIYA வில் நடந்துச்சே, அதே மாதிரி. எந்த ஏழை நாட்டுல உள்நாட்டு போர் அல்லது புரட்சி நடந்தாலும் அமெரிக்காவுக்கு முக்கு வேர்துடுமே. அவன் கண்டுபிடிச்சு வச்சு இருக்குற நவீன ஆயுதங்கள் பரிசோதனை பண்ண ஒரு இடம் கிடைச்சாச்சுன்னு அங்க கிளம்பிறுவான். இங்கேயும் கிளம்பி வரான். அந்த காலகட்டத்தில் நடந்த ஒரு நாள் உண்மை சம்பவமே இந்த திரைப்படம்.

போரில் மாட்டி கஷ்ட படுற சோமாலியா மக்களுக்கு U.N உணவு பொருட்களை அனுப்புறாங்க. அந்த உணவு பொருட்கள் எல்லாம் மக்களுக்கு போய் சேர விடாம பண்னுறது, உள் நாட்டு போர் நடக்க முக்கிய காரணமாக இருக்கும் தலைவன். அவன் பேரு, விடுங்க பேரா முக்கியம். இந்த படத்தை பொறுத்தவரை அவன் தான் வில்லன். அவனுக்கு ரெண்டு தளபதிகள், நம்ப இளைய தளபதி இல்லேங்க, அந்த ரெண்டு பேரும் போர் படை தளபதிகள். அந்த ரெண்டு படை தளபதிகளை பிடிச்சுட்டா போர் முடிவுக்கு வந்துடும்.
அதனால அமெரிக்கன் வீரர்கள் 123 பேர் அவங்களை பிடிக்க போறாங்க. அவங்க போற போர் ஹெலிகாப்டர் பேரு தான் Black Hawk. அந்த ரெண்டு பேரை பிடிப்பது ரொம்ப சுலபமான வேலைன்னு எல்லா வீரர்களும் நெனைச்சுக்கிட்டு அந்த மிஷன்க்கு கிளம்புவாங்க. ஆனா அவங்களுக்கு அங்க ஒரு அதிர்ச்சி காத்துக்கிட்டு இருக்கும். அமெரிக்கன் வீரர்கள் நெனச்சதுக்கு மேலையே தளபதிகள் (புரட்சி படை)கிட்டே இருந்து எதிர்ப்பு இருக்கும். 

அமெரிக்க படைகளுக்கும் சோமாலியா கிளர்ச்சி/புரட்சி படைக்கும் நடக்கும் சண்டை தான் படமே. புரட்சி படை சுமார் ஆயரம் பேர் இருப்பார்கள். புரட்சி படை ரெண்டு அமெரிக்கன் போர் ஹெலிகாப்டர்ன்னா ப்ளாக் ஹாக்யை (Black Hawk) சுட்டு விழித்தி விடுவார்கள். தப்பி பிழைத்த மீதம் இருக்கும் அமெரிக்கன் படைக்கும் புரட்சி படைக்கும் இடையே மிகவும் உக்கிரமான சண்டை நடக்கும்.
அதன் பிறகு தான் போரின் கொடுரத்தை நாம் உணர ஆரம்பிப்போம். போர் நடக்கும் அந்த இடத்தில மாட்டி கொண்ட மீதம் இருக்கும் அமெரிக்கன் வீரர்கள் UN மற்றும் NATO படையினர்களால் எப்படி மீட்க்க பட்டனர் என்பதே மிதி படம். இறுதி காட்சி வரை விறுவிறுப்பு குறையாமல் போகும் படம். 

இந்த படம் 2 ஆஸ்கார் விருதுகள் பெற்றுள்ளது. ஆக்சன் பிரியர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல விருந்து. 
பலம்:
  • படத்தில் ஹீரோ கிடையாது. அதனால் கதை ஒருவரை சுற்றி நகராது. 
  • படத்தில் காதல் கிடையாது. ஹாலிவுட் போர் படங்களில் வருவது போல் இதில் செண்டிமெண்ட் சுத்தமாக கிடையாது. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை ஆக்சன் தான். 
  • இந்த அளவு போர் காட்சிகள் தந்துருப்பமாக வேறு எந்த படத்திலும் காட்ட பட வில்லை. நீங்களே அந்த இடத்தில இருப்பது போல் உணர்வீர்கள்.· 
பலவீனம்
  • அமெரிக்கனின் பார்வையில் படம் சொல்ல பட்டு இருக்கும். சோமாலியாவில் உள்நாட்டு போர் ஏன் நடக்குது என்று சொல்ல பட்டு இருக்காது.
My Rating: 7.5/10.........


3 comments:

  1. நல்ல திரைப்படம், அருமையான மற்றும் கலக்கல் விமர்சனம்.

    ReplyDelete
  2. நீண்ட நாட்களாக கைவசம் வைத்துக்கொண்டே பார்க்காது தள்ளி போன படம்..உங்கள் விமர்சனம், படத்தை பார்க்க ஆவலை தூண்டுகிறது.நன்றி.

    ReplyDelete
  3. விமர்சனம் அருமை

    ReplyDelete